Language Selection

பி.இரயாகரன் 1996-2000

"தேசியம் ஒரு கற்பிதம் " (கவனிக்க - மாயை என்று நாம் சொல்லவில்லை. கற்பிதம் என்றுதான் சொல்கிறோம்) தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிகுகிறதே யொழிய, எற்கனவே "இயற்கையாகவே" உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை." என்ற மார்க்சிய விரோத, தேசிய விடுதலைக்கு எதிரான கருத்து முதல் வாதக் கோட்பாட்டை பார்ப்போம். "கற்பிதம் மாயை இல்லை" என்று கூறியபடி "கற்பிதம் என்று தான் கூறுகின்றோம்" எனக் கூறுவதில் என்ன விளக்கம் தான் மிஞ்சியுள்ளது? 'கற்பிதம்" என்றால் என்ன என்று அவர்களால் விளங்க முடியவில்லை.

பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப்போராட்டத்தை நடத்த, முன்னெடுக்க, சமூகத்தில் உள்ள எல்லாப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கின்றது . ஒரு பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் தலையிடுகிறது என்றால், அது வர்க்கப் புரட்சிக்காக மட்டுமே தான் என்பதை ஒரு நிமிடம் கூட மறந்துவிடக் கூடாது. இதை நாம் மறந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் தன்னெழுச்சியின் பின், சுரண்டும் வர்க்க கனவுகளின் பின் இழுபட்டு, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்போம்.

book _8.jpgஅண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.