Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாரும் ரீட்டாவிடம், சம்பவம் குறித்த கதையைக் கேட்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பின் அவரை அங்கிருந்து மன்னாருக்கும், இறுதியில் பிரான்சுக்கும் முன்னின்று அனுப்பி வைத்தவர் ஜென்னி. இதை நான் கூறவில்லை, இதை ஜென்னிதான் உலகறிய தேசம்நெற்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் மட்டும் கேட்டுத் தெரிந்த விடையத்தை (ஜென்னியின் கூற்று) அசோக் தனது வழமையான அவதூறுகளுக்கு ஏற்ப திரித்துப் புரட்டி கூறியிருக்கும் பின்னணியில், புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும் மேடையேறி இருக்கின்றனர்.

இங்கு எதுவும் கற்பனையல்ல. அவதூறல்ல. புளட் அலுக்கோசுகள் கூறியவற்றில் இருந்து உண்மையைக் கண்டடைதலே.

ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாரும் ரீட்டாவிடம், சம்பவம் குறித்த கதையைக் கேட்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பின் அவரை அங்கிருந்து மன்னாருக்கும், இறுதியில் பிரான்சுக்கும் முன்னின்று அனுப்பி வைத்தவர் ஜென்னி. இதை நான் கூறவில்லை, இதை ஜென்னிதான் உலகறிய தேசம்நெற்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் மட்டும் கேட்டுத் தெரிந்த விடையத்தை (ஜென்னியின் கூற்று) அசோக் தனது வழமையான அவதூறுகளுக்கு ஏற்ப திரித்துப் புரட்டி கூறியிருக்கும் பின்னணியில், புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும் மேடையேறி இருக்கின்றனர்.

இங்கு எதுவும் கற்பனையல்ல. அவதூறல்ல. புளட் அலுக்கோசுகள் கூறியவற்றில் இருந்து உண்மையைக் கண்டடைதலே.

"புளட் ரீட்டா" பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினார் என்று கூறப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டை அன்று முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். ஆவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பெண்ணை விசாரணை செய்யவில்லை. வேறு யாரையும் அந்த பெண்ணுடன் (அங்கு செல்வி உட்பட வேறு பெண்கள் இருந்தும்) கதைக்க அனுமதிக்கவுமில்லை. இது ஜென்னி கூறியுள்ள வரலாற்று வாக்குமூலங்கள்.

ரீட்டா கண்கள் கட்டப்பட்ட நிலையில் நடந்த சம்பவத்தை, குரல் வழியாக – அதுவும் உளவு பார்க்க பதிவுசெய்யப்பட்ட மோசமான குரல் பதிவில் இருந்து, அந்தப் பெண் சம்பந்தப்பபட்ட ஒருவரை அடையாளம் கண்டதாக ஜென்னி கூறுகின்றார். அப்படி அடையாளம் கண்ட பாண்டியின் குரல் அடையாளம் கூட தவறானதாக இருக்கலாம் என்று, 2010 இல் ஜென்னி எழுதியிருக்கின்றார். இதற்கும் நேசனுக்கும் எந்த சம்மந்தமுமில்லை இல்லை என்கின்றார்.

அசோக் தனது அவதூறில் "கடத்தி, பாலியல் வல்லுறவு செய்த கொடியவர்களில் ஒருவர் நேசன், ஜீவனோடு வெளியேறிய பாண்டி என்பது, அவரின் குரல் மூலம் தோழி ரீட்டாவினால் அடையாளம் காணப்பட்டது." என்கின்றார். இங்கு "குரல் மூலம்" ரீட்டா அடையாளம் கண்டார் என்று கூறியபோது ஜென்னி, நேசனைக் கூறவில்லை. அசோக் அப்படி நேசனையுமஇ சேர்த்துப் புனைகின்றார்.

