10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு……..

சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதே
சொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காரு
எப்படி முடியுமென்று எழுவதாயின்
இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களை
உயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ………

ம்…..ஈழத்து வெற்றிப் பெருமிதம்
பாரதத்துப் பசியாறா வெறித்தனம்
பழங்குடி மக்கள் பூர்வீகம் அழித்து
புதைகுழியில் சொர்க்கம் படைக்கப்போகிறதாம்

கல்லோ கடப்பாரோ கொண்டெழும்-கைகளில்
தீப்பந்தம் சொல்லுபதிலென சுவாலையெழுகிறது
இது எங்கள் வியர்வையில் விளைந்த பூமித்தாய்
கொள்ளையர் குடிகொள்ள விடலென்ன நீதியென
முஸ்டியை இறுக்கி முகத்தில் அறைகிறார்கள்

கொட்டும் அருவியும் மலைகளுமாய்–இயற்கை
தாலாட்டிய தொட்டிலை அறுத்து
துடித்தெழும் மக்களை சுட்டுப்பொசுக்கிப் போட்டு
பன்னாட்டு நிறுவனப்பேய்களிற்கு படையலிடும் பாரத அரசே

உரிமைக்காய் எழுந்த போரிற்குதவுவதாய்
உடைத்தழித்துச் சிதைத்த கருணைமுகம்
காரிருள் கிடக்கும் மக்களிடம் கறந்தெடுக்க வருகிறதோ
ஒட்டக்கருவறுக்கும் கூட்டு உள்ளிடையாய்
வெட்டத்தழைக்கும் வீரியத்தை மக்களிடம் பிறப்பிக்கும்

ஆசியத்தெருக்களில் அணிவகுக்கும் மக்கள்படை
தோழமைக்கரமிணைத்து துயர்விலக்கும் நாள் விரையும்

http://www.psminaiyam.com/?p=6496


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்