Language Selection

சமர் - 16 : 08 -1995

வெளிநாட்டவர்களுக்கு எதிராக கோஷம் இடும் நாசிகள், வெளி நாட்டவர்களாலேயே இங்கு பிரச்சனைகள் எனக் கோஷம் இடுகின்றனர். இங்கு வேலையில்லாமைக்குக் காரணம் வெளிநாட்டவரே என படுபுளுகு விடுகின்றனர்.

பெண்களுக்கும் – ஆண்களுக்கும் உள்ள சம்பள வேறுபாடு


                                                 பெண்                         ஆண்                             அதிகரிப்பு
பாதுகாப்பு துறை              1,96,2000 F             2,69,000  F                        +37 %


தொ.நுட்பவியல்                  1,15,800 F              1,37,300 F                        +18 %


அலுவலகர்                               86,800 F                  96,600 F                       +11%


தொழிலாளர்                            72,100 F                  93,600 F                       +29 %


இந் வகையில் ஆணுக்கும் பெண்ணிற்க்கும் ஒரே வேலையில் வேறுபாடான சம்பளம் வழங்கப்படுகின்றன. இதை விடவும் ஒரு பெண்ணிக்கும் ஆணுக்கும் ஒரு நாள் எவ்வாறு பங்கிடப்படுகின்றது எனப்பார்ப்போம்.

 

1வேலை

2.வீடு , பொழுது போக்கு 

3.சுதந்திரமாக இருத்தல்

4. உணவு, நித்திரை, கழிவு

                         1                  2                    3                4
ஆண்            6,121          2,141            3,141       11,117
பெண்           5,116         4,138             2,151       11,115

 

ஒரு நாள் நடவடிக்கையில் கூட பெண் ஆணுக்குச் சமமாக இல்லாமல் சுரண்டப்படுகிறாள். வேலை,மற்றும் ஒரு நாள் செயற்பாடு என்ற புள்ளி விபரத்தில் மட்டும் ஒரு பிரஞ்சுப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதை மேலுள்ள புள்ளி விபரம் நிறுவுகின்றது.

உலகின் என்ன நடந்தாலும் அதில் தலையிட்டு ஆதிக்கம் புரியும் பிரஞ்சு, தனது சொந்த மக்களை குளிரில் விறைத்து நடுநடுங்கச் செய்கின்றனர்.

இன்று இந்தியா மிக வேகமாக ஏகாதிபத்திய கால்களில் விழுவதில் முண்டியத்துச் செல்கின்றது. சுய தேசியத்தை அழித்து ஏகாதிபத்தின் நவகாலனியாக இந்தியாவை மாற்ற தரகு முதலாளிகள் வேகமாகவே முன்னேறி வருகின்றனர். தை மாதம் வெளியான உலக வங்கி அறிக்கையில் , உலகில் கடன் பெற்று அதில் மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.

கடந்த வருடம் குபஃகபா என்ற கியூபா நாட்டு இசைக் கலைஞர் முதன் முதலாக நியூயோர்க் நகரில் தனது இசைக் கச்சேரி முடிந்த பின்னர் கியூபாவுக்கும் தனக்கும் இடையேயுள்ள பகைமையான உறவுகளைக் காரணம் காட்டி, அக் கலைஞருக்குச் சேர வேண்டிய சம்பளத் தொகையை கொடுக்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளது அமெரிக்கா அரசாங்கம். இச் சாதாரண உதவியை தட்டிப் பறித்திருக்கும் அமெரிக்காதான் உலகெங்கிலும் மனித உரிமைகளின் ஏகபோக காவலனாக தம்பட்டம் அடித்து வருகிறது. என்ன வேடிக்கை!

புத்தளம் மாவட்டத்தில் மட்டும் அரச அங்கீகாரம் பெற்ற 1,600 ஏக்கர் இறால் பண்ணைகள் உள்ளன. ஆனால் அதன் உண்மையான பரப்பளவோ 3,000 ஏக்கர்களுக்கு மேலாகும். இவ் இறால் பண்ணைகளின் மூலம் நன்னீர் உவர் நீராக மாறுவதுடன் அன்றாட சீவியத்துக்கு மீன் பிடியில் ஈடுபட்டு வந்த ஆயிரமாயிரம் மீனவர்கள் தொழிலை இழந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமால் இப் பண்ணைகளின் மூலமாக நுளம்புகள் பெருகி மலேரியா நோய் பரவியும் வருகிறது.

சரிநிகர் 73ல் “உலர்ந்த நம்பிக்கை”  எனத் தலையிட்டு ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதி, தனது போலி முற்போக்குக்கு ஒரேயாடியாக விடைகொடுத்து விட்டனர்.

இந்த சிறுமியை விபச்சாரி என்று அழைக்க உங்களால் முடியுமா?  முடியுமென்றால் , ஒரே இரவில் நம் குழந்தைகள் கோடிக் கணக்கில் அந்நிய செலாவணியைக் குவிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளாக வரும் அமெரிக்க, ஜப்பான் , ஜெர்மன் காமவெறியர்களுக்குக் குழந்தைகள் தான்வேண்டுமாம். தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோயைக் கொடுத்தவர்கள் இப்போது நம் குழந்தைகளைக் கேட்கின்றார்கள்…விற்கப்போகிறோமா?

 

செப்டெபம்பர் 13 ம் திகிதி இரவு 1000 பாசிச விமாசனங்கள் லண்டன் மீது தாக்குதலைத் தொடுத்தது. இங்கு பிரிட்டீஸ் விமானங்களுடன் வானில் கடும் சண்டை நடைபெற்றது. ஜெர்மன் 60 விமானங்களையும் , பிரிட்டன் 26 விமானங்களையும் இதில் இழந்தது. இதையடுத்து லண்டன் மீதான தாக்குதல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மொத்தமாக பிரிட்டன் மீத 46000 க்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய ஜெர்மன், இதில் 60,000 டன் குண்டுகளை வீசியிருந்ததுடன் 1, 700 விமானங்களையும் இழந்திருந்தது.

சமர்-13 ல் நாம் டி.சிவராம் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தோம். எமது விமர்சனம் சரியாகவோ இருந்ததை மீண்டும் சரிநிகர் - 69 ல் டி. சிவராமின் கட்டுரை உறுதி செய்துள்ளது.


கடந்த சமர் இதழ்கள் முதல் புலிகள் தொடர்பான எமது நிலை என்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் எல்லைக்குள்ளேயே விமர்சித்து வந்தோம். அதாவது தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டம் சாராத எந்த வகையான புலிகளின் தோல்வியும் மொத்த தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும் என்பது சமரின் நிலை. இந்த வகையில் தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டத்தை கட்டி அமைக்கும் வகையில் புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றோம். இன்னும் ஒரு நிலையில் புலிகளின் வெற்றி என்பது சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. இது மட்டுமே உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக இருக்கும்.

சோவியத் யூனியன் என்ற ஒரு சோசலிச நாட்டை குருசேவ் பிரசெனவ் கும்பல் முதலாளித்துவமாக மீட்டு தமது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கொப்பச்சேவ் மேலும் அதை பச்சையாகச் செய்த நிலைகளில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளானார் இதைத் தொடர்ந்து ஜெல்சின் அமெரிக்காவின் காலடிகளில் விழுந்தபடி ஆட்சியை கைப்பற்றினர்.

1983 வான்சுவர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி பிள் கிளிங்டன் ரஸ்யாவுக்கு அளித்த 160 கோடி டொலர் உதவியை எல்லா முதலாளித்துவ பத்திகைகளும் ‘ஆஹா’ வெனப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

இன்று உலகம் ஒரு குடையின் கீழ் ஆளப்படும் வகையில் வேகமாக புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகின்றது. அந்த வகையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூறு பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் மொத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மொத்த நாடுகள் மீதும் நிறுவி வருகின்றது.

