Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது. "இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும் பங்குபற்றின(தமது எஜமானர்களுக்காக). அப்போதே ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் "பனிப்போர்" என்ற சொற்பதம். ஏனெனில் "பனிப்போர்" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.

 

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.

 


"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்" என்று ஒரு ஸ்வஹிலி(ஆப்பரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப்படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் "ஆஹா, ஓஹோ" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, "மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.


அப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் "இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் "சர்வதேச வர்த்தக மையம்", "G 7(+ரஷ்யா)" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.


முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதைய "பனிப்போர் 2" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும்(அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, "ஆயுதக் களைவு ஒப்பந்தப்" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன? "வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை" கலைத்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா?


இல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட "நேட்டோ"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்?


G 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.


ஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் வேளை, ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, "கிரீமியா" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1997 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

 

உக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அதப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும் நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) "ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.


"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். வட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.


வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் "பனிப்போர் அபாயம்" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது