அண்மையில் உலகெங்கும் பால் குடிக்கும் பிள்ளையார் பற்றிய கதைகள் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, ரெலிபோன் என அனைத்தையும் நிறைத்திருந்தன. பலகோடி விரயமான சொத்து இழப்புக்குப் பின்னும் சில சாதாரண விஞ்ஞான உண்மைகளைக் கூட காணமுடியாத படித்த காச்சட்டை பேட்ட முட்டாள்கள் பால்போத்தல்களுடன் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்றதை என்னென்று சொல்ல.

அண்மையில் இத்தாலியில் மாதா  சிலை ரத்தக் கண்ணீர் வடிப்பதாகக் கூறி பல ஆயிரம் பேர் திரண்டு வரிசையாக நின்று தங்கள் இயலாமையை முட்டாள்தனமான வெளிப்படுத்தினர். பின்னர், இச் சிலையினுள் செயற்கையாகவே உருவாக்கப்பட்ட இரத்த வித்தைகளை விஞ்ஞானிகளை கையும் மெய்யுமாக நிறுவினர்.

பிரன்சில் பால்கொடுக்க வரிசையில் நிறை போது, வேறு சில உருவங்களும் நீர், பால் போன்றவற்றைக் குடித்தன. சிலைகளாய் பல்வேறு வகைகளில் இருந்த வௌ;வேறு உருவங்கள் பால், நீர் உறுஞ்சுவது நடக்கத் தொடங்கியவுடன் பலருக்குச் சலிப்புத தட்டிவிட்டது.

இந்த வித்தைகளை இன்று விஞ்ஞானிகளோ அதன் விஞ்ஞான – பௌதீக காரணிகளைச் சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தியுள்ளனர். படித்த காட்சட்டை போட்ட முட்டாள்கள் இன்று மௌனமாக இன்னும் முட்டாள் காரியத்தைச் செய்தபடி, கொஞ்ச நாளகை;கு முன்பு படு முட்டாள்தனமாக வாயாடியதை மறந்து விட்டு ஒருசொட்டும் மூளைiயைப் பாவிக்காது மண்டுகளாக வெட்கம் ரோசமில்லாமல் வாழ்கிறார்கள்.

இந்த மாதிரி முட்டாள் தனத்தின் வெளிப்பாடே பிழைக்கத் தெரிந்த மதப் ப+சாரிகள், அதையொட்டி பல்வேறு பிழைப்புவாதக் கும்பல் இயந்திரமாக உழைத்த பணத்தை ஒரே அமுக்கில அமுக்கி ஏப்பம் விட்டுத் திரிகின்றனர்.