Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொறுக்கிகளையும், புறம்போக்குகளையும், முடிச்சுமாறிகளையும் அடிப்படையாகக் கொண்டது, இந்தக் கூட்டம். தமிழ்மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே, தொடர்ந்து தன் இலட்சியமாக கொண்டது. இதற்கு தமிழீழம் என்ற கோசம் உதவும் என்பதால் தான், இந்த மாபியாக்கள் "நாடுகடந்த தமிழீழம்" என்கின்றனர். இ;ந்த மாபியாக்கள் தங்கள் மோசடிக்கு, மக்கள் தாங்களாகவே உடன்படுகின்றனர் என்று காட்ட, மக்களை மந்தைகளாக மேய்த்து வந்து வோட்டுப்போட வைக்கின்றனர்.

கடந்தகாலத்தில் தமிழினத்தை அழிப்பதையே தங்கள் சொந்த வர்த்தகமாக, அதையே  தொழிலாகச் செய்தவர்கள். இதன் மூலம் பணம் சம்பாதித்தவர்கள். மற்றவனை துரோகி என்று சொன்னதன் மூலம், தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற துரோகத்தையே தமிழ் தேசியமாக்கியவர்கள். இந்த தேசியத்தின் பெயரில் பலர் சொத்துச் சேர்த்தனர். கடந்தகால புலத்து புலி மாபியாக்கள் குவித்;துள்ள சொத்துகள் எல்லாம் யாருடையது, மக்களுடையது. இப்படி தேசியத்தையும் விடுதலையையும் தியாகங்களையும் தங்கள் வியாபாரப் பொருளாக்கி கொழுத்தனர்.

 

இறுதியுத்தத்தில் பல பத்தாயிரம் மக்களை தங்கள் பலியாடுகளாக மாற்றி, அவர்களை பலியிட்டவர்கள். அதற்கு உடன்பட மறுத்தவர்களை, தாங்களே பலி எடுத்தனர். குழந்தைகள் உட்பட இளம் தலைமுறையை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று அவர்களை  பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபட வைத்தன் மூலம் பல ஆயிரம் அப்பாவிகளைப் பலியிட்டனர். இப்படி இதை ஆதரித்து, அதை ஊக்கப்படுத்திய புலத்து மாபியாப் பூசாரிகள் தான், நாடு கடந்த தமிழீழக்காரர்கள்.

 

உலகில் முதல்தரமான கிரிமினல்கள். மாபியாக்கள். தேசவிடுதலையின் பெயரில் பெற்ற பணத்தை தனிப்பட்ட சொத்தாக்கி, அதைக் கொள்ளையடிப்பதை தேசியமாக்கியவர்கள். பணத்தை விடுதலையின் பெயரில் தமக்கு தர மறுத்தவர்களை மிரட்டி, பணத்தைக் கறந்தனர். அந்த பணத்தின் ஒரு பெரும் பகுதி "நாடுகடந்த" மாபியாக்களின் தனிப்பட்ட தங்கள் சொத்தாக மாற்றிவிட்டனர். இதைப் பற்றியோ, கடந்தகால நிகழ்வுகள் பற்றியோ, எதுவும் தமிழ் மக்கள் எவரும் பேச முடியாது.

 

