Language Selection

பி.இரயாகரன் -2009

புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எம்மத்தியில் உள்ளனரா? அப்படி யாரும் அரசியல் ரீதியாக எம் மத்தியில் கிடையாது. மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்பது, மக்களுக்காக வைக்கப்படும் புரட்சிகர கருத்துகளின் அடிப்படையில் தான், அரசியல் ரீதியாக அதை வரையறுக்க முடியும்;. அரசியல் அல்லாத தளத்தில், இது வெறும் நபர்கள் அல்ல.  

 

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்;டுள்ளது.

 

தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.

 

மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.

 

இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?

 

தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி  புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்"  உச்சரிக்கப்படுகின்றது.

 

தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும்  நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.  

'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.

 

தமிழ்மக்களைக கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு  'ஜனநாயகம்".  தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.

 

பிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.  

 

ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

தோழர்களே!  நண்பர்களே!  சமூக அக்கறையுள்ளோரே!


எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

தம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம்.   இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.

 

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று,  பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.