11242020செ
Last updateசெ, 24 நவ 2020 7pm

தனிப்பட்ட நலனுக்காகவே மக்களை தொடாந்து பிணமாக்கும் 'மாவீரர்" உரை

மக்களின் பெயரில் மாவீரர் உரை. அதற்கு பல பொழிப்புரைகள். ஊரையும் உலகத்தையும் புலித் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி அவர்களையே கொள்ளையிட்டு வாழும் புலிகள், அனைத்து மக்கள் விரோத கேடித்தனத்தையும் மூடிமறைக்க படுகொலையையே தேசியமாக பிரகடனம் செய்து நிற்கின்றனர்.


நம்மொழி சஞ்சிகையில் வெளியாகிய பேட்டி

கனடா சென்ற போது பி.இரயாகரனிடம் எடுக்கப்பட்ட பேட்டி, நம்மொழி சஞ்சிகையில் வெளியாகியது.

 

பேரம் பேசும் எந்த ஆற்றலுமற்ற புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

அரசியல் தீர்வையும் உடனடிப் பிரச்னையையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கே குழிவெட்டியவர்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் எதிரிகள் என்பதையே தமது சொந்த அணுகுமுறை மூலம் மறுபடியும் புலிகள் உலகறிய நிறுவிக் காட்டினர்.

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

குற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு,

புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

புலிகளின் காட்டுப்பிரதேசங்கள் மீதான பேரினவாதிகளின் பொருளாதார தடை, புலிகளையே நித்திரையில் இருந்து உலுப்பி எழுப்ப முனைகின்றது. அவர்களோ கனவு கண்டு எழுந்தவன் போல் புலம்புகின்றனர். உடனே புலிப் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்.