Language Selection

சமர் - 11 : 06/06 -1994

மக்களின் விருப்பு இன்றி சட்டவிரோத முறையில் இந்தியா தயவில் 1989 களில் பாராளுமன்றக் கதிரைகளை பெற்று சுகம் கண்டவர்கள் மீண்டும் அதைப் பெற புதிய தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்தவகையில் கூட்டணி 1977க்கு பின் மீண்டும் தேர்தலில் தனியாக நிற்கவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கை வடக்குடன் இணைப்பதை ஒரு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முனையும் இனவாதிகள் அதன் ஒத்திகையாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினர். வடக்குடன் கிழக்கை இணைப்பதா என்பதை கிழக்கு மாகாண மக்களிடம் மட்டும் வாக்கெடுப்பை நடத்த முயல்வதன் ஊடாக வடக்கை இணைக்க யாரும் கோரவில்லை . ஏன் வடக்கிலும் வாக்கெடுப்பை கோரலாமே. வடக்கு அரசியல் ஆதிக்கம் கொண்டது என்று விடயங்கள் உள்ளனவே.

நாசகார காட் ஒப்பந்தந்தத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் ஏப்ரல்-6 இந்தியாவை வல்லாதிக்க அரசுகளினதும் பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளினதும் காலனியாக மாற்ற வழி வகுக்கும் காட் மற்றும் டங்கல் ஒப்பந்தங்களில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட வேண்டாமென இவ் ஒப்பந்தங்களுக்கெதிராக இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தன.

இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தை தேர்தல் ஆண்டாக அறிவித்ததுடன் எல்லாக் கட்சிகளும் கதிரைகளைக் கைப்பற்ற ஆலாய்ப் பறக்கின்றனர். இவ்வருடத்தில் கிழக்கு தேர்தலையும் தென்மாகாண சபை தேர்தலையும் நடத்தி முடித்துள்ள அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்தி முடிக்கவுள்ளனர். கிழக்கு தேர்தலில் யூ.என்.பி அரசு சகல தில்லுமுல்லுகளையும் நடத்தி கட்டாயப்படுத்திய வேட்ப்பாளர்களையும் நிறுத்தியும்,பொலிஸ்,இராணுவம் மூலம் கள்ள வோட்டுக்களை போட்டும் வெற்றிய பெற்று விடமுடியவில்லை.

உலகின் முதலாவது உயிர் மூலக்கூறு பொறியியல் முறைப்படி தக்காளிப்பழம் தை மாத இறுதியில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. சற்றே இனிப்பு சுவை கூடுதலாக உள்ள இந்தத் தக்காளி பன்னாட்டு நிறுவனத்தின் காப்புரிமை பெற்றதாகும். விரைவில் இதன் விதைகள் டங்கல் ஒப்பந்தப்படி மற்ற ஏழைநாடுகளுக்கும் இறக்குமதியாகும்.

01-05-1994 மேதினத்தன்று முன்னால் இளைஞர் பேரவை உறுப்பினரும், தமிழ் மாணவர் போரவை ஸ்தாபகரும், நாலாம் மாடியிலிருந்து தப்பியவருமான சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.