Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Greece, நேற்றிரவு (6 டிசம்பர்), ஏதென்ஸ் நகரில், இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் எக்சர்கியா பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் பொலிஸாரால் சுடப்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, கிறீஸ் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கே ஏதென்ஸ் நகரம் முதல் வடக்கே தெஸ்ஸலொநிகி வரை காட்டுத்தீ போல பரவிய இந்த கலவரத்தில் பல போலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன,

 

 

 வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மட்டும் 16 வங்கிகள், 20 கடைகள், டசின் கணக்கான கார்கள் தீக்கிரையாக்கப்படன. "அவர்கள் தமது எதிர்ப்பை காட்ட உரிமை உண்டு, ஆனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது." எனக் கூறிய உள்துறை அமைச்சர், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பான இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கிறீஸ் கலவரத்தின் பின்னணி என்ன? சம்பவம் நடந்த இடத்தில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாலேயே, அந்த 16 வயது சிறுவன் சுடப்பட்டான், என்பது அரசதரப்பு வாதம். ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பிற இளைஞர்கள் வேறுவிதமாக கூறுகின்றனர். (அனார்க்கிச, கம்யூனிச) இடதுசாரிகளின் செல்வாக்கு மிக்க அந்த பகுதியில், அடிக்கடி காவல்துறையினர் அடாவடித்தனம் புரிந்துவருவது வழக்கம். அன்றைய தினம், சில இளைஞர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை மோசமடைந்து, எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை, ஒரு பொலிஸ்காரர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, ஒரு இளைஞனின் நெஞ்சுப் பகுதியை நோக்கி சுட்டதாகவும், அந்த இடத்திலேயே சூடு வாங்கிய இளைஞன் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வீதியில் கூடிய வாலிபர்களையும், பொதுமக்களையும் நூற்றுக்கணக்கான கலவரத்தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். இருப்பினும் ஏதென்ஸ் நகரம் பற்றி எரிவதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இளைஞர்கள் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸ் படையை எதிர்த்து சண்டை போட்டனர்.

அடுத்த நாள் பல வெகுஜன ஊடகங்கள் கலவர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போதும், கடந்த பல நாட்களாகவே கிறீஸ் நாடாளாவிய, அதேநேரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் எழுச்சிக்கு முகம் கொடுத்து வருவதை செய்தியாக கூட தெரிவிக்கவில்லை. கிரேக்க அரசு கொண்டு வந்த கல்வி சீர்திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரு நாட்களாகவே, மருத்துவ பீட மாணவர்களும், மருத்துவ தாதிகளும் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பதில் சுகாதார அமைச்சரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். (பார்க்க:Medical students held Deputy Health Minister hostage) புதிய கல்வி சட்டத்தை எதிர்த்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசார் ஒரு மாணவனை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது. அப்போதும் இதை எதிர்த்த மாணவர்கள் போலீசுடன் சண்டையிட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு இதெல்லாம் செய்திகளல்ல. வர்த்தக நிலையங்களை, வாகனங்களை கொளுத்தினால் மட்டுமே கவனமெடுத்து செய்தி வெளியிடுவார்கள். (இதுவன்றோ பத்திரிகாதர்மம்! )

 

சில நாட்களுக்கு முன்னர் தான், குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளரும், எந்த உரிமைகளுமற்ற அகதிகளும் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிகாரிகள் குறைந்தளவு தஞ்ச விண்ணப்பங்களை மட்டுமே எடுப்பதாலும், பொலிஸ் நெருக்குதலில் ஒரு அகதி படுகாயமுற்றதாலும், ஆத்திரமடைந்த கும்பல் கலவரத்தில் இறங்கியதாக தெரியவருகின்றது. கிறீசிற்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வருகை தருகின்ற போதும், மிக மிக குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக் கொல்லப்படுவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
- Greece: 16year old murdered by police, heavy riots
- Medical students held Deputy Health Minister hostage
- Asylum seekers riot in Athens

Video: Greece Riots

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது