அவர்களின் வாழ்வியல் முறைதான் இதற்கு காரணம். கொள்ளையடித்தபடி ஒரு யுத்த நாடோடிகளாக, அரைக் காட்டுமிராண்டிகளாகத் தான், ஆரிய சமூகம் இந்தியாவினுள் வந்தனர். இங்கு இவர்கள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
1.அவர்கள் கொள்ளையடிக்கும் யுத்த சமூகமாக, தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
2.தனித்து உழைக்கும் ஒரு ஆரிய சமூகமாக, அவர்களால் மாறவும் முடியவில்லை.
3.இந்திய சமூகத்தை வென்று, அவர்களை அழிக்கவும், அடக்கியாளவும் முடியவில்லை.
4.தொடர்ந்தும் ஆரியராக முன்னேறவும் முடியவில்;லை.
மாறாக அவர்கள் தம் சொந்த வாழ்வியல் முறையால் தோற்றனர். இதனால் அவர்கள் சிதைந்தனர். சிதைந்தபோது, அதை வழிநடத்திய கூட்டம், ஆரிய நஞ்சை தாம் சிதைந்த சமூகத்தில் இட்டனர். அது பார்ப்பனிய வடிவில், சமூகத்தை நஞ்சாக்கியது. இந்த ஆரியர் எப்படி? எந்தக் காரணங்களினால் தோற்றனர்? என்பதைப் பார்ப்போம்.
1.அவர்கள் உழைப்பை அறியாதவர்கள் என்பதால், உழைக்கும் சமூகத்தில் உழைக்கத் தெரியாமல் தோற்றுப் போனார்கள்.
2.உழைப்பை அறியாததால், உழைப்பைச் சுரண்டி வாழத் தெரிந்திருக்கவில்லை. இதனால் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆளத் தெரிந்திருக்கவில்லை. யுத்தம் மூலம் கொள்ளை அடித்து வாழ்வது மட்டுமே, தெரிந்து இருந்தது. இதனால் யாரையும் அடக்கியாள முடியாது, அதாவது சுரண்டி வாழத்தெரியாது தோற்றனர்.
3.பூசாரி வர்க்கம் தனிச் சலுகையூடாக ஒரு வர்க்க நிலையை அடைந்ததால், சலுகையூடாக தாம் மட்டும் வாழும் சொந்த சமரசத்துடன் தோற்றனர்.
4.தொடர்ந்தும் பழையபடி கொள்ளையடித்து வாழமுடியாத படி, அவர்கள் தோற்றனர். அதாவது தொடர்ந்து இந்தியாவினுள் முன்னேற முடியாது தோற்றனர்.
இதற்கு ஏற்ப
1.பூசாரிகள் சலுகை பெற்ற வர்க்கத் தன்மையை அடைந்ததால், அதைப் பாதுகாக்கும் வர்க்கத் தன்மையால் தோற்றனர்
2.இந்தியாவில் தொடர்ந்து கொள்ளையடித்து முன்னேற முடியாத கடும் எதிர்ப்புகள் மத்தியில் தோற்றனர்.
3.இவர்கள் முன்னேறிய இடத்தில் அயல் சமூகத்துடன் ஏற்பட்ட சமரசங்கள், சடங்குகள் மூலம் வசதியைப் பெருக்கும் வழியைக் கண்டறிந்தனர். இதன் மூலம் பூசாரிகளின வர்க்க நிலை, அங்கிருந்த அதிகார வர்க்கத்தினது சலுகைக்குரிய பிரிவாகியதால், அதற்குள் படிப்படியாக சிதைந்து தோற்றனர்.
இப்படி அவர்கள் முன்னேறிய பொருளாதார அமைப்பில், அது கொண்டிருந்த வர்க்க உள்ளடக்கத்தில், அந்த நிபந்தனைக்குள் தோற்றனர். இதனால் ஆரியராக தொடர்ந்தும் தம்மை நிலைநாட்ட முடியாது போனார்கள். ஆனால் ஆரிய பூசாரிகள் தம் சலுகைக்குரிய வகையில், தம் சமூக பாத்திரத்தை வர்க்க அமைப்பின் ஊடாக தக்கவைத்துக் கொண்டனர்.
