Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மிழ் பேசும் மக்களின் பரம விரோதிகள் சிங்கள ஆளும் வர்க்கமும் உலக ஏகாதிபத்தியங்களும், புலித்தலைமையுமென்றே நாம் பல் முனைகளில் உரையாடியுள்ளோம், இப்போது இவர்களின் ஏவல் நாய்கள் பலரைப் பச்சையாக இனம் காணத்தக்க சந்திப்பொன்று கடந்த 11, 12 நவம்பர் 2006 இல் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் "இலங்கைத் தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வும், புலம்பெயர் வாழ் தமிழ்பேசும் மக்களினது பங்களிப்பும்"என்ற தலைப்பில் ஒன்றுகூடிய பதவிவெறிப்பிடித்த ஓடுகாலிகள்,ஒட்டுண்ணிகள்,கைக்கூலிகள்,மற்றும் கடைந்தெடுத்த அரசியல் விபச்சாரக இடைத் தரகர்கள், இலங்கைத் தேசத்தின் முழுமொத்த மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுவேண்டிச் சிந்தித்து "ஆய்வுக்" கட்டுரைகள் வாசித்தும் கூடவே தமிழர்களின் "ஜனநாயகத் தலைவர்"(புகலிடத் தமிழரிடம் தட்டிப்பறித்த "கடிதக் காசுப் புகழ்" ஆந்தைச்சங்கரி)ஆனந்த சங்கரியார் தலைமையில் "தீர்மானங்களும்" பத்து அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டனவாம்.இது சரியான புல்லரிக்கும் ஒரு "ஜனநாயக"ஒன்று கூடலாகும்!

 

புல்லர்கள்கள் பலர் ஒன்றுகூடித் தமிழ்பேசும் மக்களின் மிச்சசொச்ச அமைதியையும் 'எங்ஙனம் கெடுத்துத் தமது தேவைகளை நிறைவுப்படுத்தலாமெனச்' சந்தித்துப் பேசிய இந்த நிகழ்வையும்,இவர்கள் பம்மாத்துப்பண்ணிய "தீர்மானத்தையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்" நாம் உடைத்துப்பார்ப்பது மிக மிக அவசியமாகும்.

 

இந்தப் புல்லர்களுக்குள்-அரசியல் கிரிமனல்களுக்குள்,கைதேர்ந்த தொழில் முறை அரசியல் மாபியாக்களுக்குள் அப்பாவித்தனமாகச் சரடுவிடும் பிரான்ஸ் வாழ் நம்ம கூட்டாளிகளும் பம்பலாகக் கருத்துக்கள் சொல்லியிருக்கினம்.இந்த இவர்களின் பம்பலான வருகையையும்,கட்டுரைகள் வாசிப்பையும் கண்டு, உச்சத்தில் உசக்கப்போய் ஆனந்தசங்கரி,குமாரதுரை போன்ற எச்சில் பேய்கள் தம்மையும் அறியாது தமது எஜமான விசுவாசத்தைச் செவ்வனவே செய்து முடிக்க,அதையும் மக்களின் மகத்தான வெற்றி,அவர்களின் அபிலாசைகளின் எதிரொலியெனப் புலம்பும் ஆனந்தசங்கரியின் தேனீ இணையமும் இன்னொரு புதுக் குழிப்பறிப்புக்கு உடந்தையாகக் கொட்டும் கேணைத் தனமான இந்தத் "தீர்மானங்களையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்"(கோரிக்கைகள் யாரிடம் விடப்படுகிறதென்று தெரியாதிருப்பினுங்கூட) நாம் சற்று உடைத்துப் பார்ப்பதும் அதனு}டே இந்தத் துரோகிகளும் புலித்தலைமையைப் போன்றே தமிழ்பேசும் மக்களின் எதிரிகள்தாமென்று நாம் நிறுவிக்காட்டுவது மக்களின் விடுதலைக்கு அவசியமாகும்.

