Language Selection

சமர் - 2 - 1991
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசில் ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்,கொள்கை மற்றும் முறை ஆகிய இரண்டிலும் தவறானது.

ஸ்டாலின் வாழ்க்கை, ஒரு சிறந்த மார்க்சிய – லெனினியவாதியினுடையதும், ஒரு சிறந்த பாட்டாளிவர்க்கப் புரட்சியாளருடையதுமாகும். லெனின் மறைவுக்குப் பின் முப்பது ஆண்டுகள் ஸ்டாலின்தான் ரசிய கம்ய+னிஸ்ட் கட்சி மற்றும் ரசிய அரசாங்கம் ஆகிய இரண்டிற்கும் முன்னணித் தலைவர். அது மட்டுமல்ல, சர்வதேச கம்ய+னிச இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்@ உலகப் புரட்சியின் வழிகாட்டி, அவருடைய வாழ்க்கைக் காலத்தில், அவர் சில கடுமையான தவறுகளைச் செய்தார். ஆனால், அவருடைய மாபெரும் சாதனையோடு ஒப்பிடும்போது அவருடைய தவறுகள் இரண்டாம்பட்சமானவையே.

ரசிய நாட்டின் வளர்ச்சிக்கும் சர்வதேச கம்ய+னிச இயக்கத்திற்கும் ஸ்டாலின் மாபெரும் சேவைகள் புரிந்துள்ளார். ஏப்ரல் 1956-ல் வெளியிடப்பட்ட “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்று அனுபவம் பற்றி” என்ற எமது கட்டுரையில், நாங்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

“லெனின் மறைவுக்குப் பின் கட்சி, அரசு ஆகியவற்றின் முதன்மைத் தலைவராக இருந்த ஸ்டாலின், மார்க்சிய-லெனினியத்தை ஆக்கப்ப+ர்வமாக நடைமுறைப்படுத்தி செழுமைப்படுது;தினார்@ மக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளயும் பிரதிபலித்;தார். லெனினிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அதன் எதிரிகளான டிராட்ஸ்கியவாதிகள் போராட்த்தில் தன்னை மிகச் சிறந்த மார்க்சிய-லெனினிய போராளியாக நிரூபித்தார். ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் பிற தலைவர்களுடன் இணைந்து ரசியாவைத் தொழில்மயப்படுத்துவதிலும்,விவசாயத்தைக் கூட்டுறவுமயமாக்கவதிலும் லெனினின் வழிமுறையைக் காத்து நின்றதால், ரசிய மக்களின் ஆதரவைப் பெற்று, வரலாற்றில் ஒரு முக்கியப் பங்காற்றினார். இந்த வழிமுறையைப் பின்பற்றி ரசிய கம்ய+னிஸ்ட் கட்சி சோசலிசத்தின் வெற்றியை நிலைநாட்டியது. ஹிட்லருக்கு எதிரான யுத்தத்தில் ரசியநாடு வெற்றி பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது. ரசிய மக்களின் இந்த வெற்றிகள், உலகத்தொழிலாளி வர்க்கத்தினுடைய, எல்லா முற்போக்கு மனிதகுலத்தினுடைய நோக்கங்களுடன் ஒன்றுபட்டன. எனவே, உலகம் முழுவதும் ஸ்டாலினுடைய பெயர் கவுரவிக்கப்பட்டது இயற்கையே”!

1. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பரலாற்ற படிப்பினைகள், ஆங்கிலப் பதிப்பு, பீகிங், 1965, பக்-7

ஸ்டாலினுடைய தவறுகளை விமர்சனம் செய்வது அவசியம்தான். ஆனால், தோழர் குருச்சேவ் 20-வது காங்கிரசுக்கான தனது ரகசிய அறிக்கையில் ஸ்டாலினை முற்றாக மறுதலித்துவிட்டார். இவ்வாறு செய்ததன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை இழிவு செய்தார்@ சோசலிச முறையையும், மாபெரும் ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியையும், இழிவுபடுத்திவிட்டார். நேர்மையான தீர்க்கமான, ஆய்வினை மேற்கொள்வதிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்று அனுபவத்தை தொகுப்பதிலும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கப் கட்சி கடைப்பிடிக்க் வேண்டிய விமர்சன-சுயவிமர்சன முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர் ஸ்டாலினை ஒரு விரோதியாகப் பாவித்தார். எலலா தவறுகளுக்குமான பழியையும் ஸ்டாலின் மீது சுமத்தினார்.

குருச்சேவ் தன்னுடைய ரகசிய அறிக்கையில் தீயநோக்குடனும் மக்களிடையே தவறான கருத்துக்களை உருவாக்கும் நோக்குடனும் ஸ்டாலினைப் பற்றி ஏராளமான பொய்களைக் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு ‘குரோதமனோபாவம்’ உண்டு என்றும், “இரக்கமின்றி ஆணவமாக”ச் செயல்;பட்டார் என்றும், மக்கள் மீது “அடக்குமுறை பயங்கரவாதத்தை”க் கட்டவிழ்த்து விட்டார் என்றும், “தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டுமே அறிந்தவர்” என்றும், “ஒருகோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்” என்றும், “ஸ்டாலினின் தலைமை, ரசிய சமூக வளர்ச்சிப் பாதையின் பெரும் தடைகல்லாக மாறிவிட்டது” என்றும் பலவாறான குற்றச்சாட்டுக்களை வீசியுள்ளார். அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளையும் எதிர்த்த உறுதியான போராட்டத்தில் மக்களை வழிநடத்தி சோசலிச மாற்றத்திலும். சோசலிச கட்டுமானத்திலும் யார் பெரும் வெற்றிபெற்றாரோ, உலகின் முதல் சோசலிச நாட்டினைப் பாதுகாப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் மகத்தான வெற்றி ஈட்டுவதிலும், யார் ரசிய மக்களை வழிநடத்தினாரோ யார் மார்க்சிய-லெனினியத்தை வளர்த்தெடுத்துப் பாதுகாத்தாரோ, அந்த ஸ்டாலினின் மகத்தான செயல்களை எல்லாம் குருச்சேவ் முற்றாகத் துடைத்தெரிந்துவிட்டார்.

ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசில் ஸ்டாலினை முற்றாக மறுப்பதன் மூலம் அவர் வளர்த்தெடுத்துப் பாதுகாத்த மார்க்சிய-லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளையும, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் குருச்சேவ் மறுக்கிறார். அதே காங்கிரசில் தான் குருசேவ் தன்னுடைய அறிக்கையில், பல கொள்கை பற்றிய பிரச்சினைகளில் மார்க்சிய-லெனினியத்தை மறுதலிக்கத் தொடங்கினார்.