Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகை சுருங்கி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் வயதாளிகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிறப்புவீதம் குறைந்து வருகின்றது. சமூகத்தில் தொழில் புரியும் வகுப்பினர், நலிவடைந்த பிரிவினருக்கான சமூக நலன் கொடுப்பனவுகளை வழங்கி வருகினறனர். சமூக கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் தொகை அதிகரிக்கையில் அரச செலவினமும் அதிகரிக்கும். இதனை ஈடுகட்டுவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் அகதிகள், சட்டபூர்வ அல்லது சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் என அனைத்து வகை வெளிநாட்டவரின் உழைப்பையும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது.

 

இவர்களில் அங்கீகரிக்கப்படாத அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் ஆகியோரின் உழைப்பு முழுமையும் தங்கியிருக்கும் நாட்டிற்கே சொந்தமாகின்றது. ஏனென்றால் இவர்கள் அரசுக்கு நேர்முக, மறைமுக வரிகளை செலுத்தும் அதே நேரம், அரசின் சமூகநலக் கொடுப்பனவுகளை எதிர்பாராதவர்கள். சுருக்கமாக சொன்னால், இவர்களின் உழைப்பு ஐரோப்பிய சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களை ஈடுகட்டுகின்றது.


சுவீடனில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்,மேற்படி உண்மைகளை அடிப்படையாக வைத்து ஒரு செய்திக் கட்டுரை ( Sweden risks facing severe labour shortages)வெளியானது. அடுத்த பத்து வருடங்களுக்கு சுவீடனில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு குடியேறிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இன்று பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை அது தான். அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்களில் பலர் வெளிநாட்டு மாணவர்கள். (மாணவர்களில் இந்தியர்களும் அடக்கம்). இந்த அரசு தங்களுக்கு என் நிரந்தர வதிவிட உரிமை கொடுப்பதில்லை? என்ற ஆதங்கம் அவர்களின் எழுத்துகளில் வெளிப்பட்டது. அதோடு நின்றால் கூடப் பரவாயில்லை. "படிப்பறிவில்லாத" அகதிகளுக்கு வதிவிட அனுமதியும், வேலை வாய்ப்பும் தாராளமாக வழங்கப் படுகிறது. அதே நேரம் இந்த நாட்டிற்கு தமது திறமைகளை அர்ப்பணிக்க காத்திருக்கும் "அதி புத்திசாலி" மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், என்று தமது வெறுப்பை கொட்டித் தீர்த்தனர். சந்தர்ப்பம் வழங்கினால் சேவை செய்வதற்காக எஜமான் காலடியில் காத்திருக்கும் மாணவர்கள். இவர்கள் தான், முன்பு கல்லூரி அனுமதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, தாய்நாடு திரும்பி தன் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி விசா பெற்றார்கள். தமது வர்க்க குணாம்சத்தை அத்தனை அழகாக காட்டியிருந்தார்கள். யுத்தங்களினால் மட்டுமல்ல, பொருளாதாரக் காரணங்களுக்காக ஆயினும் அகதிகளாக வருபவர்களை "படிப்பறியாத பாமரர்கள்" எனக் கருதிக்கொள்ளும் மேட்டுக்குடித் திமிர்த்தனம் அவர்களுக்கே உரியது.

அகதிகளாக வருபவர்களில் ஆரம்பக் கல்வியை முடிக்காத பலர் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அதே அகதிகள் குழாமில், எத்தனை வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. சொந்த நாட்டில் யுத்தம் காரணமாக உயர்கல்வி வாய்ப்பை பறிகொடுத்த எத்தனை பேர், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்தனர் என்பதை அறியவில்லை. இங்கே அந்த புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டுவது எனது நோக்கமல்ல. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தூதுவர் ஒருவரின் குடும்பம் உட்பட, ஆப்பிரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலியான அரச அதிகாரிகள் என பலரை அகதி முகாமில் பார்த்திருக்கிறேன். அகதிகளாக வந்து அகிலம் அறிய வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் புஷ்ஷின் அரசியல் ஆலோசகரான சோமாலிய அகதி, ஹிர்சி அலி. பிரான்ஸ் ஜனாதிபதியான ஹங்கேரிய அகதி, சார்கோசி. அயர்லாந்து லிஸ்பன் நகர மேயர் ஆகிய நைஜீரிய அகதி, அடெபாரி. இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம். "அடித்தட்டு மக்களின் கையறு நிலைக்கு காரணம் படிப்பறிவின்மை," என்று ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும், ஆசிய "புத்திஜீவி" மாணவர்களும் ஒரே குரலில் பாடுவது எங்கோ நெருடுகின்றது.

அகதிகளை படிப்பறிவற்றவர்களாக வைத்திருக்கும் அநியாயம் ஐரோப்பாவில் சர்வசாதாரணம். பல நாடுகளில் அகதி என்றால் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டம் போட்டு தடுக்கிறார்கள். காய்கறித் தோட்டங்கள், உணவுவிடுதி சமையலறைகள் போன்ற இடங்களில் மட்டுமே அகதிகளை வேலைக்கு எடுப்பார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அகதிகளை மனுநீதி கொண்டு அடக்கி வைக்கின்றது. "உணவுவிடுதிகளில் கோப்பை கழுவும் வேலைக்கு மட்டுமே அனுமதி" என்று அடையாள பத்திரத்தில் எழுதி விடுகின்றது. அகதி முகாம்களில் மொழியைப் போதிப்பது கூட, அவர்களை ரெஸ்டோரன்ட் வேலைக்கு தயார்படுத்துவதாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி கற்பிப்பது கூட சட்டபூர்வ அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் அகதிகளுக்கு மட்டும் தான். அவர்களது தஞ்ச மனுக் கோரிக்கை மறுக்கப்பட்டால், அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இந்த தடைகளை அறுத்தெறிய விரும்பிய சில அகதிகள் தமக்கென பாடசாலைகளை உருவாகிக் கொண்டனர். சூரிச் நகரில் சுவிஸ் இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்தப் பாடசாலை இயங்குகின்றது. அரசால் அங்கீகரிக்கப்படாத இலவசப் பாடசாலை, அகதிகளுக்காக அகதிகளாலேயே நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 150 மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். அனைவரும் சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருப்பவர்கள், அல்லது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதி தான்.

சுவிட்சர்லாந்தில் இரண்டு லட்சம் வரையிலான அகதிகள் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, எத்தனை வருடம் காத்திருந்தேனும் வதிவிட அனுமதியைப் பெறுவது. சுவிஸ் குடிவரவாளர் சட்டப்படி, குறைந்தது ஐந்து வருடங்கள் வசிப்பவர், அதே நேரம் சுவிஸ் சமூகத்தில் சிறப்பாக ஒத்திசைந்து வாழ்பவர் அனுமதிப் பத்திரம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆனால் சூரிச் போன்ற மாநிலங்கள், அவ்வாறு விண்ணப்பிப்பவர் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. 2008 ம் ஆண்டு, விசா அற்ற அகதிகள் சூரிச் நகர தேவாலயம் ஒன்றை ஆக்கிரமித்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இரண்டு வாரங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில், ஜெர்மன் மொழி கற்பிக்கும் பாடசாலை அமைக்கும் யோசனை தோன்றியது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த அகதிகள் பலர், மொழி அறிவு போதாமையால் விதிவிட உரிமையை இழந்தவர்கள். அகதிகளின் பாடசாலையில் சேர்ந்து ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற பின்னர், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். பாடசாலையில் கல்வி போதிக்கும் அகதி ஆசிரியர்களுக்கு, சில ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் ஆர்வலர்கள் உதவுகின்றனர். அனைவரும் இங்கே தொண்டர் ஆசிரியராகவே பணியாற்றுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்கும் அகதிகளில் ஒரு பிரிவினருக்கு, அரசாங்கம் சிறிதளவு பணவுதவி செய்கின்றது. ஒவ்வொரு வாரமும் 70 டாலர் பெறுமதியான காசோலை வழங்கப்படும். இந்த காசோலையை சூப்பர் மார்க்கட்டில் மாத்திரமே மாற்றி தேவையான பொருட்களை வாங்க முடியும். எக்காரணம் கொண்டும் பணமாக கொடுக்கப்பட மாட்டாது. அரசின் திட்டத்தை செயலிழக்க செய்யும் நோக்கோடு, சுவிஸ் இடதுசாரிகள் அந்த காசோலைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்கள். அகதிகள் அந்தப் பணத்தை பிரயாணச் செலவுகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவ்வாறு தான் தூர இடங்களில் வசிக்கும் அகதிகள், சூரிச் பாடசாலைக்கு வந்து படிக்க முடிந்தது.

வெளிநாட்டவர்கள் சுவிஸ் சமூகத்துடன் இசைவாக்கம் பெற வேண்டும் என்று, சுவிஸ் அரசியல்வாதிகள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். ஆனால் இசைவாக்கத்திற்கான ஒரு அகதியின் தன் முனைப்பை தடுப்பவர்களும் அவர்களே. ஒரு அங்கீகரிக்கப்படாத அகதி பாடசாலையில் சேர முடியாது, சட்டப்படி வேலை செய்ய முடியாது, வசதியான வீட்டில் வாழ முடியாது. ஒரு அகதியின் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டு, இவர்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது