கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.

 

 

ரோலர் பயன்பாடு இலங்கையில் 80ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை 50க்கும் குறைவானதே. வடபகுதியின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைப்படுத்தலேயாகும். இவ்வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், யப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 அங்குல கண் விட்டத்திலிருந்து 8 அங்குல கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீற்றர் அகலமும் 1 இலிருந்து 5 கிலோமீற்றர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப் படகுகளில் தொழில் செய்தோர் 3 அங்குல கண்விட்டத்திலிருந்து 5 அங்குல கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள்.

 

ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில் வலைக்கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல்சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.

 

இவ்வாறு இலங்கை மீன்பிடி வரலாற்றில் உற்பத்திச் சாதனை நிகழ்த்திய வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும், தெற்காசியாவிலேயே மிகவும் திறமையாக கட்டமைக்கப்பட்ட வடபகுதியின் மீன் பிடித் தொழிலுக்கான உட்கட்டமைப்பும், உபகரணங்களும், 83ஆம் வருடத்தின பின்வந்த யுத்தக் காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது.

 

கடத்தலைத் தடுப்பதற்காகவும், தமிழ் தேசியப்போராட்ட இயக்கங்களின் இந்தியப் பயணங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், 1977 ஆண்டிலிருந்தே மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நடைமுறையிலிருந்த கடல்வலயச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டு வடபகுதி மீனவர்கள் தொழிற்செய்யும் பிரதேசம் மேலும் குறுக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டுவரை இலங்கையின் கடல்சார் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இலங்கையின் கடற்சார் பிரத்தியேக பொருளாதார வலயத்தின், வடகடலின் அகலம் அதன் வடநிலப் பரப்பிலிருந்து 14 இற்கும் 23 நோர்டிக்கள் மைல்/கடல் மைல் இற்கும் இடைப்பட்டது. 1983இல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பிரதேசம் வட கரையிலிருந்து 10 நோர்டி கல்/கடல் மைல்களாகக் குறைக்கபட்டது. இதை இலகுவாக விளக்குவதானால் 1983 வரை வடபகுதி மீனவர்கள் கச்சதீவுவரை சென்று மீன்பிடிக்க பின்வந்த யுத்தக் காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது.

 

கடத்தலைத் தடுப்பதற்காகவும், தமிழ் தேசியப்போராட்ட இயக்கங்களின் இந்தியப் பயணங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், 1977 ஆண்டிலிருந்தே மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நடைமுறையிலிருந்த கடல்வலயச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டு வடபகுதி மீனவர்கள் தொழிற்செய்யும் பிரதேசம் மேலும் குறுக்கப்பட்டது.

 

1977ஆம் ஆண்டுவரை இலங்கையின் கடல்சார் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இலங்கையின் கடற்சார் பிரத்தியேக பொருளாதார வலயத்தின், வடகடலின் அகலம் அதன் வடநிலப் பரப்பிலிருந்து 14 இற்கும் 23 நோர்டிக்கள் மைல்/கடல் மைல் இற்கும் இடைப்பட்டது. 1983இல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பிரதேசம் வட கரையிலிருந்து 10 நோர்டி கல்/கடல் மைல்களாகக் குறைக்கபட்டது. இதை இலகுவாக விளக்குவதானால் 1983 வரை வடபகுதி மீனவர்கள் அனுமதியிருந்தது. அது 1983 இறுதியில் இருந்து மட்டுப்படுத்தப்பட்டு கச்சைதீவிலிருந்து 5 கடல் மைல்களுக்கு பின்னாலுள்ள பிரதேசத்திலேயே தொழில்செய்ய அனுமதிக்கப்பட்டது. அப்பகுதி கிட்டத்தட்ட வடகரையிலிருந்து 10 கடல் மைல்களுக்கு உட்பட்ட பிரதேசமாகும். மேற் கூறியபடி 1983இல் உள்ளக இயந்திரதைக் கொண்ட (one day boats 3½ Tonners) 680 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வடபகுதியில் தொழிலில் ஈடுபட்டன.

 

அக்காலத்தில் வடகடலில் பிடிக்கப்பட்ட மீன்களில் 1/3 பகுதி ஆழ்கடல் மீன்பிடியின் உற்பத்தியாகும். இந்தக் கடல்வலய கட்டுப்பாடானது ஆழ்கடல் படகுகளை உபயோகித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்களைப் பாதித்து. படிப்படியாக ஆழ்கடல் மீன்பிடி அருகியது. ஆழ்கடல் மீன் பிடிக்கான படகுகளை வைத்திருந்தோர் சிலர் நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற இலங்கையின் மேற்று கரைக்கு தமது படகுகளுடன் புலம்பெயர்ந்தனர். சிலர் படகுகளைத் தென்பகுதி, மற்றும் கிழக்கு மீனவர்களுக்கு விற்று விட்டு இந்தியாவுக்குப் போயினர்.

 

1985 - 1986 காலத்திலும், 'ஒப்பரேசன் லிபரேசன்" நடந்த காலத்திலும், ஆழ்கடல் மீன்பிடி முற்றாக அழிந்தது. வடமாரட்சிப் பகுதியைச் சேர்ந்த பல நூறு ஆழ்கடல் படகுகள் இலங்கை இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றில் பல தீக்கிரையாக்கப்பட்டது. கடற்படையின் 'வீரய - சூரய" பீரங்கித் தாக்குதற் படகுகளின் செல் தாக்குதலால் படகுகள் சல்லடையாக்கப்பட்டது. மீன்பிடிக் கிராமங்கள் அழிக்கப்பட்டன. வடபகுதியில் முதன் முதலாக யுத்தத்தால் உள்நாட்டு அகதிகளாக பாரிய புலம்பெயர்வை முதலில் மேற்கொண்டவர்கள் மீனவமக்களே. இக் காலகட்டத்தில் அகதிகளாக புலம்பெயர்ந்தாலும் மட்டுப்படுத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட இரு கடல்மைல் வலயத்துக்குள் வடபகுதி மீனவர்கள் கண்ணாடி இழைப்படகுகளிலும், வள்ளங்களிலும் தொழிற் செய்தனர்.

 

இன்று கிடைக்கும் தரவுகளின்படி இத் தொழிலில் 2600 கண்ணாடி இழைப் படகுகளும் 3865 மரவள்ளங்களும் உபயோகப்படுத்தப்பட்டது. 1990இற்கு பின்வந்த காலத்தில் கரையோரத் தொழிலும் பாரிய அழிவைச் சந்தித்தது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும் மீன்பிடி முறைமைகளும் உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மீன்பிடித் துறைமுகங்கள், கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டது.

 

மீன் சந்தைகள் விற்பனை நிலையங்கள் ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் மீன் பதனிடும் தொழிற்சாலைகள் வலை உற்பத்தி மற்றும் இயந்திரம் பழுது பார்க்கும் நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. இவை சந்திரிகாவின் யாழ் நோக்கிய படையெடுப்பின் முன்பே புலிகள் யாழ்பாணத்தைக் கட்டியாண்டபோதே அழிவுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் முற்று முழுதான அழிவு சந்திரிக்காவினால் யாழ் மாவட்டம் கைப்பற்றப்பட்ட பின்னரே நிகழ்ந்தது. அதேபோன்று மன்னார் தீவுக்குள் படையினரின் பாரிய போர் நடவடிக்கைகளாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்ததனாலும் மீன்பிடித் தொழில் முற்றாக அழிந்தது.

 

மறுபடியும் 2001ஆம் ஆண்டுக்கு பின்வந்த யுத்த நிறுத்தக் காலத்தில் சிறிதளவில் வடக்கின் மீன்பிடித்தொழில் புனரமைக்கப்பட்டது. சிறிது சிறிதாக வளர்ச்சிகண்ட வடகடல் மீன்பிடி 26.12.2004இல் மறுபடியும் சுனாமியால் பாரிய அழிவைக் கண்டது. மீண்டும் சர்வதேச உதவியுடன் துளிர்க்க முயன்ற மீன்பிடித் தொழில், 2009 வைகாசிக்கு முற்பட்ட யுத்த காலத்தில் மறுபடியும் அழிவைச் சந்தித்தது.

 

இன்று வடகடல் மீன்பிடி 2009 யுத்தத்தின் பின் மறுபடியும் தன்னைக் கட்டமைக்க முயல்கின்றது. சுய முதலீடுகள், இலங்கை அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படும் சில சர்வதேச உதவிகளுடன் வடபகுதியின் மீன்பிடித் தொழில் மறு சீரமைப்புப் பெற்று வருகிறது. கீழ்வரும் தரவுகள் 2012 மார்கழி வரையான, வடபகுதி மீன்பிடியின் நிலையை வெளிப்படுத்துகின்றது. மேற்படி தரவுகளின்படி வடக்கின் மீன்பிடி மறுபடியும் வளர்ச்சியடையும் நிலை காணப்பட்டாலும் யுத்தத் தழும்புகள், பொருளாதார அழிவுகள், புலம்பெயர்வு , தொடரும் இனவாத அரசியற் சூழ்நிலை, படையினரின் கரையோர நில அபகரிப்பு, துறைமுகங்கள் இன்றும் உயர்பாதுகாப்பு வலயமாக இருப்பது போன்ற காரணிகள் வடகடல் மீன் பிடியின் வளர்ச்சியை தடுக்கும் காரணிகளாக உள்ளன. இவ்வகை உள்நாட்டு காரணிகளை விட மிகப் பயங்கரமான இயற்கை அழிவை ஏற்படுத்துவது - வடகடல் மீன்பிடியைப் பாதிப்பது இந்திய அத்துமீறல் மீன் பிடியாகும்.