Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒன்று இதன் மூலம் இயங்குகின்றது. மற்றது இதை மறுப்பதன் மூலம் இயங்குகின்றது. ஒன்று வலதுசாரிய கோட்பாட்டுத் தளத்தில் இதை வெளிப்படையாக முன்தள்ளி இயங்குகின்றது. மற்றது இடதுசாரி கோட்பாட்டு தளத்தில் மூடிமறைத்து இயங்குகின்றது.

இடதுசாரிய தளத்தில் மூடிமறைத்து இயங்குவதுதான், ஆபத்தான அரசியல். இப்படி தம்மை மூடிமறைக்க முனைபவர்கள், பதிலடியாக முன் வைக்கும் கோட்பாடுகள் வலதுசாரி எதிர்ப்புரட்சி சாரத்தை முன்னிறுத்தி அதை மறுப்பதன் மூலம் தன்னை மூடிமறைக்கின்றது. அவர்கள் தம்மை மூடிமறைக்க "தூய்மைவாதம்" "அரசியல் பொலீஸ்காரத்தனம்" "ஒழுக்கவாதம்".. பற்றியதாக திரிக்கின்றனர். இதை தனிமனித கண்காணிப்பு அரசியலாக காட்ட முனைகின்றனர். சமூக இயக்கத்தில் இப்படி முன்வைத்ததன் மூலம் தாம் வரிந்து கொண்ட கோட்பாட்டுக்கு மாறாக, தனிநபர்கள் வாழ்வதை இப்படி திசைதிருப்பி மூடிமறைப்பது அபாயகரமான எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

இதன் மூலம், இவர்கள் சமூகத்துக்கு சொல்ல வருவது என்ன? நாம் மக்களுக்கு முன்வைக்கும் கொள்கை கோட்பாட்டுக்கு வெளியில், தனிநபர்கள் வேறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை கொண்டிருக்க முடியும்; என்பதுதான். இதைத்தான் அவர்கள் "தனிநபர் தாக்குதல்" என்கின்றனர். தாங்கள் மக்களுக்கு முன் வைப்பதற்கு மாறான, தமது தனிநபர் வாழ்க்கை முறையைக், கண்டு கொள்ளக் கூடாது என்கின்றனர். இப்படிக் கண்டு கொள்வதுதான் "தூய்மைவாதம்" "அரசியல் பொலீஸ்காரர்தனம்" "ஒழுக்கவாதம்" என்கின்றனர். இப்படிப்பட்ட திரிபுகள் மூலம் தான், மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். மக்களுக்கு முன் தாங்கள் வைக்கும் கொள்கைக்கு முரணாக, தாங்கள் வாழ்வதைக் கண்டுகொள்ளக் கூடாது என்கின்றனர். இது "கண்காணிப்பு" அரசியல் என்கின்றனர்.

தாங்கள் வைக்கும் கருத்தைப் பார், நான் எப்படி வாழ்ந்தேன் வாழ்கின்றேன் என்பதை பாராதே என்கின்றனர். இது படைப்பை பார், படைப்பாளியைப் பார்க்காதே என்ற அதே இலக்கிய லும்பன்களின் கழிசடைக் கோட்பாடுதான். இதையே அரசியலில் முன்வைப்பது நடக்கின்றது.

இதைத் தவறு என்று கூறும் போது, "தூய்மைவாதம்" "அரசியல் பொலீஸ்காரர்தனம்" "ஒழுக்கவாதம்" என்ற கூறி, அதன் அரசியல் உள்ளடக்கத்தை திரித்துவிடுகின்றனர். யாரும் தாம் வைக்கும் கொள்கைக்கு முரணாக, தனிநபர் வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது. அப்படி வாழும்போது, அது விமர்சனத்துக்குள்ளாகின்றது. இதன் மூலம், அது சுயவிமர்சனத்துக்குள்ளாகின்றது. இங்கு முன்வைக்கப்படும் விமர்சனமும், சுயவிமர்சனமும்,  "தூய்மைவாத" "அரசியல் பொலீஸ்காரர்தன" "ஒழுக்கவாத" அடிப்படையில் இனம் காணப்படுவதில்லை, முன்வைக்கப்படுவதில்லை. தமது கொள்கைக்கு மாறாக வாழ்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுக்கு, அந்த கொள்கை சார்ந்த அமைப்பு பொறுப்பேற்று அதை திருத்துகின்றது, தனிநபர்களின் இரட்டை நடத்தை, அமைப்பை பாதிக்கும். அமைப்பு அதை மூடிமறைப்பதில்லை. அதை ஓத்துக் கொள்கின்றது. அதை திருத்துகின்றது, அதை சரி செய்கின்றது. அதை நியாயப்படுத்துவது கிடையாது.

மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்ற போது, மக்களை அணிதிரட்டுகின்ற போது, மக்களைச் சார்ந்து நிற்கின்ற போது, எந்த தனிமனிதனும் மக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற சமூக உணர்வைக் கொண்டு தன்னை விமர்சனம் சுயவிமர்சனத்துக்குள்ளாகி கொள்கின்றான். இதை ஒரு அரசியல் ரீதியான உணர்வாக உருவாக்குவது தான், மக்களைச் சார்ந்த அமைப்பாக்கலின் உள்ள முதன்மையான பண்புக் கூறாகும். அப்படிப்பட்டவர்கள், மக்கள் முன் எப்போதும் வெளிப்படையாக வாழ்;கின்றனர். அவன் என்றும் தன்னை மூடிமறைப்பது கிடையாது. அவன் முன் இரட்டை வாழ்க்கை முறை இருப்பதில்லை.

மக்களுக்கான கொள்கை கோட்பாட்டை முன்னிறுத்தி, மக்களைச் சார்ந்து நிற்காது, உணர்வுப+ர்வமாக மக்களை அணிதிரட்டி போhராடாத போது, இரண்டு எதிர்ப்புரட்சி அரசியல் கூறுகள் அங்கு எழுகின்றது.

1.தம்மை முற்றுமுழுதான தூய்மைவாதிகளாக, ஒழுக்கவாதிகளாகக் காட்டிக் கொள்கின்றனர். தன்னை தக்கவைக்க இரட்டை வாழ்க்கை முறை என்ற எதிர்ப்புரட்சி அரசியல் கூறை முன்தள்ளி தன்னை நியாயப்படுத்துகின்றது.

2.இரட்டை வாழ்க்கை முறை அங்கு உருவாகின்றது. இது தன்னை மூடிமறைக்க,  "தூய்மைவாதம்" "அரசியல் பொலீஸ்காரர்தனம்" "ஒழுக்கவாதம்" என்;று எதிர் அரசியல் கூறை முன்னிறுத்தி, தன்னை தற்காத்து  மூடிமறைக்கின்றது.

இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் எதிர்த்தும், எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றது. வலது இடதைப் பயன்படுத்துவது போல், இடது வலதை பயன்படுத்தியே, இரண்டும் எதிர்ப்புரட்சி அரசியல் உள்ளடக்கத்தை தக்கவைக்கின்றது.

இவ்விரண்டினதும் அரசியல் சாரம் என்ன?

1. மக்களை திரட்டாது, மக்களிடம் செல்லாது புரட்சி பேசும் போது, "தூய்மைவாதம்" "ஒழுக்கவாதம்" முதன்மையான அரசியல் கூறாக அரசியல் பண்பாக உருவாகின்றது. இங்கு  "அரசியல் பொலீஸ்காரர்தனம்" எழுகின்றது. சமூகத்தில் எது தவறு என்ற ஒரு பொது கருத்துருவாக்கம் உள்ளதோ, அதை முன்னிறுத்தியே "தூய்மைவாதத்தை" "ஒழுக்கவாதத்தை" கட்டமைக்கின்றது. இதன் மூலம் தனிநபர் அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இங்கு தான் "கண்காணிப்பு" அரசியலே உருவாகின்றது. இது தண்டனை முறையைச் சார்ந்து இயங்குகின்றது. விமர்சனம், சுயவிமர்சனத்தை கையாள்வதை மறுத்து, பதிலாக அதைத் தண்டிக்கின்றது.

2. மக்களை திரட்டாது, மக்களிடம் செல்லாது புரட்சி பேசும் போது, "தூய்மைவாதத்துக்கு" "ஒழுக்கவாதத்துக்கு" மாறாக, தன்னைச் சுற்றி இரட்டை வாழ்க்கை முறையை உருவாக்குகின்றது. மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியல் நடைமுறையை அது மறுக்கின்றது. இரண்டு விதமாக தாம் வாழ்வதை முன்னிறுத்தி, அதை நியாயப்படுத்த இதை "கண்காணிப்பு" அரசியலாக காட்டி தன்னைக் காப்பாற்ற முனைகின்றது. விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதை மறுத்து, அரசியல் ஒழுக்கக்கேட்டை அரசியலாக்குகின்றது.

இப்படி இரண்டு போக்குகள் இதனுள் உள்ளது. இரண்டும் எதிர்ப்புரட்சி அரசியல் தான்.

பி.இரயாகரன்
29.05.2010