Language Selection

சிறி

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்துக் கொலைகாரர்களால் எரியூட்டப்பட்ட மனிதர்கள் தெருக்கள் வீடுகள்.

தெருவிற்கு விரட்டப்பட்டிருக்கும் கிறஸ்தவ மக்கள் ஒரிசாவில் நடந்தேறிய கொடுமைகள்

ரத்தம் விற்பனைக்கு!
தமிழ் இரத்தம்
சிங்கள இரத்தம்
ஓதி
வெட்டப்பட்ட முசுலீம் இரத்தம்!

துரோகி இரத்தம்
தியாகி இரத்தம்
மக்கள் இரத்தம்
மாவீரர் இரத்தம்
மாமனிதர் ஆன இரத்தம்!

 மெல்லெனக் கொல்லும் இரசாயனங்கள் "குளிர்பானக்" கலன்களுக்குள். இரத்தப் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனப் பதார்த்தத்தின் செறிவு எப்படி இந்த "அமிர்தபானங்" களுக்குள் அதிகரித்தன?

 

சாதாரண குடிநீரில் இருக்கக் கூடிய அனுமதிக்கக் கூடிய செறிவிலும் பார்க்க எட்டு மடங்கு செறிவில் பென்சீன் (டீநணெநநெ) எனப்படும் ஆபத்தான இரசாயனப் பதார்த்தம் 230 குளிர்பானங்களுக்குள் இது இருந்ததை, அதிக தரக்கட்டுப்பாடு கொண்ட பிரான்சிலும் பிரிட்டனிலும் இம்மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது

லகத்தின் சிகரம் நேபாள நாட்டின் தெருக்களில் தங்களின் சக்தியை தாமே உணர்ந்து கொண்டனர் மக்கள். மன்னராட்சியின் அடக்குமுறைக்கெதிராக வீதிப் போராட்டங்கள் கிளர்ச்சிகள் மறுப்பு இயக்கங்கள் நடாத்தியும் மாவோயிஸ்ட் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் எதேச்சதிகார முடியாட்சி மன்னர் ஞானேந்திராவின் அதிகாரத் திமிருக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்கள். முடியாட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் அணிதிரண்ட சக்திகளை அடக்க இராணுவம் ஏவிவிடப்பட்டது.

 

Jodhpur, the blue city

in Jodhpur, Rājasthān (India)
Photograph by SophiaW

நீல வண்ணம் எந்த வர்ணம் ?

போருக்கு போன தன் மணவாளன் மீளத்திரும்பாதபோது அவன் வாளுக்கு மாலையிடும் வீரத் திருமகள்கள் என்று வீரம் ஊறிப்போன இராஜ புத்திரர் பரம்பரைப் புகழ் பேசும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 285 கிலோமீற்றர் தெற்காக அமைந்திருக்கும் ஜொத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பிரதான நகரமாகும். மேலேயுள்ள படங்கள் இந்த ஜொத்பூர் நகரத்தின் மையப்பகுதி.

இந் நகரம் நீல வண்ணத்தில் குளித்தெழுந்திருப்பது தற்செயலானதல்ல. தேர்ந்தே தெரிவு செய்து நீல நிறம் பூசப்பட்ட இந்த நீல வண்ண வீடுகள் எதையோ பறைசாற்றுகின்றன. அது வேறு எதுவுமல்ல பார்ப்பனர் தம்மை மற்றையோரிடமிருந்து பிரித்தறிவிப்பதற்காக பூசிக் கொண்ட சாயம்.

நீல வண்ண வீடா கவனம் ? நீ பார்ப்பான் வீட்டில் காலடி வைக்கின்றாய் என்று கீழ்சாதிக்காரனுக்கு அறைந்து சொல்வதற்காக திமிருடன் பூசிய நீல வண்ணச் சாயம். சாதித்திமிர் தனது இல்லங்களுக்கும் சாதிச்சாயம் பூசிக் கொண்டு தன்னை திமிராய் அடையாளப்படுத்தியதன் மூலம் சாயம் பூசா இல்லவாசிகளை தனக்கு கீழானதாய் இழிவுபடுத்தும் இந்த பார்ப்பனச் சாதிச் சாயக் கொள்கையை சாய்ப்பது எப்படி?

Google Earth இல் படங்கள் தெளிவாக பெறலாம்

 

சிறி

27.05.06

நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ வீராவேசப் பேச்சில் நரம்பு முறுக்கேற உணர்ச்சிப் பிழம்பாக்கி இரத்தத்திலகமிட்டு தம்பிகளை அண்ணன் அமிர் தளபதியாக விடுதலைக்களத்தில் முளைத்தெழுந்த ”களைகளை” துடைத்தெறிந்து விடுதலையை வென்று வாருங்கள் சிங்களவன் தோலைக் கொண்டு வாருங்கள் செருப்பாய் அணிகின்றேன் என்றெல்லாம் வெறியூட்டி ” ”ஓடையிலே என் சாம்பல் ஓடும்போதும் ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்” ”பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்”  என கீதங்கள் பாடி அனுப்பி வைத்து எதைச் செய்யச் சொன்னீர்களோ தூண்டினீர்களோ அவற்றையே தான் அவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். அன்று உங்கள் ஆணையில் இருந்தார்கள். இன்று இல்லை.