Language Selection

பி.இரயாகரன் -2012

நம் தோழரின் கவிதை நூலுக்கு விமர்சனம். முன்கூட்டியே அவருடன் உரையாடி வந்த விடையம் தான், நூல் மீதான தர்க்கரீதியான விமர்சனமாகின்றது. செம்மையான மொழியைக்கொண்டு, "நனவெரிந்த சாம்பலில்" என்ற கவிதை நூல். மொழியை முதன்மைப்படுத்தியதால், கவிதையின் உள்ளடக்கம் முதன்மை பெறத் தவறிவிட்டது. சொந்த மண்ணின் நினைவுகள் முதல் புலம்பெயர் வாழ்வு வரையான பல்வேறு பரிணாமங்கள் முதல், வாழ்வின் முரண்கள் மீதான கவிதைகள் தான் இவை. மனித நம்பிக்கைகள் முதற் கொண்டு மனித வாழ்வின் சீரழிவு வரையான பவ்வேறு விடையங்கள் கவிதைப் பொருளாக உள்ளது. மதத்தைச் சாடவும், ஆடம்பரமான வாழ்வை சாடவும் தயங்காத கவிதைகள், மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டு நியாயம் பேசும் தர்க்கம் வரை இக் கவிதை கேள்வி எழுப்புகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மொழியால் பேசுவதற்கு பதில், மொழிக்குள் அடங்கிப்போகுமாறு கவிதையின் உள்ளடகத்தை அடக்கிவிடுகின்றார்.

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

யாழ்ப்பாணத்தானுக்கு எதிரான பிரதேசவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடிய "ஜனநாயகத்" தேர்தல். இந்த அரசியல் அடித்தளத்தை கொண்டு, அரச இயந்திரத்தின் முழுப் பலத்துடன், பாரிய நிதியாதாரங்களுடன், வன்முறையைத் தூண்டி, மக்களை மிரட்டியதன் மூலம், ஒரு முறைகேடான சட்டவிரோத தேர்தலை நடத்தினர். மறுதளத்தில் தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய குறுந்தேசிய வாதத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை எதிர்த்தரப்பாக எதிர்கொண்டனர்.

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது. மனிதகுலம்அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்துநிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும்தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுக்கிறது.

தமிழக இனவாதிகளின் இனவெறியாட்டத்தைத்தான், சிங்கள பேரினவாதமும் காலகாலமாக செய்து வருகின்றது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த இந்த இனவெறிக் கண்ணோட்டம், இங்கு அரசியல்ரீதியாக வேறுபடுவதில்லை. இலங்கையில் நடந்த இனவழிப்பு யுத்தத்துக்கு காரணம் சிங்கள மக்களா!? ஆளும் சுரண்டும் வர்க்கமா? கூறுங்கள்.

சிங்கள மக்களைக் குற்றவாளியாக்குகின்ற அரசியல், தமிழகத்தில் நாசிய இனவெறி அரசியலாக வெளிப்படுகின்றது. தமிழகத்துக்கு வருகை தந்த இலங்கை அரச ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும் மற்றும் இராணுவத்துக்கும் எதிரான போராட்டங்கள், இன்று அப்பாவி சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறியிருக்கின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் மீதான, தமிழினவெறியாக மாறி இருக்கின்றது. இது மக்களை இனம் சார்ந்த எதிரியாகக் காட்டுகின்றது. இது நாசிய பாசிச கொள்கையும் நடைமுறையுமாகும்.

இலங்கையை மத மோதலுக்குள் கொண்டுவருவதன் மூலம், மதப் பெரும்பான்மை சார்ந்து மக்களை பிளந்துவிட முனைகின்றனர் பாசிட்டுகள். இன்று இன, மதப் பெரும்பான்மை சார்ந்து, மூலதனத்தின் ஆட்சியை இலங்கையில் தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் முனைகின்றனர். இந்த வகையில் மூலதனத்தின் ஆட்சி வடிவங்கள், பாசிசம் மற்றும் ஜனநாயகம் என்ற இருவேறு ஆட்சி வடிவங்களைக் கொண்டது. முரணற்ற ஜனநாயகத்தை பற்றிய அதன் இரு வேறு அணுகுமுறை தான், இதை வேறுபடுத்துகின்றது. சமூகத்தை வர்க்கரீதியாக பிளந்து ஆளுவது முதலாளித்துவ ஜனநாயகம். பாசிசம் இதை மட்டும் கொண்டு ஆளுவதில்லை, மாறாக சமூகத்தை இனம் மதம், நிறம் .. என்ற வேறுபாட்டைக் கொண்டு, அவர்களுக்கு இடையில் மோதலை தூண்டி ஆளுகின்றது.

அண்மையில் "விடியல் சிவா" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். "சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்." என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன், அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.

மார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.

நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.

பொதுவாக புலியெதிர்ப்பு அரசியல் குறித்து மட்டும் தான், இந்தத் தவறான புரிதல் இன்று பொதுவானதாகக் காணப்படுகின்றது. அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவிலும் கூட, இதே தவறான அரசியல் போக்கு தான் காணப்படுகின்றது. புலியெதிர்ப்பின் அரசியல் சாரம் எப்படி ஜனநாயகத்தை மட்டும் கொண்டு இயங்குகின்றதோ, அதே ஜனநாயகத்தைக் கொண்டு அரசு – புலி எதிர்ப்பு அரசியலும் இயங்குகின்றது. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்று புலியை மட்டும் எதிர்க்கின்றது, மற்றது அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்றது. இதற்கு அப்பால், இவர்களுக்கிடையிலான அரசியல்ரீதியாக வேறுபாடு தெளிவாக வெளிப்படுவதில்லை.

இதில் உள்ள அரசியல் மற்றும் நடைமுறை வேறுபாட்டை தெளிவாக பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்;. இன நல்லுறவு ஊடாக வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்கப் போராட்டம் ஊடாக இன இனநல்லுறவா என்பதை அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். சுயநிர்ணயம் முன்வைக்கும் இன ஐக்கியம் என்பது, இனங்களுக்கு இடையில் நல்வுறவுகளை ஏற்படுத்துவதல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் ஊடான வர்க்க ரீதியான ஐக்கியத்தையும், அது சார்ந்த இன நல்லுறவையும் ஏற்படுத்துவதுதான்.

"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.

இன்று புரட்சிகர சக்திகள் யார்? இன்று புரட்சிகர சக்திகளை வேறுபடுத்துவது எது? இதற்கு அனைவரும் இன்று விடை காணவேண்டும். இதில் நான் யார் என்பதற்கு நடைமுறையில் பதிலளிக்கவேண்டும். இந்த வகையில் எம்மை மட்டுமல்ல, எம்மைச் சுற்றிய அனைத்தையும் மீள் பரிசோதனைக்கு உள்ளாக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தவேண்டும்.

இன்று யார் சுரண்டப்படும் மக்களைச் (வர்க்கத்தை) சார்ந்து நிற்கவில்லையோ, யார் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைப் போராட்டத்துடன் இணைந்து போராடவில்லையோ, அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகள்!

யார் இன்று வர்க்க அரசியலை ஏற்கவில்லையோ, யார் வர்க்க நடைமுறையை சார்ந்த செயற்பாட்டை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களை ஏமாற்றுகின்ற முதல்தரமான எதிரிகள். அரசு போன்று, மக்களை தம் அறிவு மேலாண்மை மூலம் ஏமாற்றி வாழ்கின்ற பொறுக்கிகள். ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தப்பபட வேண்டியவர்கள்.

தமிழ் தேசியத்தின் ஊடாக, இனமுரண்பாட்டையும், சிங்கள தேசியத்தையும் பார்த்தல் மார்க்சியமல்ல. மாறாக ஆளும் வர்க்கத்தின் பெரும் தேசிய வர்க்க உணர்வுகளின் மூலமும், சிங்கள தேசிய இன உணர்வுகளின் மூலமும் உருவானதே இனமுரண்பாடு. இப்படித்தான் இதை இனம் காணவேண்டும். இப்படி இனங்கண்டு போராடுவதே சர்வதேசிய உணர்வாகும்.

தமிழ் தேசியத்தின் ஊடாக இனமுரண்பாட்டை புரிந்து, அதற்கு ஏற்ப அரசியல் ஓட்டுப்போட முடியாது. மாறாக சிங்களப் பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் மயப்படுத்துவது என்பது, சிங்கள தேசியத்துக்கு எதிரான சர்வதேசியத்தை உருவாக்குவதன் மூலம தன் சொந்த வர்க்கப் போராட்டத்தை அது நடத்த வேண்டும். சிங்கள தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை உயர்த்துவதைத் தவிர, வேறு எந்தத் தேசியமும் இருக்க முடியாது. இங்கு தமிழ் தேசியம் பற்றிய விடையம், இங்கு இரண்டாம் பட்சமானவை. சிங்கள தேசியம் பற்றிய விடையமே முதன்மையானது. அதனூடாகவே இன முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்.

யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.

"கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை" என்றார் மார்க்ஸ். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் பொருள் முதல்வாதம், ஒருமைப் பொருள் முதல்வாதமாகும்.

ஒருமைப் பொருள் முதல்வாதம் கருத்தியல் ரீதியிலான அம்சத்திற்கும் பொருளாய ரீதியிலான அம்சத்துக்கும் இடையிலான உட்தொடர்பை விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. இது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஓரே கோட்பாட்டில் இருந்து எழுகின்றது. இது பொருள் மற்றும் கருத்தியல் வடிவத்தைக் கொண்டு இருக்கின்றது. கருத்தியல் மற்றும் பொருளாயதம் என்ற இரு நிகழ்ச்சி போக்குகள், இயற்கை அல்லது சமுதாயத்தின் இருவேறு வடிவங்களே ஒழிய வேறல்ல என்பதே ஒருமைப் பொருள் முதல்வாதத்தின் உள்ளடக்கமாகும். இங்கு கருத்தியல் மற்றும் பொருளாயதம் இரண்டில் ஒன்று இன்றி மற்றொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிலவுகின்றது, சேர்ந்தே வளருகின்றது. ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத இயற்கையாகவும், அதே நேரம் கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற இரு வேறுபட்ட வடிவங்களில் இது தன்னை வெளிப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் கூட பிரிக்க முடியாத, அதே நேரம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதாவது பிரிக்க முடியாத நாணயத்தின், இரு வேறுபட்ட பக்கங்கள் இருப்பது போன்றது.

அண்ணளவாக கிளிநொச்சி இரணைமடுக் குளம் சார்ந்த நெற்பயிர்ச்செய்கையில் மூன்றில் ஒன்று நீர் இன்றி அழிந்திருக்கின்றது. மிகுதி முழுமையான பலனின்றி அரையும்குறையுமாக சுடுகாடாகி இருக்கின்றது. யுத்தம் அனைத்தையும் அழிக்க, மீண்டும் இராணுவம் விவசாயிகளை சூறையாடியிருக்கின்றது.

இதன் பின்னால் வரட்சியையும், பயிரிட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் விதைத்ததுமே காரணம் என்று அரசும் அரசு ஊதுகுழல்களும் ஊளையிடுகின்றது. இதன் மூலம் இவைகளே தான் இதற்கு காரணம் என்று தங்கள் குற்றத்தை மூடிமறைக்க அதிகார வர்க்கம் முதல் இராணுவம் வரை முனைகின்றனர். கிளிநொச்சி விவசாயிகளுக்கு பிரதான நீர் விநியோகக் குளமான இரணைமடுக் குளமும், குளத்தைச் சுற்றியும் நடக்கும் பாரிய இராணுவ விஸ்தரிப்புத் தான், 3000 ஏக்கர் நெற்பயிரை கருக்கி இருக்கின்றது.

மனித வாழ்வை எப்படி எந்த வழியில் நாம் புரிந்து கொள்வது? நாம் புரிந்து வைத்திருப்பது முழுமையானதா? என் வாழ்வைக் கூட நான் புரிந்து கொண்டுள்ளேனா? இப்படி நான் என்னை, என்னை சுற்றிய மனிதர்களை, முழு உலகத்தை எப்படி, எந்த அடிப்படையில் புரிந்துகொண்டு இருக்கின்றேன்? இப்படி என் அறிவையும், என் புரிதலையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நான் என் வாழ் நிலையின் எல்லைக்குள் தான், அந்த வாழ்வின் இருப்புக்கும் இயல்புக்கும் ஏற்றதான அறிவும் புரிதலுமே, எனது சொந்த வெளிப்பாடாகின்றது. நான் என் என்ற குறுகிய அறிவு மற்றும் புரிதல் சார்ந்த கண்ணோட்டத்தைக் கடந்து, நாங்கள் எங்கள் சார்ந்த அறிவையும் புரிதலையும் பெறுவது எப்படி? இதற்கு மனித சிந்தனை எதன் பிரதிபலிப்பு என்ற தெளிவு எமக்கு அவசியமானது.

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். மனித வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இந்த வகையில் மனித வாழ்வையும், அதனுள்ளான முரண்களையும், இயங்கங்களையும் புரிந்து கொள்ள மார்க்சியம் உதவுகின்றது. இது கற்பனையான வெறும் தத்துவமல்ல. இது எமக்கு வெளியில் இருந்து வருவதுமில்லை. மாறாக எம் வாழ்வின் எதார்த்தம் சார்ந்து, அதை பகுப்பாய்வு செய்யும் சமூக விஞ்ஞான முறைமையாகும்.

இயற்கைக்கு வெளியில் மனிதன் சந்திக்கின்ற வாழ்வியல் முரண்பாடுகள் ஏன்? எங்கிருந்து? எப்படி? தோன்றுகின்றது என்பதை தன் அறிதலுக்கு உட்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை எந்த நடைமுறை மூலம், எப்படி அடைய முடியும் என்பதையும் முன்வைக்கின்றது. இதில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்வது மார்க்சியமல்ல.

