08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சில இராணுவ அதிகாரிகள் இனவாதிகளை அம்பலப்படுத்தினர்.

சிங்கள இனவாதத்தை கக்கிவந்த ஜாதிக சிந்தனை இயக்கத்தினை சில இராணுவ அதிகாரிகள் கூட்டாக அம்பலப்படுத்தியுள்ளனர்.  பல் வைத்தியரான குணதாச அமரசேகரவின் இனவாத பேச்சுக்களையும் அதனால் தொடரும் யுத்தத்தையும் எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் சினம் கொண்டு ஒரு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யுத்தத்தைப் பற்றியும், அதை சரியாக செய்ய வேண்டும் எனவும் வைத்தியரும், போராசிரியர் நளின் டி சில்வாவும் வாய்கிழிய பேசுவதை விடுத்து இராணுவத்துக்கு பல் சிகிச்சை செய்யுங்கள் எனக் கோரியுள்ளனர்.  இதை விடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் பிரத்தியேக தொழில் செய்தபடி யுத்தத்தை சரியாகச் செய்யச் சொல்லி கோருவது சுகமானது தான் என மேலும் எழுதியுள்ளனர். 

 

சிங்கள இனவெறியைக் கக்கியபடி தனியார் மருத்துவமனைகளில் தமது சேவைசெய்து சாதாரண மக்களுக்கு உதவ முடியாத இவ் இனவாதிகளே யுத்தத்தின் ஊன்றுகோல்கள் ஆவர். இந்த மாதிரியான இனவாதிகளின் முகங்கள் பல கோணத்தில் வெளிப்பட்ட போதும், இவர்களை இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இது சிங்கள இனவாதிகளுக்கு மட்டுமல்ல தமிழ், முஸ்லிம், மலையக இனவாதிகளையும் சேர்த்தே நாம் கூறுகின்றோம்.


பி.இரயாகரன் - சமர்