 

பண்டுதொட்டு துரோகத்தையே அரசியல் தாரக மந்திரமாகக் கடைப்பிடித்துவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியானது அதன் தாய்க்கட்சியிடமிருந்து கைமாற்றிக்கொடுக்கப்பட்ட ஏகாதிபத்தியச் சேவையை நன்றாக செய்துவருகிறது.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைக்குச் சிங்களத் தேசியத் தலைவர்கள்(பண்டா செல்வா ஒப்பந்தம்) போட்ட ஓரளவு முற்போக்கான ஒப்பந்தங்களையெல்லாம் அமெரிக்காவோடிணைந்து செயலிழகச் செய்து, கிழித்தெறிய வைத்தவர்கள் இந்தக் கூட்டணியினரும் இவர்களின் முதுபெரும் தலைவர்களும்தாம்.நாம் வரலாற்றிலிருந்து இதை மறப்பது கொடுமை!இதைப்பிறிதொரு கட்டுரையில் பேசுவோம்.இனி விஷயத்துக்கு வருவோம்.

 

தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போர் இதுவரைகாலம் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலியெடுத்துள்ளது.மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட அனைத்துவகை இயக்கங்களும் கணிசமானளவு மக்களை நரவேட்டையாடின.சிங்கள அரசோ தொழிமுறைப் படுகொலைகளையும்,திட்டமிட்ட குடியழிப்புகளையும் இவர்கள் மூலமாக ஒப்பேற்றியது-ஒப்பேற்றுகிறது.தமிழ்பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரமும் அழித்தொழிக்கப்பட்டு,அவர்கள் அகதிகளாகவும்,நாடோடிகளாகவும் உயிர்காக்கும் பொருட்டு அலையும்போது இந்தப் பேய்கள்"தீர்மானங்கள்"நிறைவேற்றுகிறார்களாம்-"கோரிக்கைகள்" விடுகிறார்களாம்!

உலக ஒடுக்குமுறையாளர்கள் தமது உள்ளுர் அடியாட்களுக்குப் பதவிகள்,பட்டங்கள்,அன்பளிப்புகள்,பரிசுகள் வழங்க அதையேற்கும் உள்ளுர் அடிவருடிகளிலொருவன் ஆனந்தசங்கரி!தான் தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்ல,இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரிதாமென நிரூபிக்கும் பரிசினை ஏற்கிறான்.

"1. இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்."

இதைத்தாம் காலகாலமாகச்"சோஷலிச ஜனநாயகக் குடியரசு"என்ற போர்வையில் இலங்கை அரச சாசனங்களும் நமக்குச் சொல்கின்றன.நம்ம ஆனந்த சங்கரியாரும் இந்தச் "சோசலிச"க் கனவினில்தாம் இப்படிச் சொல்கிறார் என்று நாம் எடுக்க முடியாது.அவரு ரொம்பக்கறாரான மனிதர்.மாமிசம் புசிக்காத மருக் கொழுந்து."இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை" உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்.இத்தகைய உயர்ந்த மனித விழுமியங்களை இலங்கையில் ஏற்படுத்தப்படும் "சமஷ்ட்டி"முறைமையுள் உள்ளடக்கப்பட்ட முதலாளித்துவ எல்லைகள் காத்து,இலங்கை வாழ் அனைத்து மக்களையும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ அனுமதிக்குமா? "சமத்துவம்"என்பது என்ன?கூட்டணிப் பேய்கள் 70க்கு முற்பட்ட காலங்களில் காட்டிய சமபந்திப் போசனமா இந்தச் சமஷ்ட்டி,சமத்துவம்-மண்ணாங்கட்டி?

 

மக்களின் அன்றாட வாழ்க்கை இத்தகைய அதிகாரத்திலுள்ள கட்சிகளாலும்,அதன் பின்னால் ஒளிந்துள்ள ஆளும் வர்க்கத்தாலும் அவர்களில் வேட்டை நாய்களான ஆயுதம் தரித்த அடியாட் படையாலும்,சட்டங்களாலும்,உலக வல்லரசுகளின் பொருளாதார ஆர்வங்களாலும் அழித்தொழிக்கப்படும்போது-சிங்கள இனவாத அரசுகளின்,கட்சிகளின் அத்துமீறிய அதிகாரத் திமிரானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை இனத்துவ நோக்கோடு இரண்டாம்தரப் பிரஜைகளாக்கி அழித்தொழித்துவரும்போது,இதை அநுமதித்து ,இத்தகைய கட்சிகளோடு சகஜமாக உறவாடிப் பதிவிகளையும் வாழ்க்கை வசதிகளையும் தேடிய இத்தகைய ஆனந்த சங்கரிகளும், அவர்களின் அடிவருடிகளும் இன்று மக்களின் சமத்துவத்தை,இனவொற்றுமையை,வர்க்கபேதமற்ற மற்றும் இன,மத,மொழி,சாதி பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்தப் "புலிப் பயங்கர வாதம்தாம்" தடையாக இருப்பதாக பிதற்றுவது மிகவும் உள்நோக்கமுடையது.

