Language Selection

சமையல்கலை

 
தேவையான பொருட்கள்
Image

 

மைதாமாவு-3 கப்
சர்க்கரை பவுடர்- 2கப்
ஏலம் எஸ்ஸன்ஸ்-3 சொட்டு

Image
வெண்ணெய்-11/2கப்
முட்டை- 1

Image
பேக்கிங் பவுடர்-1தேக்கரண்டி
உப்புத்தூள்-1 சிட்டிகை

Image
ஸ்டாபெர்ரி ஜாம்-தேவையான அளவு
  Image

வெண்ணெயுடன் ஓர் பாத்திரத்தில்  போட்டு நன்கு கட்டியில்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
Image

மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்

Image
அதில் சர்க்கரை பவுடரை சிறிது சிறிதாக தூவவும்

Image

அப்படியே சேர்த்து  நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

Image
தண்ணீர் சேர்க்க வேண்டாம்,தேவையிருந்தால் சிறிது வெண்ணையை சேர்க்கவும்

Image
அதனுடன் வெண்னையும் சேர்த்து  பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்

.இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்

அல்லது உங்களுக்கு பிடித்தமான வடிவில் கூட வைக்கலாம், அதர்க்கு நடுவில் ஒர் பென்சிலில் பின்புறம் வைத்து அழுத்தி எடுக்கவும்
Image

இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில்325"யில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். 

இப்போது பிஸ்கட் ரெடி,

பாதி ஆறியவுடன் பென்சிலில் வைத்த அச்சியில் நடுவில் ஜாம் வைத்து ஆறவிடவும்
Image

இப்போது ஸ்டாபெர்ரி ஜாம் குக்கீஸ் ரெடி

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2361&Itemid=1

தேவையானவை
 
 Image
பொட்டுகடலை        -   1 கப்
சர்க்கரை              -   1 கப்
நெய்                 -   4 தே.க

Image
ஏல தூள்             -   1/2 டீஸ்பூன்
முந்திரி               -  5

Image

முதலில் பொட்டுகடலையை பொடிக்கவும்
சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு பொடித்து கொள்ளவும்
Image

ஒரு தவாவில் அல்லது கனமான பாத்திரத்தில் நெய்விட்டு சூடாக்கவும்
அதில் ஒடித்த முந்திரி போடவும் அது வறுபட்டவுடன் அடுப்பை
அணத்துவிடவும்,

Image

அந்த சூடிலேயே இந்த மாவு, சர்க்கரையும் பொட்டு
மீதியுள்ள நெய்ய் விட்டு நன்றாக கலந்து

Image

கை பொறுக்கும் சூட்டில் விரும்பிய அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

Image

சுவையான மாலாடு ரெடி

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2338&Itemid=1

தேவையான பொருட்கள்

 

Image
பேரீச்சை பழம்-50 கிராம்
அத்திப்பழம் - 100கிராம்

Image

பால் - 1லிட்டர்
சீனி - 275 கிராம்

Image
நெய் - 200கிராம்
முந்திரி பருப்பு-50கிராம்
ஏலம்-10

Image
பிஸ்தா-50கிராம்
எஸ்சென்ஸ்-1/2 மூடி
பாதம் - 50 கிராம்

பாதம்,பிஸ்தாவை சிறிது நேரம் ஊறவைத்து தோல் எடுத்து நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரியையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும்

Image

பாலை தண்ணீர் இல்லாமல் நன்றாக காய்ச்சவும்

Image
பாதி பாலில் நறுக்கிய பேரீச்சை பழம் அத்திப்பழத்தை சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்

Image

அதனை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
Image
பாலில் அத்திப்பழத்தை சேர்த்து நன்கு காய்ச்சவும் தீயை மிதமாக வைக்கவும்,பேஸ்ட் பக்குவம் வந்தவுடன்
Image

சீனியயும் சேர்க்கவும்  நன்கு கிளரவும்
Image

கலர் மாறி வரும் வரை நன்கு கிளரவும்

Image

பின் நெய்யை ஊற்றி கிளரவும்

Image

பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன்

Image

 நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும் எஸ்ஸென்ஸ் ஊற்றி இறக்கவும்

Image

சுவையான சூப்பர் அல்வா ரெடி
 

அத்திப்பழம் உடம்புக்கு மிகவும் நல்லது, ஆனால் குழந்தைகள் அவ்வளவாக விரும்புவது இல்லை ,இதனை போல் செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2332&Itemid=1

 
Image
 
தேவையானவை
-----------------------------
வ்றுத்த ராகி மாவு  - 1 கப்
சர்க்கரை           - 11/2 கப் (பொடியாக்கியது)
நெய்               - 1/4 கப்
ஏல பொடி          - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி             - தேவையான அளவு
 
Image

 

ஒரு பாத்திரத்தில்  ராகி மாவை போட்டு நன்றாக வறுக்கவும்,
அது ஆறிய பிறகு வேறு ஒரு பாத்திரத்தில்  நெய்யை விட்டு நன்றாக சூடாக்கவும்.
Image

அதில் இந்த மாவு, ஏலபொடி, சர்க்கரை முந்திரி எல்லாவற்றையும்
ஒன்றாக  கலக்கவும்

Image

அதில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக
பிடிக்கவும்..
Image

சுவையான ராகிலட்டு ரெடி

இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.
  http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2254&Itemid=1

 

 

 

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 50கிராம்
தக்காளி-2
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கத்திரிக்காய் - 2
மாங்காய் - 1
Image

இஞ்சிபூண்டு - 1 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
பட்டை,ஏலம்,லவங்கம் -தாளிக்க
சாம்பார் வெங்காயம் -5
பச்சைமிளகாய் - 2
மாசித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை ஊறுகாய் - 1/4
மஞ்சள்தூள் - சிறிது 
 
Image

முதலில்  பருப்பை வறுத்து கொள்ளவும்
Image

காய்களை நீளமாக நறுக்கவும்
Image

பருப்பை குக்கரில் போட்டு அதில் வெங்காயம்,மிளகாய்.கத்திரிக்காய்,மாங்காய்,மஞ்சள்தூள் போட்டு

Image

மிளகாய் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
Image

நன்கு வெந்ததும் இறக்கி நன்கு மசிக்கவும்


வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு தாளித்து பின் இஞ்சி,பூண்டு தயிர் போட்டு வதங்கியதும், பருப்புக்கலவையை ஊற்றி கொதித்ததும்
Image

நன்கு ஆறியதும் மாசித்தூள்ஊறுக்காயை நன்கு பிசைந்து அதில் போடவும்,அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
 Image

சுவையான பருப்பு மாங்காய் ரெடி

குறிப்பு

ஊருகாய் இல்லையெனில் சிறிது புளி சேர்க்கவும்,

விருப்பம் இருந்தால் மாசிதூள் சேர்க்கவும்

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2277&Itemid=1

 
Image

 

சாலியல்-1/4 கிலோ 

Image

சதகுப்பை-1கிலோ

பட்டை கருவா-100 கிராம்

கொத்த மல்லி-50கிராம்

Image

மஞ்சள்-50 கிராம்

கசகசா-100கிராம்

சீரகம்-100கிராம்

Image

இவை அணைத்தும் நன்கு சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

இதனை டப்பாக்களில் அடைத்து வைக்கவும்,,இந்த பொடியை ஆம்லேட்டில் தூவி சாப்பிடலாம்

மாதவிடாய் பிரச்சணைக்கு மிக நல்லது குழந்தை பெற்றவர்களுக்கு மிக நல்லது

சாதம் போல் சமைத்தும் சாப்பிடலாம்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=172&Itemid=129

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2318&Itemid=1

 
தேவையான பொருட்கள்

 

Image

அரிசி மாவு - 4 கப்
உளுந்து மாவு - 1 கப்
நெய் - 1/4 கப்
எள் - 2 மேசைகரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

Image

செய்முறை

நெய் மற்றும் தண்ணீரை லேசாக சூடாக்கிக் கொள்ளவும்.
Image

பின் எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு

Image

தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும்

Image

மாவை முறுக்கு அச்சில் போட்டு பிளேட்டில் முறுக்கு பிழியவும் இது முறுக்கு உடையாமல் இருக்கும்

Image

பின் முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்

Image

அதைப்போல் எல்லாவற்றையும் பொறித்து எடுக்கவும்

Image

சுவையான முறுக்கு ரெடி

 

note
பாத்திமாநூர்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=263&Itemid=1

 
 
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்

Image

மாவில் விறவி கொள்ள
**********************************

வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி

கறி தாளிக்க
*****************

எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி

Image

மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி

செய்முறை
***************

1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.

Image
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Image
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

Image
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
Image

6.மட்டன் &எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
Image

8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.

Image
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)

Image
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

Image
11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.

Image

12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.

Image
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறி கரைந்து விடும்.

Image
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

Image
16.. லேசகாக கிளறி விட வேண்டும்.

Image
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து  பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவேண்டும்.

Image
18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி)

குறிப்பு
************
மாவு தயாரிக்கும் முறை
***********************************
பச்சரிசி (அ) சிகப்பரிசியை களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும். திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு வருக்கனும். வருத்ததை ரவை ஜலிக்கும் ஜல்லடையில் ஜலித்து கொள்ளவேன்டும்.
இல்லை வீட்டிலேயே அரிசியை ஊறவத்து மிக்சியில் கட்டியா அரைட்த்து அதனுடன் சிறிது ரெடி மேட் அரிந்து மாவு சேர்த்தும் கொழுக்கட்டை பிடிக்கலாம்.
இத ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வருத்து கொள்ள வேண்டும்.
கறி நல்ல எலும்புடன் போட்டால் தான் சுவை அதிகம்.
ஜலீலா

.

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2371&Itemid=99 


பிரட் காய்ந்து போய்விட்டாலோ, அல்லது பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய்விட்டாலோ, சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையானப்பொருட்கள்:
ரொட்டித்துண்டுகள் - 8
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ரொட்டித்துண்டுகளின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியப்பின், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அத்துடன் ரொட்டித்துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப்பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


சென்னைவாசிகளும், சென்னைக்கு வருகை புரிந்தவர்களும் மெரினா கடற்கரையைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மெரினா எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் இங்கு விற்கப்படும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். மாலை வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு, சுண்டல் சாப்பிடும் சுகமே அலாதிதான். கடற்கரையைப் பிரிந்து வாழும் அன்பர்கள், சுண்டலையாவது சுவைத்து மகிழுங்கள்.
தேவையானப்பொருட்கள்:
காய்ந்த வெள்ளைப் பட்டாணி - 1 கப்
அரைக்க:
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அலங்கரிக்க:
பச்சை மாங்காய் - துருவியது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).
பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.
குறிப்பு: இதில் சில துளி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம். சிலர் தாளிக்கும் பொழுது, சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்ப்பார்கள். விருப்பமானால் வெங்காயத்தையும் சேர்க்கலாம். 
தேங்காய் அதிகம் விரும்பாதவர்கள், தேங்காயை அரைத்து சேர்ப்பதை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக, வெந்தப் பட்டாணியில் சிறிது எடுத்து நன்றாக மசித்து விட்டு அதைச் சுண்டலில் சேர்த்துக் கிளறினால், சுண்டல் சேர்ந்தால் போல் இருக்கும். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் நசுக்கி அல்லது அரைத்து தாளிப்பில் சேர்க்கலாம்.


