Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 30 வருடத்தில் எம்மைச் சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ளாத எவனும், எதிர்காலத்தை மக்களுக்காக வழிநடத்த முடியாது. இல்லையென்று சொல்பவன், மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடிக்காரன். கடந்ததை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாதவன், தொடர்ந்தும் மக்களை ஏய்க்கின்றான். இங்கு இதுவே, இதிலுள்ள மாபெரும் அரசியல் உண்மையாகும்.

கடந்தகாலத்தில் எம் மக்களுக்கும் எம் தோழர்களுக்கும் நடந்ததை தெரிந்துகொள்ள மறுப்பது ஏன்? மூடி மறைப்பது ஏன்? இதை செய்யாதவர்கள், நிகழ்காலத்தில் சரியான மக்கள் அரசியலை முன்னெடுக்கவோ முன்வைக்கவோ முடியாது. கடந்தகாலத்தை தொடர்ந்து இருட்டில் வைத்து, தொடர்ந்து அரசியல் வே~ம் போடுபவர்கள் மக்கள்விரோத அயோக்கியர்கள். அவர்களின் இந்த மூடிமறைத்த அயோக்கியத்தனத்தைத் தாண்டி, எந்த அரசியலையும் அவர்கள் மக்களுக்காக முன்வைக்கப்போவது கிடையாது.

 

கடந்தகாலத்தின் தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதோ, நேர்மையற்ற பொறுக்கித்தனமான அரசியலாகும். இந்தவகையில் கடந்தகாலத்தை சுயவிமர்சனம், விமர்சனம் செய்ய முன்வராத பித்தலாட்ட அரசியல் தான், இன்று மறுபடியும் புரட்சிவே~ம் போடுகின்றது. இன்று மே 18 இயக்கம், அசை அரசியல், இனியொரு முதல் புதிய ஜனநாயக் கட்சி வரை என்ன தான் செய்கின்றனர்? சந்தர்ப்பவாத நிலையெடுத்து, கடந்தகாலம் அனைத்தையும் மூடிமறைத்தபடி தான், மார்க்சியம் முதல் இடதுசாரியம் வரை கதைக்கின்றனர்.

 

இதை விமர்சிக்கும் போது, அதை "தனிநபர்" தாக்குதல் என்கின்றனர். "தோழமை"க்கு எதிரானது என்கின்றனர். இதன் மூலம் தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்து, தங்களை தக்கவைக்க எம்மைப்பற்றிப் பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை முன்தள்ளுகின்றனர்.

 

தனிநபர் வாழ்க்கை வேறு அரசியல் வாழ்க்கை வேறு என்று, அதைப் பிரித்து பார்க்கின்ற, பிரித்துக் காட்டுகின்ற பொறுக்கித்தனமான இரட்டை நடத்தை சார்ந்த அரசியல்தான், குற்றஞ்சாட்டுபவர்களின் இயல்பான அரசியலாகும். அதுதான் அதை பிரித்துக்காட்ட முனைகின்றது. நாங்கள் எம்மைச் சுற்றி அதைப் பிரிப்பது கிடையாது. எமக்கு இரண்டும் ஒன்றுதான். இந்த வகையில் எம்மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு பொய்யானது, போலியானது, புரட்டுத்தனமானது என்பதை, இந்தத் தொடர் மூலம் அம்பலமாக்கினோம். 

 

முதுகுக்கு பின் எம்மை மனிதகுலத்துக்கு எதிராக இருப்பதாக, பல குற்றச்சாட்டுகளை வாய் மூலம் பரப்பினர். இணைய பின்னூட்டங்களில், தங்கள் முகத்துக்கு துணியைப் போட்டபடி, குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வந்தனர்.

 

ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அதுவே உண்மையாகிவிடும் என்ற பாசிசத் தத்துவத்தின் அடிப்படையில் மீள மீள சொன்னார்கள். அதை அசோக் உண்மையாகக் காட்டி, அவற்றையெல்லாம் அவதூறடங்கிய ஒரு கட்டுரையாக வெளியிட்டார்.

 

அவதூறு பின்னோட்டங்கள்; மற்றும் முதுக்கு பின் பரப்பும் குற்றச்சாட்டுகளுக்கு, நாம் பதிலளிப்பது கிடையாது. அவை எந்த சமூக நோக்கமும் அற்று. தலையற்ற முண்டமாக உலவியது. எழுதியவருமின்றி, ஆதாரமுமின்றி பரப்பப்பட்டது. இதை இன்று வெளிப்படையாக அசோக் வெளியிட்டபோது, அதற்கு பதிலளிப்பது அவசியமாகியது. இந்தக் குற்றச்சாட்டுகள் தான், தங்களை நியாயப்படுத்தும் அவர்களின் எதிர்ப்பு அரசியலாக இவர்களிள் பின்புலத்தில் இருந்து வந்தது.

 

இப்படி எனக்கு எதிராக இவர்கள் நிற்பது என்பது, நான் கொண்டுள்ள மார்க்சிய அரசியல்தான். ஆனால் அரசியல் தளத்தில், அதை அவர்கள் எதிர்கொள்ள முடிவதில்லை. இதனால் எனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும், தங்கள் தரப்பு எதிர் அரசியலாக முன்வைத்து வந்தனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையைத் தகர்ப்பது அவசியமாகியது. அவர்களின் எனக்கெதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை அம்பலமாக்கி, அவர்களை அவர்களின்  எதிர்ப்புரட்சி அரசியலுடன் தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி அவர்களின் அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்துவதன் மூலம், எமது அரசியலை மேலும் முன்கொண்டு வர முடிகின்றது.

 

எம்மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு பொய்யானது என்பதையும், எமது அரசியல்தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்பதும், இன்று இந்த விவாதம் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்தவகையில்தான், பல தொடர்கள் மூலம் பலதையும் தெளிவாக அம்பலமாக்கினோம்.

          

இந்த 22 பாகங்கள் கொண்ட தொடர்ச்சி அவசியமானதா என்று எம்மிடம் சிலர் கேட்டனர். நாங்கள் இதை எழுதியது ஏன் என்பது, மேற்கூறிய காரணங்களினால் தான். 

 

இன்று எம்மைச் சுற்றிய அரசியலும், இன்றைய அரசியல் செயல்களும், கடந்ததை  கற்றுக்கொள்ள மறுப்பதில் இருந்தே தொடருகின்றது. கடந்தகாலத்தையும், அதைச் சுற்றி நடந்தவற்றையும், தொடர்ந்து இருட்டில் வைக்க முனைகின்றனர். கடந்தகாலத்தில் மனிதவிரோத அரசியலில் ஈடுபட்டவர்களைப் பற்றி எழுதினால், உடனே அதை தனிநபர் தாக்குதல் என்கின்றனர். தங்களுக்கு இரட்டை வாழ்க்கை இருந்ததாக இதன் மூலம் மறைமுகமாக கூறுகின்றனர். கடந்தவற்றை இன்றுவரை அதை விமர்சனமோ சுயவிமர்சனமோ செய்தது கிடையாது. இதற்கு பதிலாக எதிர் குற்றச்சாட்டை வைப்பதன் மூலம், இதுவும் சமன், அதுவும் சமன் என்ற ஒரு எதிர்ப்புரட்சி அரசியல் பாணியை உருவாக்குகின்றனர்.

 

இதையடுத்து சிலர் இந்தச் சண்டை அவசியமற்றது என்கின்றனர். தம்மை மூடிமறைக்க கட்டமைக்கும் அவதூறை, உண்மையாக இதன் மூலம் மாற்றிவிடுகின்றனர். இதன் மூலம் தான், மறுபடியும் எதிர்ப்புரட்சி அரசியலே அங்கீகாரம் பெறுகின்றது.

 

இப்படி குறுக்குவழியில் அரசியல் நடத்த முனைகின்றனர். என் மீது அசோக் குற்றஞ்சாட்டிய குற்றச்சாட்டுகள் தான், இன்று எனது அரசியலுக்கு எதிரான பலரின் அரசியலாக உள்ளது. தலித்தியம், பின்நவீனத்துவம், "மார்க்சியம்" பேசுகிறவர்கள் முதல் பாசாங்கு செய்யும் "தோழர்கள்" வரை, இவைதான் எனக்கு எதிரான அவர்களின் சூக்குமமான அரசியலாக உள்ளது.

 

இந்தவகையில் இந்த அவதூறு அரசியல் அசோக்கினது மட்டுமல்ல, பலரின் அரசியலுமாகும். இதனால் எனக்கு எதிராக முன்வைத்த ஓவ்வொரு குற்றச்சாட்டும், எவ்வளவு பொய்யானது என்பதை அம்பலமாக்கி அதை நிறுவ வேண்டியிருந்தது. இதன் மூலம் மீண்டும் அவர்கள் இதை சொல்லிப் பிழைக்க, நாம் இந்தத் தொடர் மூலம் இடம் வைக்கவில்லை.

 

எமக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டுகள் மூலம், அவர்கள் செய்வது என்ன? கடந்த காலத்தில் தங்களைச் சுற்றி நடந்ததையும் மூடிமறைக்கின்றனர். இன்றுவரை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை புரட்சிகரமானதாக இட்டுக்கட்ட  முனைகின்றனர். குறிப்பாக அசோக் போன்றவர்கள் ராஜன் என்ற கொலைகாரனுடன் சேர்ந்து, ஈ.என்.டி.எல்.எவ் போன்ற அமைப்பை உருவாக்கியதை மறுத்தே வந்தவர். அவரின் பெயர் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் வெளியிட்டதன் மூலம், இதை தெளிவாக அம்பலமாக்கினோம். அசோக்கோடு சேர்ந்து கூத்தாடும் ஜென்னி, இன்றும் ஈ.என்.டி.எல்.எவ் முக்கிய உறுப்பினர். இப்படி அசோக்கோடு கூத்தாடும் பலர், இப்படிப்பட்டவர்கள் தான். இதை நியாயப்படுத்த, தாங்கள் அவர்களுடன் விவாதிப்பதாக கதை சொல்;லுகின்றனர். ஆகவே தான் நாங்கள் கடந்த வரலாற்றை புரட்டி போட்டு, அவர்கள் மூடிமறைத்து இன்று செய்யும் நிகழ்கால வே~த்தை தோலுரித்தோம். இந்த வகையில் தான் புளாட் வதைமுகாம்களில் நடந்தவைகள் பற்றிய மற்றொரு ஆவணத்தை வெளியில் வைத்தோம். இதுபோல் பல ஆவணங்கள் அன்று போராடியவர்களால் வெளியிடப்பட்டு இருந்தன. இன்று இவற்றையெல்லாம் மீள புதைக்க முனைகின்றனர். இதன் மூலம் இன்றைய புளாட் சித்தார்த்தன் வரை, "மே 18" இயக்கம் கூட கூடிக் கூத்தாட முடிகின்றது. ஒரு வரலாற்றை மூடிமறைத்துக் கொண்டு அரசியல் நடத்த முனைகின்றனர். தீப்பொறி காட்டிக்கொடுக்கப்பட்டே தமிழீழக்;கட்சியாக தம்மை பிரகடனம் செய்தவர்கள், புலிகளின் உளவு அமைப்பாக மாறினர். புலம்பெயர் நாடுகள் முதல் இலங்கை வரை இயங்கி மாற்றுத்தளத்தில் திட்டமிட்டு ஊடுருவி, அதை தம் பங்குக்கு அழித்தனர். இன்று இவர்கள் "மே 18" இயக்கமாக திடீரென மீள வெளிவந்துள்ளதுடன், புரட்சிகர கூறுகளை அரசியல் ரீதியாக மீளவும் சிதைத்து வருகின்றனர். இதுபோல் புலிகளில் இருந்தவர்கள் விமர்சனம் சுயவிமர்சனம் இன்றி, புதிய வேசத்துடன் களமிறங்குகின்றனர். இப்படி சந்தர்ப்பவாதம் எங்கும் கொடிகட்டிப் பறக்கின்றது. தம்மைத் தக்கவைக்க, எதிர்த்தரப்பு மீது பொய்யான அவதூறைப் பொழிகின்றனர். இதைவிட அவர்களுக்கு வேறு அரசியல் மாற்றுவழி கிடையாது. இந்த வகையில் தான் அசோக்கும் களமிறங்கினார். அவர்களிள் நோக்கம் தம்மை மூடிமறைப்பதுதான். இதனால் அதை அம்பலப்பபடுத்துவதில் நாம் தொடங்கினோம். இன்றுவரை அவரும் அவரின் கூட்டாளிகளும் தங்கள் எந்த எதிர்ப்புரட்சி அரசியலை பாதுகாக்க முனைந்தனரோ, அதை அம்பலமாக்கினோம். அதில் சில தான் இவை. இது தொடரும்

 

1.பயிற்சி முகாம்கள் அல்ல வதை முகாம்கள்

 

2.எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதல்ல

 

3.புளட்டின் போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்

 

4.திம்பு நகரில்

 

5. புளட்டின் குளறுபடிகள் அம்பலம்

 

6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பின்தள மகாநாட்டு அறிக்கை

 

7. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பின்தள மகாநாட்டை ஒட்டிய செய்தி – 1

 

8. தமிழீழ மக்கள் விடுதலைக் கழககத்தின் தள மகாநாட்டை ஒட்டிய செய்தி - 2

 

9. தள மகாநாட்டில் ஆராயப்பட்டது

 

10. பின்தள மாநாடு தொடர்பான தளச் செயற்குழுவின் அறிக்கை

 

11. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு அறிக்கை

 

12. ஸ்தாபனத்தின் பின்தள மாநாட்டுக்கான ஆராய வேண்டிய வினாக்களும் கருத்துக்களும்

பொய்கள் மூலம் அவதூறு பொழிந்து கட்டமைத்த அவர்களின் எதிர்ப்புரட்சி அரசியலை, நாம் பல தளத்தில் அம்பலமாக்கி அதை விவாதத்துக்குள்ளாக்கினோம். இதை செய்த நாம், எம் மீதான பொய்களையும் அம்பலமாக்கினோம். இதன் மூலம் புதிதாக பலவற்றை தெரிந்து கொள்ள, இந்த விவாதம் உதவியது. அந்த வகையில்
 
1.புளாட்டில் நடந்து என்ன என்பதையும்

 

2.புலம்பெயர் இலக்கிய மற்றும் அரசியல் சந்திப்பில் என்ன நடந்தது என்பதையும்

 

3.கடந்த வரலாற்றை திரும்பி பார்க்க வைத்து, எழுதத்; தூண்டியுள்ளோம்.
 
4. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு பொய்யானது என்பதையும், அது எவ்வளவு பெரிய அவதூறு என்பதையும் அம்பலமாக்கினோம்.  

   

இப்படி பல தளத்தில் இந்த விவாதத்தை நகர்த்தினோம்;. இதன் மூலம் கடந்தகால பல விடையங்களை, பொருத்தமான இடங்களில் வெளிக்கொண்டு வந்தோம். இன்னும் வெளிக்கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் கடந்த வரலாற்றை தேடிக் கற்கத் தூண்டியுள்ளோம்;. இன்று பலர் இந்த வரலாற்று ஆவணங்களை தேடத் தொடங்கியுள்ளனர். எம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதையும், எப்படி அவை நடந்தது என்பதையும், யார் எப்படி இதற்கு துணை நின்றனர் என்பதையும், தேடத் தொடங்குகின்ற புதிய ஒரு அரசியல் மரபை இந்த விவாதம் மூலம் உருவாக்கியுள்ளோம்;. அவர்கள் ஏன் இன்னும் அதை மூடிமறைக்கின்றனர் என்ற கேள்வி ஊடாக, அரசியலை கற்றுத் தெரிந்து கொள்ள முனைகின்றனர்.

 

இதுவே இந்தத் தொடரின் மைய நோக்கமும் கூட. அரசியலை சுயமாக கற்றுக்கொள்ள கோருகின்றது. அனைத்தையும் மூடிமறைத்து, கதைப்பதை வைத்து அரசியலை இனம் காணும் சொந்த மதிப்பீட்டை இந்தத் தொடர் மூலம் அம்பலமாக்கி அதையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளோம்.   

     

என் மீதான பொய்யான அவதூறுகள் மூலம், என் அரசியலைத் தான் மறுக்கின்றனர் என்ற உண்மையை இங்கு போட்டு உடைத்துள்ளோம்;. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், என் அரசியல் பற்றிய உங்கள் நிலையென்ன? அதை முதலில் முன்வையுங்கள். எம் அரசியலுடன் உடன்படுகின்றீர்களா, இல்லையா? சரி உங்கள் அரசியல் நிலைப்பாடு தான் என்ன? உங்கள் அரசியலை முதலில் முன்வையுங்கள். அதன் பின் என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எழுப்புங்கள். இதை இந்தத் தொடர் உங்களிடம் கோருகின்றது, வலியுறுத்துகின்றது.
      
பி.இரயாகரன்
18.04.2010

 

21.இலக்கிய சந்திப்பு முதல் மொழி வரையான ஆணாதிக்கத்தை மூடிமறைத்து, தூற்றும் ஆணாதிக்க அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 21)

 20.புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)

 

19. பெண்களை என்பெயரால் தூற்றும் அசோக். இதுவோ கொலைகார புளாட் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 19)

 

18. வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

 

17.எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

 

16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

 

15. அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)