இப்படி ஆரியர் இந்திய சமூகத்தில் சிதைந்த போது, தம் சிதைவின் மூலம் சமூகத்துக்குள் உழைப்பை அறியாத தங்கள் ஆரிய-வேத நஞ்சை இட்டனர். இந்த ஆரிய நஞ்சு மூலம் தான், சமூகத்தை நஞ்சாக்கிவிட, பார்ப்பனிய வடிவில் மீள வென்றனர். இதன் மூலம் தான் அவர்களின் ஒரு பகுதி, திரிந்த வடிவில் தொடர்ந்தும் பூசாரியாக மீண்டனர்.
தமது சடங்குமுறை மூலம் அவர்கள் இட்ட நஞ்சு தான், இன்று பார்ப்பனியமாக, சாதியமாக, இந்துத்துவமாக திரிந்தபடி நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரியர் மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில், இந்திய சமூகத்தில் அழிந்து சிதைந்துள்ளது.
ஆரிய பூசாரிகளுக்கு கிடைத்த தனிச் சலுகைகள், ஆரியரைச் சிதைத்தது
சிறுபிரிவு பெற்ற சலுகையும், இதை வழங்கிய சமூகம் உழைப்பை வாழ்வாக கொள்ளாமையும், வர்க்க அமைப்பில் சிதைவாகின்றது. அதாவது சலுகை பெற்ற பிரிவு, சொந்த சமூகத்தை வர்க்க உள்ளடகத்தில் சுரண்டி ஆள முடியாது சிதைவுறுகின்றது.
கொள்ளையடித்தபடி யுத்த நாடோடிகளாக வாழ்ந்த ஆரிய-வேத மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த வர்க்க ஏற்றுத்தாழ்வு, ஒரு சமூகமாக அவர்களால் நீடிக்க முடியாமல் போனதிற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். கொள்ளையடித்த யுத்த நாடோடிகளுக்கு, பூசாரிகளே தமது சடங்கு மூலம் வழிகாட்டினர். இதனால் அவர்கள் பெரும் செல்வத்தைக் சடங்கு வழியில் குவித்தனர். மூளை உழைப்பின் ஊடாக, சலுகை பெற்ற ஒரு வேலைப் பிரிவாகினர். இது உட்பூசல்களுக்கு வித்திட்டது. அத்துடன் குவிந்த நாடோடிச் செல்வத்தை பாதுகாக்க, நிலையான வாழ்வியல் முறைக்கு செல்லும் வர்க்கத் தேவையை, ஒரு யுத்தம் அல்லது சமரசம் முடிவுக்கு கொண்டுவந்தது.
உழைப்பை அறியாமையால், சுரண்டத் தெரிந்து இருக்கவில்லை. அதனால் ஆரியர் ஆரியராக உழைப்பின் ஊடாக வாழ முடியவில்லை. வர்க்க அடிப்படையில் ஆரிய பூசாரிகள், சுரண்டும் இந்திய ஆளும் வர்க்கத்துடன் சலுகை பெற்ற கும்பலாக மாறியது.
இப்படி வர்க்க அடிப்படையில் செல்வத்தை குவித்து வைத்திருந்த ப+சாரிகளால் தக்கவைக்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறைதான், தனது மூலத்தை தக்கவைத்தபடி இன்றைய எல்லை வரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. கொள்ளையடித்து வாழ்ந்த யுத்த நாடோடிகளான ஆரிய-வேத மக்களின் சிதைவு என்;பது, அவர்களின் மொழியையும் அதன் இருப்பிலான சமூக மூலத்தையும் இல்லாதாக்கியது. இது தனது யுத்த நாடோடித் தனித்துவத்தை அவர்கள் பேண முடியாததற்கான காரணமாகியது. அவர்களின் வாழ்வியல் முறையிலேயே அழிந்தனர். இதன் நீட்சியில், பொதுவான சமூக ஓட்டத்தில், அவர்கள் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி முற்றாக சிதைவுற்று, அதன் மூல மொழியோ அழிந்து போனது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான, கொள்ளையடித்து வாழ்ந்த யுத்த நாடோடி சமூக உறவு முறையே அழிந்து போனது. இதனால் தான் இது, ஆரிய வடிவில், பார்ப்பனமாகவில்லை.
தொடரும்
பி.இரயாகரன்
8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08
7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு
6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06
5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05
4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04
3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03
2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02