புனிதம், பக்தி, ஆன்மீகம், அறம், உண்மை என்று தங்களைப் பற்றி ஒரு பிரமைகளை ஏற்படுத்திக் கொண்ட, ஒட்டுண்ணிகளாக வாழமுடிகின்ற சமூகம் இது. இங்கு ஓட்டுண்ணிகள் மனித அறம் பற்றிய போதனைகள் செய்ய முடிகின்றனர். இதன் மூலம் மக்களிடம் பணத்தை பெற்று, கொழுக்கின்றது. சமூகத்தின் முன் நடித்துக்கொண்டும், மக்களை ஏமாற்றிகொண்டும், அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டும், மக்களுக்கே அறிவுரை கூறும் ஒரு கூட்டமாகவும் மாறிவிடுகின்றது.
மறுபுறத்தில் தங்களைச் சுற்றி இரகசியமான அற்பமான நுகர்வை உருவாக்கிக்கொண்டு, அதைத் தக்கவைக்க பொய் பித்;தலாட்டங்கள் முதல் கொலைகள் வரை அஞ்சாது செய்யும் ஆயுதத்தை கொண்டும் அது இயங்குகின்றது. இதன் பின்னணியில் அரசு இயந்திரம் இயங்குகின்றது.
இப்படி மக்களின் பக்தியை பணம் பண்ணுவதாகட்டும், சமூகத்தின் ஒழுக்க விழுமியத்தை காட்டி கதாநாயகர்கள் கதாநாயகிகளாகட்டும்,…. இவை அனைத்தும் சமூக ஒழுக்கக் கேட்டின் ஊடாகவே இயங்குகின்றது. பணம் சம்பாதிப்பது முதல் அதை ஒழுக்கக் கேடாக நுகர்வது வரை, இதன் பண்பு இரகசியமானது. இதில் பெண்ணை நுகர்வதும் உள்ளடங்கும். இவை வெளி உலகுக்கு தெரியாத ஒரு இரகசிய நடத்தையாக, அதிகார வர்க்கத்தின் பின்னணியில் கட்டமைக்கப்படுகின்றது.
அரசு, அதிகாரம், நீதி, சட்டம், மதம் என்று அனைத்துவிதமாகவும் மக்களை அடக்கியொடுக்கும் நிறுவனங்களின் துணையுடன், இவர்களின் இரகசியமான வாழ்வுதான் இன்றைய ஜனநாயகமாகும்.
இந்தக் வீடியோக் காட்சியை புனைவு என்ற சொல்லி அதை பாதுகாக்க, இந்து அமைப்புகளும் பார்ப்பனியமும் பின்நிற்காத ஒரு நிலையை இன்று நாம் காண்கின்றோம். உழையாது திரட்டிய இந்த கூட்டத்தின் சொத்துக்களையும், அதன் சுகபோகங்களையும் பாதுகாக்க, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. மக்களை ஏமாற்றி மோசடி செய்த கூட்டத்தை, மக்களிடமிருந்து பாதுகாக்கவே அதிகார வர்க்கம் துடிக்கின்றது. இதுதான், அதன் பக்தி.
மறுபுறத்தில் இவை இணங்கி விரும்பி செய்தவை என்று, வியாக்கியானப்படுத்தும் வாதங்கள். வெளி உலகில் போலியாக வாழ்ந்துகொண்டும், இதை சமூகத்தின் முன் தவறானதாக காட்டிக்கொண்டும், மக்களுக்கு ஒழுக்க போதனைகளை செய்து கொண்டும், தங்கள் இரகசிய உலகை நியாயப்படுத்த தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுகின்ற பொறுக்கித்தனம் அரங்கேறுகின்றது.
இங்கு பெண்கள் இணங்கவும், இணங்க வைப்பதற்கும் பின் ஆயிரம் சூக்குமங்கள் உள்ளது. தொழில் துறை மேலதிகாரிகள் தன் கீழ் உள்ள பெண்ணை, தன் பாலியல் நுகர்வுக்கு பயன்படுத்த கையாளும் வழிகள் பல. லஞ்சம் கொடுப்பதை விரும்பி கொடுப்பதாகக் கூட சொல்லலாம். இப்படி இந்த சமூக அமைப்பில் புரையோடிப் போன காட்சிதான், இந்த வீடியோ. இது ஒரு எடுத்துக்காட்டு. இதை வெளியிட்ட சண் தொலைக்காட்சி கூட, இதற்கு விதிவிலக்கல்ல.