 

இவர்கள் முன்வைத்த தீர்மானங்களே வெறும் வெற்று வார்த்தைகள்தாமென்பதை நாம் மிக இலகுவாக இனம்காணத்தக்க இவர்களின் அரசியல் அறிவே சாட்சியாக இருக்கிறது.மக்களின் சமத்துவமான வாழ்வும்,இன ஐக்கியமும்,பொருளாதார ஏற்றதாழ்வுகளும் நீங்கக்கூடியவொரு அரசியலானது ஓட்டுக்கட்சி அரசியலுக்கும்,பாராளுமன்றச் சட்டவாக்கத்துக்கும் அப்பாற்பட்டதாகும்.இல்லை இத்தகைய சமுதாயத்தை முதலாளித்துவ ஒட்டுக்கட்சி,பாரளுமன்ற அதிகாரங்களால் நிறுவ முடியுமென்றால் இவர்கள் அதை உதாரணத்தோடு முன் மொழிவதற்கும் இன்றையவுலகில் அப்படியெந்த அரசுகளுமில்லை.அடிக்கடி இத்தகைய துரோகக் கும்பல் இனம் காட்டும்,உதாரணப்படுத்தும் இந்தியாவையே உதாரணமாகக் கொள்வேமெனில்,உலகத்திலேயே மிகவும் கொடூரமான அடக்குமுறை நிலவும் நாடு நம்ம பாரத தேசம்தாம்.இந்திய அரசின் எந்தவொரு மாநிலமும் மக்களைச் சுரண்டாது,அடக்கியொடுக்காது,மத,சாதி,இன ஒடுக்குமுறையற்று நல்லாட்சியையும்,மக்களின் சமத்துவத்தையும் தரவில்லை!மாறாகச் சாதிய மற்றும் மத,இன, ஒடுக்குமுறையையும் ஒருங்கே வலுப்படுத்திக்கொண்டு உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுத்துவரும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கமானது மனித சமூகத்துக்கு மிகவும் எதிரானவொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.இத்தகைய நகர்வில் இந்திய ஓட்டுக்கட்சி அரசியலே மிகவும் கொடூரமான அடக்குமுறைக் கிரிமனல்களால் வழிநடத்தப்பட்டுச் சட்டபூர்வக்கிரிமனல் அரச வன்முறை ஜந்திரத்தால் தூக்கி நிறத்தப்படுகிறது.

 

தமிழ்நாட்டை உதாரணமாகக் கொள்வோமானால் ஓட்டுக்கட்சி அரசியலானது மக்களின் அனைத்துவுரிமைகளையும் தட்டிப்பறித்து,பண்பாட்டு ஒடுக்குமுறையை எங்ஙனம் செய்கிறதென்பதை நாம் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் திரண்டிருக்கும்(மக்கள் சொத்தைத் தமதாக்கியது) நிதியானது நம்மைத் திகைக்க வைக்கும் பெரும் மூலதனமாகும்.இத்தகைய மூலதனத்தைக் குடும்பச் சொத்தாக்கிய பெரும் கட்சித் தலைவர்கள்(கருணாநிதி,ஜெயலலிதா) பல இலட்சம் கோடிகளைத் தமது வாரீசுகளுக்குத் தாரவார்த்துக் கொடுத்துவிட்டு,மக்களை தினமும் பட்டுணிச் சாவுக்குள் தள்ளி ,அவர்களை அடிமைப்படுத்தும் பொருளாதார வாழ்வை உறுதிப்படுத்தும்போது நமக்கு இத்தகைய ஆனந்தசங்கரிகள் சொல்லும் சமத்துவம் என்னவென்பது புரிகிறது.இன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது எஜமானர்களுக்குச் சேவகம் செய்த காலம் போய் தாமே மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமது பொருளாதார நன்களை முதன்மைப்படுத்தும் அரசியலில் மக்களின் உரிமையென்று என்ன மிஞ்சியுள்ளது?

