Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"ரஷ்யர்கள் வந்துவிட்டார்கள்!", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, "ஜனநாயக தலைவர்களால்" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட "யால்ட்டா ஒப்பந்தத்தை" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்;

 மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

 

நீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.


சமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.

 

மறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.


ரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் "யெல்ட்சின் வழி"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். அந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.

 

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.

 

நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.

 

http://www.tamilveli.com/showurl.php?url=http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_14.html&type=P&itemid=47049

அண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட "புரட்சிகள்", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் "சோரோஸ் பவுன்டேஷன்" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட "மக்கள் புரட்சிகள்" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.

 

தகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி "தெற்கு ஒசெத்திய" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.

 

மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.

 

தெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது