Language Selection

சமர் - 15 : 05 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் 8ஆவது தமிழாராய்ச்சி மாநாடு என்று அறிவித்து, தமிழ் மொழியின் பெயரால் கோடி கோடியாக கூத்தாடிகள் ஆடி மகிந்தனர். தமிழைப் பரப்புகின்றோம் என்று சில சீரழிவு எழுத்தாளர்களும், சினிமா கவர்ச்சி நடிகர்களும், சூதாடிகளும் கூடித்திரண்டு கூத்தாடி தமிழை இழிவு செய்ததுடன், தமிழ் மொழியின் வளர்ச்சிப் பாதையின் குரல்வளையை கடித்துக் குதறியும் வருகின்றனர்.

மலேசிய தனிநாயகம் அடிகளின் முன்முயற்சியால் முதலாவது மாநாடு, தமிழ் நாட்டில் அண்ணா காலத்தில் நடந்த 2ஆவது மாநாடும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னால் இயன்றளவு செய்ய முடிந்தது. தமிழ் நாட்டில் நடந்த தமிழாராச்சி மாநாடுகளை விட ஏனைய எல்லா மாநாடுகளும் ஓரளவிற்கு தமிழ் மொழிக்கு சேவை செய்ய முன்னின்ற போதிலும், அண்ணாவுக்குப் பின் தமிழ் நாட்டில் நடந்த மாநாடுகள் அனைத்தும் அரசியற் கட்சி மாநாடுகளாகச் சீரழிந்து அரசியல், பதவி பந்தம் பிடிப்போ, அரை வேட்காட்டுக்காரர்கள், சீரழிவு விளம்பர எழுத்தாள்கள், சினிமா நடிகை நடிகர்களின் விபச்சார மதன மாளிகைகளாக மாறியதுடன் சீரழிந்தது.

1974ல் நடந்த யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டை இன்று ஆட்சியிலுள்ள இதே சுதந்திரக் கட்சி நடத்தவிடாது தடுத்ததுடன் சிலருக்கு விசா கொடுக்காது மாநாட்டில கலந்து கொள்ளத் தடைவிதித்தது. மாநாட்டின் மக்கள் கூட்டம் மீது தாக்குதலை நடத்தி, சிலரைக் கொன்று தீர்த்ததுடன் தமிழினத்தின் ஆயுத எழுச்சி போராட்மாக வெடித்தது.

இந்நிலையில் இத் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திய இந்திய அரசு, தனது தொங்குதசைகளாக இயக்கங்களை வளர்த்து களத்தில் இறக்கியது. இயக்க மோதல்கள் இந்திய சார்புக் குழுக்களை இல்லாதொழித்துவிட நேரடியாக இறங்கினர், இந்திய ஆட்சியாளர்கள் இந்திய இராணுவப் படுகொலை நிகழ்த்தியும், சித்திரவதைகளைச் செய்தும் பெண்களை கற்பழித்தும், கட்டிடங்களைத் தகர்த்தெறிந்தும் வெறியாட்டம் போட்டனர். இதன் மூலம் தமிழினத்தை அடக்கிவிட முடியவில்லை. வேற்றி பெறவும் முடியாமற் பேகவே பின்வாங்கித் திரும்பிப் போனார்கள். இதைத் தலைமை தாங்கி நடாத்திய அன்றைய பிரதமர் ராஜீவ்வை படுகொலை செய்ததன் மூலம் புலிகள் இதனை பழிவாங்கலாக இனம்காட்டினர்.

இந்நிலையின் பின்னர் மொத்தத் தமிழ் மக்களையும் தமிழ் நாட்டு பாஸிச ஜெயலலிதா அரசு புலிகளாகக் காட்டி கைதுகளையும், சித்திர வதைகளையும், செய்ததுடன் திறந்த வெளி சிறைக்கூடங்களில் அப்பாவி மக்களை அடைத்து வதைத்தனர். இந்நிலையில் 8ஆவது மிழாராச்சி மாநாடு அறிவித்தல் வெளிவந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழ் பிரமுகர்களுக்கான அழைப்புகள் நிராகரிக்கப்பட்டன. இலங்கை தமிழாராச்சி மாநாட்டுக் குழுவுடன் முரண்பட்ட நிலையில் அறிக்கைகள் வாயிலாக மாறிமாறித் தாக்கினர். இது நிகழ்ந்த அதேநேரம் தமிழ்நாட்டில் தமிழ் பற்றுள்ள, தமிழாராட்சியில் அதிகளவு ஈடுபாடுள்ள உண்மையான ஆராட்சியாளர்கள் இம்மாநாட்டை விமர்சித்து அதில் கலந்து கொள்ளாது உதறித்தள்ளினர்.

எங்கயடா என்று திரிகின்ற கூத்தாடிகளும், ஆல வட்டக் கோஷ்டிகளும் கூடி மாநாட்டை அறிவித்தனர். இலங்கைத் தமிழ்த் துரோகிகளான சூதாடிக் கும்பல் கலந்து கொள்வதற்கான வேண்டுகோள்கள், மற்றும் நேச அறிக்கைகளோடு அலைந்தனர். கூத்தாடிகளும், சூதாடிகளும் சேர்ந்து வடித்துக் கட்டி சிவத்தம்பி போன்றோரை அழைத்தனர். இந்தத் துரோகி சிவத்தம்பியும் விழுந்துகட்டிக் கொண்டு தொண்டமான் போன்ற சூதாட்ட அரசியல்வாதிகளுடன் கலந்துகொள்ள சென்னை சென்றனர். அங்கு தமிழ் நாட்டரசு  இவர்களை திருப்பியனுப்பி புறக்கணித்தது. அதேநேரம் இலங்கை அரசியல் சூதாடிகளுடன் மாநாட்டை நடாத்தி முடித்தது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றை நிலையில் சிவத்தம்பி போன்றோர் கலந்து கொள்ளச் சென்றது தமிழ் இனத்துக்குச் செய்த துரோகமாகும். அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்த போது துரோகக் கும்பல்கள் எப்படி இந்திய அரசில் தொங்கி துரோகத்தை இழைத்ததோ அதுபோன்ற ஒரு துரோகமே இதுவாகும். தமிழாராட்சி மாநாடு இதுவரை என்ன செய்தது என்று இந்தச் சிவத்தம்பியும் எதையும் கூற முடியாத இன்றைய நிiயில் முண்டியடித்துச் சென்றது ஓர் ஆச்சியமான விசயமேயல்ல. இத் தமிழ் ஆராட்சி மாநாட்டை விமர்சித்து போட்டி மாநாட்டை தமிழீழத்தில் நடத்திருக்க முடியும். தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும் இன்றைய நிலையில், தமிழ் ஆராட்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் தமிழீழம் பெரிய பங்களிப்பைச் செய்யமுடியும். புலிகளின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான சிவத்தம்பி தமிழ் மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதியிருப்பின்; புலிகள் மூலமாக ஒரு மாநாட்டை, ஆராட்சியை முடக்கி விட்டிருக்க முடியும். இதைப் புலிகள் ஒருக்காலும் நிராகரித்திருக்கமாட்டார்கள்.

இதைச்செய்ய சிவத்தம்பிக்கு தமிழாராட்சி என்றால் என்னவென்று தெரியாததேயாகும். தமிழில் போட்டுக்களை போடுவது, வாழைமரம் வளைத்துக்கட்டுவது, தென்னை மரம் கட்டுவது, பெரிய அலங்கார ஊர்திகளைக் கொண்டு செல்வது போன்றவற்றுக்கு அப்பால் சிவத்தம்பிக்கோ, புலிகளுக்கோ தமிழ் வளர்ச்சி பற்றிய மேலதிக எண்ணம் எதுவும் கிடையாது. தமிழ் ஆராட்சி மீதான ஓர் உந்துதலை மக்கள் மத்தியில் எடுது;துச் செல்லின்  சிவத்தம்பிக்குப் பதிலாக பல தமிழ் பற்றுள்ள ஆராட்சியாளர்கள் வெளிக்கிளம்பி வருவர்.இன்று இந்தியா, இலங்கையில் தமிழ் மொழி என்ற பெயர் இருந்த போதும் ஆங்கில மோகமும், ஆங்கிலம் தெரியாதோர் புறக்கணிக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு கள். இதேநேரம் இதைச் செய்துவரும் அரசியல் சூதாடிகளோ தமிழாராட்சி மாநாட்டைக் கூட்டி, கூத்தாடி அழிக்கின்றனர். ஆங்கில மோகத்துடன் தமிழ் மொழி வளர்ச்சி என்ற பெயரால் இன்னொரு பக்கத்;தில் ஆங்கில எழுத்துக்களை – தமிழ் மொழி எழுத்துக்களின் பற்றாக்குறைக்கு பதிலாக புகுத்த முனைகின்றனர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானது பொருளாதார, அரசியல், அறிவியல்-பண்பாடடுத் துறையிலான தங்குதடையற்ற மாற்றங்கள்தான், அது  வர தமிழ் ஆராச்சியில் வளர்ச்சி சாத்தியமில்லை. சுpல சீர்திருத்தங்களையும், வெறும் பே;பர்களில் எழுதி வைப்பதற்கும் அப்பால் எதுவும் நடந்து விடாது. துமிழ் வள்ச்சி என்று கூறி சமய (மத) நிகழ்ச்சிகளை தமிழ் மொழியின்  வளர்ச்சியின் அம்சங்களாகத் திரித்து ஒரு சமய விழாவாக இன்னொரு கூட்டம் சீரழித்து கொச்சைப்படுத்துகிறது.

நாட்டுப்புற, கிராமிய மக்களின் இலக்கியங்களையும், தமிழ் பாரம்பரிய கிராமிய கேந்திர தொடர்ச்சிகளையும் புறக்கணித்து தமிழுக்கு புதிய விளக்கங்களை சமய மூலமாகவும் சூதாடிகளின் மூலமாகவும் ப+ச்சிட்டு, தமிழ் கொச்சைபப்படுத்தப்படுவது நிகழ்ந்து  வருகின்றது. இவ் ஆங்கில மோகவாதிகளான சூதாடிகளின் மாநாட்டை விமர்சித்து புரட்சிகரமான வழிமுறைகளில் பொருளாதார, அரசியல், அறிவியல், பண்பாட்டுத் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே தமிழ் மொழியை தங்குதடையற்ற வளர்ச்சிக்கு உட்படுத்த முடியும்.