12052021ஞா
Last updateச, 09 அக் 2021 9am

இந்திய போலி மார்க்சிச திரிபுவாதிகளின் ஐரோப்பிய விஜயங்கள்

அண்மைக்காலமாக ஐரோப்பாவுக்கு வருகைதரும் இந்தியப் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்தவகையில்  அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரைஎனப் பாரிய விளம்hரங்களுடன் இங்கு சுற்றுப் பிரயாணம் செய்வதுடன், மார்க்சியவிரோத கருத்தையம் பரப்பியும் செல்கின்றனர். இதற்குப் பிரதி உபகாரமாக இங்கிருந்து தொலைக்காட்சிப் பொட்டி, வீடியோப் பெட்டியென எலற்றோனிக் முதல் எல்லாவித பொருட்களையும், பணமுடிச்சுக்களையும் கைமாற்றாக எடுத்துச்செல்கின்றனர்.

கடந்த காலங்களில் ஈழப்போராட்டத்தின் சீரழிவு காரணமாக வெளியேறி வந்த சமூக அக்கறைக்குரிய பிரிவு ஐரொப்பா எங்கிலும் தன்னால் இயன்றவரை செய்ய முயன்றனர். இந்தவகையில் உருவான பிரிவுகள் ஆரம்பத்தில் வெளியிட்ட கருத்துக்கள் சரியான மார்க்சிய வழியில் நின்று பல்வேறு கருத்துக்ளை செயல்களை முன்னெடுத்தனர்