Language Selection

தமிழச்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும், பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் [21.02.1920]

பெண்களின் உடல் உழைப்புகளை குடும்பத்திற்கு மட்டும் உபயோகித்துக் கொண்டு இழிவான அநீதியை பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது முதலாளித்துவம். இதன் மூலம் பெண்களை அடக்கி ஆளவும் எதற்கும் உபயோகமற்றவர்களாகவும் சித்திரித்து தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றனர்.

எங்கே நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும், வணிகர்களும் இருக்கிறார்களோ அங்கே சட்டத்தின்படி பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக இருக்க முடியாது.

எங்கே நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும், வணிகர்களும் இல்லையோ, எங்கே உழைக்கும் மக்களின் அரசாங்கம் சுரண்டல்காரர்கள் இல்லாத புதிய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறதோ அங்கே சட்டப்படி ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பார்கள்.

லெனின் சொல்கிறார்:

"பெண்களை முதலில் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களையும் சமூக முன்னேற்றத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பு பங்களிப்பை செய்ய வைக்க வேண்டும்...

குழந்தை வளர்ப்பு, குடும்பத்தினருக்காக சமைப்பது, மற்றும் இதர வேலைகளை பெண்களுக்கான பொறுப்புகள் என்று அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கிறது...

பெண்களின் உணர்ச்சிகள் மழுங்கிப் போகும்படி செய்து அவமானகரமான அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து பெண்களைக் விடுவித்து சமூக ரீதியில் பயனுள்ள உழைப்பில் ஈடுபடச் செய்ய வேண்டும்....

ஒவ்வொரு பெண்ணும் நிரந்தரமாகவே வீட்டுக்குள் புகுந்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளியேற வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் தங்கள் உடல் உழைப்பை சமூகத்திற்காக பங்களிக்கும் போது ஆணுக்கு நிகராக பெண்கள் இருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதுவரை பெண் விடுதலை என்பது நீண்ட போராட்டமாகவே இருக்கும். மேலும் சமூகத் தொழில் நுட்பம், அறநெறிகள் ஆகியவற்றைத் தீவிரமாகப் புனரமைக்க வேண்டி இருக்கும். அதன் முடிவே கம்யூனிசத்தின் முழுமையான வெற்றியாகவும் இருக்க முடியும்"

என்கிறார் லெனின்.

லெனின் சோவியத் ஆட்சியில் ´பெண் விடுதலை´யை எப்படி நடைமுறைப்படுத்தினார்?

சோவியத் ஆட்சியின் 2-ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு லெனின் பேசியதை ´பிராவ்தா இதழ்´ - 11.06.1919, சோவியத் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

[அதில் இருந்து லெனினின் பெண் விடுதலையைக் குறித்த சிந்தனையை சுருக்கமாக இங்கே பதிவு செய்கிறோம்]

நாம் ஜனநாயகத்தை ஒழித்துவிட்டதாக முதலாளித்துவ வர்க்கத்தினரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நம் மீது குற்றம் சுமத்துகிறார்கள்....

இந்த குற்றச்சாட்டை நாம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும், நம் செயல்பாட்டை ஆராய்வதற்கும், கடந்த இரண்டு வருட கால அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கு இன்னும் சிறந்த திட்டங்களை முன்னெடுக்கவும் முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்....

முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும், சோஷலிஸ்ட் ஜனநாயகத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிகவும் அழுத்தமான முறையில் தெளிவுபடுத்தி ஆணித்தரமான பதிலைக் கொடுப்பது சமுதாயத்தில் பெண்களின் நிலையே...

ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை.

பிரெஞ்சுப் புரட்சி நடைப்பெற்று 125- ஆண்டுகள் சென்றும் இந்நிலையே பெண்களுக்கு நீடிக்கிறது.

முதலாளித்துவ ஜனநாயகம் பெண்களுக்கு சமத்துவமும் சுதந்திரமும் கொடுக்கப்படும் என்று வார்த்தையளவில் மட்டுமே வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சட்டத்தில் கூட பெண்களுக்கு சமமான உரிமைகள் இருக்கவில்லை.

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது.

ஆனால் ´சோவியத் ஜனநாயகம்´ அல்லது ´சோஹலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது...

சோவியத் ஜனநாயகம் பாசாங்குத்தனத்தை வெறுக்கிறது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.

ஐரோப்பாவில் மிகவும் அதிகமாகப் பின்தங்கிய நாடுகளில் ஒன்றில் சோவியத் ஆட்சி ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கான விடுதலையை உருவாக்கி இருக்கிறது.

பெண்களுக்கு ஆணுக்கு இணையாக இல்லாத சட்டங்கள் சோவியத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட பெண்ணினம் ஒடுக்கும் வர்க்கங்கள் சட்டங்கள் களையெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு திருமண விலக்கு ஆண்களுக்கு இருக்கும் நிலையைப் போல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

"ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...."

"தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..."

"ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..."

இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!! மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய உண்மை.

[ இதுவரை லெனின் பேசியது சோவியத் ஆட்சியின் 2-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பெண் விடுதலை குறித்து பேசியது....]


"சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் கடமைகள்" என்னும் தலைப்பில் செப்டம்பர் 23, 1919-இல், ´மாஸ்கோ நகர பெண்கள்´ மாநாட்டில் லெனின் பெண்கள் நிலை குறித்து பேசும் போது கூறுகிறார்:

"........ மேற்கு ஐரோப்பாவில் உருவாகிய விடுதலை இயக்கங்கள் செல்லரித்துப் போன சட்டங்களை ரத்து செய்யப்பட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமநிலை சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என போராடி வருகின்றன...... 

இப்போராட்டம் நூறாண்டுகளாக நடைப்பெற்று வந்த போதும் கடந்த 10- ஆண்டுகளாக கடுமையான முயற்சியில் விடுதலை இயக்கங்கள் ஈடுபட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜனநாயக குடிஅரசு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றன. 

ஏனெனில் எங்கே முதலாளித்துவம் இருக்கிறதோ, எங்கே நிலத்திலும், தொழிற்சாலைகளிலும், தனியுடைமையும் மூலதனமும் இருக்கிறதோ, எங்கே இதற்காக ஆதிக்கம் பாதுகாக்கப்படுகிறதோ அங்கே ஆண்களுக்கென்று தனி உரிமைகள் இருக்கின்றன. 

சோவியத் ஆட்சி உழைக்கும் மக்களின் ஆட்சி. 1917-அக்டோபர் 25-முதல் தொழிலாளர் ஆட்சி நிறுவப்பட்ட முதல் மாதத்திலேயே பெண்களுக்கு அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சட்டத்தில் புரட்சி ஏற்படுத்தியது. பெண்களை கீழான நிலையில் வைத்திருக்க முயன்ற சட்டங்கள் ஒழித்துக் கட்டப்பட்டது. 

பெண்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சமத்துவம் இல்லாத நிலைமையில் பெரும்பாலும் அவமானகரமான நிலைமையில் கூட வைத்திருந்த சட்டங்களை ஒழித்துக்கட்டியது. 

இதில் பெண்களுக்கு விவகாரத்து செய்து கொள்ளும் உரிமையும், திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தைகளுக்காக சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டதும், குழந்தை வளர்ப்புக்கான தேவையான பணம் தந்தை கொடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட சட்டங்களையும் இங்கே பிரத்யேகமாகக் குறிப்பிடுகிறேன். 

முதலாளித்துவ சட்டங்கள் குறிப்பாக பெண்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை அவமானப்படுத்தி அவர்களுக்குக் கீழான நிலையைக் கொடுத்தன. ஆனால் சோவியத் ஆட்சியில் பெண்கள் முழு சமத்துவத்தை அனுபவிக்கும் நாடாக மாற்றப்பட்டு இருக்கிறது. உலகில் வேறெங்கிலும் பெண்களுக்காக சட்டங்கள் திருத்தப்படவோ ஆண்களுக்கு சமமான உரிமையை சட்டத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படவோ இல்லை என்பதை நாம் பெருமையோடு கூறமுடியும். 

ஆனால் எல்லா ஜனநாயகக் குடிஅரசுகளிலும் சமத்துவம் பிரகடனம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் சிவில் சட்டங்களிலும், குடும்பம், விவகாரத்து உட்பட்ட சட்டங்களும் பெண்களுக்கான எந்த சமத்துவமும் இல்லாமல் பெண்களை அவமதிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். 

சோவியத் ஆட்சியிலும் பெண்களுக்கான சட்டங்கள் மாற்றப்பட்டதும் அதற்கான உத்தரவுகளை போடுவதிலும் நாங்கள் திருப்தி அடையவில்லை. எனினும் சட்டத்துறையைப் பொறுத்தவரையிலும் பெண்களுக்கு சமத்துவ உரிமைகளைக் கொடுப்பதற்கு நாங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்துவிட்டோம். இதைப்பற்றி பெருமைப்படுவதற்கு நமக்கு எல்லா உரிமையுமுண்டு. மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சோவியத் ருஷ்யாவில் பெண்களின் நிலை இலட்சிய வடிவத்தை அடைந்துவிட்டது. எனினும் இது ஆரம்பமே என்று நாம் சொல்கிறோம். 