 

சன் டி.வி மற்றும் ஜெயா டி.வி களைப் பார்ப்பவர்களுக்கு அநுபவமாவது என்ன?அவதிப்படும் மக்களின் வாழ்வைத் திவசம் செய்யும் இந்தக் கேடுகெட்ட ஓட்டுக்கட்சி அரசியலும் அதற்குச் சேவகஞ் செய்யும் அடியாட்படையும் நம்ம கண்களில் வெறும் காட்சிகளையாவுருவாக்கின்றன?அவை நமக்கு "அடங்கி வாழ்,இல்லையேல் அடக்கப்படுவாய்"என்று சொல்லவில்லையா?

 

கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இவற்றின் இயக்குனர்கள்.

 

இத்தகைய கட்சிகளின் ஆசியில் நலம்பெற்று,இன்னும் பதவி-பணம்பெற விரும்பும் இன்னுமொரு சமூகவிரோதக் கும்பல் மக்களின் உரிமைகளைத் தமது வரும்படிக்காகத் திட்டமிட்டுச் சிதைக்கிறர்¡கள்.இவர்கள் மக்களுக்குள் ஒளிந்திருந்தபடி அந்த மக்களையே கொலைசெய்து அவர்களின் குருதியில் தமது குடும்ப நலத்தைத் தக்க வைக்கிறார்கள்.இத்தகைய மனித விரோதக் கும்பலில் ஒன்றுதாம் ரீ.பீ.சீ.வானொலி மற்றும்"தேனீ-ஆனந்தசங்கரி" இணையத்தளம்.

 

\ \ "2.ஜனநாயக உ¡¢மைகள், மனித உ¡¢மைகள், அடிப்படைக் குடியூ¢மைகள் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் செய்தல்."

ஐயோ பாவத்தை!

 

ஜனநாயகம் என்றால் என்னவென்றே புரியாத கொடும்பாவிகள் ஜனநாயகத்தையும், மனிதவுரிமையையும்,அடிப்படைக் குடிசார் உரிமையையும் ஒன்றுக்கொன்று எதிராகவுணருவதையும்,இவைகளைத் தனித்தனியலாகாக் காணும்போது இவர்கள் ஜனநாயகமென்றால் வெறும் அரசியல்வாதிகளின் கொழுப்பெடுத்த உளறுமொழியாக உறுதிப்படுத்துகிறார்கள்போலும்.இது என்னமாதிரியென்றால் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தில் ஜனநாயகமென்பது அவர்களது ஆர்வங்களைக் குறித்த நலன்களை வென்றெடுப்பதற்கான ஒரு கருதுகோளகவே அர்த்தப்பட்டிருக்கிறதென்பதை மிகத் தெளிவாக ஆனந்த சங்கரியார் தன் வாயால் குறித்துரைப்பதாகப் படுகிறது.அடிப்படைக் குடிசார்(சிவிலுரிமைகள்)உரிமைகளைத் தகவமைத்து மக்களின் பொருளாதார வாழ்வை அவர்களின் பரிபூரணமான சுயவெளிப்பாட்டோடு அவர்களே அனைத்து வளங்களையும் துய்ப்பதற்கும்,பாதுகாப்பதற்கும்,பங்கிடுவதற்குமாக அர்த்தப்படும் ஜனநாயகம்தாம் உண்மையான ஜனநாயகமாகவுணரப்படுகிறது.அது ஒரு வாழ்வு முறையாகப் பொருளாதாரவுற்பத்தியோடு மக்களின் மிகத் தெளிவான ஆன்மீகவாழ்வாக விருத்தியாகிறது.இதுவே மக்கள் தமக்கும் இந்தப் பொருளுலகத்துக்குமான தொடர்பாடலாகவும்,இடைச்செயலாகவும் பொருளுற்பத்தில் தனது ஆத்மீகத் தேவையை இனம் காணுகிறது.இதைச் செக்குமாடுகளான ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் தத்தம் பிழைப்புக்கான சொல் அலங்காரமாக நமக்குள் குறித்துரைக்கும்போது,இவர்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எங்கே நிற்கிறார்கள் என்று நம்மால் உணரமுடிகிறது.\

 

"3. பாதுகாப்பு, நிர்வாகம் உட்பட சகல துறைகளிலும் இன விகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல்."\

 

இங்கு பாதுகாப்பு என்பதைப் பார்த்தோமானால்,இவர்கள் கூறும் "பாதுகாப்பு" யாருடைய பாதுகாப்பு என்று தெள்ளத் தெளிவாகும்.இந்தப் பாதுகாப்பு தேசத்தினதோ(தேசிய அலகுகளைக் காத்தல்) அல்லது மக்களினதோ கிடையாது.மக்களையும் தேசத்தையும் அந்நிய முதலீட்டாளர்களும், அடிவருடித் துரோகக் கும்பலும் ஒட்டச் சுரண்டவும், வழிவகுத்துக்கொடுக்கவும் இந்த இலங்கை அரசியல் சட்டவாக்கம் மற்றும் ஓட்டுக்கட்சி அரசியலும் இங்கே பாதுகாப்பென்பதாகப் பூச் சுற்றுகிறது. அந்நிய மூலதனத்தைப் பாதுகாப்பதும் அவர்களுடைய கனவுகளை ஒழுங்கிற இயங்குவதற்குமான புறநிலையைத் தோற்றுவிப்பதும், அதைப் பாதுகாப்பாக நிலை நிறுத்துவதுமே பாதுகாப்பென்பதாகும்.மற்றும்படி உழைத்துவாழும் இலங்கைப் பிரஜைக்கு இந்தப் பாதுகாப்பு விலங்கைத் தீர்மானிக்கும் ஒழுங்குகளையே கொண்டிருக்கிறது.இத்தகைய பாதுகாப்பு,நிர்வாகத்துக்கு இன விகிதாசார அடிப்படையில் அடியாட்படைகளைத் திரட்டுவது எங்ஙனம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்?ஒடுக்கப்படும் மக்களை இன்னும் வலுவாக ஒடுக்குவதற்கான முகாந்திரம் இந்தப் பாதுகாப்பு,இனவிகிதாசாரம் என்ற கோதாவுக்குள் நிலவுகிறது.மக்களைத் திட்டமிட்டு ஒடுக்கிவரும் இலங்கைத் தரகு முதலாளியக் கட்சிகளின் தார்ப்பாரில் தினம் பலிக்கடாவாக்கப்படும் உழைப்பாளிகளினது குழந்தைகளைப்"பாதுகாப்பு"எனும் போர்வையில் யுத்தத்துக்கு அணிதிரட்டுவது மற்றும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு படைகட்டுவதாகவே இந்தப்"பாதுகாப்பு"அர்த்தப்பட்டிருக்க இதை மக்களுக்கான பாதுகாப்பாகப் பம்மாத்துப் பண்ணும் ஆனந்தசங்கரிகளை மக்களாகிய நாம் நன்றாகவே இனம்கண்டு வருகிறோம்.

 

"4.அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைந்து தமிழ் பேசும் மக்களை ஒருமுகப்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் சமூக கலாச்சார உறவுகளைப் பலப்படுத்துதல்."

மீண்டும் மந்திரத்தில் மாங்காய் பறிக்கிற கதையை விடுகிறான்கள் டோய்!"அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக்..."அனைத்து தமிழ் பேசும்...அட பாவிகளே!தமிழில் எத்தனை பிரிவுகளடா இருக்கு?என்ன சொல்ல வாறாங்கள்?தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அனைத்து வேறுபாடுகளைக் களைந்து... என்று சொல்லிக் கொள்ளும் மொழித் திரணியற்றுத்"தீர்மானங்கள்"எழுதுகிறவன்கள் நம் மக்களின் உரிமைகளுக்காகக் கட்சி கட்டுகிறான்களாம்!

 

"கரியவன் புகையினும்,புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும்,கிழாரும்,வீங்கிசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனி செந்நெல்,கரும்புசூழ் மருங்கிற்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும்,கனைகுரல் நாரையும்,
செங்கால் அன்னமும் பைகாற் கொக்கும்,
கானக் கோழியும்,நீர்நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும்,புள்ளும்,புதாவும்,
வேல்போர் வேந்தர் முனையிடம் போலப்,
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும்..."