ஜென்னி இது குறித்து "இதில் பாண்டியின் குரலை கண்ணைக் கட்டிய மிகமோசமான சித்திரவதையில் இருந்த நிலையில்தான் அந்தப் பெண் கேட்டு இருந்தார்; ஆனால் அதுவே விசாரணையென்று வரும்போது பல கேள்விகள் உறுதிப்படுத்தல்கள் இருந்திருக்கும். எனவே இதுவரை குற்றவாளிகளை இன்னார் தான் என்று உறுதியாகக் கூறமுடியவில்;லை. அடையாளப்படுத்தவில்லை." இது ஜென்னியின் வாக்குமூலம்;.

இப்படிக் கூறும் ஜென்னி தன்னைப்பற்றி என்ன கூறுகின்றார். "என்னுடைய அரசியல் தெளிவின்மையும் தனிமனித உறவுகளுக்கு வழங்கிய முக்கியத்துவமும் அதற்குக் காரணமாக இருக்கலாமா என்று கேள்வி இன்று ஏற்படுகின்றது. ஆனால் அன்று அவ்வாறாக ஆராயும் அரசியல் பக்குவம் இருக்கவில்லை. போராட்டத்துக்கு வந்த நாம் எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்து எமது இலக்கு நோக்கி நகரமுடியும் என்பதை மட்டுமே நம்புவதற்கு மனம் விரும்பியது" .. "தலைமை சொன்னவற்றை தேவ வாக்காக நம்பினேன். தலைமை மீது இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் காரணம் என்பதை இன்று உணர்கிறேன்.".. "கழகத்தினதும் தலைமையினதும் விசுவாசத்தினால் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடந்து உள்ளேன். அவர்கள் தந்த வேலைகளையும் செய்துள்ளேன். ஆனால் நான் யாருடைய கொலைகளுக்கும் தெரிந்து அல்லது உணர்ந்து நேரடியாகேவா மறைமுகமாகேவா காரணமாக இருக்கவில்லை. எனது விசுவாசத்தை கழகமும் தலைமையும் தவறான காரணங்களுக்காகப் பயன்படுத்தி இருக்கலாம். அவற்றை அறிந்துகொள்ளும் அரசியல் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. எனக்கு இருந்ததெல்லாம் நான் இணைந்துகொண்ட கழகம் அது சிதைந்து போவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை." தன்னைப் பற்றிய இந்த சுயவாக்குமூலம் பல விடையங்களைப் போட்டு உடைக்கின்றது.

ஜென்னி கூறுகின்றார் "அகிலன் - செல்வன் படுகொலைகள் போன்றே ரீட்டா மீதான பாலியல் வல்லுறவும் மிக மோசமான புனைவுகைளக் கொண்டது. படுகொலை செய்யப்பட்ட அகிலன் - செல்வன் பின்தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஒரு கதை புனையப்பட்டது. இப்படுகொலைகளில் தெரிந்தோ தெரியாமலோ சிலர் என்னையும் சம்பந்தப்படுத்தி இருந்தனர்;" .. "அகிலன் - செல்வன் படுகொலைகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான தகவல்கள் போல் ரீட்டா மீதான பாலியல் வல்லுறவு பற்றியும் உண்மைக்குப் புறம்பான சில தகவல்கள் பரப்பப்பட்டது. அவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் அது கழகத்தின் உளவுத்துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த சதிக்கு நான் உடந்தை என்றும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தேன்." அன்று புளட்டில் கீழ் அணியில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினர். இதை எடுத்தால்

1.அகிலன் செல்வன் கொலை செய்ய என எழுதிய கடிதத்தை, ஈஸ்வரனிடம் இருந்து பெற்று ஜென்னி வாசித்ததை அடுத்து, தான் அதை ஆட்சேபித்து முரண்பட்டு உரும்பிராய் வீட்டில் இருந்து வெளியேறியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அசோக் அக்கடித்தில் இருந்த வாசகம் இது தான் என்று "இக் கடிதம் கொண்டுவரும் தோழர்களுக்கான சகல ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கவும். ஈஸ்வரன். கிழக்கு மாகாணப் பொறுப்பாளர்." என்று இருந்ததாக கூறுகிறார். இதுதான் ஜென்னிக்கு ஆட்சேபனைக்குரியதாக இருந்தது அசோக்குக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கவில்லை. இது தான் கடித வாசகம் என்று எடுத்தால், யாழ்; பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்; இக்கொலை தொடர்பாக சிவராம் கிளிநொச்சியில் அசோக்கை சந்தித்துக் காட்டிய கடித வாசகம் இதுதானா!?

