ஐக்கிய நாடுகள் சபை உருவாக 50ஆவது வருட ப+ர்த்திக் கொண்டாட்டங்களில் உலகத் தலைவர்களான எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூடிக் குலாவினர். ஐ.நா என்பது அதன் வரலாறு நெடுகிலும் உலகிலுள்ள மக்களுக்கு சமாதானத்திற்குப் பதில் ஒடுக்குமுறையே பரிசாகக் கொடுத்து வந்துள்ளது. வல்லமைமிக்கவன் பொருளாதாரதப் பலம் உள்ளவன் ஐ.நாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகில் தமக்குக் கட்டுப்படாதவர்கள் மீது ஆக்கிரமிப்புக்களையும், அடாவடித்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டு எல்லா வகையான மிரட்டல்களின் ஆயுதமாக ஐ.நா செயற்படுகின்றது. ஐ.நா 2ஆம், 3ஆம் உலக நாடுகளின் உள்நாட்டில் தலையிடுவதும், சர்வதேச பொருளாதார புதிய உலக ஒழுங்கை உருவாக்க பல்வேறு மக்கள் விரோத ஒப்பந்தங்களை மூன்றாம் உலக நாடுகிளன் விருப்பங்களை மீறி அவர்கள் மீது திணித்தது. இவற்றைச் செய்து விட மிரட்டல் என எல்லாவித போக்கிரி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. ஐ.நா என்பது இன்று அமெரிக்காவின் இராணுவ மையமே. இந்த ஐ.நாவிடம் மூன்றாம் உலக நாடுகள் எந்த அற்ப சலுகைகளைக் கூட அமெரிக்க நலனை மீறி பெற்றுவிட முடியாது.