பேராசிரியர் வாரார் புரட்சி செய்ய,
வரிசையில் நில்லுங்கள் புரட்சி செய்ய
மார்க்சிய பிரமுகர் வாரார் புரட்சி செய்ய
இனியொருவிலும் வாரார் புரட்சி செய்ய
மார்க்சியம் பேசும் அறிவுத்தகமை
விமர்சனம் செய்யும் புரட்டுத்தகமை
பேராசிரியர் என்ற பெரும் தகமை
பிரமுகர் என்ற தொப்பித் தகமை
புரட்சி செய்யாத கட்சிக்கு புரட்சி
வோட்டு போட்டு புரட்சி
வோட்டு சீட்டில் கப்பல் கீறிப் புரட்சி
தொப்பியை அளவாகத் தேடிப் புரட்சி
புரட்சிக்கல்ல மார்க்சியம்
அறிவுக்குத்தான் மார்க்சியம்
பிரமுகர்தனத்துக்கு மார்க்சியம்
இருப்புக்கேற்ற மார்க்சியம்
மாற்றத்தைக் கோராத இலக்கியம்
மக்களை அணிதிரட்டாத இலக்கியம்
பாசிசத்தை பகைக்காத இலக்கியம்
முதுகு சொறியும் பச்சோந்தி இலக்கியம்
புலத்தில் அரசியலற்ற மார்க்சிய எதிர்ப்பு கும்மி
மாற்றுத்தளத்தில் புலியெதிர்ப்பு இலக்கியக் கும்மி
மண்ணில் பிரமுகராக வலம் வரும் கும்மி
மக்களிடம் செல்லாத மார்க்சிய கும்மி
நாட்டாமை என்ற இருப்புக்கு போடும் கும்மிப் புரட்சி
பி.இரயாகரன்
03.08.2010