ஒடுக்கப்பட்ட இனத்தின் மேலான அனைத்துவிதமான பாசிச கெடுபிடிகளைக் கடந்து "மாணவர் குரல்" என்ற புதிய பத்திரிகை ஒன்று பல்கழகங்களில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இலங்கை பல்கழகங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள் சமூகம் புதிய ஒரு சமூக தேடுதலுடன், தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது "தமிழ் பேசும் மாணவர்களின் தேசிய குரலாய்" "மாணவர் குரல்"பத்திரிகை என்று தன்னை பிரகடணம் செய்து இருக்கின்றது.

இலங்கை தமிழ் மாணவர் வரலாற்றில் புதிய முயற்ச்சியாகவே இதைக் காணமுடியும். கருத்துகள், உள்ளடக்கங்கள் எமது பார்வையில் இருந்து மாறுபாடுகள் கொண்டதாக இருந்தாலும், "மாணவர் குரல்" பத்திரிகையின் வருகை காலத்தின் தேவையைக் குறித்து நிற்கின்றது. புதியதொரு நம்பிகை சமூகத்துக்கு ஊட்டி நிற்கின்றது.

இப் பத்தரிகையில் விரிவுரையாளர்களின் பாலியல் தொல்லைகள், பல்கலைக்கழகங்களில் நியமனங்களில் அரசியல் தலையீடுகள், அரசபடைகளின் கெடுபிடிக்குள் தொடரும் சப்ரகமுவ பல்கலைக்கழ போராட்டம், ஒடுங்கி ஒதுங்கி வாழ்வது மாணவர் இயல்பா!, இலவசக் கல்வியும் மாணவர் சுதந்திரம் ... என்று பல விரிவான கட்ரைகளை தாங்கி பத்திரிகை வெளியாகி இருக்கின்றது.

1980களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் போரட்டங்கள் பற்றியும், அன்று வெளியான போஸ்ரகளையும் கூட இந்த இதழ் வெளியிட்டு இருக்கின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழமையுடன் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், பூரணமான ஆதாரவையும் ஒத்துழைப்பையும் உணர்வு பூர்வமாக பகிர்த்து கொள்ளத் தயாராக இருக்கின்றது. இன்று அனைவரும் இதற்கு ஆதாரவு அளிப்பதும், உதவதும் வரலாற்றுக் கடமையாகும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

29.06.2013