Language Selection

பி.இரயாகரன் 2004-2005

book _4.jpgசில முக்கியமான விடையங்கள் பற்றிய அடிப்படையான குறிப்புகள் அவசிமாகிவிடுகின்றது. கருணாகுழு பிரிந்து சென்றதை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக பிரபாகுழு கூறி, பிரச்சனையின் அடிப்படைச் சாரத்தையே மறுக்கின்றனர். மறுபுறத்தில் ஆதாரமற்ற வதந்திகளையே சமூக கருத்தாக்குகின்றனர். எந்தவிதமான அடிப்படையுமற்ற வகையில் பரப்பும் வக்கிரங்கள், தனிப்பட்ட நபர்களின் கற்பனைத் திறனுடன் இசைந்து செல்லுகின்றது. தமிழ் மீடியாக்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள், கட்டுரைகள் என்று பலவற்றை வண்ணவண்ணமாக வெளியிடுகின்றனர். புலியின் பாசிசக் கோட்பாட்டுக்கு இசைவான பினாமியத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலிகள், கற்பனைகளை விதைத்து, விவாதம் என்ற பெயரில் வக்கரிக்கின்றது. உண்மையில் பாசிசக் கட்டமைப்பில், தமிழ் மீடியாவும் வக்கரித்து நிற்கின்றது அவ்வளவே.

book _4.jpgசமாதானம் அமைதி என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில், புலிகள் ஏகாதிபத்திய கைகூலியாகி சோரம் போயுள்ளனர். இந்தநிலையில் ஏகாதிபத்தியம் போடும்; எலும்புகளை சுவைக்கும் யாழ் மையவாதத்துக்கு எதிரான நாய்ச் சண்டையில், பங்காளிகள் தமது பங்கைக் கோருகின்றனர். இது யாழ்-கிழக்கு என்று புலித் தலைமைகளுக்கு இடையிலான பிளவாகி, அதுவே ஒருபுறம் தூற்றலாகி மோதலை நோக்கி நகருகின்றது.


 தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கமல்ல என்பதை, வரலாறு மீண்டும் ஒருமுறை நிதர்சனமாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயர்சாதி இயக்கமே. யாழ்ப்பிரதேச மையவாதத்தை அடிப்படைச் சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு பிதேசவாத இயக்கமே. ஆணாதிக்கத்தை சித்தாந்தமாகக் கொண்ட ஒரு ஆண்கள் இயக்கமே. இவற்றை எல்லாம் அடிப்படையான சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு குறுந்தேசிய இனவாதஇயக்கமே. இதன் தலைமை தனிமனித அதிகாரத்தை முன்னிலைப்படுத்தும், ஒரு பாசிசஇயக்கமே. 

பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.

ஒருபுறம் இலங்கை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலைமை கனிந்து செல்லுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கும் மூலதனம் உயர்ந்தபட்ச சலுகைகளை அன்றாடம் பெறுகின்றது. சர்வதேச மூலதனம் தேச மூலதனத்தை விழுங்கி ஏப்பமிடும் வகையில் இச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றது. உலகமயமாதலின் செல்லக் குழந்தையாக இலங்கையைச் சீராட்டி வளர்க்கும் ஏகாதிபத்தியங்கள், இதனடிப்படையில் உள்நாட்டில் ஏற்படும் எந்த நெருக்கடியிலும் உதவத் தயாராகவே உள்ளது.

அமெரிக்கா மட்டுமல்ல மற்றைய ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும் கூட பல எச்சரிக்கைகளை விடுகின்றது. 15.11.02 இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் நெஸ்பீ புலிகள் பயங்கரவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என்றார். புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், புலிகள் தனியான இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் பிரிவு போன்றவற்றை வைத்திருக்க முடியாது என்றார். இவை இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்றார். தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதை வலியுறுத்தி அவர், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுத்தார். ரூசியா இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அமெரிக்காவுடன் சர்வதேச நிலைப்பாடுகளில் ஒன்று சேர்ந்து நிற்கும் பிரிட்டன் 30.12.2002 இல் தனது இராணுவக் கப்பலான கெபபாக்-ஐ இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பி மறைமுகமாகப் புலிகளை மிரட்டியது.

இனப்பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடுகள் அத்துமீறி அதிகரித்துச் செல்லுகின்றது. நேரடியான ஆக்கிரமிப்புக்கான புறச்சூழலைத் திட்டமிட்டே அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதக் குழுவுக்கு, கடலில் தற்கொலைத் தாக்குதலை எப்படி நடத்துவது எனப் புலிகள் பயிற்சி அளித்ததாக அமெரிக்கவின் "கடல் புலனாய்வுப் பிரிவு" குற்றம்சாட்டியது. "கடல் புலனாய்வுப் பிரிவைச்" சேர்ந்த கிவ்வென் கிம்மில்மன் புலிகளிடம் இருந்து "ஜமா இஸ்லாமியா" பெரும் பலன்களை பெறுவதாக கூறியதன் மூலம், புலிகள் மேல் கத்தியைத் தொங்கவிட்டுள்ளது அமெரிக்கா. ஒட்டு மொத்தத்தில் இலங்கை இனமுரண்பாட்டின் ஒரு இனப் பிரிவைச் சார்ந்து வெற்றிகரமாக தலையிடுவதற்கான அடிப்படையை அமெரிக்கா உருவாக்கிவருன்றது. அதே நேரம் புலிகளினால் பாதிக்கப் பெற்ற தரப்பின் நிபந்தனை அற்ற ஆதரவையும் கூட அமெரிக்கா பெற்று நிற்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டின் பின்னணி சூத்திரதாரிகளே, இன்று இலங்கையில் தலையிட முனையும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பிரமிப்பூட்டும் வகையில் உதவிகள், கடன்கள் ஏகாதிபத்தியத்தால் வாரி வழங்கப் படுகின்றது. இதற்கு அக்கம்பக்கமாகவே அன்னிய முதலீடுகள் பெருமளவில் போடப்படுகின்றது. நேரடிச் சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற இரு தளங்களில், இலங்கையின் தேசிய வளங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி சூறையாடப்படுகின்றது. கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்பு 450 கோடி டொலரை (45000 கோடி ரூபாவை) அடுத்த மூன்று ஆண்டுக்கு வழங்கியுள்ளது. இது ஒருபுறம் நடக்க இதற்கு வெளியில் நாடுகள், வங்கிகள் தனித்தனியாக கடன் உதவி என்ற பெயரில் பெரும் தொகை நிதிகளை அன்றாடம் வழங்குகின்றன. இந்த நிதி ஆதாரங்கள் பலவற்றை நேரடியாக தனது சொந்த மேற்பார்வையில் செலவு செய்கின்றன. நிதி வழங்கல் பற்றியத் தரவுகளை அன்றாடம் செய்தி பத்திரிக்கையில் இருந்து தொகுத்த போது, பிரமிப்பூட்டும் எதார்த்த உண்மை தௌளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

ஏற்றுமதிப் பொருளாதாரம், அன்னிய மூலதனக் கொழுப்பை அடிப்படையாக கொண்டது. இலங்கையின் தேசிய உற்பத்திகள், வெள்ளையர்களும், பணக்காரர்களும் நுகர வேகமாக நாடு கடந்து செல்லுகின்றது. வெள்ளையர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கழிப்பவைதான், இறக்குமதியாக நாட்டினுள் வருகின்றது. இதைவிட மிகை உற்பத்திகள், சர்வதேச சந்தையில் தேங்கிப் போனவையே நாட்டினுள் கொட்டப்படுகின்றது. அதையும் கடனாகத் தலையில் கட்டிவிட்டு, பின் வட்டி வசூலிப்பதும் கூட ஒரு இறக்குமதியின் அடிப்படைக் கூறாகி உள்ளது. அடிப்படை தேவையற்றவைகளையும், கழிவுகளையும் விளம்பரம் செய்து வாங்க வைக்கும் உளவியல் சிதைவை ஏற்படுத்தி, தேவை அற்றவைகளை தேவையானதாக்கி இறக்குமதி ஊக்குவிக்கப்படுகின்றது.

இனங்களுக்கு இடையிலான மோதல் சமூக அவலத்தில் இருந்து திட்டமிடப்பட்டது. அதைப் பூசி மொழுக குறுந்தேசிய உணர்வு இனம் கடந்து உருவாக்கியதன் மூலம் இனயுத்தம் வித்திடப்பட்டது. அன்று இந்தச் சமூக அவலத்தின் அடிப்படை என்ன? 1971-இல் வேலை செய்யக் கூடியவர்களில் வேலை இன்மை 19 சதவீதமாக இருந்தது. இது 1974-இல் 24 சதவீதமாக உயர்ந்தது. இதில் இருந்து மீள யுத்தம், யுத்தப் பொருளாதார, பாசிசச் சட்டங்கள் ஒன்று இணைந்து அவை ஜனநாயமாகி இந்த அமைப்பின் நீடிப்புக்கு கைகொடுத்தது. இந்த யுத்தப் பொருளாதாரம் ஊடாக ஏகாதிபத்திய ஊடுருவல் என்றும் இல்லாத அளவுக்கு இலங்கையில் கால் உன்றியதுடன் அது மேலும் ஆழமாகவே வேகம் பெறுகின்றது. தேசிய அடிப்படைகள், தேசிய பொருளாதாரங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி கற்பழிக்கப்படுகின்றது.