தமிழ்தேசியத்தின் பெயரில் தமிழ்மக்களைச் சுரண்டி வாழும் கூட்டம் இது. தமிழ் மக்களை தங்கள் மாபியாத் தேசியத்தின் பெயரில், வாயைப் பொத்த வைத்து, அவர்களை அடிமைப்படுத்திய கூட்டம் இது. இனம் தெரியாத கடத்தல் கூட்டமாக மாறி, ஆயிரக்கணக்கில் தமிழ்மக்களை கடத்திச் சென்று இனத்தையே கதறவிட்ட கூட்டம் இது. துரோகி என்ற பெயரில் சில ஆயிரம் பேரை, போட்டுத்தள்ளிய கூட்டம் இது. தமிழ் மக்களை வரிகள் மூலம் சூறையாடி, அவர்களை ஏதுமற்ற பரதேசிகளாக்கிய கூட்டம் இது. சமூகத்தை முன்னின்று வழிநடத்தக் கூடிய முன்னோடிகளை அழித்து, தமிழினத்தை நலமடித்த கூட்டம் இது. தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து, அதை தேசியமென்று கூறி பேரினவாதத்துக்கு மாமா வேலை பார்த்த கூட்டம் இது. இவை அனைத்தும் தமிழீழம் பெறவே என்று கூறி, ஒரு இனத்தை அழித்த கூட்டம் இது.

 

இதனால் தமிழினம் பெற்றது தான் என்ன? இனம் சிதைந்தது. அது இனவழிவைச் சந்தித்தது. எதற்கும் நாதியற்ற ஒரு இனமாகிவிட்டது. இதைச் செய்ததன் மூலம், தமிழ்மக்கள் நன்மை பெற்றார்களா? இல்லை. தேசியத்தின் பெயரில் அதை ஆட்டிப் படைத்த புல்லுருவிகளே கொழுத்துச் செழித்தனர். தம்பின் செல்வத்தைக் குவித்தனர். தேசியத்தின் பெயரில், தமிழ் மக்கள் சொத்தையும், உழைப்பையும் திருடி, அதை தங்கள் பின் குவித்துக் கொண்டனர். இதற்குத்தான் புலித் தேசியமும், அதன் பாசிச நடத்தைகளும் உதவின. இதுதான் கடந்தகால விளைவு. 

 

தமிழ்தேசியத்தின் இன்றைய விளைவு இதுதான். இதற்காக தமிழ் மக்களை கொன்று குவித்து, அவர்களை மொட்டையடித்து கொழுத்த கூட்டம் தான், "நாடுகடந்த தமிழீழம்" என்று கூறிக்கொண்டு பவனி வருகின்றது. தமிழ்மக்களை தொடர்ந்து சூறையாடும், அதே வக்கிரக் கனவுடன் ஊர்வலம் வருகின்றனர். போடுங்கள் புள்ளடியை என்கின்;றனர். இது வேறு ஒன்றுமல்ல, தங்களுக்கு தொடர்ந்து டொலராக, ஈரோக்களாக, பவுன்;களாக… போடுங்கள் என்கின்றது இந்த "நாடுகடந்த" மாபியாக் கூட்டம்.

 

உன் உழைப்பை, உன் சமூக உணர்வை திருட வருகிறது இந்தக் கூட்டம். தமிழ் தேசியத்தின் பெயரில், தொடர்ந்தும் உன் மேல் ஏறி அமர்ந்து மொட்டையடிக்க வருகின்றது இந்தக் கூட்டம்.

 

உன்னைத் தொடர்ந்தும்; மந்தையாக "நாடுகடந்த தமிழீழத்தின்" பெயரில் மேய்ப்பதன் மூலம், மேய்ப்பவனுக்கு செல்வம் தான் தொடர்ந்து பெருகும். மந்தையின் ரோமத்தை, பாலை, இறைச்சியை, தோலை.. மந்தையை வைத்து மேய்ப்பவனுக்கு கிடைப்பது போல் தான், நாடு கடந்த மாபியாக்களுக்கு உன் மந்தைத்தனம் உதவும். தங்கள் மாபியாத்தனத்தை மூடிமறைத்துக் கொண்டு, உன்னை ஏமாற்றி தங்களை வாழ வைக்க "நாடுகடந்த தமிழீழம்" என்கின்றான். இதன் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வத்தை, பெருக்கவே இந்த "நாடுகடந்த தமிழீழம்" உதவும். தமிழ் மக்கள் இவர்களால் தொடர்ந்து பெறப்போவது இனவழிவைத்தான்.

 

பி.இரயாகரன்
28.04.2010