10312020Sat
Last updateFri, 30 Oct 2020 11pm

"யுனிலீவர் நிறுவனமே, இந்தியச் சட்டங்களை மதித்து நட!'' — தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தின் வடமங்கலம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் இந்துஸ்தான் யுனிலீவர் என்ற பெயர் மாற்றத்துடன் சோப்பு, பற்பசை, முகப்பவுடர் முதலான அன்றாடப் பயன்பாட்டுக்கான நுகர்பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது. 

 

நேர்மையே இதன் வாக்குறுதி என்று ஹமாம் சோப்பை விளம்பரப்படுத்தும் இந்நிறுவனம், இந்தியச் சட்டங்களை மயிரளவும் மதிக்காமல், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால், "நேர்மையா? கிலோ என்ன விலை?' என்று கேட்டு அடக்குமுறையை ஏவி வருகிறது.

 

இந்நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும், அவர்களுக்குப் பணிநிரந்தர ஆணை கொடுக்கப்பட்டுள்ள போதிலும் தினக்கூலி தொழிலாளர்கள் (Daily Rated workman) என்ற பெயரிலேயே பணிபுரிகின்றனர். இப்பெயர் மோசடி மூலம் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மட்டுமல்லாது, மாதச் சம்பளத்திலும் மருத்துவ ஈட்டுறுதித் தொகை பிடித்தம் செய்வதிலும் சட்டவிரோதமாக பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது, நிர்வாகம். 

 

இவற்றைத் தட்டிக் கேட்கும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பணியிடை நீக்கம் செய்வது, ஊதிய உயர்வை மறுப்பது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறைகளை ஏவுவது என கேள்விமுறையின்றி கொட்டமடிக்கிறது.

 

குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து, இந்நிறுவனத்தில் கிளைச் சங்கத்தைக் கட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்கினர். இதைக் கண்டு பீதியடைந்த நிர்வாகம், உணவகத்தில் கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதைத் தட்டிக் கேட்ட முத்துகிருஷ்ணன் என்ற தொழிற்சங்க முன்னணியாளரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது.

 

கொதித்தெழுந்த தொழிலாளர்கள், யுனிலீவரின் சட்டவிரோதப் பழிவாங்கலை எதிர்த்து கடந்த 15.9.2008 அன்று வடமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொழிலாளர் நிறைந்த இப்பகுதியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பகுதிவாழ் உழைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், பணபலமும் அதிகாரபலமும் அடியாள் பலமும் கொண்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட விரோத அடாவடித்தனத்தை, கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் நிச்சயம் முறியடிக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. யுனிலீவர் தொழிலாளர்கள் இதர ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

—  இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன், 

புதுச்சேரி.


தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல்  நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது.  ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான். 

குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.

 

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா?

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே!

 

முதலாளிக்கு நிலம்! உழுபவனுக்கு குண்டாந்தடி! – சி.பி.எம்.இன் நிலச்சீர்திருத்தக் கொள்கை!

"கேரளத்தைப் பார்! வங்கத்தைப் பார்! நிலச்சீர்திருத்தம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது'' எனக் கிளிப்பிள்ளையைப் போல சி.பி.எம். கட்சி ஒவ்வொரு சந்துமுனையிலும் தனது கூட்டங்களில் பெருமை பொங்கப் பேசுவது வழக்கம். இதையெல்லாம் பார்த்து சி.பி.எம். ஆளும் மாநிலங்களில் நிலமற்றவர்களே கிடையாதோ என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால், சி.பி.எம். ஆளும் கேரளத்தில் நிலமற்ற மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டங்கள், இந்தப் போலிப் பெருமையை அம்மணமாக்கிவிட்டன.