இன்று தொலைக்காட்சிகள் உண்மையான இரகசிய பாலியல் காட்சிகளை வெளியிட முனைகின்றது. அதுதான் தங்கள் விளம்பரத்தை பார்க்கவைக்கும், விறுவிறுப்பைத் தருகின்றது. ஆணையும் பெண்ணையும் பாலியல் காட்சியில் ஈடுபடக்கோரி, பணத்தை பரிசாக பெறுமாறு கோருகின்றது. மேற்கில் சர்வசாதரணமான இது தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதைத்தான் சண் செய்கின்றது. இங்கு சாமியாரைக் காட்டும் சண், நடிகையை காட்ட மறுக்கும் உள்ளடகத்தில் இருப்பது, இந்த கூட்டுக் கயவாளித்தனம் தான். ஆன்மீகமும், சினிமாவும் ஒன்றை ஒன்று மிஞ்சியதல்ல. அதன் இருப்பும், அதன் செயல்தளழும் ஆபாசம் நிறைந்தது. ஒன்றையொன்று சார்ந்தும், விலகியும் மக்களை ஏய்க்கின்றது. இதில் ஊடகவியலும் பங்கு போடுகின்றது.
காட்சியில் அம்பலமான ஆன்மீகமும், அதன் பெயரில் மக்களை ஏமாற்றி வாழ்பவர்களும் எங்கும் நிறைந்துள்ளனர். இங்கு உண்மையான ஆன்மீகம் என எதுவும் கிடையாது. அனைத்தும் போலிகள் தான். உண்மையானவர்கள் என்பது, மக்களை ஏமாற்றுவது இன்னமும் அம்பலமாகாத போலிகளால் நிறைந்தது.
அம்பலமாகும் வரைதான், அவர்கள் உண்மையானவர்கள். மக்கள் முன் அம்பலமாகாதவரை, ஆன்மீகம் பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபாரம் தான். இங்கு சமூகம் ஏற்றுக்கொள்ளாத நுகர்வு என்பது, அதன் உள்ளடக்கமாகும்.
பணம் பண்ணுவது என்பது, சுகபோகத்தை அனுபவிக்கத்தான். பெண்ணை நுகர்வது முதல் மாமா வேலை பார்ப்பது வரை, இது ஆன்மீகத்தின் உள்ளார்ந்த கலையாகும்;. சினிமா கலை உலகம் முதல் அரசியல்வாதிகள் வரை, விபச்சாரத்தை சட்டபூர்வமாக செய்யுமிடமோ கோயில்களும் ஆன்மீக போதனை மையங்களும்தான்.
இதற்கேற்ற வீரிய வித்துக்களைக் கொண்ட ஆன்மீக பொறுக்கிகளையே அவதாரங்களாக கொண்டு ஆன்மீக மையங்களை உருவாக்குகின்றனர். கல்கி, சத்தியசாயிபாபா, நித்தியானந்த, பிரமானந்தா, சங்கராச்சாரி … என்று, கேடிகள், கோடிக்கணக்கான சொத்துகளுடன் மேட்டுக் குடி விபச்;சார மையங்களை உருவாக்குகின்றனர்.
இங்கு மேட்டுக்குடி பெண்களின் இணங்கிய விபச்சாரங்கள் முதல் ஏமாற்றியும் மிரட்டியும் அடிபணிய வைக்கப்பட்ட பெண்கள் வரை இந்த விபச்சார ஆன்மீகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உண்மையில் ஆன்மீனத்தின் பெயரில், மேட்டுக்குடி கும்பல் நுகரும் இடமாகத்தான் இதுபோன்ற ஆன்மீக ஆச்சிரமங்கள் உருவாக்கப்படுகின்றது.
ஆணாதிக்க உலகில் பெண் சந்திக்கும் பாலியல் நெருக்கடிகளையும், பெண்ணின் உளவியல் சிக்கல்களையும், வாழ்வுக்கான தேவைகளையும் பயன்படுத்தி, பெண்ணை வழிக்கு கொண்டுவரும் பணிதான் அவதாரங்களின் மகிமையாகின்றது.
