இதை சொல்வதற்கு, கேட்பதற்கு உங்களுக்கு வெட்கமாகவில்லை. இப்படி மோடிக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதே நகைப்புக்குரியது. ஒரு பார்ப்பனிய இந்துத்துவ பாசிட்டுக்கு எதிரான போராட்டம் என்பது, அவர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்படும் வரை நடத்தப்பட வேண்டும்.

 

இந்திய சமூக அமைப்பில் எத்தனை மனிதர்களுக்கு, இவர்கள் கருத்துச் சுதந்திரத்தை, வாழ்வுச் சுதந்திரத்தை மறுக்கின்றனர். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இப்படி எத்தனை எத்தனை கொடுமைகள்.

 

இதைத் தமது உரிமையாக கொண்டு செய்பவனுக்கு, காலாகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்ட மக்கள் எந்தச் சுதந்திரத்தை தான் வழங்க முடியும். இவர்களுக்கு சுதந்திரம் என்பது, அந்த மக்களைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு தான். துக்ளக் கூட அதைத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றது.

 

இவர்கள் தமது பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை, மனித சமூகம் மீது காறி துப்புகின்ற கடைந்தெடுத்த கொலைகார பாசிட்டுகள். பாசிட்டுகளுக்கு சுதந்திரம் என்றால், மனித குலத்தைப் பிளந்து அழிப்பதற்குத் தான். இதையே அனைத்து பாசிச வரலாறும் காட்டுகின்றது.

 

இந்த பாசிட்டுகளுக்கு கருத்துச் சுதந்திரம் பற்றி பேச முன், நீ உன்னைச் சுற்றிப் பார். இந்திய சமூக அமைப்பில் தீண்டதகாதவர்கள் எத்தனை விதமான சாதிய ஒடுக்கமுறைக்கு உள்ளாகின்றனர். இதை உருவாக்கி வைத்திருப்பவன் யார்.? நீ அல்லவா! உன் கூட்டமல்லவா!

 

இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனிய சாதிக் கட்சியின் பிரதிநிதி அல்லவா மோடி. தீண்டத்தகாதவன் சொந்த ஊர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக் கூட மறுக்கின்ற போது, அது பற்றி பேச மறுக்கின்ற பாசிட்டுகளுக்கு என்ன தான் கருத்துச் சுதந்திரம். அந்த மக்களோ, தமது கருத்துச் சுதந்திரத்தை நினைத்தே பார்க்க முடியாது. அவர்களை அடித்து உதைக்கவே, இந்து பார்ப்பனிய பாசிட்டுகளான மோடிகள் அரசியல் செய்கின்றனர்.

 

மோடி போன்ற கொலைகார பாசிட்டுகள், ஆயுதமேந்திய அரசின் குண்டர்களின் பாதுகாப்பில், கருத்தைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் தீண்டத்தகாதவன், இவர்கள் பாதுகாத்து வைத்துள்ள சாதிய அமைப்பில் அதை நினைத்தே பார்க்க முடியாது. இன்று (குஜராத்தில்) முஸ்லீம் மக்களுக்கு அதை மறுப்பது அரங்கேறுகின்றது. இந்திய பார்ப்பனிய சாதிச் சமூக சட்ட அமைப்பில், மக்கள் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை யார் மறுக்கின்றானோ, அவனுக்கு எதிராகப் போராடித்தான், இதைக் கோர வேண்டியுள்ளது. இது தான் உண்மை.

 

யார் இப்படி மனித குலத்துக்கு எதிராக இயங்குகின்றானோ, அவனுக்கு சுதந்திரத்தை மறுத்தேயாக வேண்டும். மதத்தின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, சாதியின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, மற்றவன் உழைப்பைச் சுரண்டித் தின்பவனுக்கு சுதந்திரம் என்பது, இதைச் செய்வதற்குத்தான். இதை மறுப்பது என்பது, மற்றவர் உரிமையை, சுதந்திரத்தை பாதுகாப்பது தான். இதை செய்வதற்கு உரிமை என்பது, மனித குலத்துக்கு எதிரானது.

 

ஒரு மனிதன் மனிதனாக, ஒரு சமூக உயிரியாக வாழமுடியாத வகையில், பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும், ஒரு கொலைகாரனுக்கு, வக்காலத்து வாங்குவதை மனிதனாக உள்ள எவராலும் சகிக்க முடியாது. அறிவு நேர்மை உள்ள ஒவ்வொருவனும் இதற்காக வெட்கப்பட வேண்டும். இதைச் செய்யமறுப்பவன், அந்த பாசிச கொலைகார பார்ப்பனிய சாதிய வக்கிரங்களுக்கு துணைபோபவன் தான்.