நடைமுறையுடன் மார்க்சியத்தை இணைக்காத பிரமுகர்த்தன "மார்க்சியம்" முதல் திண்ணை "மார்க்சியம்" வரை, பாசிசத்துக்கு உதவுவதையே அரசியல் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தை சார்ந்த கருத்தை முன்வைக்கும் எவரும் மக்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு அணி திரட்டாத வரை, அவர்கள் மார்க்சியத்தை பிழைப்பாக்குகின்றனர். இப்படி இவர்களே இருக்கும் போது "மார்க்சியம் போதாமை" குறித்தும், "கறுப்பு வெள்ளை" அரசியல் குறித்தும், "சாம்பல் அரசியல்" குறித்தும், "அதிகாரத்துக்கு ஏற்ப தகவமைப்பதே மனிதன்" .. என்று கூறும் பல தத்துவங்கள் கோட்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசிசத்துக்கு உதவுவனவாகவே இருக்கின்றது.

சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.

தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்ததுதான், சமூகத்துடன் தன்னை இணைத்து போராடாத இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலாக வெளிப்படுகின்றது. அதன் தத்துவம், கோட்பாடு, நடைமுறை அனைத்தும் இந்த அடிப்படையிலானது. சமூகத்துக்குள் தனிநபரா அல்லது சமூகத்துக்கு மேல் தனிநபரா என்ற அடிப்படை வேறுபாடு தான், தனிச் சொத்துடமையைப் பாதுகாக்கும் எல்லைவரை அவர்களை இட்டுச்செல்வதுடன் பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய அரசியற் செயல்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றது. இப்படி பிரமுகர்களின் சமூக இருப்பு, தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்தது. இதுதான் தனிச்சொத்துடமையில் எங்கும் காணப்படுகின்றது.

அதிகார சூழலுக்கு ஏற்ப தன்னைத் "தகவமைப்பதே" மனிதன் என்று கூறும், ஒரு அற்ப மனிதனின் அற்பத்தனமான கதைகள். இப்படி "தகவமைத்து" வாழ்தல் மனித "இயல்பே" ஒழிய அது "பிழையல்ல" என்று கூறி, அதுவே தன் கதைகள் என்கின்றார். இந்த வகையில் தன்னை அதன் ஒரு பிரதியாகவும் முன்னிறுத்துகின்றார். இன்று தன்னையும் ஒரு பிரமுகராக தகவமைத்துக் கொள்ள எழுதுகின்றார். "அதிகாரத்துக்கு தகவமைத்து" வாழ்தல் தான், மனித இயல்பும் இருப்பும் என்று கூறக் கூடிய ஒருவரின், அந்த இருப்பு சார்ந்து எழும் கதைகள். மனித இனத்தை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற கூட்டத்துடன் தன்னை தகவமைத்துக் கொண்ட வக்கிரமான குரலாக இவை வெளிவருகின்றது. மனிதனுக்கு மனிதன் அடங்கிப் போகும் வண்ணம் "தகவமைப்பை" விளக்குகின்ற, கோருகின்ற அடித்தளத்தை, மனித "இயல்பு" என்கின்றார். இது "பிழையல்ல" என்று, தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பை நியாயப்பபடுத்துகின்றார். மனிதனை மனிதன் அடக்குவதும், ஒடுக்குவதும் ஏன்? மனிதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தன்னை தகவமைக்க மறுப்பதால் தான், அடக்குவதும், ஒடுக்குவதும் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. இப்படி எதார்த்தம் இருக்க, அடங்கி ஒடுங்கி தகவமைத்துக் கொண்டு அதையே பிறமனிதன் மீது செய்யும் தங்களை ஒத்த அற்பர்களை நியாயப்படுத்தி முன்னிறுத்தும் கதை. இதுதான் அவர்கள் அளவில் காணும் எதார்த்தம்.

எந்த எதிர்ப்பு அரசியலும் கூட குறைந்தபட்சம் இரண்டாக பிரிகின்றது. 1.செயலுக்குரியதாகவும், 2.இருப்பு சார்ந்த சடங்காகவும் பிரிகின்றது. இங்கு செயலுக்குரியது சமூகம் சார்ந்தாகவும், சடங்கு சார்ந்தது தனிமனிதன் சார்ந்தாகவும் தன்னை நடைமுறையில் வெளிப்படுகின்றது. இந்தவகையில் இரு வேறு தத்துவங்களும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் கூட உருவாகின்றது. இதுபற்றி பின்னால் விரிவாக பார்க்க உள்ளோம்.

இங்கு எதார்த்த வாழ்வைக் கடந்து தத்துவங்கள், கோட்பாடுகள் மூலமும், தங்கள் சொந்த நடைமுறையை நிராகரிப்பதன் மூலமும், பாசிட்டுகளுக்கு உதவுவது பிரமுகர்களின் பிழைப்புத்தனமாகும். இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு பின் எப்படி செயல்படுகினரோ அதே போன்றுதான் அன்று புலிக்கு பின்பும் இவர்கள் செயல்பட்டனர். உண்மையில் இவர்கள் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் நடைமுறை மார்க்சியத்தை எதிர்ப்பதன் மூலம், பாசிசத்துக்கு எற்ற நல்ல பிள்ளைகள் ஆனார்கள். இந்த வகையில் செயலை மறுக்கும் திண்ணை மார்க்சியம் முதல் பிரமுகர் மார்க்சியம் வரை அடங்கும். இந்த அரசியல் பின்புலத்தில் தான் பாசிட் அமைப்பின் தத்முவ பிரமுகர்கள் தொடங்கி மார்க்சிய பிரமுகர்கள் வரை பரஸ்பரம் உறவு கொண்ட, தம்மை அறிவுஜீவிகளாக முன்னிறுத்திக் கொண்டு அங்கும் இங்கும் கூடிக் கூலாவினர், கூலாவுகின்றனர். அங்குமிங்குமாக பாலம் காட்டுகின்றனர்.

வெள்ளை வானில் கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் தான் என்கின்றார் கோத்தபாய. தங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர்களை, அடித்துக் கொன்ற பின் பிணத்தைக் கூட கொடுக்கமுடியாது என்கின்றது அரசு. பிணம் நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி நீதிமன்றம் மூலம் தங்கள் பாசிசப் பயங்கரவாதத்துக்கு கவசமிடக் கோருகின்றனர்.

இது மட்டுமா அண்மைய சம்பவங்கள். இல்லை. வடக்கில் போராட்டத்தை நடத்துபவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றனர். நீதிமன்றம் இதற்கு மறுக்க, போராட்டத்தில் புலிக்கொடியுடன் புகுந்து ஆட்டம் போட்டும் அரச பாசிசப் பயங்கரவாதம், அதைக்காட்டி ஐயோ புலி என்கின்றது. இதுவும் அம்பலமாக, நீதிமன்றம் மூலம் தடைவிதிக்க மறுத்த நீதிபதி வீடும் தாக்கப்படுகின்றது. யுத்த குற்றக் கும்பலால் ஆளப்படும் நாட்டில், பாசிப் பயங்கரவாதம் தலைகால் தெரியாது இன்று ஆட்டம் போடுகின்றது.

புலி பாசிசமாக்களின் பின் கருணாகரன் போன்ற இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இன்றைய அரச பாசிசமாக்களின் பின்னான இவர்களின் நடத்தையை இனம் காணமுடியும். அதுபோல் புலி அழிவுக்கு பின் முன்னாள் புலிப் பிரமுகர்களையும், முன்னாள் புலியல்லாத பிரமுகர்களையும் ஒன்றினைக்கும் அரட்டை புள்ளி எது? மார்க்சியம் பேசும் இடது பிரமுகர்களையும், மார்க்சியத்தை மறுக்கும் வலது பிரமுகர்களையும் ஒன்றாக கூடி குலாவ வைப்பது எது? அந்த அரசியல் என்ன? இந்த அரசியல் பின்புலத்தில், அரசு இதற்குள் இயங்க முடிகின்றது.

தொடரும் இனவழிப்பு மூலமே, நாட்டை முழுமையாக பாசிசமயமாக்க முனைகின்றது அரசு. இதற்காக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் சிந்தனை அரங்கை கைப்பற்ற முனைகின்றது. இந்த வகையில் முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுபிடிக் கும்பலை பயன்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து துறையையும் தன் மயப்படுத்துகின்றதன் மூலமான பாசிசமயமாக்களை தொடங்கி இருக்கின்றது. புலிகள் கடந்த காலத்தில் எதை எப்படி செய்தனரோ அதை அரசு செய்கின்றது. அதற்கு பழக்கப்பட்ட, அதையே பிழைப்பாக கொண்டு வாழ்ந்த முன்னாள் புலிகளையே இதற்காக அரசு பயன்படுத்துகின்றது. வசதி வாய்புகளுடன் கூடிய சுதந்திரமான செயல்தளத்தை தன் எடுபிடிகளுக்கு வழங்குவதன் மூலம், இதை செயல்படுத்துகின்றது.

அரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட  கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிம் மண்ணிலும் -  புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி "தவறு"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.

அண்மைக் காலமாக சில சம்பவங்கள் மீது, சில காலகட்டங்கள் மீது.., விமர்சனம் செய்வதன் மூலம், அதை மட்டும் தவறாக காட்டுகின்ற பம்மாத்தான "சுயவிமர்சன" "விமர்சன" அரசியலை அரங்கேற்றுகின்றனர். அம்பலப்பட்டுபோன புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, இந்த உத்தி மூலம், மீண்டும் மக்களை எமாற்ற முனைகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் சரியாக இருந்ததாக காட்டிக் கொண்டு, மீண்டும் அதை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் கூறும் "தவறான" சம்பவங்கள், "தவறான" காலகட்டத்துக்கான பொறுப்பை தனிநபர்கள் மீதும், குறித்த சூழல் மீதும், மற்றவர்கள் மீதும் சுமத்தும் இவர்கள், இது தாங்கள் கொண்டிருந்த அந்த அரசியலின் தவறல்ல என்கின்றனர். இதன் மூலம் மற்றவர்கள் மீது இலகுவாக குற்றம் சாட்டுவதன் மூலம், அதை தங்கள் சரியான அரசியலின் ஒரு "தவறாக" இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றனர். இது தவறு அல்ல, மாறாக அந்தந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் வெளிப்பாடாகும். இங்கு "தவறு" குறித்த இவர்களின் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்துடன் கூடிய அரசியல் மோசடியாகும்.

“கூட்டத்தில் பேச முனனர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், "வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா? அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா? கடந்த 30 வருடங்களாக அவர் எதனை முன்னெடுத்துச் செல்கின்றார்?

பிரமுகராக இருப்பதையும், கொசிப்பதையும் இலக்கிய அரசியல் வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு இது அக்கறையற்றதாக இருக்காலம். தண்ணி அடிப்பதையே உயர்ந்தபட்ட அரசியல் ஒருங்கிணைவாக கொண்டு வாழ்பவர்களுக்கு, இதுவொரு அரசியல் விடையமே அல்ல. தங்கள் கூட்டாளிகள் பற்றி இப்படி கூறுவது, அதற்கு நாம் அரசியல் ரீதியாக வேட்டு வைப்பது கண்டு, அரசுக்கு எதிரான நடைமுறையை மறுக்கும் இவர்கள் "அரசு எதிர்ப்பு" வேசம் மட்டும் போட்டுக் காட்ட முடியும். இந்த வேசம் கூட தங்கள் சுய இருப்புக்கானதே ஒழிய, மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டுதைக் கோருவதுமல்ல, அதற்காக தாமைத் தாம் அணிதிரட்டுவதுக்குமல்ல. பிரமுகராக இருப்பதற்கான, கொசிப்பதற்கான அடையாள அரசியல். இந்த வகையில் அ.மார்க்ஸ் இவர்களின் பங்காளியாக இருக்கின்றார்.

தமிழன் என்றால் எப்படியும் கொல்லலாம், எப்படியும் நடத்தலாம். இதுதான் இலங்கையின் அதிகார வர்க்கத்தின் நடைமுறை. இன அடையாளம் மட்டும் போதும், அவர்களைத் தண்டிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது. நாட்டின் சட்டம் நீதி எல்லாம் தமிழனுக்கு கிடையாது என்பது, பொது நடைமுறை. தாம் அடித்தே கொன்ற பிணத்தைக் கூட, கொடுக்க மறுக்கும் அளவுக்கு தங்கள் இனவாதக் கொடூரங்கள் மூடி மறைக்கின்றது அரசும் நீதித்துறையும். நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த அரசு தான், தாம் கொன்ற பிணம் கூட நாட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று கூறுகின்றது. இந்த நிலையில் காணமல் போன 15 ஆயிரம் பேரின் விபரத்தை, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு இலங்கையிடம் கோருகின்றது.

இதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலை. பறிகொடுத்த தங்கள் உறவுகளுக்காக போராடும் மக்கள், தங்கள் சொந்த சட்டபூர்வமான நிலங்களுக்காக போராடுகின்ற அவலம். தமிழ்மக்கள் தங்கள் பூர்வீக பிரதேசத்துக்காக போராடிய மக்கள், இன்று தங்கள் வாழ்விட உரிமைக்காக போராட நிற்பந்திக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக வடக்கில் வெளிப்படும் உணர்வுகள், கிழக்கில் வெளிப்படவில்லை. ஒடுக்குமுறையும், விழிப்புர்ணவும், சோரம் போதலும் பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்ற பின்னணியில், வடக்குகிழக்கில் இனவழிப்பு புதிய வடிவம் பெற்று இருக்கின்றது. யுத்தகாலத்தில் யுத்த வன்முறை மூலம் எதையெல்லம் செய்ய முடிந்ததோ, அதை யுத்ததின் பின்னலான கொள்கையாக நடைமுறையாகக் கொண்டு அரசு செயல்படுகின்றது.

30 வருடமாக புலி அரசியலையும், அதன் மனிதவிரோத குற்றங்களையும் எதிர்த்து போராடியதை எற்காது, முள்ளிவாய்க்காலுக்கு பின்னான புலிகள் பற்றி விமர்சனமும் அதன் அரசியலும் எதுவாக இருக்கின்றது? அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றது? முள்ளிவாய்க்காலுக்கு முன் இவர்களுக்கு புலிகளுடன் முரண்பாடு இருந்து இருப்பின், எந்த அரசியலின் அடிப்படையில் இவர்கள் முரண்பட்டு இருப்பார்கள்? அதை இன்று என்னவாக, எப்படி அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? இதை எல்லாம் மூடிமறைக்க, இலக்கியம் என்ற தகுதி போதுமா? இப்படிப்பட்ட இவர்கள வேறுயாருமல்ல, புலிகளின் அரசியல் தவறுகள் எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்ததுடன், புலிகளின் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன். இதற்காக "தவறு" ஒன்றை, அவர் திடீரெனக் கண்டு பிடிக்கின்றார். வேடிக்கை என்னவென்றால் இவர் "தவறாக" கண்டுபிடித்த விடையம், படிப்பகத்தில் மின்நூலாக்கப்பட்டுள்ள 10000 பிரதிகளுக்கும் பொருந்தும். இவர் சொல்லும் அதே "தவறு"டன் தான் அவையும் இணையத்தில் "உரிமை" மீறி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படி இவர் "தவறு" என்று கூறுவது, மின் நூலாக்கப்பட்டவற்றுக்கு அனுமதியை நாம் பெறவில்லை என்பதுதான். ஆக உங்கள் படிப்பகத்தை மூடக் கோருகின்றார்.

குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.

விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.

கடந்தகால இயக்க நடத்தைகள், இயக்க புனைவுகள் சார்ந்தும், மக்களின் அவலங்கள் சார்ந்தும் யோ.கர்ணன் கதைசொல்வது ஏன்? சமூகம் மீதான அவரின் சமூகப் பார்வை தான் என்ன? இனவொடுக்குமுறைக்கு எதிரான அவரின் செயல்பாட்டுத்தளம் என்ன? புலிக்கு பின் எல்லா சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் புதிய முகமூடிகளுடன், மூடிமறைத்த தங்கள் நோக்கங்களுடன் களத்தில் இறங்குகின்றனர். இதை யோ.கர்ணனின் கதைகளிலும் காணமுடியும். அரசு வழங்கிய (சுய) "புனர்வாழ்வை" இந்த கதைகள் மூலம் இனம் காணமுடியும்.

கதைகளின் நோக்கம் மிகத் தெளிவானது. சமூக நோக்கு கொண்டவர்களை அரசியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து அன்னியப்படுத்துவது தான். அதே நேரம் சமூக நோக்கு கொண்டவர்களை பற்றிய வெறுப்பை, மக்கள் மத்தியில் ஊட்டுவதுதான். இந்த வகையில் கதைகள் கடந்தகால இயக்கங்கள் நடத்தையை கருப்பொருளாக கையில் எடுத்து, மனித அவலங்களைக் காட்டி வெறுப்பை ஊட்டுகின்றது. யுத்தத்தின் பின் போராட்டத்துக்கு எதிரான பொது உணர்வுகளை, அரசியல் ரீதியாக வளர்ப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த "புனர்வாழ்வு" கதைகள். மக்களுக்கும் "புனர்வாழ்வு" அழிக்க இந்த கதைகள் மூலம் முனைகின்றது. அந்த நோக்கில் இவர்கள் எழுதுகின்றனர், எழுத வைக்கப்படுகின்றனர். போராட்டம் தவறானதா? இல்லை. மாறாக அதன் அரசியலும், அதன் சமூகப் பார்வையும், அதன் நோக்கமும் தான் தவறானதாக இருந்தது. இதை தங்கள் கதைகளில் கூறுவதை இவர்கள் மறுதலிக்கின்றனர். இந்த அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனத்தைக் கூட, இவர்கள் தங்களளவில் செய்ய மறுக்கின்றனர். இந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்தும் வண்ணம், சமூகப் பொறுப்புடன் இவர்கள் கதை சொல்லவில்லை.

யாரைக் கொண்டு தான் புரட்சியை நடத்தமுடியும்? சில புரட்சியாளர்களின் புரட்சிக் கோசம், மக்களுக்கு எதிரான சதியாகிவிடும். நாம் ஒடுக்குமினமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடவேண்டும். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் இனத்துக்குள் தான் நடத்தவேண்டும். இனவொடுக்குமுறையை அந்த இனம் சார்ந்து முன்னெடுப்பதால், அந்த மக்களை அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்கள் அதைச் செய்யாது, ஒடுக்கப்பட்ட இனத்தை அணுக முற்படுகின்றனர். ஒரு தவறான அரசியல் பாதை.

தமிழ் மக்கள் தமக்காக தாம் தான் போராடவேண்டும். சிங்கள மக்கள் இதற்கு ஆதரவாகவும், தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும். இந்த நடைமுறைப் போராட்டம் தான், தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் இயல்பான அரசியல்ரீதியான ஒன்றிணைவை உருவாக்கும். இதைச் செய்யாது, சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்காக தாம் முன்னின்று போராட முற்படுகின்றனர். இது தவறானது. தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியது போல், ஜே.வி.பி சிங்கள மக்களுக்காக போராடியது போல்தான் இதுவும். மக்கள் தாம் தமக்காக போராடுவதை இது தடுத்து நிறுத்துகின்றது.

தமிழ் சிங்கள மக்கள் மட்டுமல்ல, மலையக முஸ்லீம் மக்களுடன் கூட இணங்கி ஐக்கியமாக வாழ இன முரண்பாடு தடையாக இருக்கின்றது. இன்று இதை மேலும் தூண்டும் வண்ணம், இதற்குள் மத முரண்பாடுகளை இனவாதிகள் புகுத்துகின்றனர். இவை அண்மைய நிகழ்வுகள். மக்கள் குறுகிய மத இன உணர்வு பெற்று இதைத் தூண்டவில்லை. மக்கள் தமக்குள் ஐக்கியமாக வாழ்வதைத்தான், தங்கள் தெரிவாக, வாழ்வாகக் கொண்டிருக்கின்றனர். இதை நாம் புரிந்தாக வேண்டும்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இயல்பாக நாம் ஏற்றுக் கொண்ட, எம்மைச் சுற்றிய வாழ்க்கையை இது புரட்டி போடுகின்றது. தன்னில் தாழ்ந்தவனை குற்றவாளியாக்கும் எமது அறத்தையும், எமது மௌனங்களையும், வெறும் அனுதாப உணர்வுகளையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கின்றது. இந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சினிமா, தன் கலை உணர்வுடன் அழகியலுடன் வெளிவந்திருக்கின்றது.

"இனத் துரோகி" "தேசத் துரோகி" என்று கூறி தண்டித்த புலிகள் இன்று இல்லை. ஆனால் "தேசத் துரோகி" என்று கூறி தண்டிப்பது மட்டும் தொடருகின்றது. முழத்துக்கு முழம் இராணுவம் உள்ள பிரதேசத்தில், அதுவும் அதிகாலை 1.30 மணிக்கு "தேசத் துரோகி"யாக சித்தரித்து தாக்குதல் நடக்கின்றது. வடக்கில் நடக்கும் சிவில் நிர்வாகத்தின் இலட்சணம் இதுதான். சிறிது காலம் திடீரென வந்து மறைந்த கிறிஸ் பூதங்கள் போல் தான், இதன் பின்புலங்கள் கூட.

புற்றுநோய் மருத்துவரும், யாழ் வைத்திய சங்கத் தலைவருமான ஜெயக்குமாரின் வீட்டின் மீது அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். அத்துடன் "தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" என்ற செய்தியையும் அங்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஆரியன் தன் சடங்கைச் செய்ய மறுத்தவனை 'தாச' மக்கள் என்று கூறி ஒடுக்கினான்;. இதன் மூலம் ஆரிய சடங்கை, தனது சுயநலத்துக்கு ஏற்ப செய்வதை கட்டாயப்படுத்தினான். இந்தச் சடங்கை ஆரிய வழிவந்த பார்ப்பனன் தான் மட்டும் சுரண்டும் சுயநலத்துடன், பெரும்பான்மை மக்களுக்கு தடை செய்தான். இதன் போது, உருவான சாதிய சமூக பொருளாதார பண்பாடுகள் தான், பார்ப்பனியம்.

குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.

ஒரு வலதுசாரிய வர்க்கத்துக்கு "தேவைப்பட்ட போராட்ட"மும், அந்த வர்க்க அரசியலின் "முன்னோடி"களால் இனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் "எமது திசைவழி தவறானது" என்று கூறி, நடைமுறையில் மாற்று அரசியல் வழிமுறையை முன்னெடுத்துப் போராடியவர் ஐயர். இந்த நிலையில் அவரின் நூலோ, அவரின் இந்தக் கருத்துக்கும் நடைமுறைக்கும் எதிராக வந்திருக்கின்றது. இது எதைக் காட்டுகின்றது? தகவலை ஒவ்வொரு வர்க்கமும் தனக்கு ஏற்ப பயன்படுத்தியதையே, இந்த நூலில் சிறப்பாக நாம் காணமுடியும்.

அன்று "சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாகக் கூறி, பிரபாகரன் தன் வர்க்கம் சார்ந்து துண்டுப்பிரசுரம் விட்ட நிலையில், இந்த அரசியலை நியாயப்படுத்துகின்றது இந்த நூல். "பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறித்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது." இங்கு ஐயர் தன்னளவில் தன் அரசியல் வழியிலான "தவறு" குறித்து, "புதிய அரசியல்" வழி சார்ந்து, தன்னைத்தான் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார். இப்படி உண்மை இருக்க அரசியல் சாராத "தவறு" குறித்து, எப்படி மூன்றாம் தரப்பாக கூறமுடியும். இந்த அரசியல் வழிமுறையை "தவறாக" காண்பதா அல்லது முற்றாக நிராகரிப்பதா? இரு நேர் எதிர் அரசியல் வழிமுறைக்குள் இந்த நூல் தடுமாறுகின்றது. இரு வேறுபட்ட வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட நபர்களின் சொந்தக் கண்ணோட்டத்துக்கு ஏற்ப, தகவல்கள் அரசியலாகின்ற போது நூலுக்குள்ளான முரண்பாடுகள் ஆழமாகவே வெளிப்படுகின்றது.

இந்தச் சமூக அமைப்பிலான தீர்வுகளை, பாட்டாளி வர்க்கம் சார்ந்து இருப்பதில்லை. இதற்கு பதில் தன் வர்க்கம் சார்ந்த தன் வர்க்க தீர்வுகளை முன்வைக்கின்றது. இந்த வகையில் உடனடித் திட்டம் நீண்ட காலத்திட்டம் என குறைந்தபட்சம் இரண்டை அடிப்படையாகக் கொண்டது தான் பாட்டாளி வர்க்கத் திட்டம். இதில் ஒன்றை நிராகரித்தாலும் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வரமுடியாது. இன்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் செய்வதில் உள்ள தடையும் இதுதான். இலங்கையின் பிரதான முரண்பாடான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண, உடனடித் திட்டம் மற்றும் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அரசியல் நடைமுறைகளை முன்னெடுக்காத வரை, பாட்டாளிவர்க்கம் இதன் மேல் அரசியல் செல்வாக்கு செலுத்த முடியாது.

இப்படி எம்மைப் பற்றி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லித் திரித்துப் புரட்டுகின்றனர், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறிக்கொள்வோர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "ஜக்கியம்" என்பது "அடிமைத்தனமாம்"! "அயோக்கியத்தனமாம்"!! மக்கள் தங்கள் மத்தியில் ஐக்கியப்படுவதை விரும்பாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், தங்களைத் தாங்கள் "மார்க்சியவாதிகள்" என்கின்றனர். "முன்னேறிய பிரிவுகள்" என்கின்றனர். “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” என்கின்றனர். சிலர் தம்மை "சுதந்திர ஊடகவியலாளர்கள்" என்கின்றனர். ஆளும் வர்க்கங்களோ, மக்களைப் பிளந்து அதில் குளிர்காய்கின்றது. அதை எதிர்த்துப் போராட, மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தாத கருத்துகள், பிரச்சாரங்கள் அனைத்தும் இனவாதம் சார்ந்தவை தான். இந்த வகையில் திடீர் "மார்க்சியம்" பேசுகின்றவர்கள், அரசு சார்பானவர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தவகையில் "இனியொரு" இணையத்திலும், "தேசம் நெற்" இணையத்தி;லும், "குளோபல் தமிழ்"நியூஸ்" இணையத்திலும் "ஐக்கியம்" "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்கின்றனர்.

கொலை செய்வதே புலியின் அரசியலாக முதலில் இனம் கண்டு கொண்ட ஐயர், அதை நிராகரித்தார். ஐயரின் நூலை அறிமுகம் செய்த தமிழ் பாசிட்டுகள், ஐயரின் இந்த முடிவுக்குக் காரணம் பார்ப்பனியத்தின் "கருணை" சார்ந்த அவரின் பிறப்பு சார்ந்த ஒன்றாக விளக்கம் கொடுத்தனர். இப்படிக் குறுகிய விளக்கம் கொடுக்கும் வண்ணம், நூலில் அரசியல் காணப்படுகின்றது. இந்த நூல் புலிகளை அரசியல் ரீதியாக அல்லாது, புலிகளை "குறைபாடு" கொண்ட "தவறுகள்" கொண்ட ஆனால் திருத்தக்கூடிய ஒன்றாக காட்டமுனைகின்றது.

குறிப்பு : 07.05.87 அன்று மதியம் விசு என்பவர் நடந்த மற்றும் கதைத்த விடையங்களை கேட்டு பதிவு (ரேப்) பண்ணினான்.

விளக்கம் : எனது விசாரணையில் ஒத்துக் கொண்டவைகளை ஒளிநாடாவில் பதிவு செய்தனர். புலிகள் நவீன சித்திரவதை முறைகளையும் உள்ளடக்கிய வகையில், காட்டுமிராண்டித்தனத்தை ஒருங்கமைத்த வகையில் அவர்களின் வதைமுகாம் வெம்பிக்கிடந்தது. கடத்திவரும் ஒவ்வொரு நபர்கள் மீதும், அடி உதை முதல் எலும்புகளை முறித்துக் கொல்வது, உயிருடன் இருக்கும் போதே உடல் பாகங்களை வெட்டி அகற்றுவது, அவர்களை நிர்வாணமாகவே படம் எடுப்பது, விசாரணையைப் பதிவு செய்வது என்று பல வடிவங்களில் வதையின் கதைகள் உறைந்து போன, எமது தமிழ் சமூகத்தில் ஆழப் பதிந்து கிடக்கின்றன.

