விஞ்ஞான ஆராட்சியில்
ஆசான்கள் பெரு விண்ணர்கள்
கண்முன்னே நித்தமும் செத்துமடியும் உயிர்கள்
பசியால்
படுத்துறங்க இடமற்று விறைத்துக் குளிரால்
கொட்டும் சுடுகலக் குண்டால்
சிறைப்பட்டு ஆட்சியாளர் வதையால்
கத்தும் குழந்தைக்கு பாலூட்ட நாதியற்று


இரத்தம் உறிஞ்சும் 
பன்னாட்டுப் நிறுவனக்கொள்ளைகளால்
வெறும் எலும்பாய் 
முறடு தண்ணிக்காய் ஏங்குபவரை
சந்திரனில் கால்பதிக்க விட்டுக் கண்டீரோ
தங்கம் 
பீறிப்பாயும் எண்ணை வளம்
கூலியற்று உழகை;க ஏதும் உயிர்கள்
கனிமங்கள்
ஏது கண்டீர்....

ஏர்பிடித்து உழுபவன்போல்
எண்ணை வயலில் 
படுகுளி சுரங்கத்தில்
பண்ணையில்
ஆலையில் 
நீல் ஆம்ஸ்ரோங்குகள் 

வாழும் நிலத்தில்
கால்பதித்தபடியே
விடியலிற்கான நிலவைத்தேடுகிறோம்
அடைகிறபோது
சிவந்து கிடக்கும் வானத்தைப் பார்த்து 
நீல் ஆம்ஸ்ரோங்
உனைநினைத்தும் செங்கொடியசைப்போம்

-26/08/2012