Language Selection

புதிய ஜனநாயகம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோயிலில் ஜவான், திருமஞ்னேம், நி@வத்தியம், ”யம்பாகி, ஓதுவார், யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்கான @வலைவாசூப்பு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது.  அவவேலைவாசூப்பு அறிவிப்பில் திருமஞ்னேம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதிபடைத்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தப் பணியிடங்கள் சாமி சிலைகளைத்திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும்.  பார்ப்பனர்கள் அல்லாத வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால், "புனிதம்' கெட்டுவிடும் என்ற பார்ப்பன சாதித் திமிரையும் இந்துக் கோயில்களில் நிலவிவரும் தீண்டாமையையும் உறுதி செய்வதுதான் இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.

 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.அரங்கநாதன், ""திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையைத் தூண்டுவதாகவும், ஆலயத் தீண்டாமையைக்கடைப்பிடிப்பதாகவும், அரசியல் சாசனச் சட்டத்தின் 14, 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும் இருப்பதால், அந்தப் பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற அரசின் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.  இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், "இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்யவேண்டும் என்ற பழக்கவழக்கத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 13 அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது' என்ற காரணங்களைக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

 

"பல காலமாக சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட வேலையைச் செய்துவருவதால் அதில் தலையிட முடியாது என 13ஆவது பிரிவு கூறுகிறது.  ஆனால், அரசால் சம்பளம்; வழங்கப்படும் ஒரு வேலை அனைத்துச் சாதியினருக்கும் பொதுவானது என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி.  இதற்கு எதிராக இது இருப்பதால், இந்தப் பிரச்சினையில் பழக்கவழக்கம், வழக்கு மற்றும் வழக்காறு செல்லுபடியாகாது.  மேலும், வேலைக்கு ஆட்களை நியமிப்பது மதம் தொடர்பானது அல்ல.  அது மதச்சார்பற்ற அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது' என இந்த ஆலயத் தீண்டாமைக்கு எதிராக எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் ஒதுக்கிதள்ளிவிட்டது.

 

பழக்கவழக்கங்கள், வழக்கு மற்றும் வழக்காறின்படி, பார்ப்பனக் கும்பல் சாமிக்கு மணியாட்டுவதைத் தவிர, வேறு எந்த வேலையிலும் நுழையக்கூடாது.  ஆனால், அவர்கள் தமக்குச் சாதகமானது என்பதால், கடல் கடந்து வேலைக்குப் போவதைக்கூட இன்று மிலேச்சத்தனமாகப் பார்ப்பதில்லை.

 

சிறிய, வரும்படியில்லாத கோயில்களில் பார்ப்பனர் அல்லாத சாதியினர் அர்ச்சனை செய்வதையும் அபிஷேகம் செய்வதையும் பொறுத்துக் கொள்ளும் பார்ப்பனக் கும்பல், தமது கட்டுப்பாட்டில் உள்ள வரும்படி அதிகமுள்ள கோயில்களில் சாமி சிலைகளைப் பார்ப்பனர் அல்லாத சாதியினர் தொட்டால் தீட்டாகிவிடும்; பழக்கவழக்கங்களை மீறுவதாகும் எனக்குதிப்பது பச்சையான சந்தர்ப்பவாதம் தவிரவேறில்லை.  அக்கோயில்களைத் தமது பரம்பரைச் சொத்தாகச் சுருட்டி வைத்துக் கொள்ள @வண்டும் என்ற தீய உள்நோக்கம் தவிர வேறில்லை.  நீதிமன்றம் மட்டுமல்ல, தனது அரசைச் சூத்திர அரசென்று கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசும் பார்ப்பனக் கும்பலின் இந்த அயோக்கியத்தனத்தைத் தோலுரிக்க மறுக்கின்றன. மாறாக, ஆகமம், வழக்காறு போன்ற பார்ப்பன பசுப்பல்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்து, ஆலயத் தீண்டாமையை உயர்த்திப் பிடிக்கின்றன.