இனவாதமும், மதவாதமும் கொண்ட அரசியல் கண்ணோட்டமும், அது சார்ந்த செயல்பாடும் தான் இதன் பின்னால் காணப்படுகின்றது. இலங்கையில் பெரும்பான்மை சார்ந்த இனவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை சார்ந்த இனவாதமும் காணப்படுகின்றது. கடந்தகாலத்தில் இனவாதம் இழைத்த மனிதகுற்றங்களை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத சமூகத்தில், அந்த அரசியல் தொடரப்படுகின்றது. தங்கள் இனம் சார்ந்து பாதிக்கப்பட்ட மற்றைய இன மக்கள் தம்முடன் மீள இணைந்து வாழ முன்னின்று வழிகாட்டாத குறுகிய இனவாதத்தைக் கொண்டு, மக்களை மோத வைக்கின்ற நிகழ்வுதான் மன்னார் சம்பவம். இனம் கடந்து, மதம் கடந்து மனிதனாக உணராத குறுகிய உணர்வுகளும், இதை தூண்டும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் இதன் பின் குளிர்காய்கின்றனர். சிங்களப் பேரினவாதம் மட்டும் தான், பௌத்த மதம் மட்டும் தான், மக்களைப் பிளக்கின்றது என்பது கடைந்தெடுத்த பொய். மாறாக பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் கூட, இன மத வாதிகளாக, ஒடுக்குபவராக, இனப்; பிளவை தூண்டுபவராக உள்ளனர். இதில் ஒன்றை தூண்டி ஒடுக்குவது என்ற வகையில், அரசின் பங்கு சார்ந்த கூற முதன்மையான அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது.

திடீர் "தகைமை"யுடனும், "உரிமை"யுடனும், "முன்னேறிய"வர்களும் கூடிக் குலாவ முனையும் பந்சோந்தி அரசியல். விடுதலைப் புலிகள் மக்களைப் "பணயக் கைதிகளாக" வைத்திருந்தனராம்!? புதியேதார் உலகம் நாவல் பற்றி, திரிக்கப்பட்டு புரட்டப்பட்டு புதிதாக பதிவு செய்யப்படுகின்றது. இப்படி திடீர் திடீரென "முன்னேறிய" பிரிவினருடன் கூடி ஆவி இறக்கும் பூசாரியாக, கனடாவில் ஜமுனா ராஜேந்திரன் காட்சியளிக்கின்றார். கனடாவில் தொடர்ச்சியாக அரங்கேறும் அரசியல் "விபச்சார" மேடைகளில், "முன்னேறிய" புத்திஜீவிகளும் கூடி, "மார்க்சியம்" என்னும் அரசியல் பிசாசைக் கலைக்கின்றனர்.

"தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி"யதாக யமுனா ராஜேந்திரன் எழுதுகின்றார். இதற்கு ஆதாரமான இந்திய றோவின் கூலி அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பினர் ஒருவரின் கூற்றை ஆதாரமாக காட்டுகின்றார். இன்று ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பிரான இவர், அன்று கொலைகார புளட்டுக்கு தலைமை தாங்கி தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்து திரிந்தவரில் ஒருவர். யமுனா ராஜேந்திரனின் கருத்தை வெளியிட்ட இணைய ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்தபடி, துப்பாக்கியுடன் தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்தவராயிருந்த ஜென்னி எழுதிய கூற்று, யமுனா ராஜேந்திரனுக்கு "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட" ஒன்றாகிவிட்டது. அதை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்கின்றார். உண்மையான போராட்ட வரலாற்றை திரித்துப் புதைக்கின்ற கச்சிதமான பணியில் யமுனா ராஜேந்திரனும், குருபரனும், ஜென்னியும் ஒன்றாகவே பயணிக்கின்றனர்.

புலி அரசியலும், அரசியல் நடத்தைகளும் தவறானதல்ல. ஏனெனில் அது வலதுசாரிய அரசியல் நடைமுறையாகும். இந்த வகையில் புலிகளின் "தவறு" பற்றிய கூற்றுகள் கூட, அடிப்படையில் மக்கள் விரோதத்தன்மை கொண்ட வலதுசாரியமாகும். "பொதுவாக" தவறு பற்றிப் பேசுவது வேறு, போராட்டத்தின் வழி பற்றியும், அதன் மீதான விமர்சனம் சுயவிமர்சனத்தில் "தவறு" பற்றி பேசும் போது அது திரிபாக வெளிப்படுகின்றது. இங்கு "தவறு" பற்றிய பிரபாகரனின் நிலை, இதற்கு மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் பதில் தருகின்றது. "கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்." இதுதான் எதார்த்த உண்மை. இதைக் கடந்து இதற்கு விளக்கம் கிடையாது. இது பிரபாகரனின் சரியானதும், துல்லியமானதுமான விளக்கம் மட்டுமின்றி எதிர் விவாதமுமாகும். இந்த வகையில் உண்மையில் தன் அரசியலை, மிகப் சரியாகப் புரிந்து கொண்டவர் பிரபாகரன். இதை "தவறு" என்றவர்கள், இன்றும் "தவறு" பற்றி கூறுகின்றவர்கள் இந்த அரசியலை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது இந்த அரசியலை பாதுகாக்க "தவறு" பற்றி கூறி அதைப் பாதுகாக்க முனைகின்றனர். இதுவொரு வலதுசாரிய அரசியல் என்பதையும், இதைவிட இந்த அரசியலுக்கு வேறு வடிவம் எதுவும் கிடையாது என்பதை, அதன் வர்க்க அரசியலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக இது தவறு அல்ல, இதுவொரு அரசியல் வழிமுறை. இதை "தவறு" என்று கூறுகின்றவர்கள், அந்த அரசியல் வழிமுறையை மீண்டும் முன்னிறுத்துகின்றனர்.

அரசு முதல் புரட்சியாளர்கள் வரை தங்கள் கட்சிக்கு ஆள்பிடிப்பதன் மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கலாம் எனக் கருதுகின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையை இப்படித்தான் அரசு முதல் புரட்சியாளர்கள் வரை அணுகுகின்றனர். முரண்பாடுகளுக்குரிய அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில், அந்தச் சமூகப் பிரிவுகளின் ஆள்பிடிக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர். அதாவது மக்கள் தமது தீர்வுக்காக போராடுவதற்கு பதில், மக்களுக்காக போராடும் சிலரைக் கண்டுபிடிக்க முனைகின்றனர். மக்களை ஒடுக்கவும், இதே அரசியல் வழிமுறையைத்தான் அரசு கையாளுகின்றது. போராடவும், ஒடுக்கவும், அந்தந்த சமூகப்பிரிவில் ஆட்களைப் பிடிப்பதன் மூலம் தீர்வு காணமுடியும் என்ற அரசியல் வழிமுறை, இலங்கையில் பொதுவில் எங்கும் காணமுடிகின்றது.

புலியை அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்கி, அந்த அரசியல் வழியை முற்றாக நிராகரிக்க வேண்டியதை வெறும் "தவறாக" இட்டுக் கட்டுகின்றது. இந்த நூல் அதைத்தான் செய்கின்றது. இதற்கமைவாக தங்கள் இந்த "தவறுகளுக்கு" இடதுசாரிகளை பொறுப்பாக்குவதே, இந்த நூலின் மைய அரசியல் சாரம். புலியின் வலதுசாரிய அரசியல், இந்த நூலில் மிக நுட்பமாக கவனமாக புகுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் புலியை நியாயப்படுத்தியிருக்கின்றது. "இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு." என்கின்றது. தங்கள் வலதுசாரிய அரசியல் வழி எல்லாம் சரியாக இருந்தது, "தவறு"களை "களைந்துகொள்"வதன் மூலம் சரியாக வழிநடத்த முடியும் என்கின்றது. ஐயரின் தகவலை தொகுத்தவர்களின் அரசியல், இவ்வாறு மிக நுட்பமாக வெளிப்பட்டு இருக்கின்றது. புலியின் நடத்தைகள் வலதுசாரிய அரசியல் என்பதையும், இது "தவறு அல்ல" ஒரு அரசியல் வழி என்பதையும், இது மறுதலித்திருக்கின்றது. "பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது." என்று தம் வலதுசாரிய அரசியலுக்கு சுய நியாயம் கற்பிக்க முனைகின்றது.

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தான் பிரிவினைவாதத்துக்கு எதிரான பேரினவாதக் கோசத்துடன் "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவாக வெளிவந்திருக்கின்றது. சிங்கள மக்கள் இதற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். சிங்கள மக்களை இனவாதியாகக் காட்ட முனைகின்றது. இனவாதியாக்கவும் முனைகின்றது. "கோத்தாவின் யுத்தம்" என்ற நூலும், யுத்த "வெற்றி கொண்டாட்டங்களை" எதிர்த்து வெற்றி கொள்வதே, சிங்கள மக்கள் முன்னுள்ள அரசியல் பணி. சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள அரசியல் சவால்.

இனவாதம் மூலம், யுத்தம் மூலம் கொழுத்த தரகு முதலாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான பிளவு தான், இந்த ஏகமனதான இந்த ரத்து செய்யக் கோரும் முன்மொழிவைத் திணித்திருக்கின்றது. இலங்கையில் மற்றைய ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கை தடுத்து நிறுத்த, அமெரிக்காவும் - இந்தியாவும் கூட்டாக மறைமுகமான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றது. இது இலங்கை அரசுக்குள்ளும், ஆளும் வர்க்கத்துக்குள்ளும் பிளவைக் கொண்டு வருகின்றது. அமெரிக்க- இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்கு அரசு அடிபணியும் போது, இன்று ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்கா - இந்தியா அல்லாத தரகுமுதலாளித்துவ பிரிவுகளின் நலன்கள் பறிபோகும். இந்த தரகுமுதலாளித்துவ வர்க்கம் இனவழிப்பைக் கூர்மையாக்கி வைத்திருப்பதன் மூலமாக, தரகு முதலாளித்துவ நலன்கள் பறிபோவதை தடுக்கும் ஒரு முயற்சிதான், 13வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானமாகும்.

இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கிவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும், பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக்கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இதுதான்.

"மே18" காரர் கனடாவில் நடந்த கூட்டம் ஒன்றில், தம்மை "தமிழரங்கம்" காட்டிக் கொடுத்ததாகக் கூறி, அங்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை தடுத்து நிறுத்தினர். அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள "கனடாவில் "முன்னேறிய பிரிவினரின்" ஜனநாயக மறுப்பு! "என்ற கட்டுரையைப் படியுங்கள்.

"பிரிவினைவாதம்" பற்றியும், "பயங்கரவாதம்" பற்றியும் மட்டும் பேசிய ஜே.வி.பி., இனப்பிரச்சனை பற்றிப் பேசவில்லை. "பிரிவினைவாதத்தையும்", "பயங்கரவாதத்தையும்" சோசலிசத்துக்கு முன்னமே ஒழிக்கவும் கோரி அதற்கு உதவியவர்கள், பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவில்லை. மாறாக இனப்;பிரச்சனையை தாம் சோசலிசத்தில் ஒழித்து விடுவோம் என்று கூறியதன் மூலம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது அதற்கு மறைமுகமாக உதவினர். இப்படி இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது இனவொடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவியவர்கள் தான், தாங்கள் இனவொடுக்குமுறையில் ஈடுபடவில்லை என்றும் கூறினர். இதுதான் ஜே.வி.பி.யும், அதன் அரசியலும். இந்த அரசியல் வழிமுறை லெனினிய வழிமுறையல்ல. மாறாக திரோஸ்கிய வழிமுறையாகும். ஜே.வி.பி.யின் இந்த அரசியல் பின்புலத்தில் லெனினின் சுயநிர்ணயத்தை மறுத்தவர்கள், திரோஸ்கிய சுயநிர்ணய மறுப்புக் கோட்பாட்டையே தமதாக்கினர். இந்த அரசியல் போக்கு, இன்றும் பரவலாகவே பல தரப்பிடம் தொடர்ந்து காணப்படுகின்றது.

பிரபாகரனின் விருப்பத்துக்கு ஏற்ப, புலிகள் என்ற இயக்கத்தை கட்டமைத்தவர் ஐயர். ஐயர் இல்லாமல் புலிகள் இயக்கம் இல்லை. இந்த உண்மையின் பின்னால் ஐயர் இல்லாமல் பிரபாகரன் இல்லை, பிரபாகரன் இல்லாமல் ஐயர் இல்லை என்பது எதார்த்தமாகின்றது. பிரபாகரன் போன்றவர்கள் கொலைகள் செய்ய, அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி அதை அரசியலாக்கி அமைப்பாக்கியவர்களில் ஐயர் முதன்மையானவர். ஒரு முன்னோடியாக, ஒரு நிர்வாகியாக, செயல்வீரனாக, விமர்சனத்துக்கு உள்ளாகாத நேர்மையான, தூய்மைவாதியாக ஐயர் இருந்த பின்னணியில் தான், புலிகள் இயக்கம் உருவானது. பிரபாகரன் அதன் உந்து சக்தியாக இருந்தான். இப்படித்தான் புலிகள் இயக்கம் இனவொடுக்குமுறை சார்ந்து உருவானது.

தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் இலங்கையில் குறைவில்லை. அப்படியென்றால் தவறு எங்கே உள்ளது? ஆம் தவறு அரசியலில் உள்ளது. அதன் யுத்தத் தந்திரத்தில் உள்ளது.

இதற்கான அடிப்படைக் காரணம், லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கோட்பாட்டுச் செல்வாக்காகும். இதுதான் இன்று வரையான இலங்கையில் உள்ள நிலைமை. உண்மையில் லெனினியத்தை உயர்த்திய கட்சிகள் கூட, லெனினை மறுத்த திரோஸ்க்கிய கண்ணோட்டத்தையே சார்ந்து நின்றன. அதைத்தான் இன்றும் தம் அரசியல் வழிமுறையாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்த வகையில் இலங்கையில் லெனினிய வழியிலான வர்க்க போராட்டக் கட்சிக்கு பதில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கண்ணோட்டம் சார்ந்த கட்சிகள்தான் பொதுவில் உருவானது. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாவதை, இது தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றது.

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.

இனப் பிரச்சனைக்கான ஒரு தீர்வை வழங்காது இழுத்தடிக்க, பாராளுமன்ற தெரிவுக் குழுவை தீர்வுக்கான வழியாக அரசு புதிதாகக் காட்டுகின்றது. இந்த உண்மை மட்டும் தான், இதன்பின் உள்ளது என்று கருதினால் அதுவொரு முழுப்பொய். மற்றொரு உண்மை உள்ளது. இந்த தீர்வை வழங்காத அரசுக்கு எதிராக, கூட்டணியிடம் எந்தப் போராட்ட வடிவமும் கிடையாது. ஆக அரசு தீர்வை வழங்காது, கூட்டணி அதற்காக போராடாது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. இரு தரப்பும் சேர்ந்து மக்களை இந்த அரசியலுக்குள் கட்டிப்போட்டு மூழ்கடித்து வருகின்றனர்.

புலி பாசிசத்தை நியாயப்படுத்த எத்தனை குறுக்கு வழிகள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இவர்கள் குற்றம்சாட்டும் ஒரு விடையத்தைக் கொண்டு, தமிழ் (புலிப்) பாசிசத்தை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனத்தை தம் பாசிச நடைமுறை அரசியலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் தங்களை அறிவாளியாக, ஜனநாயகவாதிகளாக, விமர்சகர்களாக தம்மை காட்டிக் கொள்ள முனைகின்றனர். தமிழ் (புலி) பாசிசத்தை நியாயப்படுத்த, சோசலிச நாடுகளிலும் கொலைகள் நடந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இப்படித்தான் இவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவதூறுடன், தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான ஒரு பட்டியலை முன்வைத்து, குறுக்கு வழிகளில் தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர்.

குறிப்பு : அமைப்புக் குழுவில் யார் யார்? அவர்கள் எந்த இயக்கங்கள்? என்று கேட்டனர்.

குறிப்பு : துண்டுப்பிரசுரம் எங்கே அடித்தீர்கள்? என்று கேட்டனர்.

குறிப்பு : 07.05.87 அன்று சலீம் என்பவர் விஜிதரன் போராட்டத்தில் எடுத்த படங்களுடன் வந்தார் (இவை சோதிலிங்கம் வீட்டில் கைப்பற்றியது)

குறிப்பு : படத்தில் உள்ளவர்கள் பெயர்கள் கேட்டெழுதப்பட்டது. அவர்களது அரசியல் நிலை பற்றியும் கேட்கப்பட்டது.

இதுதான் தமிழ் தேசியம் வெற்றிபெறாமைக்கான காரணம் என்கின்றனர். இதுதான் தமிழ் தேசியம் தோற்றமைக்கான காரணம் என்கின்றனர். தமிழ் தேசியத்தின் இன்றைய பலவீனத்துக்கு இதுதான் காரணமென்கின்றனர். இந்த மலட்டு ஒப்பாரிக்கு மட்டும் குறைவில்லை. இதன் மூலம் தமிழ் தேசியம் கோருவது தான் என்ன? ஐனநாயக மறுப்பைபும், பாசிசமயமாக்கலையும் தான். "ஒற்றுமை"யையும் "தமிழன்" அடையாளத்தையும் உருவாக்க, சுட்டுக்கொல்வதைத் தவிர அதனிடம் வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. இதுதானே உண்மை. இதை விரித்து ஆராய்வோம்.

ஐயரின் நூல் வெளியீட்டின் பெயரில், நடப்பது என்ன? ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் தத்துவங்களையும் மேடை போட்டுத் தூற்றுகின்றனர். சுரண்டுவது முதல் சாதிய ஆணாதிக்க … ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டக் கோரும் மார்க்சியத்தை தூற்றுகின்றனர். இதை ஒழித்துக்கட்டக் கோருவது தான் மார்க்சியம். இதற்கு வெளியில் மார்க்சியம் என்ற வேறு எதுவும் கிடையாது.

இங்கு ஐயரின் நூலை தமக்கு பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர். ஐயர் புலி – புளட்டில் இருந்து விலகிய பின், தான் கொண்டிருந்த அரசியல் அடிப்படையில் நின்று கடந்தகால சம்பவங்களை விமர்சிக்கவில்லை. புலி ஆதரவாளரைக் கொண்டு தொகுத்த பின்புலத்தில், இந்த நூல் புலியை அப்பாவித்தனமான காட்டி புலியைப் பூசிக்க வைக்கின்றது. இந்த பின்னணியில் புலி அரசியலை விமர்சிக்கத் தவறியுள்ளது. இந்தப் பின்புலத்தில் இந்த நூலை புலிகளும், புலி சார்ந்த கோட்பாட்டு அடிப்படையைக் கொண்டவர்களும் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர். அதற்கு இனியொரு பாய்விரித்து ஏற்பாடு செய்கின்றது. இதுதான் பாரிசிலும் நடந்தது.

இந்தத் தத்துவம் படைப்பாளி படைப்புக்கு பொறுப்பல்ல என்ற, இலக்கியப் பொறுக்கித் தனத்தில் இருந்து உருவாகின்றது. சமூகத்தில் இருந்து விலகி நிற்கின்ற, தன் கருத்து சார்ந்த மக்களை அமைப்பாக்கும் சமூகப் பொறுப்புகளையும் கடமைகளையும் நிராகரிக்கின்ற, பிரமுகர்களின் இருப்பியல் சார்ந்த தத்துவம் தான் இது. இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான், புலியின் பாசிச நடத்தைகளுக்கும் அவர்கள் பொறுப்பல்ல என்று புது அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர்.

புலியையும், பிரபாகரனையும் குற்றஞ்சாட்டி விமர்சிக்கின்ற அரசியற்பின்புலத்தில் இந்த அரசியல் மோசடிகள் அரங்கேறுகின்றன. புலியின் நடத்தைகளை விமர்சிப்பதன் மூலம், புலி; கொண்டிருந்த அரசியலை பாதுகாத்தல் இதன் பின் அரங்கேறுகின்றது. இதன் மூலம் கடந்தகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த அரசியலையும், அதன் நீட்சியான இன்று தாங்கள் கொண்டுள்ள அரசியலையும் நியாயப்படுத்திப் பாதுகாத்தலும் கூடவே அரங்கேறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் புலியின் அரசியல் தான், புலிகளின் நடத்தைகள் என்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றது. இதன் பின்னாக பல புலி மற்றும் புலியெதிர்ப்புப் பிரமுகர்கள் முதல் இலக்கியம் பேசிய பிரமுகர்கள் வரை அடங்கும்.

வாழ்வுதான் உணர்வைத் தீர்மானிக்கின்றது. உணர்வுகள் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. உழைத்து வாழாத அரசியல் பின்புலத்தில், எம்மக்களை ஏமாற்றுவது தொடருகின்றது.

இந்த வகையில் எமது போராட்டம் பல ரகமான அரசியல் பிழைப்புவாதிகளின் பின்புலத்தில் சுரண்டப்பட்டது. உழைப்பை நேரடியாக சுரண்டுவது வெளிப்படையானது. தங்கள் அறிவு மூலம் சுரண்டுவது சதிப்பாணியிலானது. உழைக்க வலு இருந்தும், தன் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ விரும்பாதவன் முன்வைக்கும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் வாழ்வியல் போராட்டத்துக்கே முரணானது. இதை ஊக்குவிப்பவர்கள், வழிகாட்டுபவர்கள், உழைப்பை வெறுக்கும் பொறுக்கியாக லும்பன்களாக வாழ்கின்றனர். மேற்கின் சமூக நல உதவியை பெறுவதற்காக உழைப்பைப் பயன்படுத்துவது, மருத்துவ விடுப்பைப் பயன்படுத்துவது தொடங்கி உழையாது சமூக நிதியாதாரத்தை தங்கள் அறிவால் சுரண்டி வாழும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் நடைமுறை வாழ்வுக்கும் உணர்வுக்கும் எதிரானது.

எந்தளவுக்கு மதம், இனம் .. என்று பிரிந்து நிற்கின்றோமோ, அந்தளவுக்கு எம் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். அரசு என்பது மக்களைப் பிரித்து ஒடுக்குவது தான். அதே பிரிவினையையும், பிளவையும் நாங்களும் வரிந்துகொள்வது, எம்மீதான ஒடுக்குமுறையை வரைமுறையற்றதாக்குவது தான். அரசு மட்டும் ஒடுக்குவதல்ல, ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்குள் தாம் மோதிக்கொள்கின்ற நிலையை உருவாக்குகின்றது. அரச பாசிசம் இன்று இதைச் சார்ந்து மேலும் தூண்டி விடுகின்றது.

முஸ்லீம் மக்கள் மதம் இனமாக பிரிந்து நிற்பதன் மூலமோ, இன்றைய முஸ்லீம் தலைமையை நம்புவதன் மூலமோ, தங்கள் மீது பேரினவாத மத இனத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று பேரினவாத அரசு, மத இனம் சார்ந்த அரசியல் மூலம், தன் பாசிசமயமாக்கலைக் கூர்மையாக்கி வருகின்றது. சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்களின் மீதானதுமான, அதன் எதிர்ப்பு அரசியல் மூலம் தான், சிங்கள மக்களை தன் பின் அணிதிரட்டுகின்றது. இதைத் தவிர மகிந்தவின் பாசிச அரசியலுக்கு, வேறு மாற்று அரசியல் கிடையாது.

புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.

இன்று மகிந்த தலைமையில் அரச பாசிசம் கோர முகமெடுத்து கொடுமையாகவே தன்னை வெளிப்படுத்தி வருகின்றது. புலிப் பாசிசத்தை புரிந்துகொள்ளாத சிங்கள மக்கள், இந்தச் சூழலைக் கண்டு அதிர்ந்து போகின்றனர். ஆனால் அரச பாசிசமோ, புலிகளின் பாசிசத்தின் மற்றொரு வெட்டுமுகம். இது ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதல்ல. ஒன்றுக்குள் ஒன்று இயங்கிய பின்னணியில், ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இல்லாது தனித்து வெளிப்படுகின்றது. இன்று பாசிசம் குறித்து அறிந்து கொள்ளல், புரிந்து கொள்ளல் மீதான சிங்கள மக்களின் அக்கறை, நாட்டின் மற்றொரு பகுதியில் நிலவிய பாசிசத்தை தெரிந்து கொள்ளவும், தெரிய வைக்கவும் கோருகின்றது.

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

பெரும்பான்மை இன மத மக்களை, அரச பாசிசம் தன் பின் அணிதிரட்ட முனைகின்றது. அவர்களைக் கொண்டு சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான பொதுத் தாக்குதலை நடத்துவதன் மூலம் தன்னை விரிவாக்கி வருகின்றது. மக்களை இன மதங்கள் ஊடாகப் பிளந்து அவர்களைப் பாசிசமயமாக்கி, அவர்கள் மூலம் வன்முறையை நடத்தத் தொடங்கியிருக்கின்றது. 1930 களில் ஜெர்மனியில் நாசிக் கட்சி நடத்திய அதேயொத்த அரசியல் நடைமுறை, இன்று இலங்கை அரசின் பொதுக் கொள்கையாகிவிட்டது. இலங்கையில் சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான ஒடுக்குமுறையும் வன்முறையும், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வண்ணம் இனிவரும் காலத்தில் மேலும் கூர்மையாகி வெளிப்படும்.

இனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன? வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன?

காலனி காலம் முதல் ஆளும் வர்க்கங்கள்; இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் மக்களை சுரண்டுகின்றது. இது இனவொடுக்குமுறையாக, இனவழிப்பாக வளர்ச்சி பெற்ற போது, இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகியது. இது ஒடுக்கப்பட்ட மக்களை இரண்டாகப் பிளக்கின்றது. இலங்கையின் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருக்கின்றது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு வழிகாட்டுகின்றது. பிரதான முரண்பாடு இனங்களைப் பிளக்க, அடிப்படை முரண்பாடு ஐக்கியத்தைக் கோருகின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு தடையாக, பிரதான முரண்பாடான இனமுரண்பாடு இருக்கின்றது.

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது.

இலங்கை தூதரகத்துக்கு முன் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில், தமிழ் சிங்கள உறவுக்கு ஆப்பு வைக்கும் சதியும் கூடவே அரங்கேறியது. இந்தப் பின்புலத்தில் புலிகள் உள்ளிட்ட போலி இடதுசாரியம் பேசும் பிரிவினைவாத இனவாதிகளின் கூட்டுச் சதியுடன் தான் இது நடந்தேறியது.

1. அரசு புலி முத்திரை குத்தி முன்னிலை சோசலிசக் கட்சியை ஒடுக்க முனைகின்ற அரசின் திட்டமிட்ட சதிப் பின்னணியில், புலத்தில் சிலர் அதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் கூட்டாகச் செயல்பட்டனர். நாடு கடந்த புலி மாபியாக்களுடன் சேர்ந்து இந்தப் போராட்டம் நடத்துவதான அறிவித்தல் திடீரென வெளியானது. அதுவும் இலங்கை அரசு சார்பான ஊடகத்தில் வெளியானது. அதேநேரம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து பிபிசி தமிழ் சேவைக்கு தேசம்நெற்றைச் சேர்ந்தவர்தான் பேட்டியை வழங்குகின்றார்.

குறிப்பு : பாசையூரில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி கேட்டேன். அதற்கு தண்டனை வழங்கியதாகச் சொன்னார்.

விளக்கம் : பாசையூர் சம்பவம் என்ன? புலிகளின் மக்கள்விரோத பாசிச நடத்தைகளை கேள்வி கேட்டு பாசையூர் பொதுமகன் ஒருவனை, புலிகள் வழமை போல் பழி-பலிவாங்க விரும்பினர். அவனை வேட்டையாட புலிகள் முயன்ற போது, அந்த அப்பாவி மனிதன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் புகுந்து ஒரு குருவிடம் சரண் அடைந்தான். அங்கு புகுந்த புலிகள் குருவைத் தாக்கிவிட்டு விசாரணையின் பெயரில், அந்த நேர்மையான அப்பாவி மனினை கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அதில் ஒரு பக்கமாக அந்த மனிதனை உயிருடன் வைத்து முதுகை ஸ்திரிப்பெட்டியால் (அயன்பொக்ஸ்சால்) அயன் பண்ணினர். பாசிசம் கொழுப்பேற அயன் பண்ணியே, அந்த மனிதனைக் கொன்றனர். பாசையூர் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் அடக்குமுறை அவர்களுக்கு பரிசாக கிடைத்தது. அடி உதை சித்திரவதை கைது மூலம் தேசியத்தின் பெயரில் புலிகள் அவர்களை ஒடுக்கினர். இந்த மக்கள் நெஞ்சில் பாசிசத்துக்கு எதிரான போர்க் குணாம்சம், தணலாக புகைந்து கொண்டிருந்தது.

