01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன

உடல்அமைப்பு சில தகவல்கள்

 

  • உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.
  • தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.
  • நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.
  • உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும். சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை நமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.
  • மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்

சர்க்கரை நோயாளிக்கு மட்டுமல்ல : கோபப்பட்டாலும், காயம் ஆறாது

lankasri.comசர்க்கரை நோயாளிகளுக்கு தான், காயம் ஆறாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்; "முணுக்"கென கோபப்படுவோருக்கும் , "உடலில் பட்ட காயம் ஆற தாமதம் ஆகும்' என்று ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள் ளது. அமெரிக்காவில் உள்ள ஒகியோ பல்கலை., மருத்து நிபுணர்கள், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்க்கரை நோயாளிகளுக்கு, உடலில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு மிகவும் தாமதம் ஆகும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோபம், எரிச்சல் படுவோருக்கும், காயம் ஆற தாமதம் ஆகும் என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆத்திரப்படுவதால், உடலில் உள்ள, "ஸ்ட்ரெஸ்' சுரப்பியான "கார்டிசோல்' அதிகமாகச் சுரக்கிறது. அப்படி சுரக்கும் போது, காயம் ஆறுவது தாமதமாகிறது. கோபப்படாமல், அமைதியாக உள்ளவர்களுக்கு , அவர்கள் உடலில் ஏற்பட்ட காயம் சுலபமாக ஆறிவிடுகிறது. அவர்களுக்கு, "கார்டிசோல்' சுரப்பது குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம். அமைதியான சுபாவம் உள்ளவர்களைக் காட்டிலும், கோப்படுவோருக்கு காயம் ஆறுவது நான்கு மடங்கு தாமதம் ஆவது, நாங்கள் நடத்திய சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204446876&archive=&start_from=&ucat=2&

நீண்ட ஆயுள் தரும் வைட்டமின் "டி"

lankasri.comநாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல் நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாக இருக்கும். அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்து லண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகிவுள்ளன.

ஆயுள் பெருகுவதற்கு உடல் சத்துக்களில் வைட்டமின்-டி முன்னிலை வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த சத்தால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதையும், காலை சூரிய ஒளியின் மூலம் இந்தச் சத்து உடலுக்கு அதிகளவில் கிடைப்பதையும் ஏற்கெனவே விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவில் வைட்டமின்-டி சத்து இருப்பதை சுட்டிகாட்டியுள்ள விஞ்ஞானிகள், இதனை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்தத்தில் வைட்டமின் -டி சத்து 5 முதல் 10 நானோ மில்லி லிட்டர் அளவில் இருப்பின், அத்தகையோருக்கு இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரத்தத்தில் 20 முதல் 30 நானோ மில்லி லிட்டர் அளவு இந்தச் சத்து இருப்பின், அவர்களுக்கு ஆயுள் பலம் பெருகுவதுடன், இதயப் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதும் பெருமளவு தடுக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, நமது உடல் நலத்தை காத்து, ஆயுள் பலத்தை பெருக்க சூரிய ஒளி உடலுக்கு அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆயுள் பலம் பெருகுவதுடன், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கு சூரிய நமஸ்காரம் எந்தளவுக்கு முக்கியம் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்திச் சென்றதன் அவசியம், தற்போது ஆய்வின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1214589456&archive=&start_from=&ucat=2&

சாப்பாட்டை குறைக்காமல் எடையை குறைக்க புதுவழி?

lankasri.comசாப்பிடும் அளவை குறைக்காமலேயே, உடல் எடையை குறைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஹார்வர்டு புளோரி கழகத்தை சேர்ந்த மைக்கேல் மதாய், எலிகளிடம் இது தொடர்பாக சோதனை நடத்தினார். எலிகளில், கொழுப்பு செல்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எலிகளில் ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் என்ற பொருள் நீக்கப்பட்டு விட்டால், மற்ற எலிகளைப் போலவே, அவை உணவு உட்கொண்டாலும், அதில் உள்ள கலோரி வெகுவிரைவில் எரிக்கப்பட்டு, சக்தியாக்கப்பட்டுவிடுகிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எனவே, ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்வதன் மூலம், வழக்கம் போல உணவு உட்கொண்டாலும், உடல் எடையை குறைக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்யக் கூடிய மருந்துகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால், இவை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதுவரை பரிந்துரை செய்யப்பட்டு வந்தன.


தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோதனை முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் வகையில் இருந்தால், ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்யும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உருவாகும். இதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1209621305&archive=&start_from=&ucat=2&

உங்களைபற்றி உங்களுக்கு

நம் உடலில் உள்ள (protein) கொரட்டின்(keratin) ஆகியவையே நகமாக வளர்ச்சி பெறுகிறது.

கருப்பையில் கருதரித்ததும் முதலில் உற்பத்தியாகும் உறுப்பு கண்தான்.

உடல் பருமனாக உள்ளவர்கள் நீச்சல் பயிர்ச்சியை விரைவாக கற்றுக் கொள்ள முடியும். இவர்கள் அதிக நீரை அகற்றுவதால் சுலபமாக மிதக்க முடியும்.

ஒரு மனிதன் சராசரி உயரம் அவன் தலையின் நீளத்தைப் போல சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

கண்கள் பழுப்பு,நீலம்,கறுப்பு ஆகிய எந்த நிறத்தில் இருந்தாலும் அதற்கும் பார்வைத் திறனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

----

சாதாரன மனிதன் சுவாசிக்கும் காற்றில் இருப்பதைவிட மீசை,தாடி வளர்ப்போர் சுவாசிக்கும் காற்றில் பினால்,பென்சின்டோலுன்,அம்மோன��யா போன்ற பல்வேறு நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக சோவியத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.

ஓருவரின் கைரேகையைப் போலவே மற்றவருக்கு இருக்காது.இது இயற்கையின் அற்புதமான செயல்.இந்த உண்மையை சீனர்கள் தான் முதன் முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர்.

அப்போது சீன அரசர்கள் முக்கிய பத்திரங்களிள் தங்கள் கட்டை விரல் ரேகையைப் பதித்தனர்.


1892 ல்,ஆங்கிலேயே விஞ்ஞானி சர் பிரான்ஸிஸ் கால்டன் என்பவர் எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை நிருபித்துக் காட்டினார்.

கைரேகையக் கொண்டே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் முறையை சர் எட்வர்ட் ஹென்றி என்பவர் பிரபலபடுத்தினார்.

1901ஆண்டு முதல் லண்டன் ஸ்காட்லாந்து யார்டு போலிசார் இந்த முறையைப் பின் பற்றி வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் இம்முறை பின்பற்றப்படுகிறது.