ஆண்டு 1975, மூன்றாம் பகுதி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டுதானிருந்தது. மூன்றாம் உலகநாடுகளில் தமது தோல்வியைச் சந்தித்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், வேறு புதிய முகாம்களை அமைத்துக் கொள்ளும்  அவசர அவசியமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் 75ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டரசாங்கத்தின் புதிய அரசியல் குடியரசுச் சட்டத்தின் ஆண்டு நிறைவான 1975 மே 22ம் திகதி, கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில் இருந்து இராஜினாமாச் செய்திருந்தார் யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. இராஜினாமாச் செய்த ஜெயவர்த்தனா, ''இடைத் தேர்தலை நடத்தும்படி'' கோரிக்கையும் விடுத்திருந்தார்.....

72இல் இப்புதிய அரசியல் அமைப்புக் கொண்டுவரப்பட்டபோது, தந்தை செல்வா எவ்வாறு நடந்துகொண்டாரோ, அதேபோல ஜே.ஆர் இப்பொழுது நடந்து கொண்டார். இப்போது காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வா வென்றதும், ''தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒர் ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன்'' என்றும்,  தமிழர் ஜக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்." என்று தெரிவித்ததன் பின்னர் ஜே.ஆர் இத்துணிச்சலான சவாலில் இறங்கினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தம் உயிரைக்கொடுத்து எதிர்த்துவந்த மூன்றாம் உலகமக்களின் வீரத்தை அறுவடைசெய்து, உயிருள்ள ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும் (விமர்சனத்துக்கு அப்பால் அதன் தாயகக் கோட்பாட்டுக்கும்) அணிசேரா நான்காம் உலகத்தை உருவாக்கி, தனது சமூகஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டது ரசியா...

இந்த ஆடுகளத்தில் கருத்தரித்து ஆடப்பட்டதுதான் 'தமிழீழ விடுதலைப் போராட்டம்'!.

இந்தப் படுபயங்கரமான ஆடுகளத்துக்கு இருதரப்பினரும் வலதுசாரி மத்தியதர வர்க்கத்தினையும் குட்டி முதலாளித்துவத் தரப்பினரையும் கூட்டி அணிதிரட்டும் முயற்சியின் ஒரு திருப்பு முனையாக இலங்கையில் நிலவிவந்த இனவாதக் கொடும்வாளை கையில் எடுக்கத்துணிந்தனர்...

தெற்கிலே சிறீமாவின் கூட்டரசாங்கத்துக்குள் வெடிப்பும் பிளவும் ஏற்பட்டிருந்தது. நாட்டில் தொழிலாளி வர்க்கமோ தன்னிச்சையாகப் பொங்கி வெடிக்கத்தயாராக இருந்தது. தெற்கிலே ஜே.ஆரின் ராஜினாமாவும், வடக்கிலே கூட்டணியின் புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தது. இந்த ஆர்ப்பாட்டம் அரச பொலீஸ் இயந்திரத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, முள்வேலி அடைத்து ஒடுக்கப்பட்டும் இருந்தது. (இம்முறை சுதந்திரதினம் தேர்தலை ஒட்டி வந்திருந்ததால் இவர்கள் அதில் அதிக எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை.)

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழீழச் சுதந்திரத்தின் ஆணையை தமதாக வெளிப்படுத்திய கூட்டணியின் முதலாவது இப்போராட்டம் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டது, இவர்களின் தீவிரவாத இளைஞர்களைக் கொதிக்கச் செய்தது. இதற்கு ஒரே மாற்றுவழி நம்மிடமுள்ள ''தமிழ்த்துரோகிகளை'' ஒழிப்பதுதான் என்று இந்த ஆடுகளத்தைத் திறந்தது கூட்டணி!...

தெற்கிலே யூஎன்பிக்கு இருந்ததைவிடவும் வடக்குக் கிழக்கிலே சிறீமாவின் கூட்டணி ( வி.பொன்னம்பலத்தின் முரண்பாட்டுக்கு வெளியே) தமிழர் கூட்டணிக்கு சவாலான நெருக்குதலாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் துரையப்பாவை பல காரணங்களுக்காகப் பழிவாங்குவது தமிழர் கூட்டணிக்குத் தவிர்க்கமுடியாத அவசரமாக அமைந்தது.

1973 மாசிமாதம் 10ஆம் திகதி அமிர்தலிங்கத்தைக் தமிழரசுக்கட்சியின் தலைவராக நியமிக்கும் முன்மொழிவுக் கடிதத்தை சமர்ப்பித்த இராசரத்தினம், சித்திரை 09ஆம் திகதி சென்னைக்கு சென்றடைந்திருந்தார். இந்தியாவில் இருந்த இவர் அமிர்தலிங்கத்தின் மகனான காண்டீபனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றார். 1973ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை இது பச்சையப்பன் கல்லூரியில் பதியப்பட்டது. ( இரசீது இல: 16778 : விண்ணப்பப்படிவ இல: 5680. - நன்றி- 'இராசரத்தினத்தின் நாட்குறிப்பிலிருந்து' )


1973 யூன் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காண்டீபனும், திரு கபாலியின் சிபாரிசுக் கடிதத்துடன் நவரத்தினத்தின் மகன் சிறீ நமச்சிவாயமும், ஜனார்த்தனன் மற்றும் இராசரத்தினத்தால் பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். ( நன்றி: அதே நாட்குறிப்பிலிருந்து)

மேற்படி இக்குறிப்புக்களைத் தருவதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன...

1. துரையப்பாவின் கொலையை அடுத்து, 77 தேர்தலுக்கான கூட்டணியினரின் தேர்தல்பிரச்சார மேடைகளில், அமிர்தலிங்கமும் அவரது பாரியார் மங்கையற்கரசியும்  தமது மகன் காண்டீபன் ''துரையப்பாவின் கொலையை அடுத்து எந்தக்காட்டுக்குள்ளே எங்கே இருக்கிறான் என்று தமக்குத் தெரியாது என்றும், இவன் சாப்பிட்டானா இல்லையா என்பதே தமக்குத் தெரியாது'' என்றும் நீலிக்கண்ணீர் வடித்த காட்சி இன்னும் என் நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது!  அதாவது இவர்களின் அன்றைய நாடகம்: காண்டீபனும் துரையப்பா கொலையில் சம்பந்தப்பட்டது என்பதுதான்!

2. ஐயரின் இரண்டாவது பதிவின்படி இவர் தேடப்பட்ட நபர் என்பதாலுமாகும். இவர் எதற்காகத் தேடப்பட்டார் என்று , ஜயர் தனது 21 பதிவுகள் வரையும் வெளியிட்டிருக்கவில்லை! என்பதோடு அவரின் பதிவின் குறிப்பை கீழே தருகிறேன்...

'' அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது. பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.

அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.'' (ஆதாரம்:  ஜயரின் பதிவு இரண்டு')

மேலும் இப் பதிவில்...

''அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவாளரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.''

(மேற்படி இவற்றை நிதானமாக வாசகர்கள் வாசிக்கவும்)

இனி, துரையப்பாவின் கொலையை அடுத்து அடுத்தநாள் வெளிவந்த செய்தித்தாள் பதிவு...

LTTE MASKED GUNMEN KILL JAFFNA MAYOR

                       - News paper clip (Daily News) on 28th July 1975

          Mr. Alfred Duraiyappah Mayor of Jaffna and President of the SLFP branch in Jaffna was shot dead on 27.07.1975 afternoon at Punnelavy in the Vaddukoddai electorate when he was about to enter a temple.

          Mr. D.K. Rajaratnam MMC a member of the management committee of the temple who accompanied him was also shot at and injured in the arm. He is reported to be out of danger. According to first reports three masked men shot at Mr. Duraiyappah and Mr. Rajaratnam as they got off the Mayor's car. Immediately after the shooting the gunmen drove away in the Mayor's car which the police later found abandoned at Sendankulam. The police have launched massive search for the killers.

          A special police team headed by Mr. Ana Senevirathne D.I.G. Range B is now in Jaffna conducting investigations The team was sent on the orders of the Prime minister Mrs. Sirimavo Bandaranayake. The Jaffna Police cordoned off the entire peninsula minutes after the shooting.

          All vehicles are being searched by the Police in an attempt to apprehend the assassins. The driver of the Mayor's car has given the Police a brief identification of the assassins with regard to their cloths. Police said.

          Mr. Duraiyappah visits the temple every Sunday and Police believe the shooting was planned.The inquest into the death of Mr. Duraiyappah will be held today by the Malakkam Magistrate Mr. J.M.D. Jesurathnam. The Government Analyst and a ballistic expert from Colombo are expected to testify at the inquest.

          Thousands gathered at the Jaffna hospital as the news of Mr. Duraiyappah's death spread. The Minister of Posts and Telecommunications Mr. Chelliah Kumarasuriar visited the hospital later in the evening. Mr. Duraiyappah was 48. He entered politics in 1952 and became Mayor of Jaffna in 1958.

          In 1960 (March) he created major upset in Jaffna politics when he beat the Tamil Congress leader Mr. G.G. Ponnambalam and a Federal Party candidate at the general election to win the Jaffna seat. In July of the same year he was re-elected to the Jaffna seat defeating Mr. Ponnambalam and the Federal Party candidate. He lost at the 1965 and 1970 general elections.He was educated at St. Johns College Jaffna and later passed out as a Proctor from the Ceylon Law College. 

