10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

அரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்………..

கண்டம்விட்டுக்  கண்டம்பாயும் ஏவுகணை

விண்ணிருந்து வேவுபார்க்கும் தொழில்நுட்பம்

பொறிபறக்கும் புலனாய்வு நிறுவனங்கள்

மூச்சடைத்து சொக்கிப்போய் ஏகாதிபத்தியங்கள்


அடக்குமுறைக்குள்ளாகும் மக்களே

எழுந்து வாருங்கள் எனச்சொல்கிறார்கள் அரபுமக்கள்

எம் பலத்தின்முன்னே எதிரி ஓட்டம் பிடிக்கிறான்

மக்கள் சக்தியை எள்ளி நகையாடியோர்

தலையை கிள்ளியெறிவோம் எனக் கிளர்தெழுந்திருக்கிறது

மக்கள்திரளென துனிசியமக்கள்

வெல்லும்பலம்

வீரம்செறிந்த எழுச்சி

பற்றிப்படர்கிறது எகிப்தியதேசத்தில்…


ஆம் இது எங்கள் நேரமல்லவா

அதிகார திமிர் பிடித்தோர்

அமைதி வேடமிடுவர் ஆதரவுக் குரல்கொடுப்பர்

ஜயகோ

மக்கள் நலன் பொங்கி நேசக்கரமாய் நீள்கிறது

மதவெறிக்குள் குறுக்கிய அரபுமக்கள்

எப்படிக் கிளர்ந்தனர் என்று அஞ்சி நடுங்கியபடியே

மக்கள் எழுச்சிக்கு மண்டியிடுகிறதாம் அமெரிக்கா!


ஆம் இது மக்கள் எழுச்சி!

ஆம் இது மக்கள் யுத்தம்!

ஆம் இதுதான் புரட்சியின் படை அணி!

எதிரியின் கோட்டையை சூழும்மக்கள் படை

பீரங்கிகளின் முன்னால் நிமிர்ந்து நிற்கிறார்கள்

ஒடுக்குமுறையாளர்கள் நொருங்கும் காலம்

வெல்க மக்கள் போர்க்குரல்

செல்லும் புதிய ஜனநாயகப்புரட்சியை நோக்கி……….

-கங்கா (04/02/2011)


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்