பக்தியின் பெயரில் தம்மை இழந்த பெண்கள் முதல் போதைவஸ்த்து கொடுத்து பெண்ணை சூறையாடுவது வரை, இங்கு சர்வசாதாரணமானது. காம களியாட்டத்தை சாமிகளும், இதை சுற்றி இயங்கும் மேட்டுக்குடிகளும் சேர்ந்து நடத்தும் விபச்சாரம் தான், இந்த ஆன்மீகத்தின் மகிமை. இங்கு பணம் குவிகின்றது. நுகர்வு வெறி தலைகால் தெரியாத அளவில் ஆட்டம் போடுகின்றது.
உண்மையில் தம்மைச் சுற்றிய வாழ்வு மீதான மக்களின் அச்சத்தை, ஏமாற்றி பிழைக்கத் தெரிந்தவர்கள் தான், இன்று அவதாரங்களாக உலவுகின்றனர். இதற்கு அரசியல்வாதிகள் முதல் மூலதனத்தின் சொந்தக்காரர்களின் அனுசரணையுடன் நடக்கும் வியாபாரம் தான், பக்தி என்ற பெயரில் இயங்கும் விபச்சார மையங்கள்.
இங்கு பெண் விரும்பி நுகர்வது முதல் ஏமாற்றி அனுபவிப்பது தான் பக்தியின் அறம். பார்ப்பனிய மதம் இந்து மதமாகிய போது, மற்றவனுக்கு ஒழுக்கத்தை சொல்லியது. அதே நேரம் தான், பெண் நுகர்வை அனுபவிக்கும் உரிமையை மதத்தின் மூலம் பெற்றது. சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஏற்பாட்டை உள்ளடக்கியதாகவே, மதத்தைக் கட்டமைத்தது.
திருமணத்தை செய்து வைக்கும் பார்ப்பானுடன், மணப் பெண் தன் முதல் இரவை அனுபவிக்கவேண்டும் என்று இந்து மதம் மூலம் பார்ப்பான் ஏற்பாடு செய்தான். கோயில்கள் தோறும் தேவதாசிகளை உருவாக்கி விபச்சாரம் செய்தான். இப்படி எண்ணற்ற வழிமுறைகள் இந்து மதம் மூலம், பெண்ணை புணர்வதை பார்ப்பான் தனது ஆன்மீகமாக்கிக் கொண்டான்.
இன்று சமூகம் விழிப்புற்றுள்ள நிலையில், தங்கள் பாலியல் வேட்கையை தீர்க்க, கடந்தகால இந்து மத ஏற்பாடு சாத்தியமற்றதாகிவிட்டது. ஆன்மீக ஆச்சிரமங்களும் கருவறைகளும் இதற்குரிய ஒரு இரகசிய இடமாக மாறிவிட்டது. இதற்கு மக்களின் பக்தியையும், மதம் கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக செல்வாக்கையும் பயன்படுத்துகின்றனர். பெண்ணை இணங்க வைப்பது முதல் ஏமாற்றி அடிபணிய வைப்பதற்கு, இரகசியமான நுகரும் மைய்யமாக கோயில்கள் முதல் ஆன்மீக மையங்கள் வரை விரிந்து கிடக்கின்றது.
இதில் விபச்சாhம் செய்யும் நடிகர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று தொடங்கி இன்று கலை இலக்கியவாதிகள் வரை நீண்ட ஆணாதிக்க நுகர்வு பட்டாளங்கள் பக்தி வேசத்துடன் அலைகின்றது. அதையே நோக்காக கொண்டு கலை இலக்கிய உலகத்தில் லும்பன் கும்பல்கள் அலைகின்றது. இங்கு இவர்களாகட்டும் சாமிகளாகட்டும் மாமா வேலை பார்ப்பது முதல் கொலைகள் வரை செய்வதில் வல்லவர்கள். வெளி உலகில் புனிதர்களாக கொண்டு இரகசிய மாபியாக்களாக கேடிகளாக இருக்கின்றனர்.
பெண்களுக்கு ஆசை காட்டுவது, இணங்க வைப்பது, மயக்குவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்பது கடவுளின் அவதாரங்களாக உள்ளவர்களின் தொழிலாகும்.
இந்த பெண்களை நுகரவே அரசியல்வாதிகள், நீதிபதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், என்று நீண்ட பட்டியலில் உள்ளவர்கள் நாயாக அலைகின்றனர். இதன் பின்னணியில் இது போன்ற ஆன்மீக மையங்களும், அவதாரங்களும் உருவாக்கப்படுகின்றனர். மக்களின் அறியாமையும், ஏமாளித்தனமும் இதற்கு தீனியாக உள்ளது.
பி.இரயாகரன்
04.03.2010