சமூகம் மீதான நம்பிக்கை இழப்பு சோர்வையும், அராஜகத்தையும் உருவாக்கின்றது. சுயநலத்தைச் சார்ந்து விரக்தியும், தன்னகங்காரம் சார்ந்த தனிமனிதப் போக்குகள், விளைவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பீதிக்குள் சிதைக்கின்றது. சுய ஆளுமையுள்ள, சமுதாயக் கண்ணோட்டம் சார்ந்த அறிவியல் சிதைந்து சமுதாயத்துக்கே நஞ்சிடுகின்றது. சமூக அறிவியல் தளம் சுயபுராணங்களை வீம்பு பண்ணும் அளவுக்கு, தனிமனித வக்கிரம் வெம்பி வெளிப்படுகின்றது.

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. கல்வி மறுப்பதும், கல்வியைத் தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசியப் பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரிய ருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.

1997-ஆம் ஆண்டுக்கும் 2002-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,096 பாடசாலைகளை உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க மூடிய அரசு, 2000-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக 9882 மதுபான விற்பனையகங்களைத் திறந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், சமூகப் பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசாரா நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகாராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமணமாகாத கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வௌவேறு நாடுகளில் வாழ்வது, நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது.

நாட்டின் தேசியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைக்கவும், பாலியல் ரீதியாக எம்நாட்டு பெண்களை, குழந்தைகளை ருசிக்கவும் வரும் வெளிநாட்டவனின் நலன்களை உறுதி செய்வதுடன், சொகுசுப் பண்பாட்டை ஏகாதிபத்தியம் கோருகின்றது. 2003 முதல் 8 மாதத்தில் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர். இது 2002யுடன் ஒப்பிடும் போது 23 சதவீதம் அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 1.73 லட்சமாக இருந்தது. இது 2003 இல் முதல் ஆறு மாதத்தில் 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஏகாதிபத்திய நலன் என்பது, நாட்டை எப்படி ஒட்டுமொத்தமாக விற்பதன் மூலம், மறு காலனியாதிக்கத்தை விரைவாக ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் பின்பாக, இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் மூன்று மடங்காகியது. 2003 இன் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு மூலதனம் 1,700 கோடி ரூபாவாக இருந்தது. இது 2003-இன் இறுதியில் வெளிநாட்டு முதலீடுகள் 3,000 கோடி ரூபாவாக இருக்கும் என்று, முதலாளிகளின் முதலீட்டுச் சபை அறிவித்து இருந்தது. ஆனால் அது 5000 கோடி ரூபாவைத் தாண்டியது.

 

இலங்கையை ஆளும் ஆட்சிகள், பெருந் தேசிய சிங்கள இனவாதத்தால் நிறுவனப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனவாத அமைப்பில் எந்தக் கட்சி பாராளுமன்ற ஜனநாயக சூதாட்டத்தில் தெரிவானாலும், அதன் அடிப்படை கட்டமைப்பு இதற்குள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை, தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருட அமைதி மீண்டும் மீண்டும் நிறுவுகின்றது. இந்த இனவாத அமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை மட்டுமல்ல, சிங்கள மக்களின் தேசியத்தைக் கூட அழித்தொழிப்பதில், இனவாதக் கட்டமைப்பை சிறப்பாக நிலைநிறுத்துகின்றது. இந்த இனவாத அமைப்பு உலகமயமாதலை நீடித்து பாதுகாக்கும் வகையில், இலங்கையில் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்கின்றது.

க டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் பூர்வமான சமூக ஒழுக்கமாகி, புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும், பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும், ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர். உலகமயமாதல் நடைமுறைகள், இலங்கையில் கரைபுரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.

"சமாதானமா? யுத்தமா?" என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியங்கள், விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும் அரசுக்கும் பின்பக்கமாக கைகளை இறுகக் கட்டபட்ட நிலையில், சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகின்றது. இங்கு அமைதிப் படைக்கு பதில், மூலதனமே சமாதானத்தை கடைப்பிடிக்க உத்தரவுகளை இடுகின்றது. என்றுமில்லாத வகையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏகாதிபத்தியத் தலையீடுகள் பெருக்கெடுத்துள்ளது. உண்மையில் யுத்தமற்ற அமைதியை மக்கள் பெற்றார்களோ இல்லையோ, மூலதனம் இதைச் சரியாகவும் சாதகமாகவும் பயன்படுத்தியுள்ளது.

book _3.jpgஇலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.