Language Selection

சமர் - 15 : 05 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதான நல்லுறவு முன்முயற்சியின் 10ஆவது முன்னெடுப்பும், 83 இனக்கலவரத்தின் பின்னாலான சுமார் 12 வருடகால யுத்தத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 7ஆவது முன்முயற்சியுமான பிரபாகரன் - சந்திரிக்கா பேச்சுவார்த்தையானது இன்று முறுகல் நிலையை எட்டியுள்ளது. இனச்சிக்கல்களுக்கு இம்முறை எப்படியும் தீர்வைக் கொண்டுவந்து விடுவோமென சூழுரைத்த அரசியல் தீர்வாளர்களதும், சமாதானவாதிகளினதும் முகங்கள் சுண்டிக் கறுத்துவிட்டன.

அரசு – புலிகள் இரு தரப்பினரும் தத்தமது இருப்புக்களை நீண்டகாலம் தக்கவைப்பதற்கும். எதிர் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்தத்தின் மீதான மக்களின் வெறுப்பின் முன்னால் தம்மை சுதாகரித்துக் கொள்வதற்கும், தமது இருப்பின் நீண்ட காலப்பகுதியை யுத்ததினூடே கடத்தி வருவதற்கும் ஜனநாயக வேடமிட்டபடி மீண்டும் யுத்தத்திற்கான ஆரவாரங்களைச் செய்யும் அடிப்படையிலேயே இவ்வொப்பந்த நாடகம் அரங்கேறியது. கடந்த சமர் இதழ்களில் இவற்றை நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தோம். முற் போக்கெனத் தம்மை கூறிக்கொள்ளும் சிலர் பேச்சுவார்த்தையின் பொய்மையை அம்பலப்படுத்தத் தவறி, மக்களை பேச்சுவார்த்தை என்ற கனவுக்கள் ஆழ்த்தியதுட்ன. இன்னும் சிலர் வெளிநாட்டு மத்தியஸ்தங்களுடன் சேர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்த இவர்களுக்கெல்லாமிது. இருப்புக் கொள்ளாத நேரம். புலிகள் எல்லாவற்றையும் குளப்பியடிக்கிறார்கள்” எனப் புலிகளை வாயில் போடுவதைத் தவிரவும், சந்திக்காவின் இனவாத அரசியலினது மையப்பாட்டின் உயிர் நாடியை திறந்து காட்டுவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர்.


அரசு – புலிகள் பேச்சுவார்த்தையில் அரசானது இயன்றவரை புலிகளை அம்பலப்படுத்துவதில் எலலா வழிவகைகளiயும் கையாண்டு வந்தது. சர்வதேச ரீதியாக சந்திரிகா அரசுபற்றிய மாயை ஏற்படுத்தி, அதைத் தக்க வைப்பதிலும் வெற்றி பெற்றது. வெளிநாட்டு ஆளும் அரசுகளின் உறுதுணையுடன் எதுவித எதிர்ப்போ, கரச்சல்களோ இல்லாமல் இதைச் சுலபமாகச் செய்வதில் சந்திரிக்கா அரசு ஓரளவுக்கேனும் வெற்றியீட்டியுள்ளது.


மேற்குலக அரசுகளும் இதைச் சாதகமாகச் கொண்டு தமிழ் அகதிகளின் மீது தமது நிறவாதத் தாக்|குதலைத் கட்டவிழ்த்து விடுவதற்கும், புதிய அகதிகளைத் தடுக்க, புதிய சந்திரிகா அரசானது ஐனநாயகமானது எனப் பறைசாற்றியபடி அகதிகளுக்கு எதிரான பல  கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும், அகதி அந்தஸ்;த்துக் கோரப்பட்டு எதுவித புகலிட, வாழ்விட வசதியும் வழங்காத அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கும், சந்திரிகா அரசின் போலி ஜனநாயகச் சின்னத்தை துரும்புச் சீட்டாக்கி நடவடிக்கையும் எடுத்து வருகின்றது.


புலிகளே பேச்சுவார்த்தையைக் குளப்புபவர்கள் எனச் சித்தரித்து வரையப்பட்ட ஒரு போலி வரைபடம், இன்ற உயிரூட்டம் பெற்று வருகின்றது.


கடந்த காலத்தில் தமிழ்த் தேசியவிடுதலை அனுதாபிகள், அகதிகள் நலன்களில் ஈடுபட்டுவந்த உதவி அமைப்புக்கள், தனிநபர்கள், மத ஸ்தாபனங்கள் என்றெல்லாம் புலிகளின் மீது குற்றச்சாட்டு அள்ளிச் சுமத்தத் தொடங்கிவிட்டன. இதுபோன்று சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலும் சந்திரிகா அரசானது ஒரு பெரும் வெற்றிகரமான பிரச்சாரத்தை ஊதியும் வருகிறது.


இவைகளெல்லாம் நடந்தேற புலிகளின் ராஜதந்திர தவறே முக்கிய காரணங்களாக அமைகின்றது. புதிய அரசு இனவாத அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வழி வகையில் புலிகளின் பேச்சுவார்த்தை ஒரு அணுவளவேனும் அமையவில்லை.