இதைவிட...

இக்கொலையில் ஈடுபட்டவர்கள் யார் யார் என ஜயர் தனது இரண்டாவது பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது பின்வருமாறு..

'' இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே''

மேலும்...

'' ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர்.''

இப்பொழுது எஞ்சியிருந்தவர்கள் பிரபாகரனும், நற்குணராஜா என்ற இருவருமே'' (ஜயாவின் இரண்டாவது பதிவின்படி..)

ஜயாவுடனான முரண்பாடு (03)

ஜயாவிடம் ஒரு கேள்வி:?  இதில் ''நற்குணராஜா'' என்பது யார்??
இந்த 'நற்குணராஜா' ஜயாவின் இதுவரையான (21 பதிவுகளிலும் காணாமல் போனதேன்?? ஜயா பதில் சொல்வாரா???)


பற்குணம், துரையப்பாவின் கொலையில் கார் சாரதியாக பங்கெடுக்கவில்லையா??

ஜயாவின் ஜந்தாவது (05) பதிவு...

'' அதே வேளை பற்குணம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்தியகுழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்தித்து, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை. பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.''

மேலும்...

'' பிரபாகரனைப் பொறுத்தவரை தேனீர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர். பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.-''

இங்கே கவனிக்கப்பட வேண்டியது...

'' இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.-'' என்ற ஜயரின் கூற்றில் இருக்கும் நியாயத்தன்மைதான்!

பற்குணம் எனப்படும் 'சரவணன்' பற்றி 'லங்காராணி' பதிவுகளை இங்கே விட்டுச் செல்கிறது. இப்பதிவு 1978 ஆண்டே அச்சேறியும் உள்ளது.

லங்காராணியில் பயணம் செய்யும் சரவணன் எனப்படும் ''பற்குணம்'' இப்பயணத்தின் பாத்திரத்தைக் கடந்து (இதை வாசகர்கள் வாசித்துப் பார்க்கவும்) இறங்கும்போது உணர்ச்சிவசப்படும் இளைஞனாகப் பதியப்பட்டிருக்கிறது.

இவன் தனது கையை வில்லுக்கத்தியால் அறுத்து, ஒழுகிய இரத்தத்தால் அந்தக்கப்பலில் எழுதிய வாசகமும் லங்காராணியில் பதிவாகியிருந்தது. இப்பாத்திரத்தில் வரும் வெள்ளைவேட்டிக்காரன் அவரை நிச்சயம் 'பண்ணைக்கு' வரும்படி வற்புறுத்துகிறார்.----


குறிப்பு : (லங்காராணியில்  பற்குணம் வெள்ளவத்தையில் ஒரு முதலாளியின் மகன் போல் நடித்து வாழ்வதாகவே தகவல்கள் உண்டு!)


பற்குணம் பற்றிய ஜயரின் பார்வை: '' பற்குணம் இந்தியாவில் வாழ்ந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.''

ஆதாரம் : ஜயாவின் பதிவு 05...

ஈரோசின் ஆதரவாளராகக் இவர்களால் கருதப்பட்ட பற்குணம் இவர்களின் மத்திய குழுவில் வைத்த கோரிக்கை: ''தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.'' (ஆதாரம் ஜயரின் பதிவு 05)

பற்குணம் என்ற போராளியின் அரசியற் படுகொலை!

''பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.

இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.''

பற்குணம் என்ற போராளி கொல்லப்பட்ட விதம்:

''இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது. அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குளம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.

துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.''

குறுக்கீடாக ஓர் ஆதாரம்:

ஒன்று.. 


 
இரண்டு:

 

 

இடையே ஒரு ஜயரின் 'சப்பைக்கட்டு'-----

''இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.''

(தெரிவதால் ஏதாவது மாற்றம் நிகழுமா? அதுதான் நீங்கள் மேலேயே கூறிவிட்டீர்களே!) உங்கள் மனச்சாட்சிக்கு கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது போலத் தெரிகிறது! இதற்குமேல் பற்குணத்தின் மரணம் பற்றி ஜயருக்கு எதுவும் தெரியாது...

'லங்காராணியின்' கருத்துப்படி சரவணனான பற்குணத்தின் காதலி , லங்காராணியில் வரும் ''ராணி''.

ஆனால் ஜயரின் கருத்துப்படி சரவணனான பற்குணம் இக் காதலுக்காகச் சுட்டுக் கொல்லப்படவில்லை!!

அவர் புதிய இயக்கத்தைக் கோரினார்....இது  (ஜயரின் ஆதாரம்...)


தொடரும்.

ரூபன்
070810.