11252020பு
Last updateசெ, 24 நவ 2020 7pm

விஜயகுமாரன்

ஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது!!!

"அந்த நாயக்கன் அன்று ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு வந்த பொழுதே அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா என்ற நாய் குரைத்திருக்கிறது. செய்திருக்கலாம் ஏன் செய்யவில்லை? கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே! இப்போது சொல்வதை அவன் உயிருடன் வாழ்ந்த போது செய்து காட்டியிருக்கலாமே. ஈ.வே ராமசாமியின் ஒரு முடியைக் கூட இந்த நாய்களால் தொட்டிருக்க முடியுமா?

யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை!

மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்பட கோமாளிக்கு!!!

உதயன் பத்திரிகை ஒரு கோடம்பாக்கத்து கோமாளியின் மூன்றாந்தர தமிழ்ப்படக் குப்பைக்கு விமர்சனம் எழுதியதற்காக பொங்கியெழுந்த கலாரசிக கண்மணிகள் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கத்தலைவனின் தமிழ்ப்படத்தை அவமதித்தவர்களை எதிர்த்து குரல் எழுப்பிய போராளிகளின் பெயர்கள் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மனோகரா தியேட்டரிலோ, ராஜா தியேட்டர் சுவரிலேயோ கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட வேண்டிய செயற்கரிய செயல் இது. தமிழர்களிற்கு எதிரான போரில் ஆயிரம் தலைகளை வீசித்தள்ளியதால் தளபதி பட்டம் பெற்றவரை, ஒற்றைக்கையால் ஒரு நூறு பேரை அடித்து நொருக்கும் மாவீரனை, புவியீர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லாமல் பறந்து, பறந்து காற்றில் சண்டை போடுபவரின் படத்தை ஒரு பத்திரிகை எப்பிடி விமர்சிக்க முடியும் என்ற விசிலடி வித்துவான்களின் கோபம் போற்றுதலிற்குறியது.

மற்ற கட்டுரைகள் ...