பிரேம்குமார் குணரட்ணத்தை வழமைபோல் தூக்கில் போடத்தான் கடத்தியவர்கள். துரதிஸ்டம் என்னவென்னால் அதே தூக்குக்கயிறு தனக்காகிவிடும் என்று கண்டவுடன், மக்களைக் கண்டு அஞ்சும் கோழைகள் தடுமாறி உளறுகின்றனர். பிரேம்குமார் குணரட்ணம் தானாக பொலிசில் வந்து சரணடைந்ததாக, கோத்தபாய பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனமான வக்கிரத்துடன் உலகறிய உளறி இருக்கின்றான். இப்படி சட்டவிரோதமாகக் கடத்தி அவர்களை கொலைகள் செய்கின்ற கூட்டத்தின் தலைவனுக்கு, மேற்கு தயார் செய்த தூக்குக்கயிறை கண்டவுடன் கலங்கி உளறிய போது, பிரேம்குமார் குணரட்ணம் பற்றிய தகவல்கள் கோத்தபாய மூலம் வெளியாகி இருக்கின்றது. இதன் மறுதளத்தில் இதை "மக்கள் குரலின் வெற்றி" என்று கூறுகின்ற இடதுசாரி அரசியல் வங்குரோத்துத்தனத்தைக் காண்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் தூக்குக்கயிற்றுக்கு முன் மண்டியிட்ட கோத்தபாய, மக்களின் குரலைக் கண்டு அஞ்சி மண்டியிடவில்லை. மக்களைக் கண்டு பாசிசம் பின்வாங்கிவிடவில்லை. பாசிட்டுக்கே உரிய வகையில், புதுக்கதை புனைந்து, பிரேம்குமார் குணரட்ணத்தை நாடு கடத்தியுள்ளது.

இலங்கையின் பயங்கரமான அரசியல் எதார்த்தம் இதுதான். மக்களுக்காக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். சட்டபூர்வமான அரசு சட்டவிரோதமாக இவற்றைச் செய்கின்றது. சட்டம், நீதி, நியாயம் எதுவும் இந்த நாட்டில் கிடையாது.

கடந்த சில ஆண்டுகளில் சில ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் அல்லது கொல்லப்பட்டனர். இதைப் பற்றி எந்த நீதிவிசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த குற்றங்களைச் செய்தவர்கள் நாட்டை ஆளுகின்றனர் என்ற எதார்த்தம் மீண்டும் எமது முகத்தில் அறைகின்றது.

அரசியல் சூதாட்டமே அரசியலாகிப் போன நிலையில் அரசியல். எங்கும், எவரும், காய் நகர்த்தும் இந்த அரசியல் தான் பண்பாகிவிட்டது. மக்களை இராணுவரீதியாக ஒடுக்கியாள, அரசுக்கு ஒரு எதிரியைக் காட்டுவது அவசியமாகின்றது. இந்த வகையில் அரசுக்கு புலி தேவைப்படுகின்றது. மறுபக்கத்தில் மீண்டும் குண்டு வைத்து அரசியல் செய்யலாம் என்ற கனவுகளுடன், தேசியம் பேசும் வலது - இடது உதிரிக் கூட்டங்கள் தங்கள் காய்நகர்த்தும் சொந்த சதிகளுடன் அங்குமிங்குமாக ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.

அரசு தன் புலனாய்வை மேற்கோள் காட்டி மீண்டும் புலிகள் என்றும், இந்தியாவில் மூன்று பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், மன்னார் கடற்கரையில் புலிகளின் அதி வேக இரு வள்ளத்தைக் கைப்பற்றியதாகவும் செய்திகளை கசியவிட்டு இருக்கின்றது.

வலதுசாரிய புலியின் நடத்தைக்கு அரசியல் ரீதியாக நியாயம் கற்பிக்கவும், புலிக்கு அரசியல் வெளிச்சம் போட்டுக காட்டவும், ஐயரின் நூல் மூலம் முனைகின்றனர். புலியின் நடத்தைகள் வலதுசாரிய அரசியல் அல்ல, குறித்த சூழலின் விளைவாக காட்ட முனைகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் இடதுசாரிய விமர்சனங்களை மறுக்கின்ற, வலதுசாரிய அரசியல் பின்புலத்தில் இவை சோடிக்கப்படுகின்றது.

வரலாற்று ரீதியான திரிபு எப்போதும் அரசியல் ரீதியானது. இந்த அரசியல் பின்னணியில் வரலாற்றை பொதுமைப்படு;த்துகின்றது. வரலாற்றை திரிக்கின்றது. வரலாற்றை இருட டடிப்பு செய்கின்றது. புரட்சிகரமான வர்க்கக் கூறுகளை அரசியல் நீக்கம் செய்கின்றனர். தேசியத்தை புனிதமான ஒன்றாகவும், வர்க்கமற்ற ஒன்றாகவும், காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றனர்.

வலதுசாரிய சுரண்டும் வர்க்கம் முன்வைத்த தேசியம், மக்களுக்கு எதிரான கொள்கைகள் கோட்பாடுகளுடன் தான் செயல்படத் தொடங்கியது. இந்த வர்க்கப் பின்னணியில் மக்களை ஒடுக்கியபோது, அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியது. இடதுசாரிய அமைப்புக்களாகவும், வலதுசாரிய அமைப்புக்குள்ளும் போராட்டம் தொடங்கியது. இப்படித்தான் வலதுசாரியத்துக்கும், வலதுசாரிய பாசிசத்துக்கும் எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு. மக்களுக்கான இந்தப் போராட்டத்தில் பலர் மரணித்தனர். இந்தப் போராட்டமோ எந்த அரசியல் இடைவெளியும் இன்றி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. இதை அங்கீகரிக்காத, ஏற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பார்வைக்கு பின்னுள்ள அரசியல் வலதுசாரியம் தான். எந்த வலதுசாரியம் மக்களுக்காக போராடியவர்களை கொன்று குவித்ததோ, அதை மூடிமறைப்பதன் மூலம் அதையே இன்று செய்ய முனைகின்றனர்.

ஜனநாயக மறுப்பு வர்க்கம் கடந்ததல்ல. ஜனநாயக மறுப்பு சுரண்டும் வர்க்கத்தின் பண்பு மாற்றம். பாசிசமயமாக்கல் இதனடிப்படையிலானது. இங்கு ஜனநாயகம் சுரண்டும் வர்க்கக் கோட்பாடு தான். இது சுரண்டப்படும் வர்க்கத்துக்கு வழங்கும் உரிமையை அளவீடாகக் கொண்டது தான், ஜனநாயகம் பற்றிய கோட்பாடுகள். பாட்டாளிவர்க்கம் ஜனநாயகத்தைக் கோரும் போது, முரணற்ற ஜனநாயகத்தைத்தான் கோருகின்றது.

இங்கு புலிகள் பிரச்சனையை வெறும் "ஜனநாயக" பிரச்சனையாகத் திரித்துக்காட்ட முனைகின்றனர். அத்துடன் "ஜனநாயகம்" பற்றிய தவறான உள்ளடக்கத்தை முன்வைக்க முனைகின்றனர்.

இடதுசாரிகள் "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர் முதலில், இன்று அவர்கள் எதார்த்தத்தில் என்ன செய்கின்றார்கள்? இன்றைய சமூக முரண்பாடுகள் மீதான அவரின் அரசியல் நடைமுறை செயற்பாடு என்ன என்பதில் இருந்து தான், அன்றைய காலகட்டங்கள் மீதான இவர்களின் விமர்சனத்தின் நோக்கத்தை இனம் காணமுடியும்;. இந்த வகையில் சசீவனின் இன்றைய அரசியல் மற்றும் நடைமுறையை எடுத்தால், இவை

1.இருப்பு சார்ந்த பிரமுகர் தனத்தையும்

2.மார்க்சிய எதிர்ப்பு அரசியல் அடித்தளத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

முரணற்ற வகையில் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்து ஒரு புள்ளியில் இணையாத அரசியல், முரணுள்ளதாகவும் தனக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படும். உயிரியல் அடிப்படையில் கூட மனிதர்கள் தமக்குள்ளான வேறுபாடுகளை நீக்கி தம்மை ஒன்றிணைக்காது பிரிந்து நிற்கும் போக்கு, மனிதவிரோத உயிரியல் கண்ணோட்டமாகும்.

இந்த வகையில் தான் சசீவனின் மார்க்சிய விரோதக் கண்ணோட்டம் வெளிப்படுகின்றது. "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன" என்று சசீவன் கூறுகின்றார். "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" வலதுசாரிய அரசியலல்ல என்கின்றார். இதன் மூலம் அவர் "தேசியம், தேசியவாதக் கருத்துக்க"ளை வர்க்கம் கடந்த ஒன்றாக இட்டுக்கட்டிக் காட்டமுனைகின்றார்.

"ஒடுக்குபவர்" அடையாள அரசியலை முன்தள்ளும் போது, அந்தப் பிளவுவாதத்தை "ஒடுக்கப்படுபவர்" அரசியல்ரீதியாக எதிர்க்க வேண்டும். மாறாக பிளவுவாத "அடையாள அரசியலை" முன்னெடுத்தால், "ஒடுக்குபவரின்" வர்க்க அரசியல் நோக்கத்தின் அரசியல் பிரதியாகி விடுகின்றது.

இங்கு "ஒடுக்கப்படுபவர்" என்று "தரவரிசைப்படுத்துவது" அல்லது சமாந்தரப்படுத்துவது என்பது சாராம்சத்தில் பல "ஒடுக்குபவரை" உள்ளடக்கி அதையும் சமாந்தரப்படுத்தக் கோருவதுதான். இதன்படி ஒன்றுக்கு மேற்பட்ட "ஒடுக்குபவரை"யும், "ஒடுக்கப்படுபவரை"யும் அங்குமிங்குமாக சமாந்தரமாக முன்னிறுத்துவது, இதற்குள் அங்குமிங்குமாக "ஐக்கிய முன்னணியை" கட்டுவது எதிர்ப்பதும், இந்த சமூக அமைப்பின் அரசாலான மூடிமறைத்த மற்றொரு பிரதிதான்.

வர்க்கக் கண்ணோட்டமற்ற அரசியல் மக்களுக்காக என்றும் எங்கும் போராடுவதில்லை. மாறாக அதைக் குழிபறிப்பதையே, அரசியல் அடிப்படையாகக் கொண்டது. சமாந்தரம், நடுநிலை என்று முன்தள்ளும் தத்துவ மோசடி எங்கிலும் இதை நாம் இனம் காணமுடியும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாக மக்கள் பிளவுபட்டு இருக்கும் போது, "ஒடுக்கப்படுபவர்" என்று வர்க்கம் கடந்து அதை வகைப்படுத்தும் அரசியல், மோசடியிலானது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என்பதற்கு பதில் "ஒடுக்கப்படுபவர்" என்பது, குறித்த ஒடுக்குமுறையல்லாத அனைத்தையும் தனக்குள் ஒடுக்குவதை அங்கீகரித்தல் தான். இங்கு இதை சமாந்தாரக் கோட்பாடாக கோருகின்றது.

இதுதான் அரசின் தெரிவு. இங்கு குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல் போதல் மூலம் பல ஆயிரம் பேரை நேரடியாக வழிகாட்டி கொன்றவர்கள் தான் நாட்டை தலைமை தாங்குகின்றனர். அன்று புலிகள் ராஜீவைக் கொன்ற பின் புலித்தலைவர் பிரபாகரன் மீள முடியாத அரசியல் புதைகுழியில் எப்படி சிக்கினாரோ, அதே பரிதாப நிலையில் மகிந்த குடும்பம் உள்ளது. எதைத்தான், எங்கே, யார் விசாரிப்பது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில், நாட்டை பாசிசமாக்குவதைத் தவிர வேறு தெரிவு கிடையாது.

ஒவ்வொரு சமூகக் கூறும் இந்தச் சமூக அமைப்பில் வர்க்கம் சார்ந்து இயங்கும் போது, ஒவ்வொரு சமூக முரண்பாட்டையும் ஒன்றுக்கு ஒன்று "சமாந்தரமாக" முன்னிறுத்துவது எதற்காக!? ஒவ்வொரு சமூக முரண்பாட்டிலும் உள்ள அடிப்படை முரண்பாடான வர்க்க அடிப்படையை மறுப்பதாகும். சமாந்தரங்கள் என்றும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. ஆக இது ஒரு புள்ளியில் ஐக்கியப்படுவதில்லை. இந்தச் சமூக அமைப்பில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறையையும் மறுக்கின்ற, ஒரு புள்ளியிலான ஐக்கியத்துக்கு பதில், சமாந்தரமாக இருத்தல் என்பது ஐக்கியத்தை மறுத்தலாகும். இந்த வகையில் ஒவ்வொரு சிந்தனையும், செயலும், நோக்கமும் கூட வர்க்கம் சார்ந்தது.

 

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது.

குறிப்பு : விஜிதரனை யார் கடத்தியது என்றான். நான் நீங்கள் தான் என்று சொல்ல ஏன் என்றார். விஜிக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை. அமைப்புக் குழுவின் தோற்றமும் அது புலிக்கு எதிராக போராடியதும், அதில் விஜி முன்நின்றதும் விஜிதரன் கடத்தப்பட்டதற்கான காரணம் என்றேன்.

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை பலிகொடுத்தும், இறுதியில் சரணடைந்த பின்னணியில்  படுகொலைக்குள்ளாகி அழிந்தனர். இந்த வகையில் இலங்கை அரசும், தன்னைத் தானே சர்வதேச முரண்பாட்டுகளுக்குள் புதைத்து வருகின்றது.

அரசியல் சதியுடன் கூடிய ஊடக விபச்சாரமே, புலித் தேசியத்தின் பின் பரவலாக திட்டமிட்டு அரங்கேறியது. இதன் பின்னணியில் இவற்றைப் புனைந்தவர்களுக்கு, முன்கூட்டியே சனல் 4 வெளியிட இருக்கும் காட்சிகள் என்ன என்பதும் தெரிந்திருக்கின்றது. சனல் 4 காட்சிகள் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்ட பின்னணியில், சிலரின் தேவைகளுக்காக முடக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டு வெளிவருகின்றது. இதை நாம் தனியாக வேறு ஒரு இடத்தில் ஆராய்வோம். இங்கு பிரபாகரனை கேட்டு மகனை கொன்றதான புனைவை ஆராய்வோம்.

சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுப்புலமை சார்ந்த பிழைப்புவாத பிரமுகர் லும்பன் அரசியலா அல்லது சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியாளர்களின் நடைமுறை அரசியலா என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் - இலக்கிய சமூகக் கூறுகளை குறிப்பாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து தெளிவுபெற்று நாம் அணி திரள வேண்டும். எது போலி எது உண்மை என்பது, மக்களுடன் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அதன்பாலான அவர்களின் நடைமுறையும்தான் தீர்மானிக்கின்றது. நடைமுறையைக் கோராத, நடைமுறையில் பங்குகொள்ளாத வெளியில், தனிப்பட்ட கருத்துகள் வியாக்கியானங்கள் தனிநபர் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தான் அரசியல் விளைவாக தருகின்றது.

நெடுந்தீவைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றாள். இப்படி நடந்த இந்த அவலத்துக்கு யார் எல்லாம் பொறுப்பாளிகள்? குற்றத்தை இழைத்த குற்றவாளி மீது மட்டும் குற்றம் சாட்டுவதன் மூலம், பொறுப்பேற்கத் தவறுகின்ற அரசியல் பின்னணியில் தான் இந்தக் குற்றங்கள் தொடருகின்றது.

ஈபிடிபியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பா.உ. குத்துக்கரணமடித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். அவர்கள் வெளியிட்ட அறிக்கை முதலில் உண்மையை மூடிமறைக்கின்றது. அதன்பின் அறிக்கை திரிக்கப்பட்டு இரண்டு விதமாக வெளிவருகின்றது. அவற்றை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள். யார் குற்றவாளிகளுக்கு உடந்தையாக முன்நின்று தொடர்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை இனங்காண, இந்தத் திரிபான வரிகள் போதுமானது. இந்தத் திரிபுக்கு வெளியில் உண்மை என்பது, புதைக்கப்பட்டு இருக்கின்றது.

தம்மை முதன்மைப்படுத்தி தமக்காக வாழத்தெரிந்த அரசியல் இலக்கியப் பிரமுகர்கள், சமூகத்துக்காக தம்மை முதன்மைப்படுத்தி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும், இதன் பொருட்டு தம் உயிரை இழந்தவர்கள் எல்லாம் வாழத் தெரியாதவர்களாகக் காட்டுகின்றனர். பிரமுகராக இருப்பதற்கே அரசியல் - இலக்கியம் என்று சொல்லும் அளவுக்கு விளக்கங்கள் வியாக்கியானங்கள். மக்களுக்கான அரசியல் இலக்கிய முயற்சியா? அல்லது பிரமுகராக இருப்பதற்கா அரசியல் இலக்கிய முயற்சியா? என்ற சுய கேள்வியை எம்முன்னும் தள்ளுகின்றனர். மக்களுக்காக இயங்குவதை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர். இப்படி புலத்தில் இருந்து மண் வரை பிரமுகர்கள் கூடுகின்றனர். மக்களை அணிதிரட்டுவதை மறுத்து, அதற்காக அரசியல் இலக்கிய முயற்சி செய்வதை மறுத்து, நடைமுறையில் தம் கருத்துக்காக போராடுவதை மறுத்து, சமூகத்தையும் சமூக முரண்பாட்டையும் பயன்படுத்தி பிரமுகராக இருக்க முனைகின்றனர்.

என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே

பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்

தாங்கள் ஒடுக்குபவர்களுடன் இல்லை, ஒடுக்கப்படும் மக்களுடனும் இல்லை என்கின்றது "சாம்பல்" கோட்பாடு. ஏனெனின் இப்படி இருத்தல் "ஒற்றைப்பரிமாண அரசியல்", "ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள்" என்கின்றனர். இதுவே இவர்களின் "சாம்பல்" கோட்பாட்டுத் தத்துவம். பிரமுகரான தங்கள் சுயஇருப்பை மையப்படுத்தி "ஒரு வாழும் யதார்த்தம்" என்று அவர்கள் கருதுவது இதைத்தான். இதன் பின்னணியில் தான் அரசியல் இலக்கிய புலமைசார் மோசடிகள்.

பிரிவினையை முன்னிறுத்தும் குறுந் தமிழ்தேசியத்தை நிராகரிக்காத, சுயநிர்ணய அடிப்படையில் ஜக்கியத்துக்கான தேசியத்தை முன்வைக்காத, அரசியல் பார்வைகள் அனைத்தும், ரகுமான் ஜானின் கூற்றுப்படி அயோக்கியத்தனமானது தான். "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையைக் காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." இதைக் கூறிய மே18 ரகுமான் கூற்று, அவருக்கே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பிரிவினையை முன்னிறுத்தும் குறுந்தேசியத்தை நிராகரிக்காத, அதன் பின் நின்று செய்யும் ஆய்வுகள், விளக்கங்கள், தர்க்கங்கள்;, விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. இங்கு குறுந்தேசிய "பிரிவினை" கூட இதே சமூகத்தின் பின்னணியில் வால்பிடித்து முன்வைத்தவைதான்;. ஏன் ரகுமான் ஜான் குறுக்கி முன்வைக்கும் "தன்னியல்புவாத" போக்கையும், அரசியல் விளக்கத்தையும் தாண்டியதல்ல "பிரிவினை". ஆக இங்கு அரசியல் அயோக்கியர்கள், தங்களைத் தாங்களே இங்கு அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்களை அணிதிரட்ட முனையாத பிரமுகர்த்தன அரசியல் மற்றும் இலக்கிய முகமூடிகளின் பின்னணியிலான, புலி மீதான திடீர் விமர்சனங்கள் மோசடித்தனமானது. இது தன் இருப்பை மையப்படுத்தி மக்களை மோசடி செய்யும், அறிவு சார்ந்த குறுகிய அற்ப உணர்வாகும். அறிவு சார்ந்த தன்னை மையப்படுத்தி முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தனம், கருத்துச் சுதந்திரத்தின் பின்னால் ஒன்றையொன்று சார்ந்து நின்று முதுகுசொறிவதன் மூலம் கூடிக் கும்மியடிக்கின்றது. இது மக்களை சார்ந்து நின்று, மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை.

பாசிட்டுக்கள் மீண்டும் மூடிமறைத்து களமிறங்குகின்றனர். 1980 களில் வர்க்கரீதியான சமூக விடுதலையைப் பேசியபடி தான், பாசிசத்தை புலிகள் நிறுவினர். பார்க்க "சோசலிசத் தமிழீழம் - விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற புலிகள் முன்வைத்த அரசியல் அறிக்கையை.

ஒட்டுமொத்த மக்களையும் மோசடி செய்யாமல் பாசிசம் வெற்றி பெறுவதில்லை. இன்று புலிகள் பாசிச இயக்கமல்ல என்று கூறுவதும் இந்த அரசியல் அடிப்படையில் தான். மீண்டும் புலி அரசியலை நிறுவ, அரசியல் மோசடியில் இறங்குகின்றனர்.

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

வேதமோ வேத-ஆரிய வரலாறாகும். இது அவர்கள் இந்தியாவில் நிலைபெறல் வரையிலான ஒரு காலத்தை உள்ளடக்கியதே.இது குறைந்தபட்சம் உழைத்து வாழும் மனித நாகரிகத்தை ஒரு சமூக வாழ்வாக கொண்ட, ஒரு சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல.

முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.

மேற்கு சார்பாக இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவுவதில் ஏற்பட்ட தோல்விதான், அமெரிக்காவை நேரடியாகக் களத்தில் இறக்கியிருக்கின்றது. இந்தியாவின் இழுபடும் நழுவல் ராஜதந்திரத்துக்குப் பதில், வெளிப்படையான மிரட்டலை இலங்கையில் வைத்தே அமெரிக்கா விட்டிருக்கின்றது.

தென்னாசியாவில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கமே மேற்கின் உலக மேலாதிக்கத்துடன் இணைந்துதான் இயங்குகின்றது. ஒன்றையொன்று சார்ந்தது. இந்த நிலையில் இலங்கை அரசு மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களான ருசியா, சீனா முதல் ஈரான் வரை இலங்கையில் முன்னிறுத்திய, அதன் அணுகுமுறை அமெரிக்காவின் வெளிப்படையான எதிர் தன்மை கொண்ட தலையீடாக மாறுகின்றது.

கிரேக்க நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொருளாதார வல்லுனர்களும் மக்களுக்கு எதிராக செய்யும் தொடர் பிரச்சாரத்தை தாண்டியது எதார்த்த உண்மை. கிரேக்கத்தில் சட்டப்படி இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதன் மூலம் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வு என்பது, யாருக்கு என்பதை இது தெளிவாக அம்பலமாக்கி விடுகின்றது. இங்கு ஏழைகள் மேலும் ஏழையாவது நெருக்கடியல்ல என்பதுதான், தேர்ந்தெடுத்த ஐரோப்பிய "ஜனநாயக"வாதிகளினதும் மற்றும் உலக வங்கியினதும் கொள்கையாகும். ஏழைகளை மேலும் ஏழையாக்குவதன் மூலம், யாருக்கு எதை எப்படி தீர்வு காண்கின்றனர்? இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்தி நிற்கின்றது. "மக்கள் தேர்ந்தெடுத்த" பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு கொடுத்த பரிசு இது. இதுதான் பாராளுமன்ற "ஜனநாயகம்". இதுதான் ஐரோப்பிய நாடுகளை ஆளும் "ஜனநாயகவாதிகளிள்" பொதுக் கொள்கையாகி, அதை கிரேக்கத்தில் திணித்து பரிசோதிக்கின்றது. நாளை ஐரோப்பா எங்கும், உலகமெங்கும் இதுதான் கொள்கையாக, இதுவே மூலதனத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறவுள்ளது.

குறிப்பு : மாத்தையா கூறினான், நாம் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் பிடிப்பம் என்றார்.

விளக்கம் : ஆயுதம் யார் வைத்திருந்தாலும் பிடித்துக் கொல்வோம் என்றான். இதன் மூலம் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை, அழித்தொழிப்போம் என்றான். போராடும் உரிமையை மறுத்து, தங்கள் பாசிச சர்வாதிகார வழியில் அழிப்போம் என்றான். தாம் மட்டும் ஆயுதம் வைத்திருக்கவும், ஆயுதமுனையில் மக்களை சுரண்டி வாழ்வதே தேசிய போராட்டம் என்றான். மக்கள் தமது சொந்த விடுதலைக்கு அணிதிரள்வதையும், ஆயுதம் ஏந்துவதையும் படுகொலைகள் மூலம் அடக்கி ஒடுக்குவோம் என்றான். தமது பாசிசத்துக்கு அடிபணிந்து கைகட்டி வாய் பொத்தி ஆண்டை அடிமை வாழ்வை வாழ்வதே, தமிழ் மக்களின் விடுதலை என்றான்.

 

சிரியாவின் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டத்தை, முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிவிட்டது. அரபு உலக எழுச்சிகள் அனைத்தும், உலகை மறுபடியும் ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையில் மறுபங்கீடு செய்து கொள்ளும் வண்ணம் ஏகாதிபத்தியங்களுக்கே பயன்பட்டது. நிதி மூலதனம் மற்றும் உற்பத்தி மூலதனம் மூலம், அரபுலகம் மீது மேற்கு அல்லாத நாடுகள் பெற்றுக் கொண்டு வந்த செல்வாக்கை, ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் மேற்கு தனக்கு சார்பாக மறுபங்கீடு செய்து கொண்டது. இதுதான் அரபுலக எழுச்சியின் அரசியல் விளைவு. இந்த வகையில் சிரியாவில் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம், மேற்கு அல்லாத ஏகாதிபத்தியங்களின் முயற்சி வெளிப்படையான ஏகாதிபத்திய மோதலாக மாறியிருக்கின்றது. அது சிரியாவில் உள்நாட்டு யுத்தமாக மாறியிருக்கின்றது.

இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.

பலரும் கண்டு கொள்ளாமல் போன விவகாரம் இது. இலங்கையில் மனிதவுரிமையை அமுல்படுத்தும் பொறுப்பை வகித்த ஆணையாளரின் இராஜினாமா இது. இலங்கையில் மனிதவுரிமை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைக் எடுத்துக் காட்டிய மற்றொரு சம்பவம் இது. இதுபோல் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தல் அதிகாரி சுதந்திரமாக தேர்தலை நடத்த முடியாது போனதும், தன்மீது திணிக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழலை அடுத்து, தன் பதவியை இது போன்று துறப்பதாக அன்று அறிவித்தார். மகிந்த குடும்பம் அவரை மிரட்டி, தொடர்ந்து அவரை பதவியில் வைத்து தேர்தலை வெல்லுகின்றது. இதனால் என்னவோ "தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது," என்று ஆனந்த மெண்டிஸ் கூறித்தான், தனது இராஜினாமாவை உலகறிய அறிவித்தார்.

தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக கூறுகின்றவர்கள், தமக்குள்ளான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதேநேரம் தமக்கு வெளியில் உள்ள ஒடுக்குமுறைகளையும் கூட, எதிர்த்துப் போராட வேண்டும். இவ்விரண்டையும் செய்யாத போராட்டம், ("தலித்திய") அடையாளம் போலியானது புரட்டுத்தனமானது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் குறுகிய அரசியலாகும். இதுபோல் பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, பிறப்புக் கடந்த மனிதனாக தன்னை மையப்படுத்திப் போராடாத பிறப்பு சார்ந்த குறுகிய அரசியல் படுபிற்போக்கானது.

மக்களைச் சார்ந்து நின்று கூறாத எந்தத் தர்க்கங்களும் எந்த அரசியலும் புரட்டுத்தனமானது. கேட்பவர்களை கேனயனாக்குகின்ற, தம்மை நம்புகின்றவர்களையும் முட்டாளாக்குகின்ற அறிவு சார்ந்த புரட்டுத்தனமான முயற்சியாகும். இப்படித்தான் "வெள்ளாள மார்க்சியம்" என்ற கூற்றும், அது சார்ந்த தர்க்கங்களுமாகும். மறுதளத்தில் இவர்களால் "வெள்ளாள மார்க்சியம்" என்று குற்றச்சாட்டபட்டவர்கள், மார்க்சியத்தை சரியாக முன்வைக்கின்றார் என்று அர்த்தமல்ல. ஒன்றையொன்று சார்ந்து தன்னை நேராக்க முடியாது.

இனப்பிரச்சனை இலங்கையில் கிடையாது என்பதே அரசின் கொள்கை. அதனால் அரசிடமும், ஆளும் கட்சியிடமும் பேசுவதற்கு எதுவுமில்லை. ஆக தமிழ்மக்களை ஒடுக்குவதைத் தவிர, அதனிடம் வேறு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை.

இலங்கையின் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை பேசித் தீர்க்க தயாரற்ற அரசு, தானாக முன்வந்து ஒரு தீர்வை முன்வைக்க தயாரற்ற அரசு, ஒடுக்கித் தீர்வு காணமுனைகின்றது. யுத்தம் மூலம் புலியை வென்ற அரசு, அதேபாணியில் தமிழ் மக்களை ஒடுக்கியே வெல்ல முனைகின்றது. இதற்கு ஒரு நாடகம். அதில் ஒப்பாரி வேஷம் கூட்டமைப்புக்கு. இன முரண்பாட்டையும், இனப் பதற்றத்தையும் உருவாக்கி, இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து தமிழ் பிரதேசத்தில் தக்கவைப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வெல்வதே அரசின் கொள்கை.

முதலில் இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று எதையும் சொல்பவர்கள் அல்ல. இந்த வகையில் இவர்கள் முதல்தரமான மக்கள் விரோதிகள். மக்களுடன் நிற்காத, அவர்களின் கோரிக்கைகளுடன் ஒன்றிணையாத இவர்களின் சமூகம் பற்றிய கருத்துகள் முதல் அக்கறைகள் வரை போலியானது மட்டுமின்றி மோசடித்தனமானதுமாகும். மக்களை ஒடுக்குகின்ற பிரிவுடன் சேர்ந்து நின்று, தங்கள் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் பிழைப்பைத் தொடங்குகின்றனர். இவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக வாழ்பவர்கள். ஒரு விடையத்தை "முற்போக்காக" முன்னிறுத்திக் காட்டிக் கொண்டு, மற்றைய விடையங்களில் படுபிற்போக்காகவே தம்மை அடையாளப்படுத்துவர்கள். இதன் பின் வலது இடதுமற்ற சந்தர்ப்பவாதிகளாக, "முற்போக்கை"க் காட்டி முதுகுசொறிகின்ற பிழைப்புவாத அரசியல் மூலம் பிரமுகர் அரசியலையம், முகம் காட்டும் சடங்கு அரசியலையும் அரங்கேற்றுகின்றனர்.

தூக்கில் போடும் அலுக்கோசு போல்தான், அப்துல்கலாம் என்ற அலுக்கோசும். சமூகத்தையும், மனித உரிமைகளையும் தூக்கில்போடும் "அறிவு"சார் ஆளும் வர்க்க அலட்டல்கள். இந்தியாவின் ஆசியுடன் மகிந்த குடும்பம் நடத்தும் கொலைகார பாசிச ஆட்சியின் வக்கிரத்துக்கு ஏற்ப, அனுமானாக இலங்கையில் ஆட்டம் போட்டது அப்துல்கலாம் என்ற குரங்கு. "தலைசிறந்த விஞ்ஞானி', "அறிவாளி" என்று கூறி, பூனூல் போட்ட கூட்டம் கூடி கும்மியடிக்கும் கூட்டத்தின் துணையுடன் நின்று கூறுகின்றார்

1. இலங்கையில் மும்மொழியைக் கற்றலே, இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று

2. இலங்கை கடலில் வாரத்தில் (கிழமையில்) மூன்று நாள் வீதம் இலங்கை இந்தியா மீனவர்கள் மீன்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்

என்று தன் அறிவால், விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்து முன்வைக்கின்றார்.

குறிப்பு : நான் 06.05.1987 மாலை 7 மணி வரையான காலத்தில், பின்வரும் விடையங்களை படிப்படியாக இரண்டாம் திகதி தொடங்கி ஏற்றேன். அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏதோ விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டவை என்பதை ஏற்றேன். அவை மக்கள் குரல், தீக்கதிர், எஸ்.எம்.ஜீ (S.M.G) வாங்கியது, 80000 ரூபாவை கொடுத்த இரண்டு ஏகே-47 வாங்க பணம் கொடுத்தது. ஆயுத புத்தகம், றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பணம் என்பனவற்றை வசந்தனிடம் கொடுத்தாக ஏற்றேன். இதன் பின்னால் நான் அவிழ்க்கப்பட்டேன். இவை பல்வேறு தொடர்ச்சியான முரண்பட்ட அவர்களின் கேள்விகள் ஊடாக ஒத்துக்கொண்ட நான், கடைசிவரையும் ஆயுதப் புத்தகம் கொடுத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியாக அவர்கள் அடிக்கடி மாறி மாறி குறிப்பெடுக்கும் போது, சுரேஸ் என்பவர் எனது ஆயுதப் புத்தகம் மேல் பேப்பர் வைத்து குறிப்பு எடுத்ததை அவதானித்த நான், அதையும் ஒப்புக் கொண்டதன் மூலம், வசந்தனிடம் நான் கொடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டவை முடிவுக்கு வந்தது.

"மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற தீங்கானதும், காட்டிக்கொடுப்பதுமான அரசியல், திடீர் மார்க்சிய அரசியல் பேசும்; நாவலனால் இனியொருவில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம் மீண்டும் ஆயுதப்போராட்டம் பற்றி அரசின் எச்சரிக்கைகள் மூலம் பொது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றது. மக்கள் போராட்டங்களைக் கூட, இந்த "மீண்டும் போர்" ஆயுதம் என்ற அரசியல் பின்னணியில் அரசு ஒடுக்குகின்றது. இதற்கு அரசியல்ரீதியாக உதவும் வண்ணம் "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று பௌத்த பேரினவாத வரலாற்றைச் சொல்லி புரட்சிகரமான வாய்ச்சொல் மூலம் யுத்தம் முன்வைக்கப்படுகின்றது. பிரபாகரனின் மாவீரர்தின உரைகள் முதல் புலிகள் நடத்திய யுத்தம் வரை, இப்படி பௌத்த பேரினவாதத்தைக் கூறித்தான் போரை மட்டுமே நடத்தி அழிந்தனர். "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்றதன் பின்னான அரசியல் சித்தாந்தத்தின் உள்ளடக்கத்தை குறிப்பாக ஆராய்வோம்.

இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் "கட்டுடைப்பாக" பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் "இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும்." என்கின்றார். முள்ளிவாய்க்கால்களிள் பின் ஒரு பிழைப்புவாதியிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசின் ஆதரவும் அனுசரணையுமின்றி தீர்வைப் பெறமுடியாது என்று சொல்கின்ற அரசு கைக்கூலிகளின் அதே தர்க்கமும் அதே வாதமும். இங்கு இரண்டும் ஒரே அரசியல் தளத்தில் இயங்குகின்றது.

குறிப்பு : காம்பிலிருந்தோர் மாத்தையா, விசு, சலீம், தீபன், மாஸ்டர், வினோத், கவியப்பா, ஹப்பி, சுரேவி, ரமேஸ், ஜெயக்குமார், பாலகிருஸ்ணன், தயாளன் ----

குறிப்பு : மிக அண்மையில் (தப்பிய காலத்தில்) இக் காம் இரண்டாக பிரிக்கப்பட்டு வேறு இடத்தில் போடப்பட்டது.

புலியெதிர்ப்பு புலியழிப்பைக் கோரியது போல், இனவெதிர்ப்பு இனவழிப்பைக் கோருகின்றது. புலியெதிரிப்பு அரசியல், புலியில்லாத வெற்றிடத்தில் இன்று இனவெதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இதை மூடிமறைக்க, குறித்த இனத்தின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தன்னை முற்போக்காகவும், மக்கள் சார்பாகவும் காட்டிக் கொள்ள முனைகின்றது. இனத்தின் இருப்பும், இன அடையாளமும் தான், சமூகத்துக்குள்ளான சமூக ஒடுக்குமுறைக்கு எல்லாம் காரணம் என்று கூறி, தாம் போராடத் தடையாக இதுதான் இருப்பதாகக் கூறியும், இனவழிப்பைக் கோருகின்றது. அந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உதவுகின்றது.

இதுவே தான் இந்தியாவில் ஏழ்மையை உருவாக்குகின்றது. இது இப்படி இருக்க, இந்த ஏழ்மையை இந்தியாவின் தேசிய "அவமானம்" என்கின்றார் இந்திய பிரதமர். உழைக்கும் மக்களின் உழைப்பைச் சூறையாடி கொழுக்க வைக்கும் உன் கொழுப்புத்தான், தேசிய அவமானமாகும். ஊட்டச்சத்து இன்றி, வருடம் தோறும் இலட்சக்கணக்கில் மரணிக்கின்ற நிலைக்கு யார் காரணம்? அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி யார்? இன்று 42 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் போராட யார் தான் காரணம்? அவமானம்" என்று கூறுகின்றனரோ, அவரும் அவரின் வர்க்கமும் தான் இதற்கு காரணமாகும். மனித உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் அட்டைகளாக உள்ள இந்த சமூக அமைப்பும், அந்த அட்டைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பும் தான் இந்த "தேசிய அவமானத்தை" உருவாக்குகின்றது. உன் நடத்தைக்கு வெளியில், எங்கிருந்துதான், "தேசிய அவமானம்" வருகின்றது.

 

இந்திய மீனவர்கள் இந்திய "எல்லை தாண்டுவது தான்", அவர்கள் மேலான வன்முறைக்கு காரணம் என்று இந்திய மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்படி இலங்கைக் கடற்படையின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருக்கின்றது இந்திய மத்திய அரசு. இந்த வகையில் இந்தக் குற்றத்தை செய்வதற்கான தனது பக்கத் தர்க்கத்தை முன்வைத்ததன் மூலம், இதற்கான தனது ஓத்துழைப்பை நியாயப்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கடற்படை எல்லை கடந்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், சுயவிளக்கம் ஒன்றை இந்திய அரசு வழங்கி இருக்கின்றது. மறுதளத்தில் எல்லை தாண்டியதால் தான் இந்த நிலையென்று எடுத்துக் கொண்டால்;, அவர்கள் கொல்வதும் தாக்குவதும் சரியென்ற தர்க்கத்தையும், நியாயப்படுத்தலையும் வழங்கி இருக்கின்றது. எல்லை தாண்டினால் இதுதான் தீர்வா? சர்வதேச சட்டங்கள், மனிதவுரிமை கோட்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றது. அனைத்துக்கும் "எல்லை கடத்தல்" மற்றும் "தடைசெய்யபட்ட வலை"யைத்தான் காரணமாக காட்டியிருக்கின்றது.

"போர்" அறைகூவலும், எச்சரிக்கையும். இப்படி "போர்" க்கான ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கின்றன. இப்படி ஒரே விடையத்தை பேசுகின்றனர். ஒருதரப்பு அறைகூவலாக விட, மறுதரப்பு எச்சரிக்கையை விடுக்கின்றது. இது உண்மை என்றால், தனிநபர் பயங்கரவாதத்தை நடத்தத் தயராகும் இனியொருவின் அறைகூவல் அல்லவா இது!? இதைத்தானா "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" அரச புலானாய்வுத்துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் எழுதுகின்றன!?

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. பிபிசி தமிழ் சேவை கூட அதை முன்னிறுத்தி பேட்டி கண்டது. குறிப்பாக இந்த அறிக்கை 1990 களில் புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களிடம் இருந்த அனைத்தையும் புடுங்கிவிட்டு துரத்திய முஸ்லீம் மக்களைப் பற்றிய கருசனையின் பெயரில் வெளியாகி இருக்கின்றது. முதலில் இதன் அரசியல் பின்னணியையும், அரசியல் அடிப்படையையும் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

புத்தாண்டு முதற்திகதி முதல், பிரஞ்சு மக்கள் மீதான புதிய வரிகள். மக்களின் கூலி உழைப்பில் இருந்து, உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம் 180 கோடி ஈரோவை மேலதிகமாக பிடுங்கும் புதிய அறிவித்தலுடன், மூலதனத்தின் நுகர்வுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிறக்கின்றது. உணவகங்கள், குளிர்பானங்கள், கட்டிட வேலைகள், புத்தகங்கள், களியாட்ட நிகழ்வுகள், தொலைக்காட்சி, போக்குவரத்து ரிக்கற், தங்குவிடுதிகள் ….. என்ற பல சேவைத்துறை மற்றும் பொருட்கள் மீதான வரி 1.5 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் வட்டிக்காரர்களுக்கு வட்டியைக் கொடுக்க புதிய வரிகள். பொருளாதார நெருக்கடியின் அரசியல்சாரமே இதுதான்.

குறிப்பு : 01.05.1987 இரவு மீண்டும் கண் கட்டப்பட்டது. மாத்தையா வந்தார். உண்மையை நீர் கூறவில்லை எனவே முகாம் மாற்றப்படும் என கூறினார்.

விளக்கம் : எதையும் நான் கூறாத நிலையில், தொடர்ச்சியாக அடிக்கடி சித்திரவதை செய்யக்கூடிய பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு எடுத்தனர். அத்துடன் தமது சித்திரவதையின் கோர அலறல்கள் மக்களுக்கு கேட்காத அமைதியான பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வதைமுகாமில் தான், முதன்முதலாக மாத்தையா சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபட்டான்.

குறிப்பு : 3ம், 4ம் நாளே உன்னுடைய காதலி இன்னார் என வந்து சொல்லப்பட்டது.

மார்க்சியம் முன்னேறிய பிரிவைக் கடந்து நடைமுறை இயக்கமாக மாறாத இலங்கைச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பலர் மார்க்சியத்தின் பெயரில் பலவிதமாக பிழைக்கின்றனர். தங்கள் அறிவுசார்ந்த மேலாண்மையைக் கொண்டு, இந்த அரசியல் பொதுவில் அரங்கேறுகின்றது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் மார்க்சிய சொற்றொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு, சர்வதேச புரட்சியாளர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.

இப்படி மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி பற்றி லெனின் கூறும் போது "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார்.