Language Selection

புதிய கலாச்சாரம்

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி

உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும்,

கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம்,

என இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்

இடியென இறங்கியது

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்

போராட்டம்!

ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், "வால் ஸ்டிரீட் ஜர்னல்', "டைம்ஸ் ஆப் லண்டன்', "நியூயார்க் போஸ்ட்' உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப் பட நிறுவனம்... இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

விசாரணையே தேவையில்லாமல் சுட்டுக் கொல்லப்படத்தக்க ஒரு கிரிமினலைக் காட்டச்சொன்னால் தயக்கமின்றி நரேந்திர மோடியை நோக்கி நாம் விரலை நீட்டலாம். ஆனால் அவர் குஜராத்தைக் கூறு போட்டுத் தங்களுக்கு வழங்கியிருப்பதால், முஸ்லிம்களைக் கூறு போட்ட மோடியின் குற்றத்தை நாடு மறந்துவிடவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆளும் வர்க்க ஊடகங்களும் 2002 இனப்படுகொலையை, கவனக்குறைவால் நேர்ந்து விட்ட ஒரு தவறுபோலத்தான்  காட்டுகின்றன. சி.பி.ஐ இன் சிறப்புப் புலனாய்வுக் குழுவும், நீதித்துறையும், வழக்குகளை மோடிக்கு நோகாமல் மூடுவதுதெப்படி என்றே சிந்திக்கின்றன. காங்கிரசு கட்சி, தன் மீது வீசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கான கேடயமாக மட்டுமே மோடியைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது பார்ப்பனப் பாசிசத்திமிரைப் பிரகடனப் படுத்தும் விதத்தில் ஜெயலலிதா மோடியை முன்வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்த, கவுரவமே இல்லாத வலது இடது போலிகள் மோடியின் அருகமர்ந்து பல்லிளிக்கிறார்கள்.

"அப்பாடா... ஒருவழியா கேபிள் டிவியை அரசே எடுத்து நடத்தப் போகுதாம். இனிமே நூறு ரூபா, நூற்றி இருபது ரூபா, நூற்றி ஐம்பது ரூபானு கேபிளுக்கு தண்டமா அழ வேண்டாம். அம்பது ரூபாக்குள்ள கட்டினா போதும்...' என மக்கள் மகிழ்கிறார்கள்.

'இனி கேபிள் டிவியில் ஏகபோக ஆட்சி நடைபெறாது. இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டது...'  என மகிழ்கின்றன ஊடகங்கள்.

"பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்!' "பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்!' "நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்!' "வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்!' "மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை!'

13 வயது ஜன்னத் உறங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மேலிருந்த போர்வை உருவப்படுவதை உணர்ந்து கண் விழிக்கிறாள். சில நொடிகளில் என்ன நடக்கிறதென்று உணர்வதற்குள்ளேயே,

அவளது நெஞ்சும், முகமும் தாங்க முடியாத அளவுக்கு வலியும், எரிச்சலுமடைகிறது. அவளுக்கருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளது தம்பிக்கும் முதுகில் வலி. ஜன்னல் வழியாக வீசப்பட்ட பாட்டரி ஆசிட் தாக்குதல்தான் இச்சிறுமியின், அவளது தம்பியின் வலிக்கும் எரிச்சலுக்கும் காரணம்.

எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில், பயணிகள் காத்துக் கிடக்கும் அந்தப் பகுதியில் மின்விசிறிகளை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர். பயணச் சீட்டு வழங்கப்படும் அந்தப் பகுதி என்னதான் பழைய கட்டிடமாய் இருந்தாலும், பயணிகள் பால் இரக்கமற்ற அதிகார வர்க்கத்தின் கல் மனதால் வெப்பம் வாட்டியது. தரையில் துண்டை விரித்து, பிள்ளை குட்டிகளுடன் சிலர் இரைந்து கிடந்தனர். இளவட்டங்கள் தூணில் சாய்ந்தபடி செல்போனில் நேரத்தை ஓட்டிக் கொண்டு கிடந்தனர்.

பவானியும், கார்த்திக்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து அம்பத்தூர் இரயில்வே ஸ்டேசனுக்கு கட்டாயம் வரச்சொன்னது மனோகரனுக்கு பதட்டத்தையும், குழப்பத்தையும் வரவழைத்தது. பவானியும், கார்த்திக்கும் தொழில் தெரிந்த கட்டிங் மாஸ்டர்கள். அதை விட அயராத வேலைகளுக்கிடையேயும் தங்களுக்கிடையே காதலையும் கச்சிதமாக எக்ஸ்போர்ட் செய்து கொண்டனர். கட்டிங்கில் பிசிறு இல்லாதது போலவே, அவர்களது காதலிலும் பிசிறு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் இயந்திரமாகவே அவர்களுக்கு மாறிப்போயிருந்தான் மனோகரன். சமீபத்தில் அயனிங் செக்சனில்  வேலைக்குச் சேர்ந்து நல்ல பெயரெடுத்த மனோகரன் பவானி, கார்த்திக் இருவரின் நெருக்கமான நண்பனாகவும், அவர்களது காதலுக்கு அளவுக்கு மீறிய ஆதரவாளனாகவும் உதவிக் கொண்டிருந்தான். முக்கியமாக அவர்களை யாராவது கம்பெனியில் கேலி, கிண்டல் பேசினால் மனோகரன் முந்திக்கொண்டு சண்டைக்குப் போவதோடு, காதலைப் பற்றி தத்துவ ஆவேசத்தோடு ஏதேதோ பேசவும் ஆரம்பித்தான்.

அகத்தியனின் கமண்டலத்தில் அடைபட்டுக் கிடந்த காவிரியைப்போல் ஊழல் முறைகேடுகளால் நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடைபட்டுக் கிடக்கிறதாம். விநாயகன் காக்கை உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை விடுவித்தது போல் அண்ணா ஹசாரேவும், பாபாராம்தேவும் ஊழல் தளைகளால் சிக்குண்டு கிடக்கும் இந்தியாவை விடுவிக்கப் போகிறார்களாம். அதன் பின் இந்தியா சுபிட்சமாகி பாலும், தேனும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடத் துவங்கிவிடுமாம். அப்புறம் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை பாய்ந்தோடும் பாலாறிலும், தேனாறிலும் ஈக்கள் மொய்க்காமல் பார்த்துக் கொள்வது மட்டும் தானென்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த சில மாதங்களாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

டெர்மினேட்டர்களாகவும், ராம் போக்களாகவும் அவதரித்து தீயவர்களோடு சண்டையிட்டு உலகை மாபெரும் அபாயத்திலிருந்து அமெரிக்கர்கள் காப்பாற்றுவதாக வரும் ஹாலிவுட் திரைப்படங்களின் இடையே எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு. அவ்வாறான ஒரு படம் தான் 2008இல் வெளியான "தி ரெஸ்லர்'.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE