Language Selection

பி.இரயாகரன் 2001-2003

book _5.jpgஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.

book _5.jpgபழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ''மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,