முன்னைய கால புலிகள் - பிரேமதாஸா பேச்சுவார்த்தையில் புலிகள் விட்ட தவறும், அதில் எச்சரிக்கையுடன் அணுக முற்பட்ட புலிகள் பிரேமதாஸா அரசையும், சந்திரிகா அரசையும் ஒரே மாதிரியான வகையில மதிப்பிட்டனர். கடந்த பேச்சுவார்தையில் என்ன தவறுவிட்டோம் என்பதைக் கொண்டு இப் பேச்சுவார்தையை அதற்குள் நகர்த்தியிருந்தனர். சந்திரிகா அரசானது எந்த காலகட்டத்தில், எந்த முகத்தோடு, என்ன  அணுகுமுறையுடன் அரங்கிலுள்ளது என்ற பார்வையைக் காணத் தவறியது.


புலிகளின் தோல்விக்கு இட்டுச் சென்றது. இவ்வரசானது இனவாதத்தில் ஊசலாடும் நிலையில், இனவாதத்தின் தீர்வுக்கான அறிவித்தலுடன், ஜனநாயக முகமூடி அணிந்து, தீர்வு பற்றிய வாய்நிறைந்த பொய்களுடன் சிங்கள மக்களின் பொருளாதாரக் கோரிக்கையுடன் ஒரு கருத்தைக் கட்டியபடியே கோலகலமாக ஆட்சிப்பீடம் ஏறியது. இனவாதத்தையோ, யுத்தத்தையோ, பாசிச நடைமுறையையோ இவ்வரசு வெளிப்படுத்தியிருக்கவில்லை.


இந்நிலையில் பேச்சுவார்த்தையில் புலிகள் வைத்த கோரிக்கைகள் பிரேமதாசா அரசுக்குப் பொருந்துபவையக மட்டுமே இருந்தன. சந்திரிகா அரசுக்கு எதிராக அதன் உள்ளார்ந்த இனவாத அரசியல் இருப்பைப் புட்டு வைப்பதற்குப் போதுமான பலமுள்ளவையாக இக்கோரிக்கைகள் அமைந்தவையல்ல.


சந்திரிகா அரசின் முன் இக்கோரிக்கைகள் இரண்டாம் பட்சக் கோரிக்கைகளாகவே வைத்திருக்க முடியும். முதன்மைப்பட்ட முதுலாவது கோரிக்கையாக உடனடியாக அரசியல் த்Pர்வை முன்வைக்கக் கோருகின்ற அரசியல் மையப்பட்ட கோரிகையையே வைத்திருக்க வேண்டும்.


சர்+வதேச ரீதியில் அரசு தீர்வு வைக்கத் தவறும்போது அது இயல்பிலேயே அம்பலப்பட்டுப் போயிருக்கும். இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ப+நகரி முகாம் அகற்றல், மீன்பிடி வளையத் தளர்த்தல் என்பது சர்வதேச ரீதியில் பலவீனமான ஒரு பிரச்சார வடிவமே. ஏனெனில் யுத்தம் செய்யும் இரு தரப்பினருக்கும் இராணுவ வடிவமும், அதன் முக்கிய பகுதிகளும் அவசியமானதாகவே உள்ளது. முகாமை நீக்கவில்லை என்ற வாதம் எழுந்தமாத்திரத்தில் சர்வதேச சமூகத்தின் முன்னால் எடுபடக்கூடியதோ, இலகுவில் அரசை அம்பலப்படுத்தக் கூடியதோ அல்ல. இது சொந்தத் தமிழ் மக்கள் மத்தியிலும் அரசால் மறு பிரச்சார வடிவத்தினூடு வெற்றி கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.


அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு? என அரசு நோக்கி சுட்டுவிரல் அசைத்துக் கோருவதும், அதை தமிழ் மக்கள் மற்றும் சரவ்தேச சமூகம் முன்னால் இட்டுச் செல்வதனூடாக அரசை, அதன் ஆணிவேர் படுகையிலிருந்தே அம்பலப்படுத்தியிருக்க முடியும்.


ஏனெனில், இனவாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்,  அதன் தொங்கு தசைகளும் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை என்றுமே முன்மொழிந்தது கிடையாது. ஆர்ப்பாட்டமாக ஆட்சிக்கு வந்து பலமாதங்கள் ஆகியும் எந்தத் தீர்வையும் இது வைத்தவிடவில்லை. புலிகள் முதலில் அரசியல் தீர்வையும், இரண்டாவதாக இராணுவ முக்கியத்துவம் கொண்ட ப+நகரி அகற்றல்  கோரிக்கையையும் (இது எந்தளவு மக்கள சாந்ததாக குடாநாட்டு மக்களின் போக்குவரத்து இருந்தபோதும், இது இராணுவம் சார்ந்ததே) வைத்திருப்பின், புலிகள் இன்று பலமான நிலைக்கு முன்னேறியிருக்க முடியும்.


அரசியல் தீர்வை தொடர்ச்சியாக வலியுறுத்தி தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஒருங்குசேர எடுத்துச் சென்றிருப்பின், அரசு தடுமாறி தவிர்க்க முடியாமல் இரண்டாவது கோரிக்கையை அமுல்ப்படுத்த முற்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் புலிகள் அரசை வெகுவாக அம்பலப்படுத்தியும், இராணுவ முக்கியத்துவம் கொண்ட இரண்டாவது கோரிக்கையை வென்றும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு பரிணாம வளர்ச்சிக்கு நகர்த்தியிருக்கவும், மீளெழுச்சி கொள்ளவும் செய்திருக்க முடியும்.