மணலாறு வெலிஓயாவில் இராணுவம் புலிகளைச் சற்றி வளைத்து கொலை செய்திருந்த செய்தி யாவரும் அறிந்த ஒன்றே. இதில் கொல்லப்பட்ட பலரும் பெண் புலிகளே. இப் பெண்களின் உடல்களை இராணுவ ஆணாதிக்க வெறியர்கள் நிர்வாணம் ஆக்கியதுடன், அவ்வுடல்களை நிர்வாணமாகவே மக்கள் பார்வைக்கு முன்வைத்திருந்தனர்.

இவைகளை உலக, உள்நாடடுத் தொலைக்காட்சிச் சேவைகள் பச்சையாக நிர்வாணமாகவே ஒளிபரப்பியிருந்தன. வக்கிரம் பிடித்த ஆணாதிக்க உணர்வுகள்,பெண்கள் இறந்த பின்பும் கூட தனது கோர வெறியாட்டத்தை நிகழ்த்துவதை நாம் காணமுடியும். இவ் ஆணாதிக்க உணர்வு சிங்கள பேரினவாத நோக்கில் மலினப்பட்டு, சிங்கள மக்களின் மனங்களில் நிர்வாணமான ஒரு பேரினவாதச் செய்தியை ஆணாதிக்க நோக்கிலும் பறைசாற்றியுள்ளது.