12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மின்கட்டண ஏமாற்றமும் நிவாரத்திற்கான போராட்டமும்

இந்தநாட்டு ஜனாதிபதிக்கும், ஒட்டு மொத்த அமைச்சர்களுக்கும் ஏற்ப இன்று இந்நாட்டில் மக்கள் நல அரசாங்மொன்றுதான் இருக்கின்றது. தேசாபிமான அரசாங்கமொன்றதான் இருக்கின்றது.

மே 15ம் திகதி " மின் கட்டணத்தை குறை" என்ற கோஷத்தோடு ஒரு சாரார் கொழும்பு வீதிகள் ஊடாக ஊர்வலம் போகும் போது, கொழும்பில் இன்னொரு பாதையின் வழியாக அரசாங்கம் எழுதிக் கொடுத்த கோஷங்களை கூறிக்கொண்டும் ஆண்களும், பெண்களும் " மக்கள் நல அரசாங்கத்திற்கு எதிரான சதியை தோற்கடிப்போம்" என்று கோஷமிட்டுக் கொண்டும் சென்றார்கள்.

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது?

நீங்கள், நாங்கள் உள்ளிட்ட எல்லோரும் இச்சந்தர்ப்பத்தில் மிக விரிவான கண்ணோட்டத்தோடு இதனை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. வானை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமல், நெருக்கடியில் கழுத்துவரை மூழ்கியிருக்கும் மக்களை மின் கட்டண அதிகரிப்பின் வாயிலாக, மேலும் மூக்குவரை மூழ்கடித்திருப்பதும் இந்த மக்கள் நல அரசாங்கம் தான். மூக்கிற்கு மேலாக அடிக்கும் அலைகளிலிருந்து ஒரு சிரட்டை நீரை எடுத்து விட்டு " ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப மின் கட்டணம் குறைக்கப்படுகிறது" என்ற செய்தியை கூறுவதும் மக்கள் நல அரசாங்கம் தான்.

அரசாங்கத்தின் மின்வலு அமைச்சரின் கூற்றுக்கு ஏற்ப, இந்நாட்டில் ஒரு மின் கூறை உற்பத்தி செய்வதற்கு செல்லும் செலவை விட குறைந்த விலையிலேயே எங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இது உண்மையா?

இல்லை. இது உண்மை என்று ஆட்சி செய்வோர் கூறியது அப்பட்டமான பொய். நாங்கள் காரணத்தோடு தான் அப்படிச் சொல்கிறோம். இலங்கையில் மட்டுமல்ல உலக மட்டத்தில் மின் சக்தி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இலங்கை போன்ற நாடுகளில் நடக்கும் பாரிய அளவிளான கையூட்டுக்கள் மற்றும் ஊழல் முறைகேடுகள் காரணமாக நெருக்கடி மேலும் தீவிரமாவதை தடுக்க முடியாது போகும். மின்வலு உற்பத்தி மற்றும் நுகர்வு விடயத்தில் சமமின்மையை தடுப்பதற்கு இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட இவ்வாறான பொருளாதாரத்திற்கு ஒருக்காலும் முடியாது.

ஆகவேதான, நுரைச்சோலை, கெரவலபிட்டிய போன்ற மின் உலைகள் அமைக்கப்பட்ட நாளிலிருந்து செயலிழந்து காணப்படுகிறது. கோடிக்கணக்கில் கையூட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய மோசடிகள் காரணமாக ஒரு மின் கூறுக்கு ஏற்படும் மொத்தச் செலவையும் பொது மக்களின் தலையில் சுமத்துவதே ஆட்சி செய்பவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

இவற்றிற்கு ஒடுக்கப்பட்ட மக்களே பெரும்பாலும் பலியாகிறார்கள். இலங்கையில் மாதாந்த மின் பாவனை 90 கூறுகளுக்கும் குறைவாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை மொத்த மின் பாவனையாளர்களில் 74 வீதமாகும். வேலை கஷ்டத்தோடு நாளாந்த வாழ்க்கையில் சிறைப்பட்டுக் கிடக்கும் நகர்புற மற்றும் பாதி நகர்புற வாழ்க்கை நடத்தும் பெரும்பாலான குடும்பங்களின் மின் பாவனை 90 கூறுகளை விடவும் அதிகமாகும். புதிய மின் கட்டண முறையின்படி குறிப்பிட்ட மின் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், தவணை முறையில் பெற்றுக் கொண்ட மின் உபகரணங்களை பாவிக்காமல் விடுவதோடு, கடன் தவணையை கட்டிக் கட்டி காலம் தள்ளுவதுதான். மேலும் சிலர் தமது வேலை நேரத்தை அதிகரித்துக் கொண்டு மேலதிக நேரம் வேலை செய்து வார இறுதியில் மேலதிக வருமானமொன்றை தேடிக் கொள்வதற்காக வேலையொன்றை தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதாவது ஓய்வை இல்லாமலாக்கிக் கொண்ட இயந்திரமாக தமது வாழ்க்கை பலியிட வேண்டும்.

என்றாலும் இவைகளின் மூலமாக நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

முதலாவதாக செய்ய வேண்டியது என்னவென்றால், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் நவ தாராளமய பேயை இணங்கண்டு கொள்ள வேண்டும்.

ஏனென்றால், உங்களையும் எங்களையும் வறுத்தும் இந்த அனைத்து துன்பங்களின் பின்னணியில் ஆளும் வர்க்கம் நடைப்முறைபடுத்தி வரும் நவ தாராளமய முதலாளியத்தின் மிலேச்சத்தனமே இருக்கிறது. பல தசாப்தங்களாக அந்த மிலேச்சத்தனம் மூடி மறைக்கப்பட்டு எங்களது வாழ்க்கை நுகர்வியத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எதிராக கூட்டுப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நாங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளோம்.

அரசாங்கத்தின் அநீதியான நெருக்குதல்களுக்கு எதிராக அணிதிரளும் மக்கள் சக்திகளின் செயற்பாடுகளை தந்திரமான முறையில், அரசாங்க கவிழ்ப்பு என்ற பூச்சாண்டியை காட்டி எங்களை குழப்பத்தில் தள்ளுவதற்கு  தயாராகி வரும் சக்திகள் குறித்து நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் இதுதான். பொய்க் கால்களுக்கு மருந்து கட்டும் அவ்வாறான மானங்கெட்ட அரசியல் ஒப்பந்தகளுக்கு பலியாகாமல், இதன் பின்னணியில் இருக்கும் விஷமச் சக்திகளை நோக்கியே எங்களது விரல்கள் நீள வேண்டும். இல்லையாயின் அதே கல்லிலேயே மீண்டும் மீண்டும் தலையை அடித்துக் கொள்ள நேரிடும்.

எனவே, இச்சந்தர்ப்பத்தில் மொத்த ஒடுக்கப்பட்ட மக்களும் தம்மை வருத்தும் நெருக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும். அதே போன்று  அந்தப் போராட்டத்தை அரசை மட்டும் மாற்றும் போராட்டமாக முன்னெடுக்காது,  விஷத்தைக கக்கும் முதலாளித்துவத்தை கேள்வி கேட்கும் சத்தியத்தின் போராட்டமாக இந்த போராட்டம் இருக்க வேண்டும்.

உண்மையான வெற்றி அங்குதான் இருக்கிறது. அங்கு மட்டுமே.

நன்றி - லங்கா விவ்ஸ்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்