 

என்று இளங்கோவடிகள் ஒரு தேசத்தின் வளத்தைச் சிலம்பினில் சொல்வதுபோன்று ஒரு நிலைக்கு இந்த இலங்கை மாறுகிறபோதும் தமிழ்பேசும் மக்களுக்குள் பற்பல வேறுபாடுகள் நிலவியே தீரும்.இது வெறும் கட்சியாலோ அல்லது அரசுகளாலோ தீர்க்கத் தக்க செயலல்ல.இதை மாற்றவேண்டுமானால் சமூகத்தை மாற்றியாகவேண்டும்.சமூகத்தை மாற்றுவதென்பது நிலவுகின்ற பொருளாதாரப் பொறிமுறையை அகற்றி அதற்கு மாற்றான பொருளாதாரப் பொறிமுறைகளை உற்பத்தியல் ஈட்டுவதாகும்.இங்கே எந்தவொரு சமுதாயமும்,தனது வேறுபாடுகளையும்,மக்கள் விரோதக் கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தைத் தகர்க்கவேண்டுமாயின், அதை முற்றுமுழுதாகப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் சமுதாயப் புரட்சியில் ஈடுபட்டாகவேண்டும்.இதுவே புதிய சமூகக் கண்டோட்டத்தையும்,மக்கள் பண்பாட்டையும் கோரிக்கொள்ளும் புதிய பொருளாதாரவுறுகளைக் கட்டியமைத்துத் தேசத்தை புதிதாகப்படைக்கும்.அங்கே மக்களை மந்தைகளாக்கும் ஓட்டுக்கட்சியரசிலுக்கு வேலையிருக்காது.இதைச் சொல்வதாக, ஆனந்த சங்கரியின் தீர்மானங்களைக் கருதிக்கொள்ளும் மனத்தில் மக்களிருப்பதாகக் கனவோடு வலம்வரும் எம் பெருமான் ஆனந்தசங்கரிக்குப் பதவியென்பது மக்களின் மரணத்தில் கொட்டிக் கொடுக்கப்படும் ஒரு பரிசுதாம்-யுனெஸ்கோ விருதுபோல! ஏகாதிபத்தியங்களின் தயவில் எவரெவரோ இடும் பிச்சையில்லைத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகள்.அவற்றை அவர்களே தமது உழைப்பினால் தீர்மானிப்பதும்,மாற்றியமைப்பதும் அவர்களது ஜீவாதாரவுரிமையின் வெளிப்பாட்டில்தாம் நிகழுமே தவிர மாறாக எந்தத் தீர்மானங்களாலுமல்ல.மக்களை இன்னும் விட்டேந்திகளாகக் கற்பனையில் உலாவரும் இத்தகைய மோசமான மனிதர்களால் மக்கள் தமது வாழ்வையே இழந்து நடுத்தெருவுக்கு வந்ததுதாம் மிச்சமானது.இதை மாற்றியமைக்கும் எந்த முன்னெடுப்புமற்று ஓட்டுக் கட்சிகளுக்கே இருக்கும் நயவஞ்சகத்தனமான ஏமாற்றுத் தீர்மானங்களை மீளவும் கயிறுவிட்டுக் கருத்துக்கட்டும் இத்தகைய அரசியல் மாபியாக்களை நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் ஒரு அவசியத் தேவையாகும்.

 

பெரும்பான்மைச் சமூகத்தோடா அல்லது பெரும்பான்மைச் சமுதாயத்தோடா,இனத்தோடா அல்லது இனக் குழுவோடா சமூக் கலாச்சாரவுறுவுகளைப் பலப்படுத்திப் பேணவேண்டும்?

 

இதை முதலில் தீர்கமாக முடிவெடுத்துக்கொண்டு அங்கே நிலவும் பொதுக் குழுமத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வரலாற்றில் தமிழினமும்,சிங்களவினமும் தற்போதைய நிலைக்கு எத்தகைய பங்களித்துள்ளனவென்ற சமூகப் புரிதலையும் விமர்சித்துக்கொண்டு-எங்கே,எப்படி இத்தகைய முரண்பாடுகள் தோன்றின?இவைகளைத் தோற்றுவித்த சமூகக்காரணியென்ன,இவற்றுக்கும் இன்றைய பொருளாதார நலத்துக்கும்,அதைக் காத்துவரும் அரசுக்கும் என்ன உறவுகள் என்றும் தீர்மானங்களில் மொழிந்தபடி கொஞ்சம் ரீல் விடலாமே?

மனிதவிரோதிகளின் இத்தகைய பொய்மைகளை அகநானூறில் இப்படிக் காணலாம்:

 

"புலிபுலி யென்னும் பூச றோன்ற
வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித
மூசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்
டியதோ மற்றிம் மாதிறம் படரென
வினவி நிற்றித் தோனே..."அகம் 48


பத்தம்சக் கோரிக்கையின் உடைப்புத் தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது