Language Selection

புதிய ஜனநாயகம் 2006

07_2006.jpg

ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சன்னி பிரிவு முசுலீம் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.

06_2006.jpg

""இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போரில் தமிழகமும் குதிக்கிறது; 25.5.06 அன்று சென்னை  வாலாஜா சாலை அருகே ஆர்ப்பாட்டம்; சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்க அணிதிரளுங்கள்'' என்று இரு நாட்களுக்கு முன்னதாகவே பார்ப்பனமேல்சாதி வெறிக் கும்பல், இணையதளம் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் செல்ஃபோன்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும் மேட்டுக்குடியினரை நூதனமுறையில் பிரச்சாரம் செய்து அணிதிரட்டியது. பெரியார் பிறந்த மண்ணில்

06_2006.jpg

இந்திய நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மே 22ஆம் தேதி வழக்கம் போலவே விடிந்து, வழக்கம் போலவே முடிந்துபோன சாதாரண நாள். ஆனால், பங்குச் சந்தை தரகர்களோ அந்த நாளை, ""கருப்பு திங்கட்கிழமை'' என அழைக்கிறார்கள். அன்றுதான், வீங்கிப் போய்க் கொண்டே இருந்த மும்பய் பங்குச் சந்தை, 1,100 புள்ளிகள் சரிந்து விழுந்தது. பங்குச் சந்தை சூதாட்டத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத்தில் திவாலான பங்குச் சந்தை வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத்

06_2006.jpg

மைய அரசின் உதவி பெறும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ.எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம் (எ.ஐ.ஐ.எம்.எஸ்), ஜிப்மர் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் அண்மையில்

06_2006.jpg

மே நாள்  அரசியல் ஆர்ப்பாட்ட நாள் என்பதை மறைத்து, கோலாகலத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஓட்டுப் பொறுக்கிகள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு தேர்தல் திருவிழா காரணமாக அந்த மே நாள் கொண்டாட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டனர். இந்நிலையில் ""தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பாசிச கருப்புச் சட்டங்களை முறியடிப்போம்! தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம்!'' என்ற

06_2006.jpg

ஓட்டுப் பொறுக்கிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!'' என்ற முழக்கத்துடன் தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக கடந்த ஏப்ரல்  மே மாதங்களில் நடத்தின. ஓட்டுப் போடுவதும் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்வதையே ஏதோ சட்டவிரோத  தேசவிரோத பயங்கரவாதச் செயலாகச் சித்தரித்து, போலீசு பல பகுதிகளில் தடைவிதித்ததோடு, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு சோடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.

06_2006.jpg

இந்தியாவின் அறிவிக்கப்படாத காலனியாக உள்ள காசுமீரில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள விபச்சார பூகம்பம், "தேசபக்தி'யின் பெயரால் நடக்கும் காமவெறி பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிவிட்டது.

 

            கடந்த மார்ச் மாத மத்தியில் சிறீநகரின் கர்ஃபாலி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மீனாவின் நீலப்பட சி.டி. இப்பகுதியில் புழங்குவதாகக் கூறி,

06_2006.jpg

ஆளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர்.

06_2006.jpg

எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியான நபர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற விருப்பதாக தி.மு.க. அமைச்சரவை அறிவித்துள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது, சங்கர மடம் மற்றும் ஆதீனங்கள் ஒன்றிணைந்து இதற்கெதிரான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்றன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைந்த கோயில்களில் பார்ப்பனரல்லாத யாரும் அர்ச்சகராக முடியாது என்ற இந்தத் தீண்டாமைக் கோட்பாட்டை "இந்து மத உரிமை' என்ற பெயரில் அங்கீகரித்தது அன்றயை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.

06_2006.jpg

மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை தகுதி கொண்ட தனியார் கல்லூரிகள் தவிர்த்து, பிற சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில்

06_2006.jpg

கடந்த 25 ஆண்டுகளாகப் புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த கோவை  கணபதியைச் சேர்ந்த தோழர் நா.இராமமூர்த்தி, கடந்த 9.5.06 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 47வது வயதில் மரணமடைந்து விட்டார்.

06_2006.jpg

வடநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.

06_2006.jpg

அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அக்கட்சி கருதும் அம்மா(!) ஆட்சி அதிகாரத்தை இழந்த 15 நாட்களில் 75க்கும் மேலான அக்கட்சித் தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டோ, மாரடைப்பாலோ மரணமடைந்துள்ளார்கள்.

06_2006.jpg

அந்நிய ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கமே நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்றாகி விட்டது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் நாடாளுமன்ற  சட்டமன்ற ஜனநாயகமும் தேர்தல்களும், தனிநபர்வாதமாகவும் கலாச்சாரச் சீரழிவாகவும் மாறி வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, தமிழக அரசியல்.

06_2006.jpg

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதவியேற்றவுடனேயே, தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 6,866 கோடி ரூபாய் பெறுமான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இக்கடன் தள்ளுபடியைத் தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. குறிப்பிட்டவுடனேயே, பல பொருளாதார வல்லுநர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க

06_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வரையறுத்து, தடைசெய்யப்படும் அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. அதோடு, சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை ஆதரித்து நிதியளிக்கும் அனைத்து நாடுகளின் கூட்டுத் தலைமை  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே ஆகிய நான்கு நாடுகள் அடங்கியது 

06_2006.jpg

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முகாசபரூர் என்ற கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் வாந்திபேதி

05_2006.jpg

தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தி வருகின்றன. துண்டுப் பிரசுரம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டம்கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!''

05_2006.jpg

மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன  குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.

05_2006.jpg

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....