10262020Mon
Last updateMon, 26 Oct 2020 2pm

ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு! - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.


சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்

1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.

2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.

3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.

4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.


இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும்

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.

சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது!

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

More Articles ...