09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

எண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்…….

நந்திக் கடலில் பேரம் நடந்தது
எம் மக்கள்
நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்
கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்
இப்ப மீளவும்
ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது
இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்
எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா

 

அடித்துச்சொல்றாங்கள்
இதுதாண்டா உலகமயமாதல்
அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள்
அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம்
மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம்
மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம்

எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம்
தேர்தல் நெருங்கினால்
அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும்
தம் கையைமீறினால் தான்
ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்–ம்
எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம்

மக்கள் போரெழும்  பூமியெல்லாம்
பூந்து நுளைந்தழித்துச் சீரழித்து
அடிவருடிப் பொம்மைகள் அமர்வதுவோ
வீழ்ந்ததுவோ மக்கள் எழுச்சி–இல்லைப்பார்
அடக்கப்பட்டோர் ஆர்த்தெழும் புயலாய்
அடங்காது
மக்கள் புரட்சி வெடித்துத்தான் ஓயும்…….

-கங்கா

21/03/2011


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்