Active Image

தேவையான பொருட்கள்

மட்டன் -11/2 கிலோ

பிரியாணி அரிசி-1 கிலோ

எலுமிச்சம் பழம் - 1,

வெங்காயம்1/2 கிலோ

Image

பிரியாணி மசலாப்பொடி-1 மேஜைக்கரண்டி 

மிளகாய்ப்பொடி - 2மேஜைக்கரண்டி 

மல்லி பொடி--1 தேக்கரண்டி

3 கலர் கேசரி பவுடர்- 1 சிட்டிகை 

தக்காளி-1/2 கிலோ

மிளகாய்-4

கொத்தமல்லி தழை- 1/2 கப் 

புதினா-1/2 கப் 

மஞ்சள்-1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை- 3 முந்திரி-10

தயிர்-400ml

 Image

நெய்-100ml

ஆயில்-150ml

இஞ்சி-100கிராம்

பூண்டு -75கிராம்-

உப்பு -தேவையான அளவு 

பட்டை-கிராம்புஏலம்-

Image

பாதி வெங்காயத்தை நெய்யில் பொரித்து வைக்கவும

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டு,இஞ்சியை அரைத்து வைக்கவும்.வெங்கயம்,தக்காளி,பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி

 வைக்கவும்.

Image

கறியை சுத்தம் செய்துபாதி தயிர்.இஞ்சி,பூண்டு,,பச்சை மிளகாய்,மிளகாய்தூள்,உப்பு,சிறிது 

கொ.மல்லிபுதினாபோட்டு 30 நிமிடம் கலக்கி வைக்கவும்.

Image

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் எண்னைய்  ஊற்றி பட்டை-கிராம்புஏலம்-இஞ்சிபூண்டு 

தாளித்து தயிர் போட்டு நன்கு கிளரவும்,

Image

அதில் வெங்காயம் போட்டு பாதி வதங்கியவுடன்

Image

 கறி போட்டு அந்த எண்ணையில் வேகவிடவும் பாதி வெந்தவுடன் அதில் தக்காளியை சேர்க்கவும்

Image

தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கிளரவும் முக்கியமாக அடிபிடிக்காமல் பார்க்கவும்

{தேவையிருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்}

Image

உகிழங்கை சேர்த்து கிளரவும் இப்போது கறி மசால் ரெடி

Image

மற்றொறு  பாத்திரத்தில் பட்டை-கிராம்புஏலம்-இலை,உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி

கொதிக்க விடவும்

Image

தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு மூடி வைக்கவும்

Image

அரிசி 3/4 பதம் வெந்தவுடன், வடிக்கட்டவும்.

Image

 வேகவைத்த அரிசியை  கறியில் போடவும்,{கறி கீழ் இருக்குமாறு பார்க்கவும், கிளர வேண்டாம்}

Image

ஓர் கரண்டியை கொண்டு சமமாக தேய்க்கவும் அதில் எலுமிச்சம் பழம்  பிழியவும்

Image

சட்டியின் மேல் காட்டன் துணீயை விரித்து மூடியை வைத்து மூடவும்

Image

கேஸ்அடுப்பில்சமைப்பவர்கள்தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி 

பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து மூடி  தம்மில் போடவும்

விறகு அடுப்பில் சமைப்பவர்கள் கீழ் உள்ள தீகங்குகளை சட்டியின் மூடியில் போடவும்

Image.

அப்படியே 45 நிமிடம் வைக்கவும்{அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்}

Image

வாணலியில் எண்ணெய்யை விட்டு,காய்ந்த திராசை,முந்திரியையும் பொன்னிறமாகவறுக்கவும்

Image

அதனை பிரியாணியில் போடவும், 3 கலரையும் தணித்தனியாக தண்ணீரில் கலக்கவும்

Image

படத்தில் பார்ப்பது போல் ஊற்றவும்

Image

அதன் மேல் செர்ரி பொரித்த வெங்காயம் போடவும்

Image


Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

கத்தரிகாய பெரியது   - 1
மிளகாய் தூள்        - 1/2 தே.க
அரிசிமாவு           - 1/4 தே.க

Image
கார்ன் மாவு          - 1/4 தே.க
உப்பு                -  தேவைகேற்ப்ப
சோம்பு              -  1/4 தே.க
பூண்டு               - 1  
எண்ணெய்           - 1/2 தே.க
பேசில் பௌடர்     - 1/4 தே.க
Image

ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும், எண்னெய் தவிர மற்ற எல்லாவற்றைய்ம் கல்ந்து வைத்து கொள்ளவும்.

Image

முதலில் கத்தரிகாயை நன்றாக கழுவி துடைத்து நல்ல 1/4 இன்ஞ் அளவில் வட்ட வடிவ துண்டுகளாக்கவும் அதனை கலந்த மாவில்  கத்தரிகாயகளை போட்டு பிசிறி வைக்கவும்

Image

இதை ஒவன் க்ரில்லில் ஆயில் ஸ்பேரெ செய்து(ஆயில் தடவி) வைக்கவும். 
Image

ஒவன் டெம்ப்ரேச்சர் 400 டிகிரி  25 நிமிடம் ( ஒவனின் அளவை பொறுத்து கூட்டியோ குறைத்தோ) வைக்கவும்.பத்து நிமிடம் கழிந்து மறுபுறம் திருப்பி வைக்கவும்.

Image
இப்போது நன்றாக நல்ல் கிரிஸ்ப்பி கத்தரிகாய் ரெடி.
இது எல்லாவகை கலந்த சாததுக்கும்  ரொம்ப நல்ல சைட் டிஷ்.
ஒவனில் வைக்கவேண்டாம் என்றால் எண்னெயில் பொறித்தும் 

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2149&Itemid=1

Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

சிக்கன் - 3துண்டு

இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி

சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு 

தயிர்- 1 தேக்கரண்டி

எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

 Image

தோசை மாவுகப் 

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கொத்தமல்லி தழை-2 கொத்து

எண்ணை தேவைக்கேற்ப்ப

வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்

அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்

Image

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்

Image

,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்

Image

உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்

Image.

அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்[இந்த தோசை என் குழந்தைக்கு சுட்டதால்வெங்காயம் சேர்க்கவில்லை]

Image

நன்கு அமுக்கி விடவும்

Image 

தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்

Image

தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும்

Image

சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு:-

உப்பு: 3 சிட்டிகை

சர்க்கரை :- தேவையான அளவு

தேங்காய் துருவல் :- தேவையான அளவு

 

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும். 

 

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது. 

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/10/blog-post_03.html

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! 

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, நன்கு 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து வெண்ணெய் போன்று அரைத்து க்கொள்ளவேண்டும்
கேழ்வரகு அடை:- 
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப
செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். 
சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!! 

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி மாவு - 1 கப்
ரவா - 1/2 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவைக்கேற்றவாறு

 

செய்முறை.

தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, ரவா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

 

குறிப்பு.

சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.

 

 http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 5
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 4

 

செய்முறை.

 

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

 

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

 

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

உருளைக்கிழங்கு -‍ 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4
இஞ்சி ‍- ஒரு சிறு துண்டு
பூண்டு ‍- 4 அல்லது 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -‍ 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌

 

செய்முறை.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடான பின் அதில் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழ‌ங்கு துண்டங்களைப் போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி, மூடி வைத்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும்.

 

இது அதிக காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.

மேலும், இதை Baby potato என்று அழைக்கப்படும் சிறிய உருளைக்கிழங்கை வேகவைத்து, முழுதாக அப்படியே சேர்த்து செய்தால், பார்க்க அழகாகவும் இருக்கும்.

http://kadakam.wordpress.com/

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

வறுத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டிக்காம்பால் கிளறி விடவும். மாவு சிறிது ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி, சற்று அழுத்தி விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து முடிக்கவும். இதை, எண்ணை தடிவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: புட்டு மாவில் இந்தக் கொழுக்கட்டையை, சுலபமாகச் செய்யலாம். புட்டு மாவில் உப்பைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரைத் தெளித்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்துக் கிளறி, கொழுக்கட்டைப் பிடித்து வேகவைக்கலாம்.

நான் சிவப்பரிசி புட்டு மாவில் கொழுக்கட்டைச் செய்துள்ளேன். சுவையும், சத்தும் இதில் சற்று அதிகம்தான்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_13.html

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே இறக்கி, அதை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொதிக்க விடவும். வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிடவும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய்யைத்தடவிக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி, கொழுக்கட்டைப் பிடிக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிப்பானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_2599.html