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான CHIAPAS மாநிலத்தில் கலவரம் ஆரம்பிப்தற்கான அறிகுறிகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவர்ணர் EDUARDO ROBLEDO என்பவர் பதவி ஏற்பதாலேயே இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சபாதா விடுதலை அமைப்பினர் EDUARDO பதவி ஏற்றால் “ இப்பகுதியில் போர் மூளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர் என யுகுP செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.


EDUARDO ROBLEDO ஆளும் கட்சியின் (PRD) பிரதிநிதியாக நின்று தேர்தலில் (21894) பங்குபற்றினார். இவ் ஆளும் கட்சி 1929 ல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இக்கட்சியின் பிரதியான; "EDUARDO“ கள்ள ஓட்டுக்கள் போட்டோ தேர்தலில் 50மூ வாக்ககளை பெற்றுள்ளனர். “ என ZAPATA அறிவித்துள்ளது.

 

மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாழ் மண்ணில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துக்கள் மீதான புலிகளின் தாக்குதலுடன் கொழும்புக்குத் தப்பி வந்தனர். கொழும்பு வந்த பின்பும் முற்றாக தலைமறைவாக்கியவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மனித உரிமை மீறல்கள்களையும் தொகுக்கத் தொடங்கினர்.

நாம் கருக்கலைப்பு தொடர்பான பிரச்சனையில் சமரில் இருந்து ஒருவரை வெளியேற்றியதுடன், இது சூடுபிடித்து பல சஞ்சிகையில் கருத்துக்களாக தொடர்ந்து வெளிவந்தன.

மே – 7 ம் திகதி பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 வருட சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச கட்சி என்பது வரலாற்று ரீதியில் 2 ம் அகிலக் கட்சியின் தொடர்ச்சியே ஆகும்.

குழந்தைகள் உழைப்பதை தடை செய்யும் சட்டங்கள் இருப்பினும் , உத்திரப் பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் பெரோஸபாத் பகுதியிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மிர்ஸாபூர் மாவட்டத்தில் மட்டும் கம்பளம் பின்னும் தொழில் ஒரு லட்சம் குழந்தை உழைப்பாளிகள் உள்ளனராம்.

தோழர்கள் வில் ஹெல்ட் , லிர்னெட்டும் , ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் பொதுவுடமைக் கட்சியைக் கட்டியதில் பெரும் பங்காற்றியவர்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு தியாகியானவர்கள். லீப்னெக்ட் , மிகப் பிரபல்யமான பொதுவுடமை நூலான “ சிலந்தியும் ஈயும்” என்பதினை எழுதியவர்.

அண்மையில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 35 அமைப்புக்களின் சார்பில் மனோரஞ்சன் ஒரு கருத்தரங்கை நடாத்தியிருந்தார். இவர் இலங்கையிலிருந்து வந்து இக்கருத்தரங்கை நிகழ்த்தியதுடன், ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள பருவம் (முரண்பாடுகளுடன்) இதில் பங்கு கொண்டனர். மனோ ரஞ்சன் முன்னாள் Nடுவுகு உறுப்பினரும் பின் Pடுகுவு மத்திய குழு உறுப்பினரும் ஆவர்.

சந்திரிகா அரசானது ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தீர்வு வைப்பதிலும் , தேடுவதிலும் அரசுக்கு அப்பால் பலர் போட்டி போடுகின்றனர். அந்த வகையினரில் 37 பேர் கையெழுத்திட்ட ஒரு ‘ சமஷ்டி அரசியல் அமைப்பு’ தீர்வுத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை ‘ சரிநிகர்’ 75 வது இதழில் பிரசுரித்திருந்தனர்.

யுத்தம் தொடங்கிய பின் தமிழ்த் தேசிய இனத்தின் மீது காட்டு மிரான்டித் தனமான யுத்தத்தை இனவாதிகள் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரம் ,மொழி, நிலம் என அனைத்து துறைகளிலும் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்படுகின்றது.