10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்

நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.

 

 


இதனை தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடலில் சமூகமளித்திருந்த மூவினத்தை சேர்ந்தவர்களும் மனம் விட்டு உரையாடியதுடன் இப்படியான தொடாச்சியான நிகழ்வுகள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் இன்று புலம்பெயர் நாட்டில் இலங்கையின் ஒவ்வொரு இன மக்களும் தனித்தனியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அனைவரும் சேர்ந்து இயங்கக் கூடியவாறு எந்த அமைப்பும் இருந்ததில்லை என சுட்டிக் காட்டியதுடன், சம உரிமை இயக்கத்தின் செயற்பாடுகளில் தாங்களும் சேர்ந்து பயணிக்க தயார் எனவும் தெரிவித்தனர். இனவாதம் மதவாதம் மூலம் மக்களை  பிரித்தாளும் ஆட்சியாளர்களிற்கு எதிரான இனங்களின் ஒன்று பட்ட போராட்டமே சகல இனங்களின் பிரச்சனைகள அனைத்துக்கும்  நிதந்தர தீர்வினை பெற்றுத்தரும் என்பதனை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளமை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்