2.19.02.1986 – 26.02.1986 நடந்த தளமாநாட்டில் உளவு பார்த்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாது ஜென்னி உளறிக்கொண்டு இருந்த நிலையில், nஐன்னி தளமாநாட்டில் மூன்றாம் நாள் வெளியேறுகின்றார். அங்கு ஜென்னி தன்னை உடனடியாக இந்தியா வரும்படி உமாமகேஸ்வரன் கூறயுள்ளதாக கூறி, உமாமகேஸ்வரன கடிதத்தை வாசித்துவிட்டு வெளியேறுகின்றார். இப்படி அன்று உமாமகேஸ்வரனால் பாதுகாக்கப்பட்டவர் இந்த ஜென்னி.

இப்படிப்பட்ட ஜென்னி இந்த குரல் பதிவு கசெட் பற்றி கூறுவதைப் பார்ப்போம்;. ".. இந்நிலையில் சத்யாவும் எங்கோ திருநெல்லேலிப் பகுதியில் நேசன், பாண்டி, விபுல் போன்றோரிடம் (சரியாக ஞாபகம் வரவில்லை.) போனவாக்கில் தீவிரமாக விவாதித்து உள்ளனர். இதில் பாண்டி பின்தளத்தில் இருந்து வந்ததால் நிறையவே விவாதித்து உள்ளார்; இதனை சத்யா தன்னிச்சையாகவே தன்னிடம் வைத்திருந்த ரெக்கோடிங் கருவியில் பதிவு செய்துள்ளார்;. (முகுந்தனால் எனக்கு தரப்பட்ட ரெக்கோடிங் கருவி பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தேன்".

இங்கு தான், இந்த ரீட்டா கதை தொடங்குகின்றது. சொந்த அமைப்பை உளவு பார்க்கவும், அவர்களை இந்தியாவில் போட்டுத் தள்ளியது போல் போட்டுத்தள்ளும் உளவுகளும், சதிகளும் இங்கு தான் ஆரம்பித்தது. பாண்டி முதன் முதலாக புளட்டில் நடக்கின்ற உட்கொலைகள் பற்றி, தளத்தில் தலைமை தாங்கியவர்களுக்கு கூறுகின்றார். இதனால் தான் பாண்டி இலக்கு வைக்கப்படுகின்றார். ஜென்னியின் வார்த்தையில் சொன்னால் அவரை பிடித்து யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து சுடுவதன் மூலம், யாழ் பல்கலைக்கழகத்தையும் அதைச் சுற்றிய புளட்டுக்கு எதிராக செயற்படுபவர்களையும் எச்சரிப்பது தான்.

இதற்காக புனைவுகளையும், நம்பவைக்க அரங்கேற்றிய காட்சிகளையுமே ஜென்னி "..இயக்கத்தை விட்டு வெளியேறி எங்களையா தேடுகின்றீர்கள், உங்கள் எல்லோரையும் நாங்களும் தேடுகின்றோம். எங்கள் கையில் கிடைத்தால் பெண்களை சின்னாபின்னமாக்கிய ஒருவரையும் உயிரோடு விடமாட்டோம் என்றதான தொனியில் அக்கடிதங்கள் இருந்தன." என்று கூறுகின்றார். ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது, அதாவது அரங்கேற்றப்பட போகின்றதற்கான முன் தயாரிப்புடன் ஜென்னி புளட்டின் பெண்கள் அமைப்பில் தலைமையில் இருந்த ".. ஆறு பேரும் சந்திப்பது எனவும் முடிவாகியது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் ஒருவரைக் காணவில்லை என்றாலும் தேட வேண்டும் எனவும் ஒழுங்கு இருந்தது. ... அன்று மாலை வழக்கம் போல் நாம் சந்திக்கும் இடத்திற்கு இருட்டி நேரமாகியும் ரீட்டா மட்டும் வரவில்லை. குமார் உட்பட காண்டீபன், மெண்டிஸ் இற்கும் தேடச்சொல்லி அறிவித்து விட்டு, நாம் அந்த ஐந்து பேரும் காத்திருந்தோம்." ஒருவர் காணாமல் போவார் என்பது நன்கு தெரிந்து, "தேட வேண்டும்" என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட நாடகம்.

இந்த நாடகத்தில் அடுத்த கட்டம் "..கிட்டத்தட்ட இரவு பத்து மணியளவில் என நினைக்கின்றேன் எமது இருப்பிடத்திற்கு காண்டீபன் வந்து என்னை தனியே அழைத்துச் சென்றார். என்ன விடயம் என்று கேட்டதற்கு, ‘இந்த வீட்டிற்கு பக்கத்தில் எனது வாகனம் நிற்கின்றது. அதில் ரீட்டாவை அழைத்து வந்துள்ளேன். நீங்கள் வந்து பொறுப்பெடுத்து, நடந்தது என்னவென விசாரியுங்கள்’ என்றார். . ‘நான் முத்திரைச் சந்தியடியில் தோழர்களுடன் வாகனத்தில் நிற்கும் போது, இருட்டில் ஒருவர் தள்ளாடி நடந்து வந்ததாகவும் அவர் தன்னை அடையாளம் கண்டு வந்ததாகவும் வந்த பெண் நாமெல்லாம் தேடும் ரீட்டா’ என்றவுடன் எதுவும் பேசாமல் வாகனத்தில் அழைத்து வந்ததாகவும் கூறினார்;" இப்படி புளட்: முன்னணி இராணுவ தளபதிகள் இருக்கும் இடத்தை சரியாக இனம்கண்டு, அங்கு "இறக்கிவிட்டுச்சென்றவர்கள்" யாராக இருக்க முடியும்?

ஜென்னியின் தொடரும் வாக்குமுலம் "..மற்றைய தோழிகளும் காத்திருந்தனர். ரீட்டாவைக் கண்டதும் எல்லோரும் சந்தோசப்பட்டாலும் ரீட்டாவின் நிலையைப் பார்த்து நாம் வெலவெலத்துப்போனோம்." .. "நான் மற்றைய தோழிகளை உள்ளே சென்று படுக்கச் சொல்லி விட்டு, எனது மடியில் ரீட்டாவை தலையை வைத்து படுக்கச் சொல்லி விக்கி விக்கி அழும் ரீட்டாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன்… வேனில் பலரின் குரல்கள் மாறி மாறி ஆத்திரத்துடன் ஒலித்தது. வேனில் ஏற்றிய உடனேயுய, ‘நீங்கள் எல்லாம் ஜென்னி, மெண்டிஸ், காண்டீபனுடன் சேர்ந்து எங்களை வேவு பார்க்கின்றரீர்கள். உனக்கு இன்று நாங்கள் யார் என்று காட்டுகின்றோம்’ என்று தொடங்கி மிகக் கீழ்த்தர வார்த்தைப் பிரேயாகங்களால் திட்டி தொடர்ந்து துன்புறுத்தினர். ... "என்னை ஏற்றி இழுத்துச் சென்றனர். அங்கு அறையைச் சாத்திவிட்டு மிக கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். மேலும் தன்னை முகம் முகமாக பலர் கேட்டுக் கேட்டு அடித்து கையில் ஊசிகளால் குத்தி சித்திரவதைகளாலும் தூசண வார்த்தைகளாலும் துன்புறுத்தினர். வாயில் துணியை அடைத்து நிர்வாணப்படுத்தி என்னை மூன்று பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினர்;. இந்த மூன்று பேரின் உடல் மொழியிலேயே
தனக்கு மூவரென்று அடையாளம் தெரிந்ததாகவும் அதில் ஒருவர் நாடித்தாடி வைத்திருந்ததை உணரக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட அன்றைய பகல் பொழுது முழுதும் என்மீது சித்திரவதையும் கீழ்த்தரமான செய்கையுமே நடத்தப்பட்டது." .. ‘இயக்கத்தை விட்டு போன எங்கைளப் பிடிக்க முயற்சித்ததற்கு இது ஒரு முதல்பாடம். இது சாதாரணம். இனியும் எம்மால் தொடரப் போகும் செயலுக்கு மிரட்டலாக தான் இவ்வளவும் செய்துவிட்டு உயிருடன் விடுவிக்கின்றோம். இந்த அனுபவங்கைள உன்னைச் சார்ந்தவர்களிடம் சொல். இனி எம்மால் பிடிக்கப்படும் ஜென்னி, மெண்டிஸ், காண்டீபன் உட்பட ஏனையோரை உயிருடன் விடப்போவதில்லை. எல்லாவிதத்திலும் சின்னாபின்னமாக்கி விட்டு வீதியில் எறிவோம்’ என்று சூளுரைத்தனர்;. மிக நிதானமற்ற முறையில் பல குரல்கள் கேட்க மிக ஆவேசத்துடன் நடந்து கொண்டனர்; .. ஓர் இடத்தில் வேகத்தைக் குறைத்து, ‘இங்கே உனது ஆட்கள் காண்டீபன் நிற்கின்றான்கள் அவர்களிடம் போய் சொல்லு’ என கையை மட்டும் அவிழ்த்து விட்டு, கண்ணைக் கட்டிய நிலையில் வேனிலிருந்து தள்ளிவிட்டனர்... என ரீட்டா சொன்னார்.

இதற்கு பின் அவரை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் விடிந்தபின் பார்ப்போம் என்று கூறி ரீட்டாவை உறங்க வைத்தேன். அடுத்த நாள் மற்றைய மகளிருக்கும் விடயத்தை சொல்லிவிட்டு மெண்டிஸை சந்தித்து சொல்லக் கூடியவற்றைச் சொல்லி விட்டு இதுபற்றி தொடர்ந்து விசாரிக்க முற்பட்டோம். அவர்கள் ரீட்டாவை கேட்டுக் கேட்டு செய்த சித்திரவதைகளின் படியும் இதற்கு முன் வந்த கடிதங்களின் படியும், சத்யாவின் ரெக்கோடிங் செய்திகளில் இருந்தும் பார்க்கும் போது கண்டிப்பாக கழகத்தைவிட்டு வெளியேறியவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்று உணர்ந்தோம். ரீட்டாவை சித்திரவதை செய்தவர்களின் குரல்களை மட்டும்தான் இப்போதைக்கு வைத்து கண்டுபிடிக்கலாம். எனவே ரீட்டாவின் ஆவேசம் சிறிது தணிய இதுபற்றி அவருடன் பேசி முடிவெடுக்கலாம் என யோசித்தோம்." இப்படி கதை ஜென்னியால் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு புனையப்பட்ட கதை. மற்றைய பெண்கள் கதையை கேட்க அனுமதிக்காது படுக்குமாறு கட்டளையிட்டு, கதை சொல்லப்பட்டு இருக்கின்றது. இந்த அலுகோசுத் தனத்தையும், இதை முன்வைத்து அவதூறு பிரச்சாரம் செய்யும் கோயபல்ஸ்சுகளையும், புளட் என்று தொங்கும் கோமாளிகள் நம்பலாம்;.

இப்படி ஜென்னி சொன்ன கதையை தவிர வேறு யாரும் விசாரிக்கவுமில்லை. அந்தப் பெண்ணை அணுகவிடவுமில்லை.

ஜென்னி கூறுகின்றார் "கண்டிப்பாக எங்களுடன் தளத்தில் ஒன்றாக நின்று மிக கஸ்;டப்பட்டு வேலைசெய்த நேசனைப் போன்றோர் செய்திருக்கமாட்டார்கள் என உடனேயே சிந்தித்தோம். அதே நேரம் தீப்பொறி என அரசியல் ஒன்றை செய்ய முற்பட்டவர்களும் இந்தக் கேவலமான வேலையை செய்யச் சாத்தியமில்லை என்றே எண்ணினோம்." என ஜென்னி கூறியது இப்படி இருக்க அசோக் இல்லை நேசனே என்கின்றார்.

ஜென்னி மேலும் கூறுகின்றார் "சம்பவங்கள் நடந்த காலத்திலும் சரி, அதன் பின்னான காலங்களிலும் சரி, இந்த ரீட்டாவின் விடயத்தை பகிரங்கப்படுத்த மாட்டேன் என மிகக் கவனமாக இருந்தேன்" இப்படி கதை சொல்லி, அன்று குற்றவாளிகளை அறிவித்து அவர்களைத் தேடியவர்கள் யார்?

ஜென்னியே சொல்லுகின்றார் ".. ஒரு பொய்யை அழுத்திச் சொன்னால் அதனை உண்மையாக்கலாம் என்ற ஒரு சிலரின் முகத்திரையை கிழிக்கத்தான் தற்போதாவது இதை வெளிக் கொண்ர்ந்தேன். அன்றிலிருந்து இன்றுவைர இப்படி கேவலமாக செயற்பட்ட குறிப்பிட்டவர்களை அறிந்து அம்பலப்படுத்தி அந்த சமூகத்திலேய வைத்து அவர்களுக்கு தண்டனை பொது மக்களால் அதுவும் பெண்களால் செயற்படுத்த வேண்டும் என்பதில் இன்றும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை." என்கின்றார். "ஒரு பொய்யை அழுத்திச் சொன்னால் அதனை உண்மையாக்கலாம்.." இது தான் கோயம்பல்ஸ் பாசிச அரசியல். இதைத்தான் ஜென்னி அன்று செய்தார், அசோக் அதைத் தொடருகின்றார்.

எப்படி இது குற்றச்சாட்டாக புனையப்பட்டது என்பதை ஜென்னி "அடுத்தடுத்த நாட்களில் ரீட்டாவிடம் இன்னும் சில விடயங்கைள நன்றாக யோசித்து ஞாபகத்திற்கு கொண்டு வந்து ஏதும் ஆதாரம் கிடைக்கின்றதா என பல வழிகளில் யோசிக்க சொன்னோம். அந்தப் பதிவுநாடாவையும் போட்டு பார்த்து உன்னிப்பாக கவனிக்கச் சொன்னோம். அதில் பாண்டி ஒருவன் குரலைத்தான் தனக்கு அடையாளம் காணக்கூடியதாக சொன்னார்;. மற்றும்படி இதில் வேறு யாரையும் அடையாளப்படுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை நானும் பாண்டியுடன் சில மாதங்கள் பழகியுள்ளேன். எனக்கும் இது நம்ப முடியாதிருந்தது. ஆயினும் இது திட்டமிட்டு நடைபெற்ற சம்பவங்களாதலால் பல விடயத்தை ஆராய வேண்டியுள்ளது." என்கின்றார் ஜென்னி .ஆக இப்படித்தான் புனையப்பட்டது. குரலைக் கொண்டு, அதுவும் மோசமான ஒலிப்பதிவைக் கொண்ட பதிவில் இருந்து அடையாளம் காணும் அலுகோசுத்தனத்தையே இது காட்டுகின்றது.

ஜென்னி மேலும் "இதில் பாண்டியின் குரலை கண்ணைக்கட்டிய மிகமோசமான சித்திரவதையில் இருந்த நிலையில்தான் அந்தப் பெண் கேட்டு இருந்தார்;. ஆனால் அதுவே விசரணையென்று வரும்போது பல கேள்விகள் உறுதிப்படுத்தல்கள் இருந்திருக்கும். எனவே இதுவரை குற்றவாளிகளை இன்னார் தான் என்று உறுதியாகக் கூறமுடியவில்;லை. அடையாளப்படுத்தவில்லை." இப்படி அலுகோசுகளின் மனச்சாட்சிக்கும், கோயபல்ஸ்களின் பிரச்சாரங்களுக்கும் இடையில் தனது வாக்குமூலத்தில் ஜென்னியை தடுமாறவைக்கின்றது.

இதை அடுத்து இது போன்று பலவற்றை புளட்டில் தலைமையேற்று அரங்கேற்றிய உமாமகேஸ்வரனிடம் இது குறித்து ஜென்னி சந்தித்த போது "இதுவைரயில் ரீட்டாவின் விடயம் சம்பந்தமாக எமக்கு வந்த கடிதங்கள், எல்லாவற்றுடனும், இது சம்பந்தமான எமது அறிக்கையுடனும் இந்தியா சென்றேன். அங்கு செயலதிபரிடம் அத்தாட்சிகளுடன் விபரங்களைக் கூறினேன். இதுவரை எமக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் கிடைக்கவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இது எமது மகளிர் பிரச்சைன மட்டுமல்ல ஒட்டுமொத்த கழகத்தின் கௌரவப் பிரச்சனை என்பதால் நிதானமாக யோசித்து கடைப்பிடிக்க வேண்டுமென்று முடிவாகியது. இக்கொடிய செயலைச் செய்தவர்கள் பிடிபட்டு குற்றம் நிருபிக்கப்பட்டால், பகிரங்கமாக விசாரித்து, பல்கலைக்கழக வளாகத்திலேயே வைத்து, பொதுசனங்கள் மத்தியிலேயே தண்டனைக்கு விடப்படும் என நாம் தளத்தில் முடிவெடுத்ததை செயலதிபருக்கு குறிப்பிட்டேன். செயலதிபரும் இதற்கு ஒத்துக்கொண்டார்;" என கூறியதாக எழுதுகிறார்.

தளத்தில் முடிவெடுத்தவர்கள் யார். அதில் அசோக்கும் அடங்கும். அசோக் நேசனையும், பாண்டியையும் குற்றம் சாட்டுகின்றார். அன்று இவர்கள் பிடிபட்டு இருந்தால் யாழ் பல்கலைகழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார்கள். இதைத்தான் ஜென்னி தளத்தில் தாங்கள் எடுத்த முடிவு என்கின்றார்;

அசோக் கூறியது போல் "..இதன் பின்னர், இராணுவப் பொறுப்பாளரான மென்டிஸ் இந்த கொடிய செயலுக்கு காரணமான பாண்டியை கைது செய்யவேண்டுமென்பதில் தீவிரமானார். பாண்டியோடு, நேசனும், ஜீவனும், வெளியேறிருந்தமையால் இவர்களும் தேடப்படலானார்கள்." இது சமூக வலைதளத்தில் அசோக் முதல் எழுதியது. இதன்பின் எழுதியதில் "கடத்தி, பாலியல் வல்லுறவு செய்த கொடியவர்களில் ஒருவர் நேசன்.." என்கின்றார்.

அன்று தளத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்தவர்களை போட்டுத்தள்ள அவதூறுகளை புனைந்தவர்கள், இன்று அதையே அவதூறு வடிவங்கள் மூலம் தொடருகின்றனர்.

குறிப்பு

1.கடந்த அரசியல் சார்ந்த இந்த விடையம், தனிப்பட்ட காழ்ப்புகள் - அவதூறுகள் சார்ந்ததல்ல. அப்படி கூறுவதன் மூலம், கடக்தகால அரசியலைப் பார்க்க மறுப்பதே.

2.நடந்ததை விரிவாக விளங்கவும்; ஆராயக் கூடியளவுக்கும் ஜென்னியின் வாக்குமூலங்கள் பல விடையங்களை கொண்டதாக இருக்கின்றது. பின்னால் விரிவாக வேறு இடத்தில் ஆராய்வோம்.