வேத ஆரிய மக்களின் இருப்பு, மற்றைய சமுதாயத்தை கொள்ளையிட்டு வாழ்தல்தான். இதற்கு மாறாக அவர்கள் கால்நடைகளை வளர்த்த நாடோடிச் சமூகம் என்பது, முற்றிலும் தவறான ஒரு எடுகோள்.
வேத-ஆரியச் சடங்குப் பாடல்கள் எதைக் கோருகின்றது? அது உழைத்து வாழும் மக்களின் உழைப்பு பாடல்களல்ல. அதுபோல் உழைப்புப் பற்றிய சடங்குகளுமல்ல. உழைப்பை வளப்படுத்தக் கோரிய சடங்குகளுமல்ல. மாறாக கொள்ளையடிக்கும் யுத்தவளத்தையும், அந்த ஆற்றலையும் கோரிய சடங்குகளையே, ஆரிய-வேத பாடல்கள் வெளிப்படுத்;தி நிற்கின்றது.
அவர்கள் நீடித்த ஒரு வரலாற்றுக் காலம் ஊடாக முன் மொழிந்த சடங்குகளும், அவர்கள் வழிபட்ட கடவுள்களும், கொள்ளையிடும் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த யுத்தம் தான், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியது. இந்திரன், சோமன், அக்கினி.. என்று அனைவரும், அவர்களுக்கு வாழ்வை வழங்கிய அவர்களின் பிரதான கடவுள்கள். இவர்கள் எல்லாம் யுத்தக் கடவுள்கள். இவர்கள் உழைப்பின் கடவுள்களல்ல. இந்த யுத்தம் எதற்காக, கொள்ளையடிப்பதற்காகத் தான்.
இப்படி ஆரிய-வேத மக்கள் ஒரு உற்பத்தியைச் சார்ந்து, உழைத்து வாழ்ந்தவர்கள் அல்ல. மாறாக மற்றைய சமூகத்தைக் கொள்ளையிட்டு வாழ்ந்தவர்கள். இதற்காக இடம் பெயர்ந்துடன், இந்த நிலையற்ற நாடோடி வாழ்வு தான் அவர்களுக்கு வாழ்வை அளித்தது. மொத்ததில் இதனால் தான் அவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில், நிலையாக தங்கி வாழமுடியவில்லை. அவர்களது வாழ்வுசார் முறையின் அழிவு வரை, உழைத்து வாழ்ந்ததற்கான பொதுவான சமூக அடிப்படை எதையும் கொண்டிருக்கவில்லை. இதனால் அவர்களின் வேதம் உழைப்பைப் பற்றி பேச முடியவில்லை. உழைப்பை ஓட்டிய வாழ்வை, நாம் வேதத்தில் காணமுடியாது.
கொள்ளையிட்டு வாழ்ந்த இந்த நாடோடி சமூகத்தினுள், வேலைப்பிரிவினை மேம்போக்காக இருந்துள்ளது. இங்கு வேலைப் பிரிவினை என்பது, ஒருபகுதி மற்றொரு பகுதியை சுரண்டிவாழும் அடிப்படையில் இருந்தல்ல. மாறாக மற்;றைய சமூகத்தைக் கொள்ளையிட்டு வாழ்வதற்கு ஏற்ப, தமக்குள்ளான தேவையைப் ப+ர்த்தி செய்வதைச் சார்ந்து, இந்த வேலைப்பிரிவினை உருவானது. ஆனால் அவை நிரந்தரமானதல்ல. இங்கு ப+சாரிகள் மட்டும் தான், இந்த சமூகத்தில் விலக்குப் பெற்றனர். இந்த இடத்தை யாரும் தமது சொந்த தகுதியுடன், சுயமாக அடையமுடியும். இவர்கள் மட்டும் தான் வேத மந்திரத்தைத் தெரிந்தவர்கள். கொள்ளையடித்து வாழும் சமூகத்தில், மூளை உழைப்பின் சிறப்புத் தகுதியை, இவர்கள் மட்டும்தான் பெற்று இருந்தனர். இங்கு மூளை உழைப்பு, சலுகை பெற்ற ஒரு வேலைப் பிரிவினையாக மாறி இருந்தது.
இதற்கு அப்பால் ஆரிய சமூகம் ஆரிய-வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தேவை கருதி தனக்குள் வேலைப்பிரிவினையைக் கொண்ட ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும்; கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. கொள்ளையடித்தலை வாழ்வின் ஆதாரமாக கொண்ட ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை தமக்குள் பூர்த்தி செய்யும் பல்துறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும், பல படிமுறைகளில் காணமுடியும். இப்படி கொள்ளையடித்து வாழும் ஆரிய யுத்த வாழ்க்கைமுறை, அதன் முழுச்சிதைவு வரையிலான காலமோ பல தலைமுறை கொண்டது.
அவர்களின் சொந்த வாழ்வியல் முறைக்கு அமைய, யுத்தம் மூலம் கொள்ளையிட்டபடிதான் அவர்கள் இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்தனர். இந்தக் காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை கொள்ளையடித்தல் மூலமும், தனக்குள்ளேயேயான தனது தேவையை தனது உழைப்பின் மூலமும் ப+ர்த்தி செய்தனர். இங்கு இவர்கள் அடிமைகளை வைத்திருக்கவில்லை.
பல்வேறு சொந்த சமூகத் தேவையையொட்டி, உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. ஒரு இராணுவம் போன்றது, ஆனால் அது அவர்களின் வாழ்வியல் முறையாகவே இருந்தது. பூசாரிகளின் வேலைப்பிரிவினை, இதில் ஒன்று. இங்கு கடமைகள், வேலைப் பிரிவினைகள், வசதிகள், இராணுவத்தன்மை கொண்டவை தான்.
தொடரும்
பி;இரயாகரன்
7. சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)
6. உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06
5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05
4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04
3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03
2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02