வீட்டில் செய்கின்ற வேலையின் காராணமாகப் பெண்கள் இன்னும் கடினமான நிலையில் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு முழுவிடுதலை கொடுத்து ஆண்களுக்கு சமமாக பெண்களை உருவாக்க வேண்டுமென்றால் தேசியப் பொருளாதாரம் சமூக மயமாக்கப்படுவதும், பொதுவான பயனுள்ள உழைப்பில் பெண்கள் ஈடுபடுவதும் அவசியம். அப்பொழுது தான் பெண்கள் ஆண்களுக்குச் சமமான நிலையைப் பெறுவார்கள். 

உழைப்பின் உற்பத்தித் திறன் உழைப்பின் அளவு நானொன்றுக்கு வேலை செய்யும் நேரம் உழைப்பு நிலைமைகள் மற்றும் பலநிலை உழைப்பு நிலைமையிலும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலைமையில் வைக்கப்போவதாக நாம் சொல்லவில்லை. குடும்பத்தில் பெண்களுக்கு இருக்கின்ற நிலைமை காரணமாக பெண் ஒடுக்கப்படக் கூடாது (ஆண்களுக்கு இந்நிலை இல்லை) என்பதற்காகவே நாம் குறிப்பிடுகிறோம். 

பெண்கள் முழு உரிமைகளைக் பெற்றிருந்தாலும் கூட அவர்கள் உண்மையில் இன்னும் அடக்கி வைக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனெனில் வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. வீட்டு வேலைகள் என்பது பெண்களுக்கு பயனற்றதாகவே இருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியை எந்த விதத்திலும் ஊக்குவிக்கக்கூடிய உழைப்பு அதில் இல்லை.

பெண்களைக் குடும்ப வேலைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய குழந்தை வளர்ப்பு நிலையங்கள் உணவுச் சாலைகள் முன் மாதிரியான அமைப்புகள் ஏற்பத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

எனினும் பெண்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதையும் கூறுகிறோம்:

தொழிலாளர்களுடைய விடுதலையைத் தொழிலாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்கிறோம் அதைப் போலவே உழைக்கும் பெண்களின் விடுதலையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும். 

பழைய முதலாளித்துவ ஆட்சி முறையில் பெண்களுக்கு அரசியலில் சரியான பங்களிப்பு ஏற்படுத்தப்படவில்லை. ஆண்களுக்கு அரசியலில் இருக்கும் பங்களிப்பை விட மிக சொற்பமான அளவிலேயே பெண்களின் இடம் இருக்கிறது. 

இம்முறையை நாம் மாற்றியாக வேண்டும். 

ஒவ்வொரு உழைக்கும் பெண்ணும் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதை சாத்தியமாக்குவது நமது கடமையாகும். 

யுத்த சூழல்களிலும் பெண்கள் இராணுவத்தில் உழைக்க வேண்டும். இராணுவத்திற்கு ஏதோ ஒருவகையில் தங்களால் ஆன பங்களிப்பு செய்ய பெண்கள் முயல வேண்டும். 

மீண்டும் கூறுகிறோம்.... 

சோஷியலிஸ்ட் இலட்சியத்தைப் பின்பற்றி சோஷலிசத்தை அமுலாக்குவதற்காக நாம் போராட விரும்புகிறோம். பெண்கள் சமுகத்தில் உழைப்பதற்குரிய விரிவான துறை ஏற்படுகிறது. சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்காக நாம் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கு முழுமையான சமத்துவம் அளிக்கப்பட்டு பயனற்ற உழைப்பிலிருந்து விடுதலையடைந்த பெண்களோடு சேர்ந்து நாம் இந்தப் புதிய வேலையை எடுத்துக் கொண்டால் தான் சோஷலிச நிர்மாணம் ஆரம்பமாகும்...

சோஷலிசத்தின் வேலைத்திட்டம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டோம். 

இது தொடக்கம் மட்டுமே... 

இவை வேலைத்திட்டத்தை முடிக்க பல வருடங்கள் தேவைப்படும். 

இவை பெண்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். 

மீண்டும் கூறுகிறோம்.... 

"தொழிலாளர்களுடைய விடுதலையைத் தொழிலாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதைப் போலவே உழைக்கும் பெண்களின் விடுதலையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும்."

தமிழச்சி
16.06.2010

http://tamizachi.com/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது