09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...08

ஆண்டு 1975, இரண்டாம் பகுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று முக்கியமான ஆண்டாக இருந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல 'விசித்திரங்கள்' நடக்கத் தொடங்கின.

முதலில் உள்நாட்டில்: சிறீமாவின் கூட்டு முன்னணிக்குள், வெடிப்புக்கள் உருவாகி இருந்தன. பல புதிய கட்சிகள் உருவாகின. (காங்கேசன்துறை வேட்பாளர் வி.பொன்னம்பலத்தின் முரண்பாடும் இவ்வாண்டில் வெளிப்பட்டிருந்தது - பாராளுமன்ற 'இடது அரசியலிலும்'. ...)

மறுபுறத்தே பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து, கம்யூனிசக் கட்சியின் இடது (சீனசார்பில்) இருந்து: 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற ஒன்றும் உருவாகி இருந்தது. இருந்தும் இது தமது 'அரசியல் அறிக்கையை' முன்வைத்து ஒர் போர்க்குணமுள்ள அமைப்பாக அன்று வெளிவந்திருக்கவில்லை.....

அன்று சுதந்திர தினத்துக்குப் பின்னான இரண்டாம் நாள் நடந்த (06 .02 .1975) காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலின் இறுதி அரசியற் கூட்டத்தின் போது......

கூட்டணியின் 'முற்றவெளி'க் கூட்டம் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடந்து முடிந்தது. வி.பொன்னம்பலம் 'ஜந்தம்சக் கோரிக்கையை' முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும், கூட்டணியினரின் தேர்தல் பிரச்சாரம், அதை எதிர்கொள்வதற்குப் பதில், துரையப்பாவின் ''துரோகத்தனத்தையும்'' (தமிழாராய்ச்சி படுகொலை -74, மற்றும் யாழ் 'கம்பஸ்' திறப்பு விழாவின் போது: -நாட்டியப் பேரொளியை- (பெயர் இங்கே தவிர்க்கப்படுகிறது!) கூட்டிக் கொடுத்ததாகவும், அரச இராணுவப் பொலிசாரை ''சிங்களப் பொலீஸ் நாய்கள்'' என்ற அடிப்படையிலும் எதிர்ப் பிரச்சாரங்கள் அமைந்தன.

தமிழாராய்ச்சி நடவடிக்கையின் சன்சோனிக்கமிசன் விசாரணையில் சாட்சியளித்த சீ.ஜ.டி பத்மநாதனின் புலன் விசாரணைச் சாட்சியத்தை அடுத்து, இவர்கள், இவரையும் ''தமிழ்த் துரோகி'' என அவ்விசாரணையிலேயே தெரிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது...

(தமிழ்ப் பொலீசார் ஒருவர் ''தமிழ்த் துரோகியாக'' வெளிப்படுத்தப்பட்டதும் இதுவே முதல் நிகழ்வாகும்!)

வி.பி.ஜந்தம்சக் கோரிக்கையை வெளியிட்டு, வீடுவீடாக வாக்குக் கேட்டபோது.....

சிறீமாவின் குமாரசூரியர்: '' இந்த ஜந்தம்சக் கோரிக்கை கம்யூனிசக் கட்சியின் கோரிக்கையே ஒழிய, இது 'கூட்டுமுன்னணியின்' கோரிக்கை அல்ல'' என இக்கோரிக்கையை -சுதந்திரக் கட்சி - சார்பாக எதிர்த்தும் இருந்தார்.

இதையடுத்து வி.பொன்னம்பலம் தேர்தலில் நிற்பதற்கு மறுத்தார்...

 

இதையடுத்து ''கூட்டுமுன்னணி''- கம்யூனிச கட்சி உட்பட- அவரைத் 'திருப்திப்படுத்தி' தேர்தலில் நிற்கவைத்தது..

தேர்தலில் தந்தை செல்வா வெற்றி பெற்றபோதும், வி.பி 9.000 வாக்குக்களைப் பெற்றிருந்தார்! இது கடந்தகால தேர்தலில் (1970) இவர் இதே தொகுதியில் (இரண்டாவது இடமாகப்) பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!..

இடைத் தேர்தலில் தந்தை செல்வா பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதன் பின்னர் ஆற்றிய உரையில்: "ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன் என்பதே ஆகும். தமிழர் ஜக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்." என்று கூறியிருந்தார்.

எப்பொழுதும் மக்களுடன் பேசாத இந்த மேல் தட்டு வர்க்கத்தினர், ''இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப் படுத்துகின்றேன்." - என்று(காலனித்துவத்தில்) யாருடன் பேசினார்கள்??

சுருக்கமாக அன்று நிலவிய சர்வதேச நிலைமைகள்....

லாவோஸ், கம்போடியா...... முதல் வியட்னாம் வரை கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், தெற்காசியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் வீரம்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு முகங்கெடுக்க முடியாமல் புற முதுகிடும் நேரம் நெருங்கியிருந்தது.....

இதனால் தெற்காசியாவின் மறுமுனையைக் கைப்பற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளின் பதிலாக இவை வெளிப்பட்டனவா?...

வியட்னாம் மக்களின் துணிகரமான வீரம்செறிந்த போராட்டம், அமெரிக்காவின் படுதோல்வியை இவ்வருடத்தின் ஏப்பிரல் மாதத்துக்கு முன்னரே உறுதிப்படுத்திவிட்டது!

'தமிழீழக் கோரிக்கையை' 60 களில் முன்வைத்த 'அடங்காத்தமிழன்' சுந்தரலிங்கத்தின் கோரிக்கையையும், பின் நவரத்தினத்தின் கருத்தையும் புறக்கணித்த தமிழரசுக்கட்சி, 1960 டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற்குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்தை ஒரு பிரேரணையாக வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது!.... (இது 1960ல் சிறிமாவோ பண்டாரநாhக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதன் பின்னராகக் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)

இது முன்வைக்கப்பட்டபோது.. 'தமிழரசுக் கட்சியின்' - கமிட்டியில் -  37 பேர் இதற்கு ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில் நின்றவர் - இன்றைய (75இல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கமே!

இவரின் இறுதிவரையான பிரச்சாரம்:   "பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும் காலம் வந்துவிடவில்லை"  என்பதாகவே இருந்தது...

இன்று புதிதாகக் காலம் எல்வாறு கனிந்தது??

மாசி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்குள், கூட்டணி முதல்  - யூ.என்.பி ஈறாக அமெரிக்காவுக்கு தமது விசுவாசமான உறுதியை வெளிப்படுத்தியும் இருந்தன.

ஏப்பிரல் மாதத்தின் முதல் இரு வாரத்தில் தனது தோல்வியை உறுதி செய்துகொண்ட அமெரிக்கா, தெற்காசியாவின் -இலங்கையில்- தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கியது...

1975 ஆம் ஆண்டு மே' மாதம் 14 -16 திகதிகளில் இலண்டனில் நடந்த 'றுழசடன ஊரி ஊசiஉமநவ -75' போட்டியில் முதலாகப் பங்குபற்றிய இலங்கை துடுப்பாட்டாக்குழுவின் விளையாட்டின் போது, 'ஈழ விடுதலை முன்னணி'ரினர் -இலண்டன்- மைதானத்தில் திடீரென படுத்திருந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து ....

1975 ஏப்பிரல்' 05 ஆம் திகதி, தமிழ்நாடு (இந்தியாவில்), திருவான்மையூரில் இருந்த 'ஸ்ரேட் பாங்கில்' கொள்ளைச்சம்பவம் இடைபெற்றது!

இன்று வங்கி மூடும் நேரத்தில் உட்புகுந்த நான்கு முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்கள், மனேஜர் உட்பட அங்கிருந்த ஜந்து ஊழியர்களையும் அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு, மொத்தமாக 36,000 ரூபாய்களைக் கொள்ளையடித்திருந்தனர்.

(இக்கொள்ளைச் சம்பவம் தற்போது நடந்த -2010- சென்னை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், மீண்டும் இது ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்ளையா? என ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது......)

இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னரே 'செட்டி' இலங்கையில் கைதுசெய்யப்பட்டார்! என்பதும் குறிப்பிடத்தக்கது....

 

தொடரும்...

ரூபன்

07.07.10


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்